Thursday, November 13, 2008

ரொக்கப்பரிசு

பிரபல கூகுல் கம்பெனி ப்ராஜக்ட் 10 டு தி 100 என்ற‌ பெயரில் ஒரு போட்டியை அறிவித்துள்ளது . அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பயன்படக்கூடிய புதிய யோசனைகளை வரவேற்று மக்கள் கருத்துக்கிண‌ங்க தேர்ந்தெடுத்து ரொக்கப்பரிசு வழங்குவது இதன் நோக்கம்.

இந்த போட்டிக்கு நான் அடிக்கடி புலம்பும் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற‌
எனது திட்டத்தை அனுப்பியுள்ளேன்.இதற்கான வாக்கெடுப்பு 2009 ஜனவரி 27 ஆம் தேதி துவங்குகிறது.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்களை கீழே தந்துள்ளேன். என் திட்டம் நம் நாட்டைபணக்கார நாடாக மாற்றும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்தால் ப்ராஜக்ட்10டுதி100.காம் என்ற வலை தளத்தில் லாக் இன் செய்து, ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.