Tuesday, January 18, 2011

மன்மதன் அம்பு -ப்ரியாவோட அப்பட்ட காப்பி

சனங்க கச்சா முச்சான்னு சினிமா விமர்சனம் எழுதி குவிக்கிறச்ச நாம மட்டும் எழுதாட்டா ஜாதி ப்ரஷ்டம் பண்ணிருவாங்களோனு ஒரு பயம்.அதனாலதான் இந்த வெட்டி பதிவு.

ரஜினி,ஸ்ரீதேவி நடிச்ச ப்ரியா படம் ஞா இருக்கா? (சுஜாதா எழுதின கதை - ரஜினி ஒரு லாயர். ஸ்ரீதேவி நடிகை - அவிகளுக்கு ஒரு லவர் -  ஸ்ரீதேவியோட காதல்ல  கேர் டேக்கருக்கு சம்மதமில்லை - அதனால அவிக ரெண்டு பேரும் என்ன பண்றாய்ங்கனு வேவு பார்க்க ரஜினிய அனுப்புவாரு. இவரு அங்கன போயி ஒரு ஜப்பானிய குட்டிய கணக்கு பண்ணுவாரு.

இதே இழவுதான் மன்மதன் அம்பும். என்ன ஒரு வித்யாசம்னா இதுல கமல் ஏற்கெனவே ஒரு ஃப்ரெஞ்சு பெண்ணை கண்ணாலம் கட்டி பறிகொடுத்திருப்பாரு.(அதனால ஃபாரீன் குட்டிய லவ்வற சான்ஸில்லாம போச்சு) 

இவர் ஒரு மேஜர்(லாயர் இல்லை), அதுல ரஜினி ஜஸ்ட்  தொழில் முறையில போவாரு இதுல கமல் தொழில் கம் சென்டிமென்ட்டல் ஆம்பிஷனோட போறாரு ( கான்சர் நண்பனை காப்பாத்த)

அதுல காதலன் கோழை. இதுல சந்தேக பார்ட்டி கம் லாலா பார்ட்டி. அதுலயும் காதலர்கள் ஒன்னு சேர்ரதில்லை இதுலயும் ஒன்னு சேர்ரதில்லை.  இதை மொதல்ல சொன்னது

(ஹி ஹி.. நாலு பேரு கமெண்டு போடுவாய்ங்க-திட்டித்தீர்ப்பாய்ங்க -கொஞ்சம் பரபரப்பாகுமில்லை - நல்லதை சொன்னா ஆருக்கும் ருசிக்கிறதில்லிங்கண்ணா மன்மதன் அம்புல மாதவன் மாதிரி)

சமீப காலமா கமலோட படங்கள் ரெண்டு ரேஞ்சுல வருது . ஒன்னு உயிரை விட்டு பண்றது (அதுலயும்  சிலது உயிரை- ஐ மீன் உயிர்ப்பை  விட்டுருது - உம்: தசாவதாரம்)

அடுத்த ரேஞ்சு ஜஸ்ட் லைக் தட் ஒரு பிக்னிக் மாதிரி பண்றது. இதுல இதை எந்த ரேஞ்சுல சேர்க்கறது? செலவென்னவோ மொதல் ரேஞ்சு படம் என்னவோ ரெண்டாவது ரேஞ்சு.

அதனால கமல் படத்துக்கு விமர்சனம் எழுதறவுக பி.பி ஸ்ரீனிவாஸ் மாதிரி கலர் கலரா பேனா ( கீ போர்டு ) வச்சிருக்கனும்.

நான் இந்த படத்துக்கு சனங்க செய்திருக்கிற வெட்டிச்செலவையெல்லாம் தூரத்தூக்கிப்போட்டுட்டு ரெண்டாவது ரேஞ்சு படமாவே நினைச்சு இந்த பதிவை எழுதறேன்.

கமலோட உழைப்பு,பெர்ஃபார்மென்ஸ்ல எந்த குறையும் சொல்ல முடியாது. சில காட்சிகள்ள மூன்றாம் பிறை, புன்னகை மன்னன் கமலையெல்லாம் ஓவர்டேக்கே பண்ணியிருக்காரு.

கமல் பாசுமதி ரைஸ் மாதிரி.அதை வச்சு பிரியாணியும் பண்ணலாம். கஞ்சியும் காய்ச்சலாம். அதேதோ நோன்பு கஞ்சி மாதிரி இருந்தாலும் பரவால்லை. ( டைரக்டரோட நோக்கம் என்னவோ அதான்) ஆனால் படத்துக்கு மெலோ ட்ராமா ஃபீச்சரை, நல்லதொரு சென்டிமென்டல் ஃபவுண்டேஷனை   கொடுத்திருக்க வேண்டிய அம்சங்களையெல்லாம் டைரக்டர் ஒரு சில ஃப்ளாஷ் பேக் காட்சிகள்ளயும், லேப் டாப்ல வீடியோ சாட் மூலமாவும் காட்டி வீணாக்கிட்டாரு.

பட்ஜெட்டை எப்படி செலவழிகப்போறோங்கற மலைப்புல அவசரப்பட்டு யூனிட்டோட விமானமேறிட்ட மாதிரி இருக்கு.

என்னைக்கேட்டா பட்ஜெட்டை பாதியா குறைச்சு கமலை ஒரு மேஜராவே இன்டர்வெல் வரை காட்டி ஓட்டியிருக்கலாம். அப்படியே இதுவரை தமிழ்படம் காடிவந்த  தீவிரவாதிகள் - ராணுவத்தோட தட்டையான வடிவத்தை மாற்றி யாதார்த்தமா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கலாம்.

ஃப்ரெண்டு,ஃப்ரெண்டு வைஃப்னு தட்டையா சொல்றதைவிட அந்த ஃப்ரெண்டும் ஒரு சக ராணுவ வீரன் - கமலோட  சுக துக்கங்கள்ள ஆக்டிவ் பார்ட் எடுத்துக்கிட்டவன்ங்கற மாதிரி காட்டியிருக்கலாம்.

நடிகை -தொழிலதிபர் காதல் - சந்தேகம்-பிரிவுங்கறது  தினத்தந்தில வெள்ளிமணில வர்ர சமாசாரம். அதை மாஞ்சு மாஞ்சு எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டு போனது வெட்டி வேலை. மேலும் ஃபோன் உரையாடல் -வீடியோ சாட் எல்லாம் மனசுல பதியறது கஷ்டம்.

டைரக்டர் மூளை எங்கே நல்லா  வேலை  செய்ததுன்னு கேட்டா கமலோட ஹேம்லெட் தனம்தான். (ஃபேட்டல் வீக்னெஸ் -தர்ம சந்தேகம்னு சொல்லலாமா? )

கமலை மேஜர்னு காட்டிட்டு அவரை பிக்பாக்கெட்டை விரட்டி பிடிக்கவும் - வாண்டுகளை கக்கூஸுக்கு கூட்டிப்போகவும் உபயோகிச்சிருக்கிறது சில்லி.

அதுவா இதுவான்னு முடிவு பண்ணாம விருமாண்டி ரேஞ்சுல பாதிபடம் பண்ணி சதிலீலாவதி ரேஞ்சுல மீதிபடம் பண்ணி படத்தை பப்படமாக்கியிருக்காய்ங்க.

ஃபாரீன் தான் போகனும்னு அடம் பிடிச்சாலும் தொழிலதிபர் + நடிகை காதல் தவிர இன்னம் வேற எதுனா சீர்யஸ்  ட்ராக் ஒன்னை வச்சிருக்கலாம். 

ஒரு காட்சில தன் மனைவியோட உயிரை பறிச்ச விபத்துக்கு காரணம் ஒரு அமெரிக்க பைக்குங்கறாரு. சினிமாத்தனமா இருந்தாலும்  விபத்துக்கு காரணம் சி.ஐ.ஏ ங்கற மாதிரி ஒரு ட்ராக் கொண்டு போய் -க்ளைமேக்ஸ்ல என்னை மாதிரி பாமரர்களுக்காக ஒரு அதகளத்தை ஸ்ருஷ்டிச்சிருக்கலாம்.

எப்படியோ கமல்ங்கற பாசுமதி ரைஸை வச்சு கஞ்சி காய்ச்சிருக்காரு கே.எஸ்.ரவி குமார். அதுவும் ஆறின கஞ்சி. அதுவும் பழங்கஞ்சி .

படத்துல எனக்கு ரெம்ப பிடிச்ச சில ஐட்டங்கள்:

* சண்டையில கவிழ்ந்த டஸ்ட் பின்னை போற போக்குல காலால உதைச்சு நிக்க வைக்கிறது

*உண்மையா தூங்கிக்கிட்டிருந்தா  கால் கட்டை விரல் ஆடும்

*இல்லாத காதலன் என்னகலர் சட்டை போட்டிருக்கான்னா "காவி கலர்"

*மாதவனோட எதிர்பார்ப்பை நிறைவேத்திட்டு ( காதலன் இருக்கானு ) ஃபோனை தூக்கி போட்டு பேண்ட் பாக்கெட்ல ரிசீவ் பண்றது

*புல் ஃபைட்ல கமல் -மாதவன்

*லவ் சீனுன்னதும் ட்ரஸ் மாத்திருப்பாளே ..சினிமாக்காரியாச்சே

*மனைவி விபத்தில் சிக்கி இறந்து கிடக்க படக்கென்று காட்சி பின்னோக்கி நகர்வது

*கண்ணால சீன்ல பல்லாண்டு பல்லாண்டு

*வீரத்தோட உச்ச கட்டம் அகிம்சை -கமல்

*லைன் ப்ராப்ளம்னு காட்ட நியூஸ் பேப்பரை நசுக்கி ஊதுறது.

*லைட் போலண்டை காலை தூக்கி நிற்கும் குரூப் ( எம்.ஜி.ஆரை நக்கலடிக்கலியே)

*நான் தண்ணி போட்டா அவன் ஏன் உளர்ரான் - மாதவன்

*பையன் கிடைச்சுட்டான் -புருசனை தொலைச்சுட்டயே -வாண்டு

அநாவசியத்துக்கு செலவழிக்காம படத்தோட ரேஞ்ச்  இதுவா அதுவான்னு முடிவு பண்ணி ஒழுங்கா கதை பண்ணியிருந்தா கமலுக்கு இன்னொரு சகல கலாவல்லவன் மாதிரி விவாதத்திற்கப்பாற்பட்ட - கேள்விக்கே இடமில்லாத சூப்பர் ஹிட் படமாக்கியிருக்கலாம்.

டைரக்டர் கோட்டை விட்டுட்டாரு.. பார்ப்போம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
Post a Comment