என்னை செலுத்துவது வாழ் வேண்டும் என்ற கோரிக்கையை விட மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்ற தயாரிப்பே
வாழ்வு உனது தயாரிப்புகளை கண்டு கொள்வதில்லை என்று ஓஷோ கூறுவார். என் தயாரிப்புகள் என் மரணத்துக்கானவை.
என் மரணம் நிகழ்ந்த சில வருடங்களுக்கு பின் நான் எந்த விலை மகள் மகனுக்கு எத்தனை பைசா பாக்கி, எவளுடன் சரசமாடினேன், எத்தனை காசு பொறுக்கினேன்,எவ்வளவு சேர்த்துவைத்தேன் இதெல்லாம் அர்த்தமற்றதாகி விடும்.
என் சிந்தனைகள் ஏசுவை போல் உயிர்த்தெழும். இணைய தளங்களின் உபயத்தில் என் எழுத்துக்கள் ஏற்கெனவே சிரஞ்சீவத்துவம் பெற்றாகி விட்டது.
பல்வேறு பதிவுகளில் என் சிந்தனைகளை சிதறவிட்டிருக்கிறேன். இருந்தும் இந்த பதிவில் கோர்வையாக அடுக்க முயற்சிக்கிறேன். இந்த சகல உயிர்களும் ஒரு மகா உயிரின் பின்னங்களே. இந்த நிலவுலகின் மேலான அனைத்துப்பொருட்களிலும்,உயிர்களின் உடல்களிலும் உள்ளவை அதே மூலகங்கள் தான். பிரிந்து வந்த உயிர்கள் மீண்டும் இரண்டற கலக்க முயல்கின்றன. அதற்கு தடையாக இருப்பது தம் உடல்களே என்று பிரமித்து உடல்களை உதிர்க்க கொலை,தற்கொலை இத்யாதியை நாடுகின்றன.(பணம்,செக்ஸில் இவை சாத்தியம் என்பதால் அதற்காக உயிரை பணயம் வைத்து பெற முயல்கின்றன) சிலர் கலப்புக்கு தடையாக இருப்பது அவரவர் அகங்காரமே என்பதை உணர்ந்து அவரவர் அகங்காரத்தை அழிப்பதற்கு பதில் எதிராளியின் அகங்காரத்தை ஒழிக்க முயல்கின்றன. இதனாலும் கொலைகள் தற்கொலைகள் நிகழ்கின்றன. மனிதன் பல்வேறு முகமூடிகளில் செய்வது இரண்டே காரியங்கள் தான்.
1.கொல்வது
2.கொல்லப்படுவது
வட்டி,பதவி,பேச்சு,வேகம்,படிப்பு இப்படி எதை வேண்டுமானாலும் ஆயுதமாக பயன் படுத்தி மேற்சொன்ன இரண்டு செயல்களை செய்கின்றனர்.
இதில் என் சாய்ஸ் கொல்லப்படுவதே.
காரணம்: கொன்றால் மறு பிறவியில் கொல்லப்படுவேன். கொல்லப்பட்டால் என் கர்மம் தொலையும்.
இந்தியாவின் ஏழ்மையை ஒழிக்க நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரம்,மற்றும் அமலுக்கு உழைப்பதை காட்டிலும் தற்கொலை முயற்சி மற்றொன்று கிடையாது.
கடவுளுக்கும் எனக்கும் உள்ள அக்ரிமெண்ட் ஒன்றே.. என்னை நீ பாத்துக்க மக்களை நான் பாத்துக்கறேன். பிரளயம் உங்க அஜெண்டா.. சமதர்ம சமுதாயம் என் லட்சியம். உங்க ரூட் உங்களுக்கு,என் ரூட் எனக்கு.என் முயற்சி வெற்றி பெறாட்டா ரோமமே போச்சு. முயற்சிக்கவாவது சைடு கொடுங்க என்பதே
எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: