சுஜாதாவின் எழுத்துக்கள் என்னில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தின என்பது சுஜாதாவுக்கான பாராட்டுமட்டுமல்ல. சுஜாதாவை தவிர வேறு எந்த எழுத்தாளனை காட்டிலும் நான் சுப்பீரியர் தான் என்ற தன்னம்பிக்கை வாதமும் அதில் அடக்கம். மேலும் அந்த தாழ்வு மனப்பான்மையால் எழுதுவதை நிறுத்தினேன் என்று நான் கூறவில்லை. இந்த ஆசிரிய பயல்களின் அசமஞ்சத்தனம் மற்றும் "ஜவாப்தாரி" தன்மையற்ற செயல்களாலும் தான் என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள எழுதி அனுப்புவதை நிறுத்தினேனே தவிர, எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.
பத்திரிக்கையில் எது வெளியாக வேண்டும் என்பதை நிர்ணயிப்பது ஆசிரியனோ,பதிப்பாளனோ அல்ல, அதன் விளம்பர இலாக்கா என்பது புரிந்த பிறகும் எழுத நான் என்ன முட்டாளா?