மனிதனின் ஒட்டு மொத்த கவனமும் இன உறுப்பின் மீதே நின்று விடுகிறது. இதுதான் சோகம். பிறந்த குழந்தையின் கவனம் ஆரம்பத்தில் அதன் ஆசன துவாரத்தின் மீதே இருக்கும். அதை மேலும் தூண்டும் வண்ணம் தாய் மார்கள் சோப்பு,புகையிலை இப்படி கண்டதையும் அதன் ஆசனத்தில் செருகுவது வழக்கமாக உள்ளது. குழந்தை வளர வளர அதன் கவனம் இன உறுப்புக்கு பெயர்கிறது. (சிலர் விஷயத்தில் இந்த வளர்ச்சி கூட நிகழ்வதில்லை. எனவே அவர்கள் ஆனல் செக்ஸுக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள்.
யோக சாஸ்திரத்தின் படி பிரஸ்தாபிக்கப்படும் சக்கரங்கள் அனைத்தும் உணவு குழாயை ஒட்டியே அமைந்துள்ளன.
ஆசனத்தை ஒட்டியுள்ளது மூலாதாரம். இன உறுப்பை ஒட்டியுள்ளது ஸ்வாதிஷ்டாணம். மனிதனின் வளர்ப்பு சூழல் ஒத்துழைத்தால் ஆசனத்தை விட்டு இன உறுப்புக்கு கவனம் பெயர்ந்தது போலவே அடுத்தடுத்து தொப்புள்(மணிபூரகம்),இதயம்(அனாஹதம்).கழுத்து(விசுத்தி) ,நடு நெற்றி (ஆக்னா) ,உச்சந்தலை(சஹஸ்ராரம்) என்று வளர்ச்சி தொடரும். இந்த வளர்ச்சிக்கு சூழல் ஒத்து வருவதில்லை. எனவே செக்ஸ் என்பது பாவச்செயலாக கருதப்படும் சமூகத்தில் மனிதனின் கவனம் இன உறுப்பிலேயே நிலைத்து விடுகிறது. இதனால் தான் 70 வயது முதியவன் 6 வயது சிறுமியை கற்பழித்தான் போன்ற செய்திகள் வெளிவருகின்றன.
செக்ஸ் என்பது அனுபவிக்கத்தானே தவிர பேசவோ ,எழுதவோ ,படிக்கவோ அல்ல. அனுபவிக்க வாய்ப்பில்லாத நிலையில் பேச்சு,எழுத்து ,படிப்பு மட்டுமே தொடர்கிறது. இதனால் படிபடிப்படியாக பாலுணர்வு மூளைக்கு பெயர்ந்து விடுகிறது. ஆண்மையின்மை பரவலாகி வருவதன் காரணம் இதுதான்.