Sunday, July 3, 2011

சாயி பாபா அறையில் மீண்டும் ரூ.76.89 லட்சம் பிடிப்பட்டது

புட்டபர்த்தி சாயி பாபா மரணத்துக்கு பிறகு அவரது தனியறையை (யஜூர்வேத மந்திரம்) ட்ரஸ்ட் உறுப்பினர்கள் ரகசியமாய்  திறந்து அதிலிருந்து கரன்சி -தங்கம்-வெள்ளி குவியலை எடுத்ததும் - அதில் கணக்கில் காட்டாது கோடிக்கணக்கில் சுட்டு- பெங்களூருக்கு கடத்த முயன்று பிடிபட்டதும் தெரிந்ததே.

இந்த விவகாரத்தில் லேட்டஸ்ட் என்ன வென்றால் அனந்தப்பூர் ஜாயிண்ட் கலெக்டர் யஜூர் வேத மந்திரத்தை திறந்து சோதனையிட்டதில் 905 கிராம் தங்கம் - 116 கிலோ வெள்ளி -ஒரு வைர மோதிரத்தை கைப்பற்றினார். இவற்றின் மதிப்பு  76 லட்சத்து 89 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்விகள்:
1.சாயிபாபா கடவுளாகவே இருந்தாலும் - தமது சேவைகளை ஒரு ட்ரஸ்ட் மூலம் தான் நடத்தி வந்தார். பக்தர்கள் அளித்த  நன்கொடைகளை பெற்றதும் - நன் கொடையாளர்களுக்கு ரசீது கொடுக்கச்சொல்லாதது ஏன் ? அவற்றை வங்கியில் டெப்பாசிட் செய்யும் படி உத்தரவிடாதது ஏன்?

அட சாயிபாபா தான் சொல்லலை தாளி இந்த ட்ரஸ்ட் காரவுக என்னதான் கழட்டறாய்ங்க.இந்த ரெண்டு வேலைய கூட செய்யாம என்ன மயித்துக்கு ட்ரஸ்ட்?

2. சாயிபாபா டெட் பாடி இருக்கும்போதே - உலகமெங்கிலுமிருந்து வி.வி.ஐ.பிக்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கும்போதே - மத்திய மானில அரசின் பாதுகாப்பு படைகள் புட்டபர்த்தியில் இருக்கும்போதே வண்டி வாகனங்களில் கரன்சி கட்டுக்களை கடத்தி சென்ற " கில்லாடிகள்" சாயி பாபா மருத்துவமனையில் இருக்கும்போது எந்த அளவுக்கு கை வரிசை காட்டியிருப்பார்கள்.

3.சாயி பாபாவின் சாம்ராஜ்ஜியத்தில் புட்டப்பர்த்தி ஆசிரமம் ஒரு சிறிய பாகம் தான். இன்னும் பெங்களூர் வைட் ஃபீல்ட் இருக்கு -உலக்மெங்கிலும் கிளைகள் இருக்கு. அங்கன என்னெல்லாம் கொள்ளை போச்சுன்னு ஆரு சொல்றது?

4.போலீசில் பிடிபட்ட பணம் 12 பக்தர்களால் தரப்பட்டதுனு ட்ரஸ்ட் உறுப்பினர்கள் "வாக்கு மூலம் "கொடுத்திருக்கிறார்கள். அவ்ளோ பெரிய தொகை அதுல வில்லங்கமில்லைன்னா இங்கன அக்கவுண்ட்ல போட்டு பெங்களூர் ப்ராஞ்சுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்கலாமே.

5.ஆங் அது சமாதி கட்ட - சமாதி கட்டப்போற கம்பெனிக்கு பக்தர்கள் கொடுத்த நன் கொடைங்கறாய்ங்க. ங்கொய்யால ஊர் பணத்துல சமாதி கட்ட அந்த கம்பெனிதான் கிடைச்சுதா? அட ஊர்பணத்துல கட்டறாப்ல இருந்தாலும் அதை செக்கா வாங்கிக்கலாமே?

6.இன்னைக்கு என்ன நடந்தது - நேத்திக்கு என்ன நடந்ததுன்னு தனித்தனியா பார்த்துட்டிருந்தா கடுகுகளை எண்ணிக்கிட்டு - பூசணிக்காய்களை கோட்டை விட்ட கதையாயிரும். பாபா ஆசிரமத்துல பணம் -ப்ரும்பணம் -அதுவும் கேள்வி கேட்பார் இல்லாத பணம் புழங்கியிருக்கு.  அது பக்தர்கள் பணம் -பக்தர்களும் இந்த நாட்டு சனம் தேன். அவிக பணம் - எந்த நோக்கத்தோடு நன் கொடையா தரப்பட்டதோ அந்த நோக்கத்துக்காகத்தான் செலவழிஞ்சுதானு தெரிஞ்சிக்கிற உரிமை  அவிகளுக்கு இருக்கு. இதை உறுதிப்படுத்தவேண்டிய கடமை மத்திய -மானில அரசாங்கங்களுக்கு இருக்கு.

ட்ரஸ்ட் கிளைகளா உலகெங்கும் பரவியிருக்கு - நியாயப்படி பார்த்தா இதை இன்டர்போல் தான் விஜாரிக்கனும். பணம் எப்படி வந்ததுன்னு வேணம்னா பார்க்காம விட்டுரலாம் - ஏன் வந்ததுன்னும் கண்டுக்காம விட்டுரலாம். எங்கே போச்சுனு கட்டாயம் தெரிஞ்சே ஆகனும்.

கருப்பை வெள்ளையாக்கும் ஹவாலா ஏஜெண்டா சாயிபாபா செயல் பட்டாரா? அ அவருக்கு தெரியாம ட்ரஸ்ட் ஆட்கள் செயல்பட்டாய்ங்களா?

தீவிரவாதகுழுக்களுக்கு ட்ரஸ்ட் மூலமா பணம் /தங்கம் பட்டுவாடா ஆச்சுதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிஞ்சே ஆகனும்.

இதெல்லாம் வெறுமனே இந்து - நான் இந்து , ஆன்மீகம் - நாத்திகம் சம்பந்தப்பட்ட மேட்டரி கடியாது. தேசப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை.

அட்லீஸ்ட் சிட்டிங் ஹை கோர்ட் ஜட்ஜ் தலைமையில எல்லாத்தையும்  நோண்டி நுங்கெடுக்கனும். பை தி பை இன்னைக்கு உசுரோட இருக்கிற சாமியாருங்க சொத்து / நன் கொடை விவகாரங்களையும் ஒரு ஓட்டு ஓட்டி பார்க்கனும்.

அவிக சொத்துக்களை அரசுக்கட்டுப்பாட்டுக்கு கீழே கொண்டு வரனும். இதெல்லாம் நடக்குமா?  நடந்தா செரி. இல்லைன்னா குதிரைகள் திருடுப்போன பிற்பாடு லாயத்துக்கு பூட்டு போட்ட கதையாயிரும். பாருங்க கொள்ளைக்காரவுக விட்டுட்டு போனதே  76.89 லட்சம்னா கொள்ளையடியடிச்சுக்கிட்டு போனது எத்தனை லட்சம் கோடிகளா  இருக்கும்னு  சின்னதா ஒரு கணக்கு போட்டு பாருங்க