நம் ரத்தத்திலேயே 0.1 சதவீதமாவது ஆல்கஹால் இருக்கும். அது சிலருக்கு குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருந்தால் அவர்களுக்கு மது மீது ஈர்ப்பு வரும். உடம்பெல்லாம் எண்ணை பூசி தெருவெல்லாம் உருண்டாலும் என்ற பழமொழி இங்கும் பொருந்தும். ரத்தத்தில் உள்ள ஆல்க்கஹாலை(வெளியிலிருந்து தரப்பட்ட) கிட்னி சிறு நீர் மூலம் வெளியேற்றிக்கொண்டே இருக்கும். பார்ரட்டிக்கு மீண்டும் குடிக்க எண்ணம் பிறக்கும். இது ஃபிஸிக்கல் காஸ் /தாய்ப்பாலை அவசரப்பட்டு நிறுத்தினாலும் அக்குழந்தைக்கு நிப்பிள் காம்ப்ளெக்ஸ் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கும். மிக முக்கியமாக ஆல்க்கஹால் என்பது எஸ்கேப்பிஸ்டுகளின் சரணாலயம். இது பிரச்சினைகளிலிருந்து தப்பித்தலில் ஆரம்பித்து பால் வாங்கி வரும்போதும் என்னடா இது அசதியாயிருக்கு ஒரு கட்டிங்க் போடலாமா என்ற எண்ணம் வந்து விடும். ஆல்கஹால் நேரிடையாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. உணவு செரிக்கப்பட்டாலன்றி ரத்தத்தில் கலக்காது. நேரிடையாக உறிஞ்ச பழக்கப்பட்ட உடம்பு ஜீரண சக்தியை இழந்து தின்னது தின்ன மாதிரியே வெளித்தள்ளப்படும்.
தண்ணி போட்ட போது ஒரு எண்ணம்,போடாத போது ஒரு எண்ணம் என்று ஆரம்பித்து மனித மனமே ஆளவந்தான் கமல் மாதிரி ஆகிவிடும். முக்கியமாய் ஆண்மை குறையும், மறதி அதிகரிக்கும், ஞாபகங்களில் குழப்பம் ஏற்பட்டு சந்தேக புத்தி அதிகரிக்கும். ரத்தத்துக்கு மானம்,ஈனம் ,சூடு,சுரணை,பாசம்,நேசம்,பண்பு,கலாச்சாரம் தாய்/மனைவி/மகள் வேறுபாடு தெரியும். ரத்தத்தில் கலந்த ஆல்க்கஹாலின் சதவீதம் அதிகரிக்க அதிகரிக்க ..மேற்சொன்னவை காணாமல் போய் விடும்.