சாக்தேயம் என்பது ஷண்(6)மதங்களில் ஒன்று.அம்மனை பிரதானமாக கொண்ட பக்தி மார்கமே சாக்தேயம்.
அம்மன் என்றால் அந்த காலத்து ஆதிபரசக்தி,சமீப காலத்து அம்மன் படங்கள் தவிர மற்ற திரைப்படங்கள் கூட என்னை பெரிதாக கவர்ந்ததில்லை.
மேலும் அம்மன் வேடம் தரித்த நடிகைகள் சூலத்தை தூக்கும்போது தபார்ரா பல்பு என்று அசிங்க கமெண்ட் அடித்தவன் தான். நான் எப்படி சாக்தேயனாக மாறினேன் என்பதை விளக்கவே இந்த பதிவு.
1989 ல் ஜோதிடம் மீதான எனது ஆராய்ச்சியில் எனது ஜாதகத்தில் சிவ சக்தி யோகம் இருப்பதாய் அறிந்து சிவ பார்வதி இணைந்த டாலர் அணிவதும்,சகலத்திலும் அந்த உருவத்தை அச்சிட்டு கொள்வதுமாய் அலம்பல் பண்ணியது உண்டு.
கி.பி.2000 வரை கூட சாக்தேய வாசனை கூட என் மேல் படிந்ததில்லை. அதென்னமோ 2000 ஆம் வருடம் டிசம்பர் 23 ஆம் தேதி என்று ஞா. அப்போதைய மந்திரத்தில் மாங்காய் விழும் என்று நம்பிய நண்பர்கள் குழுவிடம் என்னப்பா ஆயிரம் மந்திரம் இருக்கிறதா சொல்றிங்க.. காசு பணம்வர்ரதுக்கு எதுனா மந்திரம் இருந்தா சொல்லுங்கப்பா என்றேன்.
அவர்கள் எதையோ எடுத்துவிட அதில் பை மிஸ்டேக் புவனேஸ்வரி அம்மனுக்கான மாயா பீஜமும் கலந்திருக்க (பிடிச்சா சனி மாதிரிபிடிக்கணும் என்பது எனக்கு பிடித்த கொட்டேஷன் மட்டுமல்ல கடைபிடிப்பதும் உண்டு) அதை அறியாது நான் அடி அடி என்று அடிக்க என்னென்னவோ நடந்து விட்டது இந்த விஜய தசமிக்குள் எனது மாதமிருமுறை பத்திரிக்கைக்கு ஆர்.என்.ஐ நெம்பர் வரட்டும்..பிறகுவச்சுக்கறேன் கச்சேரி.