Wednesday, September 17, 2008

மக்கள் கொண்டாட்டம் சந்திரபாபு பாடு திண்டாட்டம்

ஆந்திர அரசின் அட்டகாச திட்டங்கள் மக்கள் கொண்டாட்டம் சந்திரபாபு பாடு திண்டாட்டம்

ஒருபக்கம் 3 லட்சம் கோடி ரூபாய் செலவில் அணைகள் கட்டப்பட்டுவருகின்றன. மறுபுறம் ஆந்திர அரசின் அட்டகாச திட்டங்கள் அதிரடியாக அமலாகிவருகின்றன . ஹைடெக் என்று பெருமையடித்துக் கொண்டிருந்த சந்திரபாபு அரசு ஆன்லைன் மூலம்,ஏ.டி.எம். மூலம் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவது கண்டு கதி கலங்கி போயிருக்கிறார். அரசின் அதிரடிகள் சந்திரபாபுவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளன.

ஏழை எளியவர்கள் உயர் தர மருதுவ சிகிச்சை பெற வழி வகுக்கும் ஆரோக்கிய ஸ்ரீ திட்டமாகட்டும்,இரண்டு ரூபாய்க்கே கிலோ அரிசி வழங்கும் திட்டமாகட்டும் தூள் கிளப்பி வருகின்றன, ஏற்கெனவே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது. சுய உதவி மகளிர் குழுக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் நூற்றுக்கு நாலணா வட்டிக்கே வழங்கப்படுகிறது. இதை நெசவாளர்கள்,மற்றும் இதர சுயதொழில் பிரிவினருக்கும் விஸ்தரிக்க உள்ளனர்.

சிரஞ்சீவி புதிய கட்சியை ஆரம்பித்தார். அவர் சார்ந்துள்ள பலிஜ நாயுடுக்களுக்கு அடித்தது யோகம். அவ்வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க ஒய்.எஸ் உத்தரவிட்டார். ஏற்கெனவே பல சாதிகளை பி.பட்டியலி சேர்த்து விட்டனர். இத்தனைக்கும் சூட்சுமம் நிதி மந்திரி ரோசய்யாக் கையில் இருக்கிறது. வைசியரான ரோசய்யா தம் மூளையை உபயோகித்து அரசு வருவாயை பெருக்கி வருகிறார். ஒய்.எஸ் நலதிட்டங்களை அள்ளி வீசி வருகிறார்.

அரிசி விலையேறுதென்று சந்திரபாபு லாவணி பாடினார், உடனே ஒய்.எஸ் விஜிலென்ஸ் படையை முடுக்கி விட்டார். தனியார் ஆலைகளில் தீவிர தணிக்கை மேற்கொள்ளப்பட்டது ,பிடிபட்ட ஆயிரக்கணக்கான டன் அரிசி பல் பொருள் வழங்கு துறைக்கு திருப்பி விடப்பட்டது. அர்சி விலை வீழ்ந்தது. சந்திரபாபுவும் தம் பங்குக்கு மீ கோசம் என்று மாநிலத்தை சுற்றி சுற்றிவந்து வாக்குறுதிகளை அள்ளி விட்டார். நம்பத்தான் ஆளில்லை.