Monday, November 17, 2008

கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும்

தபால் துறை வளர்ச்சிக்கு சில யோசனைகள்:

1.அடிமாட்டு விலைக்கு சேவைகளை வழங்கக்கூடாது. உதாரணம் போஸ்ட் கார்டு. இதை வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடவேண்டும். மாவட்டத்துக்குள் என்றால் ஒரு நிறம். மாநிலத்துக்குள் என்றால் வேறு நிறம். வெளி மாநிலம் என்றால் வேறு நிறம். விலையையும் அதற்கேற்றவாறு கூட்ட வேண்டும்.

2.ரகசியம் அல்லாத கடிதங்களை ஸ்கான் செய்து அந்த ஊர் போஸ்ட் மாஸ்டருக்கு மெயில் செய்து அரை மணியில் டெலிவரி கொடுக்கலாம். (என்ன ஒரு லொள்ளு என்றால் அந்த போஸ்ட் ஆஃபீசில் சிஸ்டம் ,ப்ரிண்டர் இருக்கனும்,நெட் வசதி இருக்கனும். அந்த பி.எம்.முக்கு ஆப்பரேஷன் தெரியனும்.


3.கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும். பதிவு தபால் சேர்ந்ததுக்கு ஏ.சி.கே வை பார்ட்டியே வ‌ந்து க‌லெக்ட் ப‌ண்ணும்ப‌டி செய்ய‌னும்.ரேட்டையும் அப்ப‌டியே கூரிய‌ர்கார‌ன் மாதிரி குறைச்சுர‌னும்.

4.கோல்டு ப‌ஜார்,க‌டைத்தெரு,காய்க‌றி மார்க்கெட்டுக்கு அருகே உள்ள‌ போஸ்ட் ஆஃபீசுல‌ காலைல‌ க‌ட‌ன் கொடுத்து சாய‌ந்திர‌ம் வ‌ட்டியோட‌ திருப்பி வாங்கிர‌லாம்.

5. நூறு நாள் த‌வ‌ணைல‌ திருப்பி க‌ட்ட‌ற‌ மாதிரி க‌ட‌ன் த‌ர‌லாம்.

எச்ச‌ரிக்கை: இந்த‌ யோச‌னைக‌ளை ஏதேனும் வ‌ங்கியோ,த‌பால் துறையோ
அம‌ல் செய்வ‌தானால் எஸ்.முருக‌ன் என்ற‌ பெய‌ருக்கு ரூ.1 க்கான‌ செக் வ‌ழ‌ங்கிய‌ பிற‌கே அம‌லாக்க‌ வேண்டும்
(தொட‌ரும்)