ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் என்பதே என் உந்து சக்தி. மேலும் வேதங்கள் புராணங்கள் கூறும் தேவர்,தேவதைகளிடம் நற்சான்று பெறும் நப்பாசையும் இல்லாமலில்லை.
என் தளம் வேறு, என் பாட்டு வேறு ,பல்லவி வேறு..மற்றதெல்லாம் வேறும் எடுப்பு,தொடுப்பு தொகையறாதான். என் எழுத்துக்களின் அடிநாதம் கருணை. மனிதர்கள் பால்,உயிர்களின் பால் கருணை மட்டுமே. நிலையில்லாததாய் கருதப்படும் மனித வாழ்வின் நிரந்தரத்தன்மையை குண்ஸாக புரிந்து கொண்ட காரணத்தால் இயற்கையின் போக்கிற்கு எதிரான இந்த உலகத்தின் சிறு அசைவையும் என்னால் ஏற்க முடிவதில்லை.
மனித உயிர் மட்டுமல்ல. எந்த ஒரு உயிரும்,எந்த ஒரு சிறு புல்லும் இந்த இயற்கையின் ஒருபாகமே. எங்கோ பூகம்பம் வந்தால் என்னுள்ளும் ஏதோ குலுங்குகிறது. எங்கோ வெள்ளம் வந்தால் என்னுள்ளும் ஏதோ நனைகிறது.