Monday, November 17, 2008

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.