ஒரு ஜோதிடன்,ராம பக்தன், அம்மனை வணங்கும் சாக்தேயன் பெரியாரை கொண்டாடுவதில் நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. ஆத்திகமோ நாத்திகமோ அதன் உச்சத்தில் இருக்கும்போது அதில் எவ்வித முரண்பாடும் தெரிவதில்லை. பெரியாரின் முழு பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும். "அந்தா ராம மயம் " என்று துவங்கும் ராமதாசர் கீர்த்தனை ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே எனக்கு தோன்றுகிறது.
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)
நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.
வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்