Thursday, September 11, 2008

இன்று சீனியர் ரிப்போர்ர்ட்டர் பட்டாபி ராமபிள்ளைக்கு உதை கொடுத்து தமது செல் டார்ச்சருக்கு உபயோகித்த செல்லை பறித்து வந்தேன்.

இன்று சீனியர் ரிப்போர்ர்ட்டர் பட்டாபி ராமபிள்ளைக்கு உதை கொடுத்து தமது செல் டார்ச்சருக்கு உபயோகித்த செல்லை பறித்து வந்தேன்.(எழுத்துப்பூர்வமான ஒப்புதல் வாக்கு மூலத்தோடு).அதை அனந்தபூருக்கு அனுப்பிவிடுவதாய் உத்தேசம்.

காந்தி தாத்தாவின் ப்ரிய சீடனானா நான் ஏன் இந்த வ‌ன்முறைக்கு இறங்கினேன் என்பதை அறிய இந்த வலைப்பூவை படியுங்கள். இந்த மாதிரி பார்ட்டிகளுக்கு சட்டம் என்ன தண்டனை கொடுக்கும் ,அதற்கு எத்தனை காலம் பிடிக்கும்,எவ்வளவு செலவாகும் என்பதையும் கூறுங்கள்.

சித்தூர் டவுன் பாலாஜி காலனியை சேர்ந்தவர் பட்டாபிராமபிள்ளை(55) திருமணமாகி சோகசித்திரமாய் ஒரு மனைவி . பிள்ளைகள் இல்லை. இவர் தந்தை கிராம கணக்கு பிள்ளையாக இருந்தவர். சொந்த் அப்பாவை சஸ்பெண்ட் செய்யவைக்க 4 வருடம் தொடர்ந்து மொட்டைபெட்டிஷன் போட்டதாய் பெருமையடிப்பது மிஸ்டர் பிள்ளைக்கு வழக்கம். லிட்டிகேசன் முன்னாடி பிறந்து அதற்கு பிறகு பிறந்தவர் பிள்ளை என்று கூறலாம். ஆந்திரபிரபா,பத்திரிகா,நேற்று வரை காகதீயா,இன்று ஆசாஜோதி இப்படி அவர் வேலை செய்யாத பத்திரிக்கையே கிடையாது. ஏதோ சேவை நிறுவனம் வைத்திருந்ததாகவும்,ஃபண்ட்ஸ் வர இருந்த சமயம் ஏதோ தப்பாகி ரோட்டுக்கு வந்ததாகவும் கூறுவது வழக்கம்.


இந்நிலையில் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக நினைத்து (பிரஸ் க்ளப்பில் என் போன்ற லட்சியவாதியோடு நாட்டு நடப்பை விவாதிக்க எவனும் தயாரில்லை)பிள்ளையுடன் பழகிவந்தேன். பத்து ,இருபதுக்கும் லாட்டரி அடிக்கும் பிள்ளைக்கு அடிப்ப‌டை தெலுங்கிலேயே த‌க‌ராறு. வார்த்தைக‌ளை வாரி இறைத்த‌து போன்ற‌ ந‌டை. ச‌ற்றே வ‌ச‌தியிருக்கும் தைரிய‌த்தில்,பிள்ளைக்கு வேலை கொடுத்துதான் பைசா கொடுக்க‌ வேண்டும் என்ற‌ பிடிவாத‌த்தில்ஆப்பரேஷன் இந்தியா திட்டம்,அதன் அமலுக்கு நான் மேற்கொண்ட முயற்சிகளை டிக்டேட் செய்து எழுத வைத்து, பைசா கொடுத்து வந்தேன். எழுத்தா அது கிறுக்கல். *பார்த்து பிள்ளை! ஆப்பரேட்டருக்கு புரியறமாதிரி எழுதுங்க என்ற என்ற முறையீடு ,விலைவாசி உய‌ர்வு எதிர்ப்பு கோஷம் மாதிரி வீணாய் போனது. கூட இருந்து டைப் செய்விக்கிறேன் என்று கூறிய பிள்ளை தட்டச்சுவிக்கும் நேரம் வந்ததும் சுய ரூபத்தை காட்டினார்..பிள்ளை பணம் கேட்கமாட்டார்.வேலையிருக்கு என்றால், பலானவன் வரச்சொல்லியிருக்கான் போனால் இத்தனை பணம் வரும் என்பார். அந்த பணத்தை நாம் தருவதாய் கமிட் ஆனாலன்றி பார்ட்டி வழிக்கு வராது. இதே அஸ்திரத்தை உபயோகித்தார் பிள்ளை வெறுத்துப்போனேன்.

இது ஒரு ட்ராக் என்றால்..மற்றொரு ட்ராக் பாருங்க. பிள்ளைக்கு இரண்டாம் கல்யாண ஆசை வந்து விட்டது. என் கணிப்பு படி பிள்ளை முழு ஆணா இல்லையா என்பதிலேயே எனக்கு சந்தேகம். அந்த சேஷ்டைகள் அப்படி. ஈதிப்படியிருக்க ஈநாடு மேட்ரிமோனியலில் வந்த விளம்பரத்தை பார்த்து பிள்ளை அப்ளை செய்ததோடு, மணமகளின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப்புவதும், போன் போடுவதுமாக டார்ச்சர் செய்துள்ளார். (3 மாதம் போல)

டார்ச்சரை தாங்க முடியாத மணமகள் தரப்பு நைசாய் பேசி அனந்தபூர் வரவழைத்து உதைகொடுத்து கட்டிவைத்துவிட்டனர். என் கெட்ட நேரம் அந்த நேரம் பார்த்து பிள்ளைக்கு ரொட்டீனாய் நான் போட,விஷயம் தெரிந்து 55 ரூ.டாக்டைம் செலவழித்து போனில் பஞ்சாயத்து செய்து கன்வின்ஸ் செய்தேன். எப்படியோ மணமகள் தரப்பு பிள்ளையை உயிருடன்,போலீஸ் கேஸ் ஏதுமின்றி சித்தூர் அனுப்பி வைத்தது. அனுப்பியது.

ஆகஸ்ட் 3 ஆம்தேதி உதைகொடு படலம்,பிட்சாடனம் செய்து கதிரியில் என் நண்பன் ஒருவன் ரூ 100 தருமம் செய்ய ஊர் சேர்தல் எல்லாம் நடந்து முடிந்தது. விட்டாரா பிள்ளை..மீண்டும் ஆரம்பித்தார் டார்ச்சர் ப‌டலத்தை. அனந்த பூரிலிருந்து ஒரே புலம்பல். என்ன செய்ய இன்று சீனியர் ரிப்போர்ர்ட்டர் பட்டாபி ராமபிள்ளைக்கு உதை கொடுத்து தமது செல் டார்ச்சருக்கு உபயோகித்த செல்லை பறித்து வந்தேன்.(எழுத்துப்பூர்வமான ஒப்புதல் வாக்கு மூலத்தோடு).அதை அனந்தபூருக்கு அனுப்பிவிடுவதாய் உத்தேசம்.