நான் ஒருவன் நிர்வாண கிராமத்தில் கோவணாண்டியாய் அலைகிறேன்..
நின் படைப்பில் இல்லை ஒரு குறை
வகுத்திடுவேன் புது மறை.
என் ராஜ்ஜியத்தில் மனித உயிருக்கு காப்பு
கொலை,தற்கொலை,விபத்து, மற்றும் நோய்களுக்கு ஆப்பு
தகுதி (ஃபிசிக்கல்,சைக்காலஜிக்கல் மற்றும் பொருளாதார) படைத்தவர்க்கு மட்டுமே இனப்பெருக்கத்துக்கு அனுமதி
அதுவல்லாதோருக்கும் உண்டு கலவி ,அதற்கும் பெற்றாக வேண்டும் கல்வி.
உயிரற்ற வாகனத்தை இயக்கவும் தேவை பயிற்சி
அது இல்லாது மணந்ததால் தானே இத்தனை அயற்சி
ஓருயிரை சுமக்கும் உயிருக்கு கு.ப.பிரசவிக்கும் வரையிலாவது அரசு அபயமளிக்கும்,அத்தனையும் உபயமாக அளிக்கும்
கல்வி..கல்வியை பெறும் மாணாக்கனை தனது உடல்,மனம்,புத்தி,ஆத்மா, குறித்த உண்மைகளை அறிந்து பெற்றோர்,குடும்பம்,தெரு,ஊர்,மாவட்டம்,மாநிலம்,நாட்டுக்கு உண்மையானவனாய்,உபயோகமானவனாய் வளர உதவிட வேண்டும்.
வேலை அது எவனோ தருவதாய் இருக்கக்கூடாது. மனிதன் பிறந்த மறுநிமிடம் அவனுக்காக வேலை காத்திருக்க வேண்டும்,கங்கை காவிரி இணைப்பு,கூட்டுறவுப்பண்ணை விவசாயம் இது இரண்டு போதும் இந்நிலை வர.
ஆர் மாற்றுவது.. ஆர் தேற்றுவது.. இது மனித யத்தனத்தில் முடியும் பணியா ? நோ.. நோ..நெவர்
தாயே !
என்னை ஏன் இப்படி படைத்தாய்..சதா முழுமைக்கும்,செழுமைக்கும் ஏங்கும் மனம் உடையவனாய்.
தாயே..இவர்களைப்போல் சதா அரைவேக்காட்டு தனங்களோடும், தன்மானத்தை எரிக்கும் ஏழ்மை,அடிமைத்தனங்களுடன் வசிக்கும் அடிமையாய் அல்லாது நித்தம் சுதந்திரத்துக்கு ஏங்கும் மனதை ஏன் தந்தாய்.
பகல் கனவுகளுடன், கனவுகளில் மட்டும் புணர்ந்து சுய இன்பத்தில் மூழ்கி ஒரு வேலைக்கும்,ஒரு சேலைக்கும் ஏங்கி,பின்னொருத்தி வந்த பின்பு ஆண்மையின்மையுடன், தாழ்வு மனப்பான்மையால் அவளது சாடிசத்துக்கு பலியாகும் மசாக்கிஸ்டாக அல்லாது என்னை ஏன் இப்படி படைத்தாய்.
ஒரு சுடு சொல் என்னை நோக்கி எறியப்படும்போது என் தன்மானத்தின் மீதான சூட்டை காட்டிலும்,அச்சொல்லை உதிர்த்தவனின் கையறு நிலை கண்டு இரங்கும் மனமெதற்கு தந்தாய்
இப்படியெல்லாம் கனவு காண வைத்து,கனவுக்கே என்னை உணவாக்கி,கனவுகளோடு திருப்தியடையாது..கனவுகளை நனவாக்கும் துணிச்சலை தந்து ஏன் என்னை இப்படி செய்தாய்.
ஆனது ஆனதாய் இருக்கட்டும். என் போன்றோர் ஒருங்கிணைந்து செயல்பட வேணும் அனுமதி தா