Tuesday, November 11, 2008

யாவற்றுக்கும் மேம்பட்ட சக்தி

எத்தனைதான் விஞ்ஞான‌ம் முன்னேறினாலும் தனிப்பட்ட,யாவற்றுக்கும் மேம்பட்ட சக்தி ஒன்று தனித்து வேலை செய்கிறது.

ஸ்தூலமாக பார்த்தால் அரை மணிநேர வேலை. இந்தியாவின் பிரச்சினைகள் தீர்க்க நான் தீட்டிய அதிரடி திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000. இதை கூகுல் அறிவித்துள்ள ப்ராஜக்ட் 10 டு 100 க்கு அனுப்பினேன். மெஜாரிட்டி மக்களின் வாழ்வை முன்னேற்றக் கூடிய ஐடியாக்களுக்கு ,மக்கள் கருத்துக்கு இணங்க ரொக்கப்பரிசு தரப்படும் என்பது இதன் கான்செப்ட் . ஓகே.

அனுப்பினது அனுப்பியாச்சு கிருஷ்ணா ராமான்னிக்கிட்டு இருந்தா ஜனவரி 27 வந்துரும். போடற மகராசன் வோட்டு போடறான். (500 ஐ தாண்டினா ஆச்சரியம்)

என் பாயிண்ட் ஆஃப் வியூ வேறு. கடவுளுடைய அஜெண்டா பிரளயம். என் அஜெண்டா சம தர்ம சமுதாயம். அட் பிரளயத்துக்கு முன்னாடி சில வருடம் சம தர்ம சமுதாயம் இருந்துட்டு போகட்டுமே என்பது என் நப்பாசை.

எனவே ஆன்லைன் பிரச்சாரத்தை முழுமூச்சாய் மேற்கொள்ள உத்தேசித்து தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம்,இந்தியில் என் பேச்சை விடியோவாக்கி யு ட்யூபில் வைக்க 3 நாட்களாய் மெனக்கெடுகிறேன். ஊஹூம் ..வேலை ஆக மாட்டேங்குது.


கடவுளுடைய அஜெண்டாவுக்கு எதிரா வேலை செய்யவும் அவருடைய அருள்தானே உதவனும். பார்ப்போம் கடவுள் எந்த அளவுக்கு நாகரிகமா நடந்துக்கறார்னு

குறிப்பு: நான்கில் இரண்டு ஓகே. இனி பார்ப்போம்