ஒரு மகா வெடிப்பிலிருந்து தோன்றியதே இந்த பூமி. இதில் தோன்றிய எல்லா உயிர்களும் சப்ததாதுக்களால் உருவான உடலில்தான் வசிக்கின்றன. ஒரே வஸ்துவிலிருந்து தோன்றிய இந்த உயிர்கள் மீண்டும் இரண்டற கலக்க துடிக்கின்றன. இதற்கு தடையாக இருப்பது தம் உடலே என்ற சப்கான்ஷியல் தாட் காரணத்தால் இந்த உடலை உதிர்க்க தற்கொலை,கொலை,விபத்து நோய் போன்ற வழிகளை நாடுகின்றன.உண்மையில் உயிர்களின் கலப்புக்கு தடையாக இருப்பது சுயநலம் ஒன்றே. சுயநலத்தை உதிர்த்து விட்டால் உயிர்களின் கலப்பு சாத்தியமே.
எத்தனையோ புண்ணிய புருஷர்கள் தோன்றிய பூமி நம் பாரத பூமி. அவர்கள் உடலளவில் மறைந்து போனாலும்,அவர்களது எண்ணங்கள் இந்த பூமியை வட்டமிட்டபடியே உள்ளன. அந்த எண்ணங்கள் நம் மூளைக்குள் நுழைய தடையாக இருப்பது நம் அறியாமையே. இந்த சமஸ்த ஸ்ருஷ்டியிலிருந்து நாம் வேறுபட்டிருப்பதாக கருதுவது மடமை.
செல் போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சை போலவே,இந்நாட்டு மக்களின் வேதனை கூக்குரல்களும்,முனகல்களும் நம்மை தாக்குகின்றன.
இந்த நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் பார்த்தாலும் போதிய உணவின்றி இறப்பவர்கள் எத்தனை பேரோ ,அமித உணவு உண்டு நோய் கண்டு இறப்பவர்களும் அதற்கு சமான எண்ணிக்கையிலேயே உள்ளனர். இது தேவையா?
ஜீவ நதிகள் நிறைந்த பாரத நாட்டில் பாசனத்துக்கு நீரில்லை என்பது மடமையல்லவா? நம் நாட்டில் 10 கோடி பேருக்கு மேல் வேலையற்ற வாலிபர்கள் உள்ளனர். இவர்களைக்கொண்டு ஒரு சிறப்பு ராணுவம் அமைத்து நதிகளை இணைக்க முடியாதா? நதிகளின் இணைப்பால் பெருகும் விவசாய உற்பத்தி பசிபட்டினியை விரட்டி அடித்து,சுய நலத்தை சுருக்கிட்டு கொல்லும். உயிர்களை இணைக்கும்.
பிறகு கொலைகளுக்கோ,தற்கொலைக்கோ தேவையிராது