Saturday, November 29, 2008

தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்...

தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்

........ஆப்பரேஷன் இந்தியாவை அமல்படுத்தனும்.(இது பற்றிய விவரங்களை பதிவின் இறுதியில் பாருங்கள்)
இது அமலானாலே சாதி,மதம்,கட்சி, பால்,ஏழை,பணக்காரன் வித்யாசமெல்லாம் ஓடிப்போயிரும்
ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி முடியும் வரை மதத்தை தடை செய்யவேண்டும். அனைத்து ப்ரார்த்தனை ஸ்தலங்களையும் (மூலஸ்தானம் எட்ஸெட்ரா தவிர)சிறப்பு ராணுவத்தினருக்கான குவார்ட்டர்ஸ்,கொடவுனாக உபயோகிக்க வேண்டும். மதச்சின்னங்கள் தரிக்க தடை. பகிரங்க ,கூட்டு பிரார்த்தனை விழா இத்யாதிக்கு தடை.முதலில் பாக் மற்றும் ஐ.நா.சபையுடன் பேசி இந்தியா& பாக் கையில் உள்ள காஷ்மீரின் துண்டுகளை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும். உலக அமைதி படை அதன் பாதுகாப்பை ஏற்க வேண்டும்

1.மனிதர்களை மனிதர்களாய் அல்லாது மிருகங்களாய் கணித்து திட்டங்கள் தீட்ட வேண்டும். நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஒரு சிப் த‌ர‌ வேண்டும். அதில் அவ‌ன‌து விவ‌ர‌ங்க‌ள் மொத்த‌ம் ப‌திவாகியிருக்க‌ வேண்டும். இவ‌ற்றை அஃபிட‌விட்டாக‌ பெற்று க‌ம்ப்யூட்ட‌ரைஸ் செய்ய‌ வேண்டும். விவ‌ர‌ம் த‌வ‌று எனில் உள்ளே போட‌ வேண்டும்.

2.சிப் ரீட‌ர்க‌ளை காவ‌ல‌ர் கைக‌ளில் த‌ர‌வேண்டும். சிப் ரீட‌ர் ச‌ம் திங் ராங் என்றால் உட‌ன‌டியாக‌ க‌ஸ்ட‌டியில் எடுத்து ரிமாண்ட் செய்ய‌ வேண்டும். விசார‌ணையெல்லாம் பிற‌கு.

3.போலீஸ் துறையை க‌ளையெடுக்க‌ வேண்டும். ஒவ்வொரு ப‌ணியிட‌த்துக்கும் 4 பேரை அப்பாயிண்ட் செய்ய‌ வேண்டும். க‌ட‌ந்த‌ கால‌த்தில் ப‌ணியில் சேர்ந்து 2 வ‌ருட‌ங்க‌ள் நிறைந்த‌வ‌ர்க‌ளையெல்லாம் உடல்,உள்ள பரிசோதனைக்கு ஆளாக்கி குறைபாடுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பி ,ஆரோக்கியமானவர்களை "வ‌ருமான‌த்துக்கு " இட‌மே இல்லாத‌ ,ம‌க்க‌ளோடு தொட‌ர்பே இல்லாத‌ இட‌த்துக்கு மாற்ற‌ வேண்டும்.


4. த‌ற்போதுள்ள‌ ச‌ம்ப‌ள‌த்தை போல் 3 ம‌ட‌ங்கு ச‌ம்ப‌ள‌ம் த‌ர‌வேண்டும். அவ‌னுக்கும்,அவ‌ன‌து குடும்ப‌த்த‌வ‌ருக்கும் அனைத்தும் இல‌வ‌ச‌மாக‌ த‌ர‌வேண்டும். ரேஷ‌ன் க‌டை மூல‌மாக‌ அல்ல‌. எந்த‌ டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் மூல‌மாக‌ வும் பெற‌ வ‌ழிவ‌கை செய்ய‌ வேண்டும். ல‌ஞ்ச‌ம் வாங்கிய‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டால் சுட்டுத்த‌ள்ள‌ வேண்டும்


5.எட்டு ம‌ணி நேர‌ ப‌ணி நேர‌த்துக்கு பின் ஒரு நிமிட‌ம் கூட‌ அவ‌ர் ப‌ணியில் இருக்க‌ கூடாது.எவ‌ன் எந்த‌ ஸ்டேஷ‌னில் ட்யூட்டி என்ப‌து 1 ம‌ணி நேர‌த்துக்கு முன் எஸ்.எம்.எஸ் மூல‌ம் தெரிவிக்க‌ப்ப‌ட‌வேண்டும்.


6.விசார‌ணை,விவ‌ர‌ங்க‌ள் மொத்த‌ம் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு ஆடியோ ஃபைலாக‌ ஸ்டேஷ‌ன் க‌ம்ப்யூட்ட‌ரில் இருக்க‌னும்

இப்ப‌டி எத்த‌னையோ செய்ய‌னும் ..இல்லாட்டி மும்பை என்ன‌ தில்லியிலும் இதே க‌திதான்.