Tuesday, September 30, 2008

மரணத்தை எப்படி எதிர்கொள்வது

என்னை செலுத்துவது வாழ் வேண்டும் என்ற கோரிக்கையை விட மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்ற தயாரிப்பே
வாழ்வு உன‌து த‌யாரிப்புக‌ளை க‌ண்டு கொள்வ‌தில்லை என்று ஓஷோ கூறுவார். என் த‌யாரிப்புக‌ள் என் ம‌ர‌ண‌த்துக்கான‌வை.

என் ம‌ர‌ணம் நிகழ்ந்த சில வருடங்களுக்கு பின் நான் எந்த‌ விலை ம‌க‌ள் ம‌க‌னுக்கு எத்த‌னை பைசா பாக்கி, எவ‌ளுட‌ன் ச‌ர‌ச‌மாடினேன், எத்தனை காசு பொறுக்கினேன்,எவ்வ‌ள‌வு சேர்த்துவைத்தேன் இதெல்லாம் அர்த்த‌ம‌ற்ற‌தாகி விடும்.

என் சிந்த‌னைக‌ள் ஏசுவை போல் உயிர்த்தெழும். இணைய‌ த‌ள‌ங்களின் உப‌ய‌த்தில் என் எழுத்துக்க‌ள் ஏற்கென‌வே சிர‌ஞ்சீவ‌த்துவ‌ம் பெற்றாகி விட்ட‌து.

பல்வேறு பதிவுக‌ளில் என் சிந்தனைகளை சிதறவிட்டிருக்கிறேன். இருந்தும் இந்த பதிவில் கோர்வையாக அடுக்க முயற்சிக்கிறேன். இந்த சகல உயிர்களும் ஒரு மகா உயிரின் பின்னங்களே. இந்த நிலவுலகின் மேலான அனைத்துப்பொருட்களிலும்,உயிர்களின் உடல்களிலும் உள்ளவை அதே மூலகங்கள் தான். பிரிந்து வந்த உயிர்கள் மீண்டும் இரண்டற கலக்க முயல்கின்றன. அதற்கு தடையாக இருப்பது தம் உடல்களே என்று பிரமித்து உடல்களை உதிர்க்க கொலை,தற்கொலை இத்யாதியை நாடுகின்றன.(பணம்,செக்ஸில் இவை சாத்தியம் என்பதால் அதற்காக உயிரை பணயம் வைத்து பெற முயல்கின்றன) சிலர் கலப்புக்கு தடையாக இருப்பது அவரவர் அகங்காரமே என்பதை உணர்ந்து அவரவர் அகங்காரத்தை அழிப்பதற்கு பதில் எதிராளியின் அகங்காரத்தை ஒழிக்க முயல்கின்றன. இதனாலும் கொலைகள் தற்கொலைகள் நிகழ்கின்றன. மனிதன் பல்வேறு முகமூடிகளில் செய்வது இரண்டே காரியங்கள் தான்.

1.கொல்வது
2.கொல்லப்படுவது

வட்டி,பதவி,பேச்சு,வேகம்,படிப்பு இப்படி எதை வேண்டுமானாலும் ஆயுதமாக பயன் படுத்தி மேற்சொன்ன இரண்டு செயல்களை செய்கின்றனர்.

இதில் என் சாய்ஸ் கொல்ல‌ப்ப‌டுவ‌தே.

கார‌ண‌ம்: கொன்றால் ம‌று பிற‌வியில் கொல்ல‌ப்ப‌டுவேன். கொல்ல‌ப்ப‌ட்டால் என் க‌ர்ம‌ம் தொலையும்.

இந்தியாவின் ஏழ்மையை ஒழிக்க‌ நான் தீட்டிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரம்,மற்றும் அம‌லுக்கு உழைப்பதை காட்டிலும் தற்கொலை முயற்சி மற்றொன்று கிடையாது.

கடவுளுக்கும் எனக்கும் உள்ள அக்ரிமெண்ட் ஒன்றே.. என்னை நீ பாத்துக்க மக்களை நான் பாத்துக்கறேன். பிரளயம் உங்க அஜெண்டா.. சமதர்ம சமுதாயம் என் லட்சியம். உங்க ரூட் உங்களுக்கு,என் ரூட் எனக்கு.என் முயற்சி வெற்றி பெறாட்டா ரோமமே போச்சு. முயற்சிக்கவாவது சைடு கொடுங்க என்பதே

எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

Monday, September 29, 2008

இன்றைய பத்திரிக்கையாளர்கள் ஜஸ்ட் ப்ளாக் மெயிலர்கள்

இன்றைய பத்திரிக்கையாளர்கள் ஜஸ்ட் ப்ளாக் மெயிலர்களாக மாறிவருகின்றனர். கல்வி தகுதியை பக்கம் வைத்தால் பத்திரிக்கையியல் தொடர்பான தகுதிகளும் சூனியமாக உள்ளன. போலீஸ் கேஸ் இல்லாத பத்திரிக்கையாளன் கிடையாது. குடிப்பழக்கம் இல்லாத பத்திரிக்கையாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஓ.சி. என்றால் காசி வரை பாயும் பத்திரிக்கையாளர்கள் யதேஷ்டம்.

சமீபத்தில் நான் அறிந்த விசயம் சொன்னால் மானக்கேடு. ஆம் பார்களில் பத்திரிக்கையாளர்களுக்கு 10 ச‌தம் தள்ளுபடியாம். எனக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கையாளன் 2 பெண்டாட்டிக்காரன். அந்த இருவரில் ஒருவளே மேற்படி பத்திரிக்கையாளனை ஜெயிலில் போட வைத்ததும் உண்டு. பத்திரிக்கை விளம்பர பணத்தை ஏப்பம் விட்டு விட வேண்டியது. கலெக்ஷனுக்கு வந்த விளம்பர மேலாளர் மீது போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுக்க வேண்டியது.(என் மனைவியை க‌ற்ப‌ழிக்க‌ முய‌ன்றார் என்று. அட‌ப்பாவிங்க‌ளா? இதில் ப‌த்திரிக்கை எஜ‌மான‌ர்க‌ளுக்கும் ப‌ங்குண்டு. விர‌ல் விட்டு எண்ணிவிட‌க்கூடிய‌ பத்திரிக்கைக‌ள் ம‌ட்டுமே ச‌ம்ப‌ள‌ம் த‌ருகின்ற‌ன‌. ம‌ற்ற‌வை ஊரை ஏமாற்றி பிழைத்துக்கொள் என்று விட்டு விடுகின்றன‌. மேற்ப‌டி பத்திரிக்கையாளனின் ம‌ற்றொரு சாத‌னை சொந்த‌ பெரிய‌ம்மா பெண் வ‌ர‌த‌ட்சிணை கொடுமைக்கு ஆளான‌ போது போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுக்க‌ ,ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ செய்ய‌ ம‌ட்டும் ரூ.4 ல‌ட்ச‌ம் வ‌ரை ப‌ண‌ம் ப‌றித்த‌து.

நானும் ஒரு பத்திரிக்கையாள‌ன் தான் இருந்தாலும் யாரோ ஒருவ‌ர் வெளியிட்டுத்தானே ஆக‌வேண்டும் உண்மைக‌ளை.அன்னாரின் லேட்ட‌ஸ்ட் சாதனை என்ன‌வென்றால் பிர‌ஸ் க்ள‌ப் மாடிக்கு இர‌வு ராணி ஒருத்தியை அழைத்து சென்ற‌து. ஏதோ லாலா போடப்போறானு பார்த்தா த‌ள்ளிக்கிட்டு போறான் பா என்று ச‌க‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளே லாட‌ம் க‌ட்டியிருக்கிறார்க‌ள்.

Saturday, September 27, 2008

பத்திரிக்கையில் எது வெளியாக வேண்டும்

சுஜாதாவின் எழுத்துக்கள் என்னில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தின என்பது சுஜாதாவுக்கான பாராட்டுமட்டுமல்ல. சுஜாதாவை தவிர வேறு எந்த எழுத்தாளனை காட்டிலும் நான் சுப்பீரியர் தான் என்ற தன்னம்பிக்கை வாதமும் அதில் அடக்கம். மேலும் அந்த தாழ்வு மனப்பான்மையால் எழுதுவதை நிறுத்தினேன் என்று நான் கூறவில்லை. இந்த ஆசிரிய பயல்களின் அசமஞ்சத்தனம் மற்றும் "ஜவாப்தாரி" தன்மையற்ற செயல்களாலும் தான் என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள எழுதி அனுப்புவதை நிறுத்தினேனே தவிர, எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

பத்திரிக்கையில் எது வெளியாக வேண்டும் என்பதை நிர்ணயிப்பது ஆசிரியனோ,பதிப்பாளனோ அல்ல, அதன் விளம்பர இலாக்கா என்பது புரிந்த பிறகும் எழுத‌ நான் என்ன‌ முட்டாளா?

Thursday, September 25, 2008

மீண்டும் குடிக்க எண்ணம் பிறக்கும்.

நம் ரத்தத்திலேயே 0.1 சதவீதமாவது ஆல்கஹால் இருக்கும். அது சிலருக்கு குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருந்தால் அவர்களுக்கு மது மீது ஈர்ப்பு வரும். உடம்பெல்லாம் எண்ணை பூசி தெருவெல்லாம் உருண்டாலும் என்ற‌ பழமொழி இங்கும் பொருந்தும். ரத்தத்தில் உள்ள ஆல்க்கஹாலை(வெளியிலிருந்து தரப்பட்ட) கிட்னி சிறு நீர் மூலம் வெளியேற்றிக்கொண்டே இருக்கும். பார்ரட்டிக்கு மீண்டும் குடிக்க எண்ணம் பிறக்கும். இது ஃபிஸிக்கல் காஸ் /தாய்ப்பாலை அவசரப்பட்டு நிறுத்தினாலும் அக்குழந்தைக்கு நிப்பிள் காம்ப்ளெக்ஸ் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கும். மிக முக்கியமாக ஆல்க்கஹால் என்பது எஸ்கேப்பிஸ்டுகளின் சரணாலயம். இது பிரச்சினைகளிலிருந்து தப்பித்தலில் ஆரம்பித்து பால் வாங்கி வரும்போதும் என்னடா இது அசதியாயிருக்கு ஒரு கட்டிங்க் போடலாமா என்ற எண்ணம் வந்து விடும். ஆல்கஹால் நேரிடையாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. உணவு செரிக்கப்பட்டாலன்றி ரத்தத்தில் கலக்காது. நேரிடையாக உறிஞ்ச பழக்கப்பட்ட உடம்பு ஜீரண சக்தியை இழந்து தின்னது தின்ன மாதிரியே வெளித்தள்ளப்படும்.

த‌ண்ணி போட்ட‌ போது ஒரு எண்ண‌ம்,போடாத‌ போது ஒரு எண்ண‌ம் என்று ஆர‌ம்பித்து ம‌னித‌ ம‌ன‌மே ஆள‌வ‌ந்தான் க‌ம‌ல் மாதிரி ஆகிவிடும். முக்கிய‌மாய் ஆண்மை குறையும், ம‌ற‌தி அதிக‌ரிக்கும், ஞாப‌க‌ங்க‌ளில் குழ‌ப்ப‌ம் ஏற்ப‌ட்டு ச‌ந்தேக‌ புத்தி அதிக‌ரிக்கும். ர‌த்த‌த்துக்கு மான‌ம்,ஈன‌ம் ,சூடு,சுர‌ணை,பாச‌ம்,நேச‌ம்,ப‌ண்பு,க‌லாச்சார‌ம் தாய்/ம‌னைவி/ம‌க‌ள் வேறுபாடு தெரியும். ர‌த்த‌த்தில் க‌ல‌ந்த‌ ஆல்க்க‌ஹாலின் ச‌த‌வீத‌ம் அதிக‌ரிக்க‌ அதிக‌ரிக்க‌ ..மேற்சொன்ன‌வை காணாம‌ல் போய் விடும்.

Wednesday, September 24, 2008

எங்கோ பூக‌ம்ப‌ம் வ‌ந்தால் என்னுள்ளும் ஏதோ குலுங்குகிற‌து

ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் என்பதே என் உந்து சக்தி. மேலும் வேதங்கள் புராணங்கள் கூறும் தேவர்,தேவதைகளிடம் நற்சான்று பெறும் நப்பாசையும் இல்லாமலில்லை.

என் தளம் வேறு, என் பாட்டு வேறு ,பல்லவி வேறு..மற்றதெல்லாம் வேறும் எடுப்பு,தொடுப்பு தொகையறாதான். என் எழுத்துக்களின் அடிநாதம் கருணை. மனிதர்கள் பால்,உயிர்களின் பால் கருணை மட்டுமே. நிலையில்லாததாய் கருதப்படும் மனித வாழ்வின் நிரந்தரத்தன்மையை குண்ஸாக புரிந்து கொண்ட காரணத்தால் இயற்கையின் போக்கிற்கு எதிரான இந்த உலகத்தின் சிறு அசைவையும் என்னால் ஏற்க முடிவதில்லை.

ம‌னித‌ உயிர் ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌ ஒரு உயிரும்,எந்த‌ ஒரு சிறு புல்லும் இந்த‌ இய‌ற்கையின் ஒருபாக‌மே. எங்கோ பூக‌ம்ப‌ம் வ‌ந்தால் என்னுள்ளும் ஏதோ குலுங்குகிற‌து. எங்கோ வெள்ள‌ம் வ‌ந்தால் என்னுள்ளும் ஏதோ ந‌னைகிற‌து.

Tuesday, September 23, 2008

ஜோதிடம் மூலம் ஜாதகரின் செக்ஸ் பழக்கவழக்கங்களை அறியலாம்

ஜோதிடம் மூலம் ஜாதகரின் செக்ஸ் பழக்கவழக்கங்களை அறியலாம்

கடக ராசி ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸுக்கு பெயர் பெற்ற ராசி(தாயை உள்ளூர காதலித்து த‌ந்தையை வெறுப்பது).செக்ஸ் பழக்க வழக்கங்களை ஜாதகத்தின் 7ஆமிடம்,12 ஆமிடம் சுக்கிரன் நின்ற ராசி, சுக்கிரனுடன் சேர்ந்த கிரகங்களை பொறுத்து கணிக்க முடியும். 8ஆமிடம் மர்மஸ்தானத்தை குறிக்கும் இடமாகும். இதை வைத்து வெனீரியல் டிஸீஸ் குறித்தும் அறியலாம். சுக்கிர செவ்வாய் சேர்க்கை உறுப்பில் ரத்தப்போக்கு,அதி உஷ்ணத்தால் வெள்ளைப்படுவது போன்ற தொல்லைகளை தரும். அதே போல் காதலன் அல்லது காதலியை ரத்தம் வரும்படி தாக்குவதும் இருக்கும்.

சுஜாதா அரைத்த‌ மாவையே அரைத்தார்

உங்கள் விருப்பம் உங்கள் அச்சகம் உங்கள் பேனா எது வேண்டுமானாலும் எழுதுங்கள்
ஆனால் காலத்தின் விமர்சனம் உங்கள் பிணங்களை கூட தோண்டி எடுத்து தூக்கில் போடும்.


இது கவிஞர் (கவியரசு என்றால் அது ஒரு கண்ணதாசன் மட்டுமே)வைரமுத்துவின் ஆரம்பகால ஆவேசம்.

சுஜாதாவின் ம‌றைவுக்கு பிற‌கு இந்த‌ விம‌ர்ச‌ன‌ம் ஏன்? என்ற‌ கேள்விக்கு இது என் ப‌திலாக‌ அமைய‌ட்டும்.

சுஜாதா அரைத்த‌ மாவையே அரைத்தார் என்ப‌த‌ற்கு ஒரு உதார‌ணம்:


கதை பேர் 24 ரூபாய் தீவு. ஒருகற்றுக்குட்டி நிருபனுக்கு ஒரு டைரி கிடைக்கிறது அது ஒரு தலைவர் ஒரு விலைமகள் மடியில் எழுதிய கவிதை தொகுப்பு. இறுதியில் ஆட்சி க‌விழ்கிற‌து. இதையேதான் ப‌த‌விக்காக‌ என்று நாவ‌லாக‌ எழுதினார். குங்கும‌ம் நிர்வாக‌ம் மான‌ம் கெட்டு இதை வெளியிட்ட‌து. இது எம்.ஜி.ஆர் க‌ருணாநிதி ப‌ற்றிய‌ க‌தை என்று தெரிந்தும் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. அரைத்த‌ மாவு என்று தெரிந்தும் வெளியிட‌ப்ப‌ட்ட‌து.

Monday, September 22, 2008

அம்மன் வேடம் தரித்த நடிகைகள் சூலத்தை தூக்கும்போது

சாக்தேயம் என்பது ஷண்(6)மதங்களில் ஒன்று.அம்மனை பிரதானமாக கொண்ட பக்தி மார்கமே சாக்தேயம்.
அம்மன் என்றால் அந்த காலத்து ஆதிபரசக்தி,சமீப காலத்து அம்மன் படங்கள் தவிர மற்ற திரைப்படங்கள் கூட என்னை பெரிதாக கவர்ந்ததில்லை.

மேலும் அம்மன் வேடம் தரித்த நடிகைகள் சூலத்தை தூக்கும்போது தபார்ரா பல்பு என்று அசிங்க கமெண்ட் அடித்தவன் தான். நான் எப்படி சாக்தேயனாக மாறினேன் என்பதை விளக்கவே இந்த பதிவு.

1989 ல் ஜோதிடம் மீதான எனது ஆராய்ச்சியில் எனது ஜாத‌கத்தில் சிவ சக்தி யோகம் இருப்பதாய் அறிந்து சிவ பார்வதி இணைந்த டாலர் அணிவதும்,சகலத்திலும் அந்த உருவத்தை அச்சிட்டு கொள்வதுமாய் அலம்பல் பண்ணியது உண்டு.

கி.பி.2000 வரை கூட சாக்தேய வாசனை கூட என் மேல் படிந்ததில்லை. அதென்னமோ 2000 ஆம் வருடம் டிசம்பர் 23 ஆம் தேதி என்று ஞா. அப்போதைய மந்திரத்தில் மாங்காய் விழும் என்று நம்பிய நண்பர்கள் குழுவிடம் என்னப்பா ஆயிரம் மந்திரம் இருக்கிறதா சொல்றிங்க.. காசு பணம்வர்ரதுக்கு எதுனா மந்திரம் இருந்தா சொல்லுங்கப்பா என்றேன்.

அவர்கள் எதையோ எடுத்துவிட அதில் பை மிஸ்டேக் புவ‌னேஸ்வ‌ரி அம்ம‌னுக்கான‌ மாயா பீஜ‌மும் க‌ல‌ந்திருக்க‌ (பிடிச்சா ச‌னி மாதிரிபிடிக்க‌ணும் என்ப‌து என‌க்கு பிடித்த‌ கொட்டேஷ‌ன் ம‌ட்டும‌ல்ல‌ க‌டைபிடிப்பதும் உண்டு) அதை அறியாது நான் அடி அடி என்று அடிக்க‌ என்னென்ன‌வோ ந‌ட‌ந்து விட்ட‌து இந்த‌ விஜ‌ய‌ த‌ச‌மிக்குள் என‌து மாத‌மிருமுறை ப‌த்திரிக்கைக்கு ஆர்.என்.ஐ நெம்ப‌ர் வர‌ட்டும்..பிறகுவ‌ச்சுக்க‌றேன் க‌ச்சேரி.

கனவுகளில் மட்டும் புணர்ந்து

நான் ஒருவன் நிர்வாண கிராமத்தில் கோவணாண்டியாய் அலைகிறேன்..
நின் ப‌டைப்பில் இல்லை ஒரு குறை
வ‌குத்திடுவேன் புது ம‌றை.
என் ராஜ்ஜிய‌த்தில் ம‌னித‌ உயிருக்கு காப்பு
கொலை,தற்கொலை,விபத்து, மற்றும் நோய்க‌ளுக்கு ஆப்பு
தகுதி (ஃபிசிக்க‌ல்,சைக்கால‌ஜிக்க‌ல் ம‌ற்றும் பொருளாதார‌) ப‌டைத்த‌வ‌ர்க்கு ம‌ட்டுமே இன‌ப்பெருக்க‌த்துக்கு அனும‌தி
அதுவ‌ல்லாதோருக்கும் உண்டு க‌ல‌வி ,அத‌ற்கும் பெற்றாக‌ வேண்டும் க‌ல்வி.
உயிர‌ற்ற‌ வாக‌ன‌த்தை இய‌க்க‌வும் தேவை ப‌யிற்சி
அது இல்லாது ம‌ண‌ந்த‌தால் தானே இத்த‌னை அய‌ற்சி
ஓருயிரை சும‌க்கும் உயிருக்கு கு.ப‌.பிர‌ச‌விக்கும் வ‌ரையிலாவ‌து அர‌சு அப‌ய‌ம‌ளிக்கும்,அத்த‌னையும் உப‌ய‌மாக‌ அளிக்கும்
க‌ல்வி..கல்வியை பெறும் மாணாக்கனை தன‌து உட‌ல்,ம‌ன‌ம்,புத்தி,ஆத்மா, குறித்த உண்மைகளை அறிந்து பெற்றோர்,குடும்ப‌ம்,தெரு,ஊர்,மாவ‌ட்ட‌ம்,மாநில‌ம்,நாட்டுக்கு உண்மையானவனாய்,உபயோகமானவனாய் வ‌ள‌ர‌ உத‌விட வேண்டும்.

வேலை அது எவனோ தருவதாய் இருக்கக்கூடாது. மனிதன் பிறந்த மறுநிமிடம் அவனுக்காக வேலை காத்திருக்க வேண்டும்,கங்கை காவிரி இணைப்பு,கூட்டுறவுப்பண்ணை விவசாயம் இது இரண்டு போதும் இந்நிலை வர.

ஆர் மாற்றுவது.. ஆர் தேற்றுவது.. இது மனித யத்தனத்தில் முடியும் பணியா ? நோ.. நோ..நெவர்

தாயே !
என்னை ஏன் இப்படி படைத்தாய்..சதா முழுமைக்கும்,செழுமைக்கும் ஏங்கும் மனம் உடையவனாய்.

தாயே..இவர்களைப்போல் சதா அரைவேக்காட்டு தனங்களோடும், தன்மானத்தை எரிக்கும் ஏழ்மை,அடிமைத்தனங்களுடன் வசிக்கும் அடிமையாய் அல்லாது நித்தம் சுதந்திரத்துக்கு ஏங்கும் மனதை ஏன் தந்தாய்.

பகல் கனவுகளுடன், கனவுகளில் மட்டும் புணர்ந்து சுய இன்பத்தில் மூழ்கி ஒரு வேலைக்கும்,ஒரு சேலைக்கும் ஏங்கி,பின்னொருத்தி வந்த பின்பு ஆண்மையின்மையுடன், தாழ்வு மனப்பான்மையால் அவளது சாடிசத்துக்கு பலியாகும் மசாக்கிஸ்டாக அல்லாது என்னை ஏன் இப்படி படைத்தாய்.

ஒரு சுடு சொல் என்னை நோக்கி எறியப்படும்போது என் தன்மானத்தின் மீதான சூட்டை காட்டிலும்,அச்சொல்லை உதிர்த்தவனின் கையறு நிலை கண்டு இரங்கும் மனமெதற்கு தந்தாய்

இப்படியெல்லாம் கனவு காண வைத்து,கனவுக்கே என்னை உணவாக்கி,கனவுகளோடு திருப்தியடையாது..கனவுகளை நனவாக்கும் துணிச்சலை தந்து ஏன் என்னை இப்படி செய்தாய்.

ஆனது ஆனதாய் இருக்கட்டும். என் போன்றோர் ஒருங்கிணைந்து செயல்பட வேணும் அனுமதி தா

Wednesday, September 17, 2008

மக்கள் கொண்டாட்டம் சந்திரபாபு பாடு திண்டாட்டம்

ஆந்திர அரசின் அட்டகாச திட்டங்கள் மக்கள் கொண்டாட்டம் சந்திரபாபு பாடு திண்டாட்டம்

ஒருபக்கம் 3 லட்சம் கோடி ரூபாய் செலவில் அணைகள் கட்டப்பட்டுவருகின்றன. மறுபுறம் ஆந்திர அரசின் அட்டகாச திட்டங்கள் அதிரடியாக அமலாகிவருகின்றன . ஹைடெக் என்று பெருமையடித்துக் கொண்டிருந்த சந்திரபாபு அரசு ஆன்லைன் மூலம்,ஏ.டி.எம். மூலம் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவது கண்டு கதி கலங்கி போயிருக்கிறார். அரசின் அதிரடிகள் சந்திரபாபுவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளன.

ஏழை எளியவர்கள் உயர் தர மருதுவ சிகிச்சை பெற வழி வகுக்கும் ஆரோக்கிய ஸ்ரீ திட்டமாகட்டும்,இரண்டு ரூபாய்க்கே கிலோ அரிசி வழங்கும் திட்டமாகட்டும் தூள் கிளப்பி வருகின்றன, ஏற்கெனவே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது. சுய உதவி மகளிர் குழுக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் நூற்றுக்கு நாலணா வட்டிக்கே வழங்கப்படுகிறது. இதை நெசவாளர்கள்,மற்றும் இதர சுயதொழில் பிரிவினருக்கும் விஸ்தரிக்க உள்ளனர்.

சிரஞ்சீவி புதிய கட்சியை ஆரம்பித்தார். அவர் சார்ந்துள்ள பலிஜ நாயுடுக்களுக்கு அடித்தது யோகம். அவ்வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க ஒய்.எஸ் உத்தரவிட்டார். ஏற்கெனவே பல சாதிகளை பி.பட்டியலி சேர்த்து விட்டனர். இத்தனைக்கும் சூட்சுமம் நிதி மந்திரி ரோசய்யாக் கையில் இருக்கிறது. வைசியரான ரோசய்யா தம் மூளையை உபயோகித்து அரசு வருவாயை பெருக்கி வருகிறார். ஒய்.எஸ் நலதிட்டங்களை அள்ளி வீசி வருகிறார்.

அரிசி விலையேறுதென்று சந்திரபாபு லாவணி பாடினார், உடனே ஒய்.எஸ் விஜிலென்ஸ் படையை முடுக்கி விட்டார். தனியார் ஆலைகளில் தீவிர தணிக்கை மேற்கொள்ளப்பட்டது ,பிடிபட்ட ஆயிரக்கணக்கான டன் அரிசி பல் பொருள் வழங்கு துறைக்கு திருப்பி விடப்பட்டது. அர்சி விலை வீழ்ந்தது. சந்திரபாபுவும் தம் பங்குக்கு மீ கோசம் என்று மாநிலத்தை சுற்றி சுற்றிவந்து வாக்குறுதிகளை அள்ளி விட்டார். நம்பத்தான் ஆளில்லை.

Monday, September 15, 2008

சிர‌ஞ்சீவி க‌ட்சியை ம‌ர‌ண‌த்தின் நிழ‌ல் தொட‌ர்ந்து விர‌ட்டி வ‌ருகிற‌து.

அரசியல் கட்சிகட்சிகளின் பெயர்களில் பீஜாக்ஷரங்களும் அவற்றின் பாதிப்பும்

எந்த எழுத்தானாலும் சரி அதனுடன் "ம்" சேரும்போது அது பீஜாக்ஷரமாகிறது. பீஜம் என்றால் விதை என்று பொருள். இதன் சக்தி எத்தகையது என்பதற்கு சின்ன உதாரணம்:

யாராவது யாரையாவது சக்கையாக ஏமாற்றிவிட்டால்..ஏமாந்தவர் தன் ஏமாந்த கதையை அடிக்கடி நினைத்துப்பார்ப்பார். ஒவ்வொரு முறையும் தன் ஏமாந்த கதையை நினைத்து "ஹும்" என்ற ஒலியுடன் பெருமூச்சு விடுவார். ஹும் என்பது சண்டி பீஜம். பீஜங்களை தொடர்ந்து உச்சரிக்கும் போது அதன் அதிர்வு மூலாதார சக்கரத்தினை மோதுகிறது. இது தொடர்ந்து நடை பெறும்போது குண்டலி சக்தி விழிக்கிறது அடுத்த‌ நிலையான‌ ஸ்வாதிஷ்டான‌ ச‌க்க‌ர‌த்தை நோக்கி முன்னேறுகிற‌து. அப்போது பூமி தொட‌ர்பான‌ பொருட்க‌ள் மீதான‌ க‌வ‌ர்ச்சியிலிருந்து ம‌னித‌ ம‌ன‌ம் விடுத‌லை பெற்று அவ‌ற்றி‌ன் மீது ஆதிப‌த்ய‌ம் பெறுகிறது. பூமி மீதான‌ பொருட்க‌ளை த‌ன் விருப்ப‌ப்ப‌டி ஆட்டுவிக்கும் ச‌க்தி ம‌னித‌ ம‌ன‌த்துக்கு கிடைக்கிறது. இது பீஜாக்ஷ‌ர‌த்தின் ம‌கிமைக்கு சின்ன‌ உதார‌ண‌ம் ம‌ட்டுமே.


அம்ம‌னுக்கான‌ ச‌த‌நாமாவ‌ளியில் ஒன்று "ப‌ஞ்ச‌ தசாக்ஷ‌ர்யை ந‌ம‌ஹ‌' என்ப‌தாகும். ப‌ஞ்ச‌ : ஐந்து, த‌சா:ப‌த்து ஐந்து X ப‌த்து ஐம்ப‌து. ச‌ம‌ஸ்கிருத‌த்தில் மொத்த‌ம் ஐம்ப‌து எழுத்துக்க‌ள். ஐம்ப‌து எழுத்துக்க‌ளாக‌வும் இருப்ப‌வ‌ள் சாட்சாத் அம்பிகையே என்ப‌து இத‌ன் பொருள். வெறும் எழுத்தே அம்பிகையின் வ‌டிவ‌ம் என்றால் பீஜ‌ம்?

பார‌தீய‌ஜ‌ன‌தா க‌ட்சி: இதில் "ம்" என்ற‌ ஒலியே இல்லை

காம்கிர‌ஸ்: இதில் காளி பீஜ‌ம் உள்ள‌து (இத‌ன் த‌லைவ‌ர்க‌ள் பெண்க‌ளாய் இருந்தால் ச‌ர்வ அதிகார‌ங்கள் பெற்றிருப்பார்க‌ள்

தெலும்கு தேச‌ம்: இதில் ல‌ட்சுமி பீஜ‌ம்,ச‌ர‌ஸ்வ‌திபீஜ‌ம் உள்ள‌து

பிர‌ஜா ராஜ்ஜிய‌ம்: இதில் ய‌ம‌னுக்குரிய‌ பீஜ‌ம் உள்ள‌து

சிர‌ஞ்சீவியுட‌ன் முத‌ல் பிர‌ஸ் மீட்டில் க‌ல‌ந்து கொள்ள‌ இருந்த‌ சிர‌ஞ்சீவியின் ந‌ண்ப‌ர் இறந்தார். அதைகொண்டாட‌ ப‌ட்டாசுக‌ள் ஏற்றிச்சென்ற‌ 4 ர‌சிக‌ர்க‌ள் செத்த‌ன‌ர். ஆக‌ஸ்ட் 26 ஆம் தேதி திருப்ப‌தி கூட்ட‌த்தில் வால‌ண்டிய‌ராக‌ சென்ற‌ ர‌சிக‌ர் ஒருவ‌ர் மார‌டைப்பால் கால‌மானார். க‌ட்சியை ம‌ர‌ண‌த்தின் நிழ‌ல் தொட‌ர்ந்து விர‌ட்டி வ‌ருகிற‌து.

Sunday, September 14, 2008

இருபுறம் ஒளிகொண்ட மெழுகென

படைத்துவிட்டாய் எனை
அடுத்துவிட்டேன் உனை
விதியின் கைகளுக்கே கொடுப்பதுவோ முறை
ஈதென்ன புதிய சிறை
சுடர் மிகு அறிவெல்லாம் வாழ்வினிடர் நீக்க ஒழிவதுவோ
இருபுறம் ஒளிகொண்ட மெழுகென நான் கரைவதுவோ
அம்மா உனை நினைந்தே பாமாலை பல புனைந்தே
இருவிழியது நனைந்தே நின் பிள்ளைகள் அல்லல் தீர்க்க‌

களம் இறங்கி உளம் நொந்தேன்

வேதனையில் நிதம் வெந்தேன்


நின் அருள் தானின்றி
என் மருள் தீராது
கருமம் தொலைக்க வந்தேன்
த‌ரும‌ம் காத்து நின்றேன்
த‌ரும‌த்தால் ஒழிந்த‌துவே நான் பெற்ற‌ செல்வ‌மெல்லாம்
செல்வ‌ம் வேண்டுமென்று த‌ரும‌ம் ஒழிக்கின்றேன்
என்ன‌ தீர்ப்பிதுவோ சூனிய‌ம் தான் இத‌ன் முடிவோ?


பிற‌ந்து விட்டேன், அக‌ண்ட‌ பாத்திர‌த்து அமுத‌ம் க‌ர‌ந்துவிட்டேன்
பாலாக்கி சுர‌ந்திட்டேன் ஆலால‌ம் என்றெண்ணி ஓதுதிந்த‌ மூட‌ ச‌ன‌ம்
என் செய்வேன் எவ‌ர் சிர‌ம் நான் கொய்வேன்

த‌ற்கொலைக்கு த‌டையாச்சு த‌ன்மான‌ம்
கொலைக்கு த‌டையாச்சு நான் பெற்ற‌ நெஞ்சு

அம்ம‌வோ..வேண்டா இனி இந்த‌ வாழ்வே

வேத‌னை வ‌ண்டு துளைக்க‌ ஆறாய் பெருகுது க‌ண்ணீர்
என் ம‌க்க‌ள் ந‌ல‌ம் காக்க‌ க‌ள‌ம் நின்று போர் செய்கையிலே
ஒரு குண்டு போதும‌டி என் பிறவி முழுமை பெறும்

Thursday, September 11, 2008

இன்று சீனியர் ரிப்போர்ர்ட்டர் பட்டாபி ராமபிள்ளைக்கு உதை கொடுத்து தமது செல் டார்ச்சருக்கு உபயோகித்த செல்லை பறித்து வந்தேன்.

இன்று சீனியர் ரிப்போர்ர்ட்டர் பட்டாபி ராமபிள்ளைக்கு உதை கொடுத்து தமது செல் டார்ச்சருக்கு உபயோகித்த செல்லை பறித்து வந்தேன்.(எழுத்துப்பூர்வமான ஒப்புதல் வாக்கு மூலத்தோடு).அதை அனந்தபூருக்கு அனுப்பிவிடுவதாய் உத்தேசம்.

காந்தி தாத்தாவின் ப்ரிய சீடனானா நான் ஏன் இந்த வ‌ன்முறைக்கு இறங்கினேன் என்பதை அறிய இந்த வலைப்பூவை படியுங்கள். இந்த மாதிரி பார்ட்டிகளுக்கு சட்டம் என்ன தண்டனை கொடுக்கும் ,அதற்கு எத்தனை காலம் பிடிக்கும்,எவ்வளவு செலவாகும் என்பதையும் கூறுங்கள்.

சித்தூர் டவுன் பாலாஜி காலனியை சேர்ந்தவர் பட்டாபிராமபிள்ளை(55) திருமணமாகி சோகசித்திரமாய் ஒரு மனைவி . பிள்ளைகள் இல்லை. இவர் தந்தை கிராம கணக்கு பிள்ளையாக இருந்தவர். சொந்த் அப்பாவை சஸ்பெண்ட் செய்யவைக்க 4 வருடம் தொடர்ந்து மொட்டைபெட்டிஷன் போட்டதாய் பெருமையடிப்பது மிஸ்டர் பிள்ளைக்கு வழக்கம். லிட்டிகேசன் முன்னாடி பிறந்து அதற்கு பிறகு பிறந்தவர் பிள்ளை என்று கூறலாம். ஆந்திரபிரபா,பத்திரிகா,நேற்று வரை காகதீயா,இன்று ஆசாஜோதி இப்படி அவர் வேலை செய்யாத பத்திரிக்கையே கிடையாது. ஏதோ சேவை நிறுவனம் வைத்திருந்ததாகவும்,ஃபண்ட்ஸ் வர இருந்த சமயம் ஏதோ தப்பாகி ரோட்டுக்கு வந்ததாகவும் கூறுவது வழக்கம்.


இந்நிலையில் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக நினைத்து (பிரஸ் க்ளப்பில் என் போன்ற லட்சியவாதியோடு நாட்டு நடப்பை விவாதிக்க எவனும் தயாரில்லை)பிள்ளையுடன் பழகிவந்தேன். பத்து ,இருபதுக்கும் லாட்டரி அடிக்கும் பிள்ளைக்கு அடிப்ப‌டை தெலுங்கிலேயே த‌க‌ராறு. வார்த்தைக‌ளை வாரி இறைத்த‌து போன்ற‌ ந‌டை. ச‌ற்றே வ‌ச‌தியிருக்கும் தைரிய‌த்தில்,பிள்ளைக்கு வேலை கொடுத்துதான் பைசா கொடுக்க‌ வேண்டும் என்ற‌ பிடிவாத‌த்தில்ஆப்பரேஷன் இந்தியா திட்டம்,அதன் அமலுக்கு நான் மேற்கொண்ட முயற்சிகளை டிக்டேட் செய்து எழுத வைத்து, பைசா கொடுத்து வந்தேன். எழுத்தா அது கிறுக்கல். *பார்த்து பிள்ளை! ஆப்பரேட்டருக்கு புரியறமாதிரி எழுதுங்க என்ற என்ற முறையீடு ,விலைவாசி உய‌ர்வு எதிர்ப்பு கோஷம் மாதிரி வீணாய் போனது. கூட இருந்து டைப் செய்விக்கிறேன் என்று கூறிய பிள்ளை தட்டச்சுவிக்கும் நேரம் வந்ததும் சுய ரூபத்தை காட்டினார்..பிள்ளை பணம் கேட்கமாட்டார்.வேலையிருக்கு என்றால், பலானவன் வரச்சொல்லியிருக்கான் போனால் இத்தனை பணம் வரும் என்பார். அந்த பணத்தை நாம் தருவதாய் கமிட் ஆனாலன்றி பார்ட்டி வழிக்கு வராது. இதே அஸ்திரத்தை உபயோகித்தார் பிள்ளை வெறுத்துப்போனேன்.

இது ஒரு ட்ராக் என்றால்..மற்றொரு ட்ராக் பாருங்க. பிள்ளைக்கு இரண்டாம் கல்யாண ஆசை வந்து விட்டது. என் கணிப்பு படி பிள்ளை முழு ஆணா இல்லையா என்பதிலேயே எனக்கு சந்தேகம். அந்த சேஷ்டைகள் அப்படி. ஈதிப்படியிருக்க ஈநாடு மேட்ரிமோனியலில் வந்த விளம்பரத்தை பார்த்து பிள்ளை அப்ளை செய்ததோடு, மணமகளின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப்புவதும், போன் போடுவதுமாக டார்ச்சர் செய்துள்ளார். (3 மாதம் போல)

டார்ச்சரை தாங்க முடியாத மணமகள் தரப்பு நைசாய் பேசி அனந்தபூர் வரவழைத்து உதைகொடுத்து கட்டிவைத்துவிட்டனர். என் கெட்ட நேரம் அந்த நேரம் பார்த்து பிள்ளைக்கு ரொட்டீனாய் நான் போட,விஷயம் தெரிந்து 55 ரூ.டாக்டைம் செலவழித்து போனில் பஞ்சாயத்து செய்து கன்வின்ஸ் செய்தேன். எப்படியோ மணமகள் தரப்பு பிள்ளையை உயிருடன்,போலீஸ் கேஸ் ஏதுமின்றி சித்தூர் அனுப்பி வைத்தது. அனுப்பியது.

ஆகஸ்ட் 3 ஆம்தேதி உதைகொடு படலம்,பிட்சாடனம் செய்து கதிரியில் என் நண்பன் ஒருவன் ரூ 100 தருமம் செய்ய ஊர் சேர்தல் எல்லாம் நடந்து முடிந்தது. விட்டாரா பிள்ளை..மீண்டும் ஆரம்பித்தார் டார்ச்சர் ப‌டலத்தை. அனந்த பூரிலிருந்து ஒரே புலம்பல். என்ன செய்ய இன்று சீனியர் ரிப்போர்ர்ட்டர் பட்டாபி ராமபிள்ளைக்கு உதை கொடுத்து தமது செல் டார்ச்சருக்கு உபயோகித்த செல்லை பறித்து வந்தேன்.(எழுத்துப்பூர்வமான ஒப்புதல் வாக்கு மூலத்தோடு).அதை அனந்தபூருக்கு அனுப்பிவிடுவதாய் உத்தேசம்.

Wednesday, September 10, 2008

நடிகர் விஜய் வீட்டில் கொத்தடிமை‍ : ஷோபா சந்திரசேகர் வாக்குமூலம்

நடிகர் விஜய் வீட்டில் ஒரு இளைஞர் கொத்தடிமை‍யாக 10 வருடங்களாக வேலை செய்கிறார் என்று அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாக்குமூலம் அளித்துள்ளார். கல்கி வார இதழில் ஷோபா சந்திரசேகர் தன் மகனின் அதி வீர பராக்கிரமங்கள் குறித்து ஒரு தொடர் எழுதி வந்தார். அதன் கடைசி அத்தியாயத்தில் ஒரு இளைஞர் தம் வீட்டில் 10 வருடங்களாக வேலை செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்ததாக கூறியுள்ளார். அப்போது விஜய் அந்த இளைஞருக்கு ரூ.1 லட்சம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளாரே தவிர ,சம்பளம் கொடுக்கப்பட்டது குறித்து சொல்லவில்லை. எனவே வேலையில் சேரும்போது அந்த இளைஞரின் வயது என்ன? (குழந்தை தொழிலாளியா?),அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதா? ஆம் எனில் எவ்வளவு என்பதை ஷோபா சந்திரசேகர் தெளிவு படுத்தவேண்டியுள்ளது.

Thursday, September 4, 2008

ஒரே வ‌ஸ்துவிலிருந்து தோன்றிய‌ இந்த‌ உயிர்க‌ள் மீண்டும் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்க‌ துடிக்கின்ற‌ன‌. இத‌ற்கு த‌டையாக‌ இருப்ப‌து ..

ஒரு மகா வெடிப்பிலிருந்து தோன்றியதே இந்த‌ பூமி. இதில் தோன்றிய‌ எல்லா உயிர்க‌ளும் ச‌ப்த‌தாதுக்க‌ளால் உருவான‌ உட‌லில்தான் வ‌சிக்கின்ற‌ன‌. ஒரே வ‌ஸ்துவிலிருந்து தோன்றிய‌ இந்த‌ உயிர்க‌ள் மீண்டும் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்க‌ துடிக்கின்ற‌ன‌. இத‌ற்கு த‌டையாக‌ இருப்ப‌து த‌ம் உட‌லே என்ற‌ ச‌ப்கான்ஷிய‌ல் தாட் கார‌ண‌த்தால் இந்த‌ உட‌லை உதிர்க்க‌ த‌ற்கொலை,கொலை,விப‌த்து நோய் போன்ற‌ வ‌ழிக‌ளை நாடுகின்ற‌ன‌.உண்மையில் உயிர்க‌ளின் க‌ல‌ப்புக்கு த‌டையாக‌ இருப்ப‌து சுய‌ந‌ல‌ம் ஒன்றே. சுய‌ந‌ல‌த்தை உதிர்த்து விட்டால் உயிர்க‌ளின் க‌ல‌ப்பு சாத்திய‌மே.

எத்த‌னையோ புண்ணிய‌ புருஷ‌ர்க‌ள் தோன்றிய‌ பூமி ந‌ம் பார‌த‌ பூமி. அவ‌ர்க‌ள் உட‌ல‌ள‌வில் ம‌றைந்து போனாலும்,அவ‌ர்க‌ள‌து எண்ண‌ங்க‌ள் இந்த‌ பூமியை வ‌ட்ட‌மிட்ட‌ப‌டியே உள்ள‌ன‌. அந்த‌ எண்ண‌ங்க‌ள் ந‌ம் மூளைக்குள் நுழைய‌ த‌டையாக‌ இருப்ப‌து ந‌ம் அறியாமையே. இந்த‌ ச‌ம‌ஸ்த‌ ஸ்ருஷ்டியிலிருந்து நாம் வேறுப‌ட்டிருப்ப‌தாக‌ க‌ருதுவ‌து ம‌ட‌மை.

செல் போன் ட‌வ‌ரிலிருந்து வெளிவ‌ரும் க‌திர் வீச்சை போல‌வே,இந்நாட்டு ம‌க்க‌ளின் வேத‌னை கூக்குர‌ல்க‌ளும்,முன‌க‌ல்க‌ளும் ந‌ம்மை தாக்குகின்ற‌ன‌.

இந்த‌ நாட்டில் ம‌ட்டும‌ல்ல‌ உல‌க‌ அள‌வில் பார்த்தாலும் போதிய‌ உண‌வின்றி இறப்ப‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேரோ ,அமித‌ உண‌வு உண்டு நோய் க‌ண்டு இற‌ப்ப‌வ‌ர்க‌ளும் அத‌ற்கு ச‌மான‌ எண்ணிக்கையிலேயே உள்ள‌ன‌ர். இது தேவையா?

ஜீவ‌ ந‌திக‌ள் நிறைந்த‌ பார‌த‌ நாட்டில் பாச‌ன‌த்துக்கு நீரில்லை என்ப‌து ம‌ட‌மைய‌ல்லவா? ந‌ம் நாட்டில் 10 கோடி பேருக்கு மேல் வேலைய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ள் உள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளைக்கொண்டு ஒரு சிற‌ப்பு ராணுவ‌ம் அமைத்து ந‌திக‌ளை இணைக்க‌ முடியாதா? ந‌திக‌ளின் இணைப்பால் பெருகும் விவ‌சாய‌ உற்ப‌த்தி ப‌சிப‌ட்டினியை விர‌ட்டி அடித்து,சுய‌ ந‌ல‌த்தை சுருக்கிட்டு கொல்லும். உயிர்க‌ளை இணைக்கும்.

பிற‌கு கொலைக‌ளுக்கோ,த‌ற்கொலைக்கோ தேவையிராது