Thursday, November 6, 2008
நான் கனவு காணும் புதிய இந்தியா
நாட்டின் தலைமை நிர்வாகியை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். நாட்டின் வேலையில்லா இளைஞர்,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் அமைக்கப்பட்டிருக்கும். சிறப்பு ராணுவம் இந்திய நதிகளை இணைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும். தேசீய அளவில் விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டிருக்கும்.விளைநிலங்கள் யாவும் மேற்படி சங்கத்துக்கு நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டு கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலில் இருக்கும். இப்போதைய கரன்ஸி ரத்து செய்யப்பட்டு புதிய கரன்ஸி அமலில் இருக்கும். பழைய கரன்ஸியை வைத்திருந்தவர்கள் அவற்றின் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்ஸியை பெற்றிருப்பார்கள். கணக்கில் வராத பழைய கரன்ஸி ஒழிந்திருக்கும்.