சனங்க கச்சா முச்சான்னு சினிமா விமர்சனம் எழுதி குவிக்கிறச்ச நாம மட்டும் எழுதாட்டா ஜாதி ப்ரஷ்டம் பண்ணிருவாங்களோனு ஒரு பயம்.அதனாலதான் இந்த வெட்டி பதிவு.
ரஜினி,ஸ்ரீதேவி நடிச்ச ப்ரியா படம் ஞா இருக்கா? (சுஜாதா எழுதின கதை - ரஜினி ஒரு லாயர். ஸ்ரீதேவி நடிகை - அவிகளுக்கு ஒரு லவர் - ஸ்ரீதேவியோட காதல்ல கேர் டேக்கருக்கு சம்மதமில்லை - அதனால அவிக ரெண்டு பேரும் என்ன பண்றாய்ங்கனு வேவு பார்க்க ரஜினிய அனுப்புவாரு. இவரு அங்கன போயி ஒரு ஜப்பானிய குட்டிய கணக்கு பண்ணுவாரு.
இதே இழவுதான் மன்மதன் அம்பும். என்ன ஒரு வித்யாசம்னா இதுல கமல் ஏற்கெனவே ஒரு ஃப்ரெஞ்சு பெண்ணை கண்ணாலம் கட்டி பறிகொடுத்திருப்பாரு.(அதனால ஃபாரீன் குட்டிய லவ்வற சான்ஸில்லாம போச்சு)
இவர் ஒரு மேஜர்(லாயர் இல்லை), அதுல ரஜினி ஜஸ்ட் தொழில் முறையில போவாரு இதுல கமல் தொழில் கம் சென்டிமென்ட்டல் ஆம்பிஷனோட போறாரு ( கான்சர் நண்பனை காப்பாத்த)
அதுல காதலன் கோழை. இதுல சந்தேக பார்ட்டி கம் லாலா பார்ட்டி. அதுலயும் காதலர்கள் ஒன்னு சேர்ரதில்லை இதுலயும் ஒன்னு சேர்ரதில்லை. இதை மொதல்ல சொன்னது
(ஹி ஹி.. நாலு பேரு கமெண்டு போடுவாய்ங்க-திட்டித்தீர்ப்பாய்ங்க -கொஞ்சம் பரபரப்பாகுமில்லை - நல்லதை சொன்னா ஆருக்கும் ருசிக்கிறதில்லிங்கண்ணா மன்மதன் அம்புல மாதவன் மாதிரி)
சமீப காலமா கமலோட படங்கள் ரெண்டு ரேஞ்சுல வருது . ஒன்னு உயிரை விட்டு பண்றது (அதுலயும் சிலது உயிரை- ஐ மீன் உயிர்ப்பை விட்டுருது - உம்: தசாவதாரம்)
அடுத்த ரேஞ்சு ஜஸ்ட் லைக் தட் ஒரு பிக்னிக் மாதிரி பண்றது. இதுல இதை எந்த ரேஞ்சுல சேர்க்கறது? செலவென்னவோ மொதல் ரேஞ்சு படம் என்னவோ ரெண்டாவது ரேஞ்சு.
அதனால கமல் படத்துக்கு விமர்சனம் எழுதறவுக பி.பி ஸ்ரீனிவாஸ் மாதிரி கலர் கலரா பேனா ( கீ போர்டு ) வச்சிருக்கனும்.
நான் இந்த படத்துக்கு சனங்க செய்திருக்கிற வெட்டிச்செலவையெல்லாம் தூரத்தூக்கிப்போட்டுட்டு ரெண்டாவது ரேஞ்சு படமாவே நினைச்சு இந்த பதிவை எழுதறேன்.
கமலோட உழைப்பு,பெர்ஃபார்மென்ஸ்ல எந்த குறையும் சொல்ல முடியாது. சில காட்சிகள்ள மூன்றாம் பிறை, புன்னகை மன்னன் கமலையெல்லாம் ஓவர்டேக்கே பண்ணியிருக்காரு.
கமல் பாசுமதி ரைஸ் மாதிரி.அதை வச்சு பிரியாணியும் பண்ணலாம். கஞ்சியும் காய்ச்சலாம். அதேதோ நோன்பு கஞ்சி மாதிரி இருந்தாலும் பரவால்லை. ( டைரக்டரோட நோக்கம் என்னவோ அதான்) ஆனால் படத்துக்கு மெலோ ட்ராமா ஃபீச்சரை, நல்லதொரு சென்டிமென்டல் ஃபவுண்டேஷனை கொடுத்திருக்க வேண்டிய அம்சங்களையெல்லாம் டைரக்டர் ஒரு சில ஃப்ளாஷ் பேக் காட்சிகள்ளயும், லேப் டாப்ல வீடியோ சாட் மூலமாவும் காட்டி வீணாக்கிட்டாரு.
பட்ஜெட்டை எப்படி செலவழிகப்போறோங்கற மலைப்புல அவசரப்பட்டு யூனிட்டோட விமானமேறிட்ட மாதிரி இருக்கு.
என்னைக்கேட்டா பட்ஜெட்டை பாதியா குறைச்சு கமலை ஒரு மேஜராவே இன்டர்வெல் வரை காட்டி ஓட்டியிருக்கலாம். அப்படியே இதுவரை தமிழ்படம் காடிவந்த தீவிரவாதிகள் - ராணுவத்தோட தட்டையான வடிவத்தை மாற்றி யாதார்த்தமா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கலாம்.
ஃப்ரெண்டு,ஃப்ரெண்டு வைஃப்னு தட்டையா சொல்றதைவிட அந்த ஃப்ரெண்டும் ஒரு சக ராணுவ வீரன் - கமலோட சுக துக்கங்கள்ள ஆக்டிவ் பார்ட் எடுத்துக்கிட்டவன்ங்கற மாதிரி காட்டியிருக்கலாம்.
நடிகை -தொழிலதிபர் காதல் - சந்தேகம்-பிரிவுங்கறது தினத்தந்தில வெள்ளிமணில வர்ர சமாசாரம். அதை மாஞ்சு மாஞ்சு எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டு போனது வெட்டி வேலை. மேலும் ஃபோன் உரையாடல் -வீடியோ சாட் எல்லாம் மனசுல பதியறது கஷ்டம்.
டைரக்டர் மூளை எங்கே நல்லா வேலை செய்ததுன்னு கேட்டா கமலோட ஹேம்லெட் தனம்தான். (ஃபேட்டல் வீக்னெஸ் -தர்ம சந்தேகம்னு சொல்லலாமா? )
கமலை மேஜர்னு காட்டிட்டு அவரை பிக்பாக்கெட்டை விரட்டி பிடிக்கவும் - வாண்டுகளை கக்கூஸுக்கு கூட்டிப்போகவும் உபயோகிச்சிருக்கிறது சில்லி.
அதுவா இதுவான்னு முடிவு பண்ணாம விருமாண்டி ரேஞ்சுல பாதிபடம் பண்ணி சதிலீலாவதி ரேஞ்சுல மீதிபடம் பண்ணி படத்தை பப்படமாக்கியிருக்காய்ங்க.
ஃபாரீன் தான் போகனும்னு அடம் பிடிச்சாலும் தொழிலதிபர் + நடிகை காதல் தவிர இன்னம் வேற எதுனா சீர்யஸ் ட்ராக் ஒன்னை வச்சிருக்கலாம்.
ஒரு காட்சில தன் மனைவியோட உயிரை பறிச்ச விபத்துக்கு காரணம் ஒரு அமெரிக்க பைக்குங்கறாரு. சினிமாத்தனமா இருந்தாலும் விபத்துக்கு காரணம் சி.ஐ.ஏ ங்கற மாதிரி ஒரு ட்ராக் கொண்டு போய் -க்ளைமேக்ஸ்ல என்னை மாதிரி பாமரர்களுக்காக ஒரு அதகளத்தை ஸ்ருஷ்டிச்சிருக்கலாம்.
எப்படியோ கமல்ங்கற பாசுமதி ரைஸை வச்சு கஞ்சி காய்ச்சிருக்காரு கே.எஸ்.ரவி குமார். அதுவும் ஆறின கஞ்சி. அதுவும் பழங்கஞ்சி .
படத்துல எனக்கு ரெம்ப பிடிச்ச சில ஐட்டங்கள்:
* சண்டையில கவிழ்ந்த டஸ்ட் பின்னை போற போக்குல காலால உதைச்சு நிக்க வைக்கிறது
*உண்மையா தூங்கிக்கிட்டிருந்தா கால் கட்டை விரல் ஆடும்
*இல்லாத காதலன் என்னகலர் சட்டை போட்டிருக்கான்னா "காவி கலர்"
*மாதவனோட எதிர்பார்ப்பை நிறைவேத்திட்டு ( காதலன் இருக்கானு ) ஃபோனை தூக்கி போட்டு பேண்ட் பாக்கெட்ல ரிசீவ் பண்றது
*புல் ஃபைட்ல கமல் -மாதவன்
*லவ் சீனுன்னதும் ட்ரஸ் மாத்திருப்பாளே ..சினிமாக்காரியாச்சே
*மனைவி விபத்தில் சிக்கி இறந்து கிடக்க படக்கென்று காட்சி பின்னோக்கி நகர்வது
*கண்ணால சீன்ல பல்லாண்டு பல்லாண்டு
*வீரத்தோட உச்ச கட்டம் அகிம்சை -கமல்
*லைன் ப்ராப்ளம்னு காட்ட நியூஸ் பேப்பரை நசுக்கி ஊதுறது.
*லைட் போலண்டை காலை தூக்கி நிற்கும் குரூப் ( எம்.ஜி.ஆரை நக்கலடிக்கலியே)
*நான் தண்ணி போட்டா அவன் ஏன் உளர்ரான் - மாதவன்
*பையன் கிடைச்சுட்டான் -புருசனை தொலைச்சுட்டயே -வாண்டு
அநாவசியத்துக்கு செலவழிக்காம படத்தோட ரேஞ்ச் இதுவா அதுவான்னு முடிவு பண்ணி ஒழுங்கா கதை பண்ணியிருந்தா கமலுக்கு இன்னொரு சகல கலாவல்லவன் மாதிரி விவாதத்திற்கப்பாற்பட்ட - கேள்விக்கே இடமில்லாத சூப்பர் ஹிட் படமாக்கியிருக்கலாம்.
டைரக்டர் கோட்டை விட்டுட்டாரு.. பார்ப்போம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
Showing posts with label விமர்சனம். Show all posts

Tuesday, January 18, 2011
Tuesday, January 4, 2011
பத்திரிக்கைகளா?விஷ புத்திரிகைகளா?
பத்திரிகாசிரியர்களுக்கு 10 கேள்விகள் மீதான தமிழ் மலரின் மறுமொழிக்கு எனது விளக்கம்
தமிழ் மலர் அவர்களே,
தங்கள் மறுமொழியிலான அனேக அம்சங்களை மறுக்கப்போகிறேன்.தயவு செய்து தவறாக எண்ணிவிடாதீர்கள். என் உத்தேசம் : பத்திரிக்கைகள் காசு கொடுத்து பத்திரிக்கையை வாங்கும் வாசகனுக்கு உண்மையாக நடக்கவேண்டும் என்பதே. இதனால சில நூறு பத்திரிக்கைகள் மூடப்பட்டாலும் சரி சில ஆயிரம் பத்திரிக்கையாளர்கள் ரோட்டுக்கு வந்தாலும் சரி.
//விளம்பரம் தருபவர்களுக்கு செய்தியிடுவது தவறில்லை. ஆனால் அது செய்திக்கான தகுதியுடையதாக இருக்க வேண்டும்//
செய்தி வெளியிடுவது பத்திரிக்கையின் கடமை. விளம்பரம் கொடுத்தாத்தான் செய்திங்கறது கயவாளித்தனம். மேலும் காசு செலவழித்து. விளம்பரம் கொடுத்தேனும் செய்தி வந்தாகனும்னு நினைக்கிறவன் நிச்சயமா நாணயமானவனா இருக்கமுடியாது.
இதுல செய்திக்கான தகுதி இருந்தா பரவால்லைங்கறது உங்க ஸ்டாண்ட். தகுதியிருந்தா செய்தியாவே போடுங்கறது என் ஸ்டாண்ட். விளம்பரம் கொடுத்தா தான் செய்திங்கறது அவிக ஸ்டாண்டு
//விளம்பரத்தையே செய்தியாக தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. செய்திக்கும் விளம்பரத்துக்கும் போதிய வேறுபாடுகள் வேண்டும்.//
என்னபாஸ் ! வேறுபாடு இப்ப இல்லைங்கறிங்களா? இந்த பன்னாடைங்க என்னதான் விளம்பரத்தை செய்திவடிவத்துல தந்தாலும் உங்களாட்டம் என்னாட்டம் பார்ட்டிங்க ஸ்மெல் பண்ணிர்ரோமே.
இந்த கப்பாசிட்டி சாதாரண வாசகனுக்கு இருக்கும்னு எதிர்பார்க்க முடியாதே
//இன்றைய சூழலில் அச்சுஊடகத்துக்கு தான் மிக அதிக செலவும் மனதவளமும் தேவைப்படுகிறது. //
இந்த மேட்டர்ல நான் டிஃபர் ஆறேன். இன்னைக்கு உள்ள தகவல் தொழில் நுட்பம் காரணமா செலவு பல மடங்கு குறைஞ்சிருக்கு.
//நான் பத்திரிக்கை துறையின் அனைத்து கட்டமைப்புகளிலும் சென்று ஆய்வுசெய்துள்ளேன். ஒரு நாளிதழை வாசகர் கையில் கொண்டு சேர்ப்பது வரை உள்ள பணிகளில் இருக்கும் செலவையும் மனித உழைப்பையும் சாதரணமானதாக கருதிவிட முடியாது.//
அது சரிங்க பாஸ் ! கள்ள நோட்டை அடிக்கிறவன் கம்மியா உழைக்கிறாங்கறிங்களா? அப்ப அதையும் விட்டுரனுமா என்ன?
//ஒரு காலத்தில் பத்திரிக்கைகளுக்கு வரும் வருமானம் விற்பனையை சார்ந்து இருந்தது. ஆனால் இன்று விற்பனை வருமானம் கேள்விகுறியில் உள்ளது. விளம்பரம் தான் முக்கிய வருமானம்.//
கரீட்டு பாஸ்! வாசகன் டிவி பக்கம்,கணிணி பக்கம் நகர்ந்துட்டான். அவனை நழுவவிட்டது ஆரு.. ஆசிரியத்திலகங்கள்தானே. சோறு கிடைக்கலைன்னு வேற "எதையோ"திங்கனுமா?
மறுபடி விற்பனை வருமானத்தை கூட்ட பார்க்கனுமே தவிர காசே குறின்னு விளம்பரத்தை நம்பி பத்திரிக்கை நடத்தறது வேசித்தனமில்லையா?
//இந்த ஒரு வருமானத்தை வைத்து தான் பத்திரிக்கையில் உள்ள 45 துறைகளுக்கும் சம்பளம் செலவினங்கள் செய்யவேண்டி உள்ளது. //
பத்திரிக்கை நடத்தலைன்னா தூக்குல போட்டுருவம்னு அரசாங்கம் சொல்லுதா? ஊத்தி மூடிட்டு போகவேண்டியதுதானே
//முன்னனி பத்திரிக்கைகளில் நிருபராக பணியாற்றி தற்போதும் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராகவும் உள்ள உங்களுக்கு இது தெரியாமல் இல்லை.//
எல்லாம் தெரிஞ்சு போனதாலதானே பாஸ் நிர்வாண உண்மைகள் வலைப்பூ நடத்திக்கிட்டிருக்கேன்.
//பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை நான் கண்டிக்கிறேன். வியாபார யுக்தியில் செய்திக்கு பணம் வாங்குவதை கண்டிக்கிறேன்.//
கண்டிக்கிறதென்ன அரசே தண்டிக்கனும். இவிக என்னமோ சர்வீஸ் பண்ணி கிழிக்கிறாய்ங்கனு அரசாங்கம் மக்கள் வரிப்பணத்துலருந்து என்னென்னமோ சலுகையெல்லாம் கொடுக்குதே. அதனால அரசாங்கத்துக்கு இவிக மேல நடவடிக்கை எடுக்கற தார்மீக உரிமை இருக்கு.
//மற்றபடியுள்ள விளம்பர யுக்திகள் கட்டாயம் தேவை.//
விளம்பர யுக்தின்னா... கிரைண்டர் பரிசு, செல்ஃபோன் பரிசு .. இந்த ரேஞ்சுல போனா பலான நடிகையோட ஒரு நைட்டுன்னு கூட அறிவிக்க வேண்டி வந்துரும். இந்த யுக்தி ஓவரா போயிட்டதால சில வருஷங்கள் முன்னாடி ஜட்ஜுங்க தீபாவளி மலர்களுக்கு தடை போட்டாய்ங்களே ஞா இருக்கா?
//ஆண்மை குறைவு, எயிட்ஸ் போன்ற விளம்பரங்களுக்கு பத்திரிக்கைகள் எடுத்துள்ள நிலைபாட்டில் தவறு இருப்பதாக தெரியவில்லை.//
இல்லிங்க பாஸ் இதெல்லாம் ஐ.பி.சி படியே குற்றம்தான். உங்களுக்கு தவறுன்னு தெரிஞ்சாலும் தெரியாட்டாலும் எஸ்.பி லெவல்லயே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு கிழிச்சுரலாம். வழக்கு பதியலாம் .செக்சன் தேவைன்னா சொல்லுங்க அதையும் கோட் பண்றேன்.
//அதுவும் சமுதாய தேவையாக தானே இருக்கிறது.//
சமுதாயத்துக்கு என்னென்ன கருமாந்திரமோ தேவையா இருக்கு .. அதை கூட தந்துரலாமா என்ன?
//அலோபதியில் தோற்றவர்கள் தான் அதுபோன்ற விளம்பரங்களை நாடி செல்கின்றனர்.//
//எந்த டாக்டருமே (உண்மையான டாக்டர் உட்பட) விளம்பரம் தரக்கூடாதுன்னு மெடிக்கல் கவுன்சில் சொல்லுது. இதுல டாக்டரே அல்லாத டாக்டர்கள் மேஜிக் க்யூர் பத்தி விளம்பரம் தர்ரதும் .. பத்திரிக்கைகள் வெளியிடறதும் அக்மார்க் குற்றம் பாஸ்
//அவர்களின் கடைசி நம்பிக்கை அது. அதில் பயனடைந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.//
விஷம் கூட கடைசி நம்பிக்கையா இருக்கும். அதுக்காக விஷத்தை விக்கமுடியுமா என்ன?

Wednesday, June 23, 2010
குரான் படிக்கத்தக்கதல்ல
அண்ணே வணக்கம் இந்த சுறு சுறு விறு விறு பதிவோட அன்று மெக்சிக்கோ இன்று இந்தியாங்கற தலைப்புல இந்திய அரசாங்கம் சனங்க கிட்ட கை மாத்துகேட்டு எஸ்.எம்.எஸ் .கொடுக்கிற நாள் கிட்டே இருக்குன்னு நிரூபிச்சு அன்று மெக்சிகோ இன்று இந்தியாங்கற தலைப்புல ஒரு தனி பதிவையும் போட்டிருக்கேன். படிங்க. உங்க கருத்தை சொல்ல மறக்காதிங்க.
பாக் நீதிமன்றம் கூகுல், யாஹூ, எம்.எஸ்.என் போன்ற பிரபல வலைதளங்களுக்கு தடை விதிக்கும்படி அரசுக்கு ஆணையிட்டுள்ளது. காரணம் குரானுக்கு எதிரான விஷயங்கள் மேற்படி வலைதளங்களில் வெளியாகிறதாம்.
பராசக்தி சினிமாலயே கலைஞர்"ஆண்டவன் ஆணைக்கே காரணம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்"னு வசனம் எழுதிட்டாரு. அன்னைக்கு ஆண்டவன் கட்டளைக்கான காரணத்தை டீ கடைலயும், தெருமுனை கூட்டங்கள்ளயும் கேட்டாய்ங்க இன்னைக்கு வலைதளத்துல கேட்கிறாய்ங்க. அதான் வித்யாசம்
குரான் என்பது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரையோ என் சைக்ளோ பீடியாவோ அல்ல . அதில் சொல்லப்பட்டதெல்லாம் விஞ்ஞான பூர்வமாக இருந்தாகவேண்டும் என்ற அவசியமும் இல்லை.
ஆன்மீகத்தின் இலக்கு வேறு. விஞ்ஞானத்தின் இலக்கு வேறு . ஆன்மீகத்தின் வீச்சு வேறு . விஞ்ஞானத்தின் வீச்சு வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்வதே ஆன்மீக வாதிகளின் பிழைப்பாய் போயிற்று.
ஒரே செய்தியை கலைஞர் டிவி ஒரு விதமாய், ஜெயா டிவி ஒரு விதமாய் கூறுவதை போல் ஒரே விதமான ஆன்மீக அனுபவத்தை பெற்ற மனிதர்கள் தம் அனுபவத்தை பல விதமாய் சொல்லியிருக்கிறார்கள். அந்த வெளிப்படுத்தலில் அவரவர் அகந்தை, சுயம், கால ,தேச,வர்த்தமானங்களின் தாக்கம் ஆகியன அவர்களையும் அறியாது சற்றே கலந்திருக்கலாம்.
இங்கு எது ஒன்றுமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. அப்பாற்பட்டதென்று மூடி வைத்துக்கொண்டால் அது நாற்றமெடுத்துப்போகும். இந்து மதத்தின் பல விஷயங்களை ஒரு இனம் இப்படி மூடி வைத்ததால் தான் நாற்றமெடுத்து போனது. அவற்றின் உண்மையான விளக்கங்கள் பல தலைமுறைகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டன. டேமேஜ் ஆன ப்ளாக் பாக்ஸ் ஆகிவிட்டன.
நாற்றம் என்பது அழுகலின் விளைவு. அடைப்பின் விளைவு. தேக்கத்தின் விளைவு. நாற்றத்தை உணர்ந்ததும் நாம் செய்ய வேண்டியது அடைப்பை நீக்குவதே. சிலருக்கு வாய்ல பீ நாத்தம் அடிக்கும். அவன் செய்ய வேண்டியது வாய்க்கு தடை விதிப்பதல்ல. ஆசனத்துக்கு ஏற்பட்டுவிட்ட தடையை நீக்குவது .
ஒரு சில வலை தளங்களுக்கு தடை விதித்த மாத்திரத்தில் குரான் குறித்த விமர்சனங்கள் மாயமாய் மறைந்துவிட போவதில்லை. வேறு ஒரு ஊடகத்தில் ,வேறு ஒரு தளத்தில் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும். இந்த விமர்சனங்களை உரிய வாதங்களுடன்,ஆதாரங்களுடன் முறியடிக்க வேண்டுமே தவிர தடை என்பது கையாலாகாதோர் செயலாகும்
உண்மையில் சில விஷயங்களின் மீதான தடைகள் தாம் அவ்விஷயங்களின் கவர்ச்சியை கூட்டியுள்ளன. உ.ம் செக்ஸ்
"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
தடை விதிப்பது நோய் பிடித்த மனதின் அறிகுறி. ஆயிரம் கருத்துக்கள் மோதும்போதுதான் சத்தியம் மின்னலாக பளீரிடும். இன்னும் சொல்லப்போனால் ஆன்மீகம் குறித்த விமர்சனங்களே இளைய தலைமுறையை ஆன்மீகத்தின் பால் ஈர்க்கும்.
இதை பாக் நீதிமன்றம் உணராமல் போனது வருந்தத்தக்கது. உடல், மனம்,புத்தி ஆகியவற்றை கடந்தால் தான் ஆன்மா தரிசனம் அளிக்கும்.
ஆன்ம தரிசனம் கருத்துப்புயலுக்கு பின் கிடைக்கக்கூடியது. குரான் வெறுமனே படிக்கத்தக்கதல்ல. புரிந்துகொள்ள தக்கதல்ல. சைக்காலஜி கூறும் கான்ஷியஸ்,சப்கான்ஷியஸ் மைண்ட்ஸ தாண்டி உள்ள உள்ளார்ந்த ஒருமை உணர்வுகளால் உணரத்தக்கது. அதை உணர படிப்பவர் மனதில் பிக் பேங் , என்ற மகாவெடிப்பே நிகழ வேண்டும். அதை விமர்சனங்கள் நிகழ்த்தும். எனவே பாக் அரசு கருத்து தடை என்ற பெயரில் ஆன்மீக பாய்ச்சலுக்கு தடை விதித்து விடக் கூடாது.
பி.கு: விமர்சனங்கள் சரோஜாதேவித்தனமாக சாக்கடை நடையில் இருப்பின் குறிப்பிட்ட அந்த வலைதளங்களை தடை செய்யலாம். அதை விட்டு தேடு தளங்களையே தடை செய்வது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதே .

Subscribe to:
Comments (Atom)