Monday, August 3, 2009

ஜட்ஜுங்களுக்கு சினிமா நடிகைங்கள எல்லாம் சப்ளை பண்ணி

எஸ்.முருகேசன்: சார் வணக்கம் !
என்.டி.ஆர் : நமஸ்தே தம்முடு எலா உன்னாவ் ? எலாகோ நா ஆதர்ஸ் பதக்காலனு அமலு சேஸ்துன்னந்துக்கு ராஜசேகர் ரெட்டினி மள்ளி சி.எம்.சேசே பணிலோ பாகானே கஷ்ட படினட்டுந்தி ..தேங்க்யூ தேங்க்யூ
எஸ்.முருகேசன்: சார் சார் .. சின்ன ரிக்வெஸ்ட் இந்த உரையாடலை என் வலைபூவில் வைக்கிறதா சின்ன ப்ளான் ..நீங்க தமிழ்லயே பேசினா நல்லாயிருக்கும்.
என்.டி.ஆர் : அட அதுக்கென்ன பேசிட்டா போவுது. எனக்கென்ன தமிழ் தெரியாதா ? இல்லே மெட்ராஸ் என்ன புதுசா ? தெலுங்கு கங்கை மூலமா தண்ணி கூட கொடுத்திருக்கமே
எஸ்.முருகேசன்: முதல்ல நீங்க தெலுங்குல பேசினதை நானே தமிழ்ல டப்பிங் பண்ணிடறேன் சார்
என்.டி.ஆர் :டப்பிங்க் எல்லாம் எதுக்கு தம்பி நானே பேசிடறேன். "எப்படியோ என்னோட நல்ல திட்டங்களை தொடர்ந்து அமல் படுத்தின ராஜசேகர் ரெட்டிய மறுபடி சி.எம். ஆக்குறதுக்கு உன்னால முடிஞ்சதை செய்தாப்ல இருக்கு ..ரொம்ப நன்றிப்பா" ... எப்படி நம்ம டப்பிங் ?
எஸ்.முருகேசன்: தூள் தலைவா !
என்.டி.ஆர் :சரி தம்பி..நான் செத்து இத்தனை காலத்துக்கப்புறம் ஏன் இப்படி சந்தியில நிறுத்தற ..
எஸ்.முருகேசன்:இல்லே தலைவா ! இந்த தமிழ் நாட்டு மக்கள் எல்லாம் உங்களை ஒரு நடிகனா அதுவும் எம்.ஜி.ஆரை பார்த்து அரசியலுக்கு வந்த நகலாவே பார்க்கிறாங்களா .. அதான் உங்க வாயையே கிளறி உண்மைய வெளிய கொண்டாறலாம்னு சின்ன ஆசை
என்.டி.ஆர் :ஆமா உங்க சூப்பர்ஸ்டார் எப்படி இருக்கிறாரு. நான் ஒரு மடையன். இந்த ஆசாமிய நான் ப்ளான் பண்ணின தேசிய கட்சியான பாரத தேசத்துக்கு தமிழ் நாட்டு பொறுப்பாளராக்கலாம்னு இருந்தேன்
எஸ்.முருகேசன்:என்ன தலைவா உங்களுக்கு ஆப்பு வச்சவன் எவனாவது மானமா வாழ்ந்திருக்கானா என்ன நாயடிதான். சூப்பர் ஸ்டார் இப்போ சூப்பற ஸ்டாராயி ரொம்பகாலமாகுது. தனியா ஒரு பதிவே போட்டு கிழிச்சு தொங்க விட்டுட்டன். அதுல ஒரு முக்கியமான பாயிண்ட் மறந்துட்டன் தலைவா ! சந்திரபாபு 1994 ஆகஸ்ட்ல உங்களுக்கு ஆப்பு வச்ச சமயத்துல இந்த சூப்பர் ஸ்டார் சூரியவம்சம் சரத்குமார் மாதிரி சொம்பை தூக்கிக்கிட்டு பஞ்சாயத்து பண்ண வந்து என்னா சொன்னாரு.. லட்சுமிபார்வதி துஷ்ட சக்தியாம் .. நீங்க நல்லவராம். அதனால கட்சில தலைவர் நாற்காலிய காலியா வைக்கனுமாம் நீங்க லட்சுமிபார்வதிய விட்டுட்டு வந்தா அந்த நாற்காலில உக்கார்த்தி வச்சுக்கணுமாம்..எங்க தலைவா காலியா விட்டானுங்க உங்களையே காலி பண்ணிட்டானுங்களே ..இந்த சூப்பர் ஸ்டார் அப்ப விரலை சூப்பிக்கிட்டு இருந்தாராக்கும் ..அதனாலதான் அவருக்கு இந்த டைட்டிலயே கொடுத்தேன். டைகர் சினிமா ஞா. இருக்கா தலைவா.. இந்த ஆசாமிக்கு அந்த அளவுக்கு நீங்க ஹோப் கொடுத்து ஸ்கோப் கொடுத்திங்க என்னமா நன்றிய காட்டினாரு பார்த்திங்களா ?
என்.டி.ஆர் :அடடே அதயெல்லாம் விடுப்பா.. நான் நீங்கற வித்யாசம் , பகை விரோதமெல்லாம் உடம்போட இருக்கறச்ச தான்.. இப்ப நான் ஆன்ம வடிவத்துல இருக்கேன். நீ சொல்றதெல்லாம் யாருக்கோ நடந்த மாதிரிதான் இருக்கு
எஸ்.முருகேசன்: நான் உடம்போட இருக்கேனே ! ஆமாம் தலைவா உங்களை பர்சனலா ஒன்னு கேக்கணும் நீங்க நடிகரா இருந்தப்பவும் சரி அரசியலுக்கு வந்தப்புறமாவும் சரி எந்த சாமியாருக்கும் கும்பிடு கூட போடாம எப்படி தலைவா சமாளிச்சிங்க ..முக்கியமா இந்த புட்டபர்த்திய எப்படி அவாய்ட் பண்ணிங்க
என்.டி.ஆர் : உன் பாக்கெட்ல ஆயிரம் ரூபா நோட்டிருக்குனு வை ..ரோட்ல விழுந்து கிடக்கிற சில்லறைய பொறுக்குவியா
எஸ்.முருகேசன்: நான் சென்ஸ்.. நான் ஏன் பொறுக்க போறேன்
என்.டி.ஆர் :அதை மாதிரிதான் நானும். என் மனசுல கடவுள்ங்கற ஆயிரம் ரூபா நோட்டிருக்கிறப்ப சில்லறைங்க கிட்டே ஏன் ஒதுங்க போறேன்
எஸ்.முருகேசன்:உங்க மாப்பிள்ளை சந்திரபாபு மட்டும் பாபாவை விழுந்து விழுந்து கும்பிடறாரே..
என்.டி.ஆர் :அப்பனுக்கு பிள்ளை தப்பாமனு சொல்லுவாங்க அதுவே அப்பப்ப வொர்க் அவுட் ஆகமாட்டேங்குது . இவரு மா...பிள்ளை தானே ..அதெல்லாம் வியாபாரம் தம்பி ! சந்திரபாபுவை ரொம்ப கம்மியா எஸ்டிமேட் பண்ணாதே அவர் பயங்கர அறிவாளி.
எஸ்.முருகேசன்:இதையெல்லாம் மறக்க முடியுமா தலைவா ..ஜட்ஜுங்களுக்கு சினிமா நடிகைங்கள எல்லாம் சப்ளை பண்ணி உங்க கட்சி பேரை,சின்னத்தை ,கொடிய எல்லாமே ஹைஜாக் பண்ணிட்டதா லட்சுமி பார்வதியம்மா தான் ஒரு டி.வி.பேட்டில சொன்னாங்களே..நானும் பார்த்தேனே
என்.டி.ஆர் :சூ...சூ அதையெல்லாம் ஏன் இங்கே பேசிக்கிட்டு நீதிமன்ற அவமதிப்பாயிரபோகுது
எஸ்.முருகேசன்:அட அப்படி ஒன்னு இருக்கா என்ன ! நீங்க "சமுதாயமே என் கோவில் ..ஏழை மக்களே என் தெய்வங்கள்"னு சொல்லிட்டிருந்திங்க ..உங்க வாக்கு தான் வேதவாக்காச்சே ! அந்த இன்ஸ்பிரேஷனோட ஆப்பரேஷன் இந்தியா 2000 ம்னு ஒரு திட்டம் தயாரிச்சேன் அதை இந்த நாதாரிக்குதான் முதல்ல அனுப்பினேன். அங்கே பிடிச்சது சனி அங்கே இங்கேனு அங்காடி நாயா அலைஞ்சேன். ஜீசஸ் பாட்டுக்கு சொல்லி வுட்டுட்டாரு. தட்டுங்கள் திறக்கப்படும்னிட்டு . ஊர்ல இருக்கிற கதவை எல்லாம் தட்டி அலுத்துட்டு ஹை கோர்ட்டு சுப்ரீம் கோர்ட்டு கதவுகளையெல்லாம் பதிவு தபால் மூலமாவே தட்டிட்டன். எந்த கதவும் திறக்கலை. So இந்த பதிவை நீதிமன்ற அவமதிப்புனு நோட்டீஸ் விட்டா பராசக்தில சிவாஜி மாதிரி வள்ளாண்டுட மாட்டேன்
என்.டி.ஆர் :அதென்னப்பா ஆப்பரேஷன் இந்தியா 2000 ?
எஸ்.முருகேசன்:கீழ் காணும் சுட்டிய க்ளிக் பண்ணி பாருங்க தலைவா !
என்.டி.ஆர் :அடடே நல்ல விஷயமாத்தான் இருக்கே ! இதை ஏன் யாரும் கண்டுக்கலை
எஸ்.முருகேசன்:இப்போ ஆந்திராவுல ஜலயக்னம்ங்கற பேர்ல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடில அணைகள் கட்ட ஆரம்பிச்சிருக்காரு. விவசாயிகள் ஒத்துக்கிட்டு முன் வந்தா கூட்டுறவு பண்ணை விவசாயத்தையும் கொண்டு வரப்போறாராம்
என்.டி.ஆர் :அது சரி. இத்தனை அணைகளை எப்போ கட்டி முடிக்கிறது . நேரு கட்டி முடிச்ச அணைகளால அதை கட்ட வந்த கூலிகள் அவங்க ஊர்களுக்கு ரிட்டர்ன் போகாததாலேயே பெரிய பெரிய சேரிங்க உருவாகிப்போச்சு.
எஸ்.முருகேசன்:அதுக்குதான் தலைவா ! தலைவர் எவ்வழி தம்பி அவ்வழினு நம்ம திட்டத்துல நதிகளை கால்வாய்கள் மூலமா இணைக்கனும் . அதுவும் நாட்டின் 10 கோடி வேலையில்லா வாலிபர்களை கொண்டு அமைத்த சிறப்பு ராணுவத்தை இதுக்கு உபயோகிச்சுக்கனும்னு சொல்லியிருக்கேன்
என்.டி.ஆர் :அதென்னவோ சொல்லி பேச்சை ஆரம்பிச்சே எங்கயோ போயிருச்சு பேச்சு
எஸ்.முருகேசன்:கில்லாடி தலைவா நீங்க ! பட்டுனு பாயிண்டை பிடிக்கறிங்க . அதாவது எம்.ஜி.ஆர் நடிகர்,அவர் அரசியல்ல குதிச்சு ஜெயிச்சாரு..அதை பார்த்து நீங்க குதிச்சிங்க மக்கள் மனசுல இருந்த சினிமா மோகத்தால சி.எம் ஆயிட்டிங்கனு தேஞ்சு போன ரிக்கார்டு மாதிரி ஒரே பல்லவி.

(To be continued

கையாலாகாத,பச்சோந்தி பயல்கள் யாரென்றால் அது இந்த எழுத்தாள பயல்கள்தான்.

இந்த தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் ஆ.வியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
புத்தகங்கள் மீது வெறுப்பை காட்டுபவர்களை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கட்டுரையில் ரா.கி.குறிப்பிட்டுள்ள தினசரியை கீழே போட்டு சாப்பிடும் ஆசாமி, மனைவி புத்தகம் வாங்கினால் கிழித்துபோடும் அதிகாரி. இவர்கள் ஒரு ரகம் என்றால் என் போன்று ஒரு காலத்தில் புத்தக புழுவாக இருந்து அவற்றை எழுதினவன்களுக்கும் ,அந்த எழுத்துக்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்பதையும், அந்த எழுத்துக்களுக்கும் யதார்த்த உலகிற்கும் எந்த தொடர்புமில்லை என்பதையும் உணர்ந்து கொண்ட என் போன்றவர்கள் மற்றொரு ரகம்.

இக்கட்டுரையை எழுதுவதில் ரா.கியின் நோக்கம் என்னவாயினும், இதற்கான பின்னணியில் ஆ.வியின் மார்க்கெட்டிங் தேவைகள் இருந்தாலும் இக்கட்டுரையில் ரா.கி குறிப்பிட்டிருக்கும் ஒரு சினிமா கதை ரொம்பவே நீட். ஆனால் அந்த அளவுக்கு உடன் கட்டனை ஏறுமத்தனை வெறியூட்டும் நூல்கள் தமிழில் உள்ளனவா என்பது கேள்வி.

எனக்கு படிக்கும் போது சாப்பிடும் பழக்கம் ஏன் வந்தது என்பதற்கான உளவியல் காரணங்கள் எனக்கு தெரியாது. ஆனாலும் ஒரு நல்ல புத்தகம் கிடைக்கும் போது நல்ல உணவின் மீதும், நல்ல உணவு கிடைக்கும்போது நல்ல நூலின் மீதும் என் எண்ணம் செல்வதை தடுக்க முடிவதில்லை.

நான் படித்துக்கொண்டே சாப்பிடுகையில் யாரேனும் வந்து உனக்கு சாப்பாடு -புத்தகம் இரண்டில் ஒன்று தான் அனுமதிக்கப்படும் என்று கட்டளையிட்டால் கேள்வியே கேட்காது புத்தகத்தை துறந்துவிடுவேன்.

புத்தகம் என்பது 99.9 சதவித எழுத்தாளர்களின் விஷயத்தில் பார்க்கும்போது வெறுமனே கையாலாகாத புலம்பல்தான். எங்கோ ஓன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம். உலகத்திலேயே கையாலாகாத,பச்சோந்தி பயல்கள் யாரென்றால் அது இந்த எழுத்தாள பயல்கள்தான். அரைகுறை அணங்குகளை கற்பனை செய்து சுய இன்பம் அனுபவிக்கும் விடலைத்தனத்தை விட்டு வெளிவராத சில்லறை பயல்கள் இவர்கள்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று பாட்டெழுதிய பாரதி யானை தூக்கிப்போட்ட அதிர்ச்சியை தாங்க முடியாது செத்துப்போனார். "பதவி எங்களுக்கு துண்டு மாதிரி. மானம் வேட்டி மாதிரி " என்ற அண்ணா வழி வந்ததாக எழுதி குவித்த கலைஞர் மத்திய மந்திரி பதவிகளுக்காகவும் ,மானிலத்தில் தமது அரசு தொடரவும் வேட்டியை துறந்து அம்மணமாகவே திரிகின்றார்.

அக்னி பிரவேசம் மாதிரி சிறுகதை எல்லாம் எழுதி இளைஞர்கள் மனதில் அக்னி வளர்த்து " ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர " என்று பஜனை கோஷ்டியில் சேர்ந்து கொண்டார். இந்தியாவின் அமைதிகாக்கும் படையை ஆதரித்து பிரசங்கம் செய்தார்.

இந்த எழுத்தாளர்கள், கவிஞர்களால் கெட்டு குட்டிச்சுவரான குடும்பங்கள்தான் எத்தனை எத்தனை ? பார்ட் டைமாக எழுதி ஃபுல் டைமாக இளைய சமுதாயத்தை குழப்பும் இந்த குசு பூசை (உபயம்: பாலகுமாரன்) கும்பல் தான் தொடை நடுங்கிகளாக இருந்துகொண்டு "மீசை முறுக்கு " "தொடை தட்டு" என்று கிளப்பி விட்டு விடுவான்கள். அப்பாவி இளைஞர்கள் லத்தியடி வாங்க வேண்டும். தீக்குளிக்க வேண்டும். என் கவுண்டரில் சாகவேண்டும்.

எங்கள் வீட்டில் ரமணர்,பெரியார்,கண்ணதாசன்,பாரதியார் உள்ளிட்ட புத்தகங்கள் வர்ஜியா வர்ஜியமின்றி இருந்ததால் நானும் வர்ஜியா வர்ஜியமின்றி படித்து தொலைத்துவிட்டேன். இவற்றின் பாதிப்பால் மட்டுமே என் வாழ்வை தொலைத்துவிட்டேன்.

இப்படி கிளப்பி விடுபவன்களையாவது ஒருவகையில் மன்னிக்கலாம். ஏன் என்றால் இவன்கள் கையாலாகாத பயல்களாய் இருந்தாலும் இவன்களின் எழுத்துக்களை படிக்கும் ஒருவன் (ஹி.. ஹி.. என்னை மாதிரி ) செயல் வீரனாக, மக்கள் தலைவனாக உருவெடுத்தால் இந்த எழுத்துக்கள் நாட்டின் புதிய கட்டமைப்புக்கான ப்ளூ ப்ரிண்டுகளாக கொண்டாடப்படும்.

ராஜேஷ்குமார் என்று ஒரு நபர். இவரை எழுத்தர் என்றே குறிப்பிடலாம். எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன் இவரெல்லாம் எங்கே ஆண்டார். இவர் உலகம் தனி உலகம். ஒற்றை பரிமாண பாத்திரங்கள், ஒரே களம் ஸ்டீரியோ டைப் சம்பவங்கள் . இவர் நாவல் ரத்னாவாம். இவர் கதைகளை சாமானியர்கள் ஆதரிக்கிறார்களாம். எந்த சாமன்யனின் வாழ்விலாவது இந்த ராஜேஷ்குமார் நாவலில் வரும் சம்பவங்கள் நடந்திருக்கிறதா தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பி.கு:ஈநாடு தெலுங்கு தினசரி , மொழி பெயர்ப்பு சிறுகதைகளை வெளியிடவே விபுலா என்று ஒரு மாத இதழை நடத்துகிறது . அதற்கு அன்னாரின் சிறுகதை ஒன்றையும் அனுப்ப எண்ணி (இப்போ இல்லிங்க அவர் ஃப்ரஷ்ஷா இருக்கும்போதே ) அவருக்கு கடிதம் எழுதி அனுமதி வாங்கி ஒரு கதையை மொழி பெயர்த்து அனுப்பினேன் . முடிவு என்னாச்சு தெரியுமா ? தாங்கள் அனுப்பிய படைப்பை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்.

எழுத்தாளர்கள் தான் இப்படி என்றால் பதிப்பாளர்கள் நிலை கோரம்டா சாமி. (இவர்களை மற்றொரு பதிவில் பார்ப்போம்.)

Sunday, August 2, 2009

ராசா ஜூ.விக்கே தடை கேட்டிருக்கலாம்.

1.ராசா தன் பற்றிய செய்திகளுக்கு தடை கோரியதை விட ஜூ.வி யில் வெளிவரும் பலான தொடர்களை சுட்டிக்காட்டி ஜூ.விக்கே தடை கேட்டிருக்கலாம். தப்பு பண்ணிட்டிங்களே ராசா
2.தேவி வார இதழ் ஆந்திரமானிலம் கொவ்வூர் எம்.எல்.ஏ டி. ராமாராவ் குறித்து வெளியிட்டுள்ள செய்தி ஆதாரமற்றது. அவர் நடத்தும் நர்சிங் கல்லூரியில் ஒரு மாணவி கற்பழித்து கொல்லப்பட்டதாகவும், மக்கள் முற்றுக்கையிட்டு ஓவர் ஹெட் டாங்கின் கீழ் ஒளிந்திருந்த எம்.எல்.ஏ வை பிடித்து வந்ததாகவும் போலீஸ் அவர் உயிரை காப்பாற்றியதாகவும் அளந்து விட்டிருப்பதை கண்டிக்கிறேன். சுவற்றில் ரத்தக்கறையிருந்ததாம். அட டுபாகூருங்களே அது ரெட் ஆக்ஸைடு கறைனு க்ளூஸ் டீம் உறுதிப்படுத்தியாச்சு. எல்லா மாணவிகளும் உயிரோட தான் இருக்காங்கயா
கேரளா போய் அவிங்களை கூட்டி வந்து ஹோம்மினிஸ்டருக்கு மனு கொடுக்க வச்சிருக்காங்க இதெல்லாம் அரசியல் லந்து கண்ணா ..

ஒழுங்கா விசாரிச்சு எழுதுங்கய்யா .. நீங்க தொடர் விளம்பரம் வெளியிடற அக்பர் கவுசர் பத்தி ஆயிரம் இருக்கு தரேன் போடுவியளா ?

பெண்ணிய மாயையும் தொடரும் ஆண் ஆதிக்கமும்

மணற்கேணி அமைப்பு அறிவித்த ஒரு போட்டியின் தலைப்பு இந்த பதிவை எழுதும் தூண்டுதலை அளித்தது. தலைப்பே தவறு என்று இந்த கட்டுரையை துவக்க காரணம் அதிர்ச்சி மதிப்பிற்கான முயற்சியே. மணற்கேணிக்கு நன்றி. இதை போட்டிக்கு அனுப்பாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணம் ரொம்ப பெர்சனல் (அதாவது நம்ம எழுத்து அந்தளவுக்கு டிப்ளமேட்டிக் கிடையாதுங்க)


இந்த தலைப்பை உன்னிப்பாக கவனித்தால் தலைப்பே தவறானது என்பது புரியும். தலைப்பு பெண்ணிய மாயை என்று துவங்குகிறது. மாயை என்றால் என்ன பொருள் ?
புத்திக்கு மயக்கத்தை தருவது மாயை. அல்லது இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணி மயங்குதல் மாயை அல்லது இருப்பதை இல்லாததாக கருதி மயங்குதல் மாயை அல்லது தேவையில்லாத ஒன்றை மிகத் தேவையானதாய் எண்ணி மயங்குதலே மாயை எனப்படும்.

பெண்ணியம் என்பது புத்திக்கு மயக்கத்தை தருவதல்ல. தெளிவை தருவதே பெண்ணியம் . பெண்ணியம் என்பது இல்லாத ஒன்றல்ல. இருக்கிறது. என்ன சற்றே சோனியாய் உள்ளது. .பெண்ணியம் என்பது தேவையில்லாத விஷயம் அல்ல. மனித குலத்துக்கு அத்யாவசியமான ஒன்று பெண்ணியம்.

பெண்ணியம் என்பது மாயையல்ல. பெண்ணியம் என்பது பெண்ணுக்கு சம உரிமை கோரும் கொள்கை. பெண்ணியத்தை நேரிடையாக அணுகும்போது அது ஏதோ பெண்களுக்கு மட்டுமே உரியது போலும் மறைமுகமாகவேணும் ஆண்களுக்கு ஆப்பு வைப்பது போலும் தோன்றும். ஆனால் பெண்ணியம் வெற்றி பெறாவிடில் ஆண் இனம் மொத்தமாய் பைத்தியம் பிடித்து சட்டையை கிழித்துக்கொண்டு கும்பலாய் ரோட்டில் அலைவது நிச்சயம் (என்னா.. இப்ப தனியே புலம்புறானுங்க )

மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண் இனம் ஆணாதிக்கம் காரணமாய் உடல்,உள்ள பலமின்றி,பொருளாதார சுதந்திரம் இன்றி, மன உளைச்சல்களுடன், சமுதாயம் மீதான அதிருப்தியுடன் வாழ்வது என்பது சமுதாய நலன்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம்.

தனக்கு மறுக்கப்பட்டவற்றாய் பெண்ணினம் முறையற்ற முறைகளில் பெற முனைந்து கொண்டே தான் இருக்கிறது . சில சந்தர்ப்பங்களில் வெற்றி பெற்றும் வருகிறது. உம்: தமிழகத்தில் ஜெயலலிதா, உ.பி.யில் மாயாவதி இதன் விளைவுகளை நாடு அனுபவித்தே தீர வேண்டும். இது நாட்டு வளங்களை எந்த அளவுக்கு விரயமாக்குகிறது என்பதை கிட்னிக்கு வேலை கொடுத்து சிந்தித்தாலே தெரியும். புரியும்.

தொடரும் ஆண் ஆதிக்கம் என்ற வார்த்தையை பார்க்கும்போது பெண்கள் என்னவோ ஆண் ஆதிக்கத்துக்கு எதிராய் பெரிய போராட்டமே செய்துவிட்டது போலும் என்றாலும் ஆண் ஆதிக்கம் தொடர்வது போலும் ஒரு ஃபீலிங் வருகிறது. இதனால் போட்டிக்கான தலைப்பே தவறு என்று கூறி இக்கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.


பெண்ணியம்,ஆணியம் என்று பிரித்து பார்ப்பதே முட்டாள் தனம். ஆனால் என்ன செய்ய வேத காலம் முதலாக (ஒரு சில விதிவிலக்குகள் தவிர)பெண் அடிமையாகவே வாழ்ந்து பின் தங்கிப்போனாள்.
தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாது . இது பாஸ்கலின் தத்துவம். மனித மனம்,நீர் இரண்டுக்கும் சந்திரன் காரகத்வம் வகிப்பதாய் ஜோதிடவியல் கூறுகிறது. அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை அவள் எவ்வழியிலேனும் பெற்றிடத்தான் துடிப்பாள். அழகு,கவர்ச்சி,கண்ணீர் போன்ற ஆயுதங்களை அவள் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது சமுதாய மோரல் பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்ணியத்துக்கு காட்டப்படும் ஆதரவும் பெருமளவு குறைவதோடு பெண்ணியமே கேள்விக்குட்படுத்தப்பட்டுவிடுகிறது.

எனவே பெண்ணிய வாதிகள் தம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதோடு தமது வியூகத்தை மாற்றிகொண்டாக வேண்டிய நிலை இன்றுள்ளது. நாளிதுவரை பெண்ணிய வாதிகள் பெண்ணை ஆணாக மாற்றத்தான் போராடினார்கள். இதனால் பெண் இருபுறம் ஏற்றப்பட்ட மெழுகு வர்த்தியாகி தன் ஆயுளையும்,சுதந்திரத்தையும் இரட்டிப்பு வேகத்தில் இழந்து வருகிறாள். கிருக இம்சையோடு (Domestic Violense) ,புற உலகின் இம்சையையும் அவள் கூடுதலாக
எதிர்கொள்ள வேண்டி வந்துவிட்டது. இவற்றையெல்லாம் இந்த பதிவில் தொட்டேனும் பார்க்காது விடுவதாய் இல்லை.

அவள் சம உரிமைகளுடன் வாழ்ந்தது மனித குலம் குகைகளிலும், வனங்களிலும் வசித்த காலத்தில் தான் என்பது என் அனுமானம். ஆணுக்கு சமமான உடல் வலிமையுடன்,வேட்டைத்திறமையுடன் இருந்திருப்பாள். அந்த வாழ்வில் மாதவிலக்கு எல்லாம் அவளை சொர்வுறச்செய்திருக்கவோ, ஓய்வை வேண்டவோ வைக்குமத்தனை நிலை கூட இருந்திருக்காது என்று நம்புகிறேன். பிரசவம் கூட அவளை பெரிதாய் பாதித்திருக்காது. தற்போதும் கூட பிரசவம் முடிந்த கையோடு அரிசி புடைக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மனித குலம் காடு விட்டு நதிக்கரையோரமாக கடலோரமாக பயணத்தை துவக்கிய போது கூட பெண்ணுரிமைக்கு பங்கமிருந்திருக்காது. ஸ்திரவாசம், ஸ்திர விவசாயம் என்று வளர்ந்த போதுதான் தான் திருத்திய காடு தன் ரத்தத்துக்கே என்ற சுய நலம் மனிதனில் ஸ்திரப்பட்ட போதுதான் பெண்ணை சுற்றி வேலி முளைத்திருக்க வேண்டும்.

அதுவரை செக்ஸ் என்பது கொழுப்பேறிய போது, அதிகப்படி சக்தியை வீசி எறியும் செயலாகவோ, அல்லது மழை,குளிரின் போது இதம் தரும் ஒரு செயலாக இருந்திருக்க வேண்டும். ஸ்திர வாசம் , மற்றும் வாரிசு குறித்த கவலை ஆணினத்தின் சிந்தனை போக்கை மாற்றிவிட்டது. அவள் இன உறுப்புக்கு பூட்டு போட முடியாத நிலையில் அவளையே பூட்டி வைக்க ஆரம்பித்தது. (சில பிரகிருதிகள் மேற்படி பூட்டுக்கே கூட முயற்சித்ததாக சரித்திர ஆதாரங்கள் உள்ளன)

ஒருவனுக்கு ஒருத்தி என்ற இயற்கைக்கு முரணான ஏற்பாடு ஆரம்பித்த பின் தான் செக்ஸ் விஷயத்தில் தான் எந்த அளவுக்கு பலவீனன் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு முறைக்கு பின் மறுமுறைக்கு அவன் சற்று நேரமாவது காத்திருக்க வேண்டியது கட்டாயம். பெண்ணோ ஒரே இரவில் 23 முறைகள் வரை உச்சம் எய்தும் சக்தியை பெற்றிருக்கிறாள். (இது இப்போதைய கணக்கு. அந்த காலத்தில் இது கு.ப இரட்டிப்பாகவேணும் இருந்திருக்கலாம்.

இதையெல்லாம் ஆராய்ந்தறிய வன வாழ்வில் நேரமும் கிடையாது. அவசியமும் கிடையாது. (வாரிசுக்கான அவசியமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏற்பாடோ கிடையாது என்பதால்) . பெண்ணின் பலத்தை அறிந்த ஆண் நடு நடுங்கிப்போனான். அவளில் தாழ்வு மனப்பான்மையை விதைக்க தலைப்பட்டான். (இதற்கு மாதவிலக்கு ஒரு பெரும் வாய்ப்பானது) அவள் கால்களை மட்டுமல்ல மனதையும் கட்டிப்போட்டான்.

சிறுமியிடம் ஜிமிக்கி திருட வந்தவன் அவளுக்கு மிட்டாய் தருவது போல அவளது சுதந்திரத்தை பறித்துக் கொண்டு தாய் என்றும் சகோதிரி என்றும் பட்டங்கள் சூட்டினான். உழைப்பிலிருந்து அவளை விடுவித்து ஓய்வு கொடுத்தான். அந்த ஓய்வு பெண்ணை மேலும் பலவீனப்படுத்தியது. உடல் ரீதியான பலவீனம் அவளை மன ரீதியில் பெரிதும் பாதித்தது. பாதுகாப்பற்ற தன்மை அவளை ஒட்டுண்ணியாக்கியது. சதிகாரியாக்கியது.

பெண்ணுக்கு பால்யத்தில் தந்தையும், இளமையில் கணவனும், முதுமையில் மகனுமே பாதுகாப்பு என்று கூறப்பட்டது. அதனால் அவள் பால்யத்தில் தந்தையையும், இளமையில் கணவனையும், முதுமையில் மகனையும் இன்ஸ்பைர் செய்வதே பிழைப்பாய் வாழ வேண்டியதாயிற்று.

உண்டிச்சுருங்குதல் பெண்டிற்கழகு என்று கூறப்பட்டது. இந்த பழமொழி இந்த காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். க்ரைண்டர்,மிக்ஸி, யுகம் இது. அந்த காலத்தில் அதுவும் கூட்டுக்குடும்ப யுகத்தில்,இயந்திரங்களின் துணையில்லாத காலத்தில், கு.க.அமலில் இல்லாத காலத்தில் ? யோசித்துபாருங்கள்.அடப்பாவிகளா !
போதிய போஷாக்கு இல்லாவிடில் உடல் உடலை உண்டு விடாதோ.

அவளை உடலாகவே பச்சையாக சொன்னால் வெறும் துளையாகவே பார்த்தது சமுதாயம்.அதை எவனேனும் உபயோகித்து விடக்கூடும் என்றும் சீல் உடைபட்டுவிட்ட பொருளை சந்தைப்படுத்த முடியாது என்றும் வேறு வார்த்தைகளில் கூறியது. அதை ஒரு பாதுகாப்பு குறைபாடாக காட்டி கற்பனை வளத்துடன் கற்பு என்ற நூதன அணிகலனை உருவாக்கி அதையே முழு முதல் தகுதியாக்கி அதை இழந்து விடுவாய் என்று கல்வியை மறுத்தது. வேலை வாய்ப்பை மறுத்தது. பொருளாதார சுதந்திரத்தை மறுத்தது. மீறி கேள்வி கேட்டால் நீ விலைமகளாக விரும்புகிறாயா என்று எதிர்கேள்வி எழுப்பியது.

ஒரு விலை மகள் விஷயத்திலேனும் அவளிடம் உறவாட வருபவனுக்கு சில நிபந்தனைகள் விதிக்க அவளுக்கு உரிமை இருந்தது .வந்தவன் இடம்,பொருள்,ஏவல் எல்லாம் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் திருமணமான குலமகளுக்கோ அந்த உரிமைகள் கூட கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஒரு சர்வீஸுக்க் ஒரு சர்வீஸ் ஃப்ரீ என்பது போல் சில கேஸ்களில் அவள் தன் கணவனின் தந்தை, அண்ணன் தம்பிமார் இச்சைகளுக்கும் இணங்க வேண்டியிருந்தது. (சமீபத்தில் கூட இது போன்ற வழக்கு விவரம் தமிழ் வார இதழ்களில் வெளியானதை கவனித்திருக்கலாம்)

பெண் என்பவள் ஒரு துளை, அத்துளையின் சகல உரிமைகளுக்கும் கணவனே பட்டாதாரன்.அவள் சரீர சுகம் தரும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வந்த வேசி.இலவசமாகவே வாரிசை பெற்று தரும் வாடகைதாய் . சம்பளமில்லாத வேலைக்காரி. இவன் குழந்தைகளின் ஆயா. அதுகளின் கழிவை அகற்றும் தோட்டி. என்னங்கடா இது எங்கயாவது அடுக்குமா ? எந்த ஜீவ ராசியிலாவது இது போல் நடக்கிறதா ? ஏதோ சில உயிர் இனங்களில் ஒருவனுக்கு ஒருத்தி ஏற்பாடு இருக்கலாம். ஆனால் அது இயற்கையின் ஏற்பாடு. அங்கும் கூட அது பரஸ்பர அங்கீகாரத்தின் பேரில்தான் அமலாகிறது.

இன்றைய திருமணமான பெண்களுக்கு நீங்கள் விரும்பினால் உங்கள் கணவர்களை விவாகரத்து செய்துவிடலாம் .உங்களை இந்த சமுதாயத்தில் உள்ள ஆணினம் இழிவாய் நோக்காது. நோக்கினால் அவர்களுக்கு லுல்லா கட் செய்யப்படும். பெண்ணினமும் புறம்பேசாது. பேசினால் அவர்களின் நாக்கு கட் செய்யப்படும். உங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு,சுய தொழிலுக்கான கடனுதவி அனைத்தும் 24 மணி நேரத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கட்டும். எந்த கணவனின் கீழும் ( நான் ஆதிக்கத்தை சொன்னேங்க ) பெண் என்பவளே இருக்கமாட்டாள் . வேணும்னா ஆண்கள் எல்லாரும் ஹோமோக்களா மாறியிருப்பாங்க.

நான் பெண்ணியம் என்ற கருத்துக்கு ஆதரவாக இத்தனை ஆவேசமாக கருத்துக்களை கொட்டினாலும் பெண்களுக்கான உரிமைகளை ஆண்களே முன் வந்து வழங்க வேண்டும் அ அரசு அதற்கான சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று மட்டும் கூறமாட்டேன். ஏனெனில் ஆண்கள் மனமுவந்து வழங்குவதாயின் எப்போது வழங்கியிருக்க வேண்டும். அரசின் சட்டங்கள் என்கிறீர்களா ? இருக்கும் சட்டங்கள் ஒழுங்காக அறிமுகமானாலே போதும். ஆனால் அவை அமலாகா.

இதற்கு என்ன காரணம் என்றால் ஆண் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவது அவள் குறித்த அச்சத்தால். அரசுகளை நடத்துவது ஆண்கள். சரி அரசியலதிகாரம் கிடைத்தால் போதாதோ உ.ம் 33 சதம் ஒதுக்கீடு. இதனை ஸ்தூலமாக பார்க்கும்போது பெண்ணின விடுதலைக்கே கொண்டு வரப்போவதாக தோன்றும். ஆனால் சற்றே அவதானித்துப்பார்த்தால் அய்யராத்து அழகுகள் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாச்சா காட்டிவிட்டு கொல்லைப்புறவழியாக பாராளுமன்றங்களில் நுழையத்தான் வழிவகுக்கும்.

உண்மையான தலித் பெண்தான்:
நமது நாட்டில் உண்மையான தலித்தாக ஒடுக்கப்படுபவள் பெண் தான் . உயர் சாதிக்காரன் தலித்தை கொடுமைப்படுத்தினால் மேற்படி தலித் தன் மனைவியை கொடுமைப்படுத்துகிறான். சாதீய அமைப்பு தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட ஆண்களுக்கு கல்வியை மறுத்து வெறும் கூலிகளாக மாற்றினாலும் இது தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஓரளவு நன்மையை செய்ததென்றே கூறவேண்டும். ஆம் அவர்களுக்கு குலப்பெருமை இத்யாதி (?) இல்லாமையால் ,அவர் தம் கணவன் மாருக்கு வாரிசுகள் வந்து ஆள சொத்துக்கள் கிடையாதென்பதால், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி ஏற்பாடுகள் அந்த அளவுக்க் கடுமையாக அமலாகவில்லை. மேலும் நிலங்களில் பாடுபட மனித வளம் அபரிமிதமாக தேவைப்பட்டதால் அந்த பெண்கள் அந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் மு.படுத்தப்பட்ட பெண்களின் நிலை மோசம். அவர்கள் வெறுமனே லேயர் கோழிகளாக தான் பாவிக்கப்பட்டனர்.ஆண்கள் தமது குலம் தந்த எதேச்சதிகாரத்தால் பிற வர்க,குல பெண்களை பெண்டாளும் முயற்சியிலும், ஊர் நிலங்களை கொள்ளையடிப்பதிலும் கருமமே கண்ணாயிருந்தனர். தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும் அரசனோ, இன்ன பிற அதிகார மையங்களோ கோரிய போது தமது வீட்டு லேயர் கோழிகளை ப்ரொவைட் செய்து வந்தனர். பெண்டிரோ உண்டி சுருங்கி, அடிமைத்தளையால் மனம் சுருங்கி கிடந்தனர். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் தேவைகள் சேடிசமாகி தம் கணவரின் இதர மனைவியரையும்,ஆசை நாயகியரையும்,வேலைக்காரர்களையும், துன்புறுத்தி அதில் இன்பம்கண்டனர்.

தம்மை துளையாகவே கருதி அடிமைத்தளையில் பிணைத்த ஆண்களை அதையே கருவியாக கொண்டு பழிவாங்கவும் செய்தனர். அல்லது கணவன் உடல் ஒடுங்கி கிடக்கையில் பிள்ளைகளை அவனுக்கு எதிராக திருப்பி திருப்தியடைந்தனர். மொத்தத்தில் மன நோயாளிகளாகவே இருந்தனர்.

அந்தப்புரத்து பெண்களின் நிலை வேறு விதம் செயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆணுறுப்பை ஒத்த பொருட்களால் அலிகள் இன்பம் தர (?) கைதி வாழ்வை வாழவேண்டியதாயிற்று. காலம் மாறியது. அன்னியர் படையெடுப்பின் போது ஆண்களின் நேரம் ,சக்தி அவர்களை எதிர்ப்பதில் செலவாகிக்கொண்டி ருக்க பெண் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் அவர்களிலும் பெண்ணடிமைத்தனம் இருந்ததால் அவர்களின் ஆட்சியிலும் பெண்களின் நிலையில் பெரிதாய் மாற்றம் வரவில்லை. பஞ்சாங்கங்கள் மிலேச்சர் என்று இழிவாக குறிப்பிடும் கால் கழுவாத ஆங்கிலேயர் வருகைக்கு பின்புதான் பெண்ணின் நிலையில் மாற்றம் துவங்கியது.

பால்ய திருமண தடை, உடன் கட்டை ஏறுதலுக்கு தடை, பெண் கல்வி போன்ற அம்சங்கள் பெண்ணின் அடிமைத்தளைகளை ஓரளவு தளர்த்தவே செய்தது. சுதந்திர இந்தியாவில் இந்த அடிமைத்தளைகள் ஏறக்குறைய ஒரு பெண் திடமான சங்கல்பத்துடன் துணிந்தால் உஃப் என்று ஊதிவிடக்கூடிய ஒட்டடையாக மாறியது. ஆனால் சங்கல்பத்துக்கு தூண்ட வேண்டிய கல்வி பெண்ணினத்துக்கு கிடைத்ததா?, சங்கல்பம் கார்யரூபமடைய ஒத்துழைக்க வேண்டிய அமைப்புகள் ஒத்துழைக்கின்றனவா ? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும் .

பெண் தனது சுதந்திரத்தையோ , உயிர் அ மானத்தையோ காத்துக்கொள்ள தனியளாக அணுகும்போது அவளுக்கு உதவும் நிலையில் பிரதம பிரபுத்வ கார்யாலயங்களான காவல் நிலையங்கள் உள்ளனவா என்றால் இல்லை. அவளுக்கு அங்கு கிடைப்பது இலவச உபதேசங்களும், மெலிதான அச்சுறுத்தல்களும் தான். ஒரு வேளை அவள் இவற்றிற்கு மசியாது போனால் இருக்கவே இருக்கின்றன பொய்வழக்குகள் ,லாக்கப் டெத்ஸ். மகளிர் காவல் நிலையங்கள் உள்ளனவே என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். முதற்கண் அங்குள்ள பெண்கள் ஆண்களாக மாறிவிட்டிருப்பார்கள்.தப்பித்தவறி யாரேனும் மாறாதிருந்தாலும் மேல் சாவனிஸ்டு துறையில் ஒரு எல்லைக்கு மேல் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது.

கோர்ட்டுகள் பற்றி சொல்லவே வேண்டாம். இருக்கும் கடுப்பில் எதையாவது எழுதப்போய் நீதிமன்ற அவமதிப்பாகிவிடப்போகிறது. சுருக்கமாக சொன்னால் எந்த அரசுமே, அந்த அமைப்புமே பெண்ணின் உரிமையை , வாழ்வை , கு.ப. உயிர் வாழ்வை கூட உறுதி செய்வதாய் இல்லை.

Half knowledge is too dangerous என்பது போல் பெண்ணுக்கு கிடைத்துள்ள அரை குறை சுதந்திரம் பெண்ணின் வாழ்வை குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்ட கதையாக்கி விட்டது.

கல்வி பெற கல்விச்சாலைக்கு போனால் அங்கு அவளை சக மாணவர்கள் மட்டுமே அல்லாது , அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய ஆசிரியர்கள் மற்றும்
நி ர்வாகமே அவளை குதறிப்போடுகின்றன. ஒரு முறை அம்பேத்கர் பவனில் சுய உதவிக்குழு பெண்களுக்கான ஒரு அரசு நிகழ்ச்சி நடந்தத். நாற்காலிகள் காலியாய் கிடக்க ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகர் தான் நடத்தும் நர்சிங் கல்லூரி பெண்களை யூனிஃபார்மிலேயே வரவழைத்து உட்கார வைத்த் ஹாலை நிரப்பினார் என்றால் பாருங்கள்.

அவள் வந்ததோ கல்வியை பெற. கல்வி மூலம் வேலை வாய்ப்பை பெற்று பொருளாதார சுதந்திரத்தை பெற. ஆனால் அங்கு அவள் நிலை என்ன ? பள்ளி நிர்வாகி சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும்போது அரசு நிகழ்ச்சியில் காலி நாற்காலிகளை நிரப்பவேண்டும்

கல்வி பயில வரும் பெண்ணுக்கு அக்னிபரீட்சையாக இருப்பது பிராக்டிக்கல் மார்க்.
தொந்தி சரிந்து, தலை முடி இழந்து, சோடா புட்டி கண்ணாடி போட்டாலன்றி பகலில் பசு மாடு தெரியாத லெக்சரனுக்கு இவள் கேவலம் இரண்டு சதை கோளமாக உபயோகப்பட வேண்டும். அல்லது துளையாக மாற வேண்டும். இல்லாவிட்டால் ப்ராக்டிக்கல்ஸ் கோவிந்தா.. இந்த அரசுக்கு உண்மையிலேயே பெண்ணிய நோக்கிருந்தால் முதலில் இந்த ப்ராக்டிக்கல் மார்க் என்ற சமாச்சாரத்தையே தூக்கி எறிய வேண்டும்.

முன்னர் வீடுகளில் மட்டும் நரகத்தை அனுபவித்த பெண்ணுக்கு அலுவலகமும்,பணியிடமும் கூடுதல் நரகமாயின. முன்னர் தந்தை/கணவனுக்கு அஞ்சி பரபரத்த காலம் போய் அலுவலகத்தில் முதலாளி,மேலதிகாரி,சூப்பர்வைசர் என்று கண்ட நாய்கள் முன்னும் நாயாய் வாலை குழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக வீட்டிலான கடமைகள் ஏதேனும் குறைந்ததா என்றால் இல்லை. மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கும் "ஹ்ம்..மகாராணி நாலு காசு சம்பாதிக்கிறால்ல இனி இதெல்லாம் செய்ய உடம்பு வளையுமா? " என்ற கமெண்டுகள். வீட்டிலிருந்து பணியிடம் செல்கையில் பயண போக்குவரத்தில் படும் இம்சைகள். (சொந்த வாகனமே ஆனாலும் அதற்கான தவணையை பெண்தான் தன் வருமானத்தில் இருந்து கட்ட வேண்டியுள்ளது. சொந்த வாகனத்தால் போக்க்வரத்த் தொடர்பான சில்லறை இம்சைகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் விபத்து என்ற கத்தி அவள் தலை மீது தொங்கிக்கொண்டேதான் இருக்கிறது.


தப்பித்தவறி நியாயமான வழிகளிலோ /அநியாயமான வழியிலேயோ விடுதலை பெற்று விட்ட பெண் ஆணாக மாறிவிடுகிறாள்.(சிலர் பேச்சு, நடை ,உடை பாவனைகளில் மட்டுமல்லாது ,பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாது ( புகைத்தல், மது அருந்துதல்) உடலியல் ரீதியாகவும்மாறிவிடுவதாக கேள்வி. ஆம் . அவள் முன்னர் ஆண்கள் உலகத்தில் தான் சந்தித்த அவமானங்களையெல்லாம் நினைவு கூர்ந்து ஆண்களை பெண்களாய் நடத்த ஆணாகவே மாறிவிடுகிறாள். அவளால் விடுதலை பெற துடிக்கும் பெண்களுக்கு எந்த வழிகாட்டுதலும்.மோரல் சப்போர்ட்டும், உதவியும் கிட்டாமலே போய் விடுகிறது.

மேலும் ஒரு சோகம் என்னவென்றால் அவள் என்னதான் தன் அடிமைத்தளைகளை தகர்த்தெறிந்து சமுதாயம் தன்னை புதைத்து எழுப்பிய சமாதியை பெயர்த்து நிமிர்ந்தாலும் அவளின் சாதனை அங்கீகரிக்கப்படுவதில்லை. அவள் முன் புழுவாய் நெளிந்து காரியம் சாதிக்கும் ஆண் கூட சற்றும் தயங்காது அவள் கற்பின் மேலோ, அவள் நடத்தையின் மேலோ ,கல்லெறிகிறான்.

வாரிசு முறைப்படி அரசியல் அதிகாரம் , நிர்வாக அதிகாரம், பொருளாதார பலம் பெறும் பெண்ணை சுற்றிலும் கூட கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் இருக்கிறது. அடிமை வேலியை தாண்டிச்செல்ல துடிக்கும் பெண்களை மீண்டும் பட்டியில் கொண்டுவந்து அடைக்க கும்கி யானைகளாய் பெண்களே உபயோகிக்கப்படுகிறார்கள்

ஆக இந்த கட்டுரை ஆன கல்யாணத்துக்கு மேளம் போல் அமைந்து பெண் எப்படி அடிமைப்பட்டாள், எப்படி அடிமையாய் தொடர்கிறாள் என்பதை இதுவரை விவரித்தது. சரி பெண்ணியம் வெற்றி பெற, அதன் மூலம் மனித குல மாண்பை காத்து நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்த அரசு,சமூகம், பெண்கள்,ஆண்கள் ,பெண்ணிய வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். மாறியுள்ள உலக பொருளாதார நிலை, மந்தத்தன்மை , உலகமயமாக்கல், தனியார் மயம், க்ளோபலைசேஷன், தாராளமயம் ஆகியன ஆணை பலவீனனாக்கியுள்ளது. ஜாப் செக்யூரிட்டி என்பது இனி கனவுதான். எனவே ஆண் தன் சர்வைவலுக்கு அதிக நேரம்,சக்தி செலவழிக்கவேண்டியுள்ள இந்த நிலை பெண்ணிய வெற்றிக்கு அருமையான சந்தர்ப்பமாகும். இந்த நேரத்தில் நான் கீழே தரும் அம்சங்களில் பாதியேனும் சாத்தியமானால் பெண்ணியம் வெல்வது உறுதி. அதன் மூலம் மனித குலம் மாண்புறுவதும் உறுதி. (இல்லாட்டி எதிர்கால புதை பொருள் ஆராய்ச்சிகாரங்க காறித்துப்புவாங்கப்பா !)
(மீதி அடுத்த பதிவில்


1.அனைத்து எல்லைகள்,பிரிவுகளுக்கு(பிரிவினைகள்) அப்பாற்பட்டு பெண்கள் ஒன்று திரள வேண்டும்.
2.முதற்கண் பெண்ணிய நோக்குள்ள அமைப்புகள் ஒன்று திரள வேண்டும். பெண்களை ஒருங்கிணைக்க செயல்படவேண்டும்.
3.கேட்க நாதியில்லை என்று தான் பெண்கள் தம் தளைகளை அமைதியுடன் ஏற்று வாழ்கின்றனரே தவிர அடிமைத்தனத்தை விரும்பி அல்ல. எனவே பெண்ணுக்கெதிரான குற்றங்களை /உரிமை மறுப்புகளை பாகுபாடுகளை உள்ளூர் காவல் நிலையம் முதல் ஐ.நா சபை வரை எடுத்துச்செல்ல வேண்டும்
4. நாடு தழுவிய இந்த அமைப்பில் அரசியல் பின்னணி, சினிமா , தொலைக்காட்சி பின்னணி கொண்ட எந்த பெண்ணையும் சேர்க்க கூடாது. (காரணம் : பெண்ணடிமை கோலோச்சுவது இந்த துறைகளில் தான். சில கட்சிகளின் மகளிர் அணியின் முக்கிய வேலையே தலைவர்களின் சதைப்பசிக்கு ஏற்பாடு செய்வதுதான் என்று கேள்வி.
5.இந்த அமைப்புக்கென்று ஊருக்கு நூறு பேராவது இருக்குமாறு மோட்டிவேட் செய்யவேண்டும் இவர்கள் ஒன்றும் ஜீன்ஸ், சட்டை பார்ட்டிகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பொருளாதார சுதந்திரம் பெற்று சக பெண்களின் சுதந்திரத்துக்காக தமது ஓய்வு நேரங்களை செலவழிக்கும் நிலையில் இருந்தால் போதுமானது.பேனா பிடித்து ஒரு மனு எழுதவும், மவுஸ் பிடித்து ஒரு மெயில் அனுப்பவும் தெரிந்திருந்தாலே போதுமானது
6.சொந்த வெப்சைட் + சொந்த பத்திரிக்கை . இதில் கோலங்கள், எந்த சாமிக்கு எந்த நாள் விசேஷம் மாதிரி சமாச்சாரங்கள் வெளியாக கூடாது. முக்கியமாய் ராசிபலன்.
7. பெண்களுக்கான அரசியல் ஒதுக்கீடு அமலாக தடையாக உள்ளது அதில் உள் ஒதுக்கீட்டுக்கு (சாதிவாரி) ஆளும் கட்சி தரப்பில் மறுப்பு இருப்பது தான்.இது குறித்த விழிப்புணர்ச்சியை ஊட்டி உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவு திரட்ட வேண்டும்
8.எந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அவள் வேசியாகவே இருந்தாலும் சரி அவளுக்கு இந்த அமைப்பு துணை நின்று அவள் உரிமைகளை காத்துக்கொள்ள உதவ வேண்டும்

(To be Continued

Saturday, August 1, 2009

பெருமாளு அவர் நம்மாளு

ஜனம் செத்துக்கிட்டே இருக்கு. கொலை,தற்கொலை,விபத்து, தீ விபத்து,வெடி விபத்து,நோய் .இந்த ஆட்சியாளர்களை கேட்கிறேன் பாவிகளா நீங்க ஆட்சி செய்ய தேவையில்லாட்டாலும் கொடுமைப்படுத்தவாவது ஜனம் தேவையில்லையா?
எங்க சொத்து ,சுகங்களை காப்பாத்தாட்டா போகுது ..குறைந்த பட்சம் எங்க உயிரை கூட காப்பாத்த மாட்டிங்களா ?சாலை விபத்துக்களை தடுக்க முடியாதா? தாளி..குல்லாவும் வேட்டி துண்டும் போட்டுக்கிட்டு என்னய்யா பண்றிங்க..பெரிய்ய பெரிய வீடா கட்டிக்கிட்டு, சின்ன சின்ன வீடா வச்சுக்கிடஏஅது தவிர

நீங்க தான் சூத்திர பசங்க மூளையில்லே. உங்களுக்கெல்லாம் பஞ்சக்கச்சங்க தானே பி.ஏ அந்த பாப்பாரப்பயலுங்க கூடவா சொல்லலே ஆட்சி செய்ய ஜனம் தேவைனு.

ரோட்ல டூ வீலர்லயும்,கார்லயும் பறக்கறவனை நிறுத்தி கேளுங்க எங்கடா போறேனு கேளுங்க தண்ணி போடவோ , தேவடியா கிட்டே போகவோ போறவன் தான் அதிகம். சித்தூர் பெங்களூர் ஹைவேல தான் விபத்து அதிகம் . இவனுங்க திருமலைக்கு போய் என்ன கழட்டபோறானுங்க

தாய் தகப்பனுக்கு சோறு போடாம, பத்து வட்டி,மீட்டர் வட்டி வாங்கி சேர்த்த பணத்துல ஏழுமலயானுக்கு பங்குகொடுக்க தானே ! அந்த காலத்துல ஏழை பாழைங்க உண்டியல்ல பணம் சேர்த்து வருசத்துக்கு ஒரு தரம் வருவாங்க ..இப்போ வாரா வாரம் கூட வர்ரானுங்க. ஆஃபீசருக்கு ஆப்டோன் கொக்கோக படங்கள் மாதிரி ஏழுமலையானை காட்டி காரியம் சாதிக்க வர்ரானுங்க திக்கில்லாத சாவு சாகிறான்ங்க..
உங்க ஊர்லயே,உங்க கிராமத்துலயே ஒரு பத்து பைசா கற்பூரத்துக்கும் கதியில்லாம ஒரு பெருமாள் கோவில் இருக்க திருமலைக்கே வரனும்னு ஏன் தவிக்கிறிங்க ..
ஓட்ட தெரிஞ்சவனுக்கெல்லாம் லைசென்ஸ் கொடுக்கிறத விட எவனுக்கு அவசியமோ அவனுக்கு மட்டும் கொடுக்கனும். லைசென்ஸ் கொடுத்துட்டா அவன் எங்கே வேணம்னா போலாம்னுல்ல . தனக்கோ, சமுதாயத்துக்கோ உபயோகமான இடத்துக்குதான் போகனும். பொருளாதாரம் மந்தமாகிப்போச்சு. சுக்கு கஷாயம் சாப்டா தான் சரி வரும்னு கழுதையா கத்திக்கிட்டே மொட்டை போடவும், சாம்பலை கரைக்கவும் பெட்ரோலை எரிச்சு காசி போகனுமா? எதை எதையோ தடை பண்ணுறிங்க இத தடை பண்ணுங்கய்யா !(இத்தனைக்கும் ஏழுமலையானை பொறுத்தவரை அவர் ஏதும் அய்யா அழைக்கிறார்,ஆட்டுக்குட்டி அழைக்கிறார் என்றெல்லாம் போஸ்டர் ஒட்டியோ, சுவரெழுதியோ அழைக்கவில்லையே !

(பெருமாளு அவர் நம்மாளு என்று ஒரு தனிப்பதிவே எழுதுமத்தனை பார்ட்டிக்கும் நமக்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு . இருந்தாலும் இந்த கோயானுங்க திக்கில்லாத சாவு சாகறத பார்த்து பாசிட்டிவ் பாயிண்ட்ஸ் எல்லாம் எகிறிப்போகுதுங்க‌ )


திருமலைக்கு போ வேணாங்கலை. ஏன் பஸ்ஸுல போ 52 பேருக்கு ஒரு வண்டி
பெட்டரில்லயா? கார்ல போனாதான் சாமி பெர்மிட் பண்ணுமா.. இப்பதான் கம்ப்யூட்டரும்,இன்டர் நெட்டும் கலக்குதே அவனவன் வீட்லயே கிடந்து வேலை பார்க்க வேண்டியதுதானே. ஜனம் பெருத்து போச்சு வாகனம் பெருத்து போச்சு ரோடு சிறுத்து போச்சு. ஷிஃப்ட் சிஸ்டம்
கொண்டாங்கப்பா ? மூணு ஷிஃப்டா ஓடட்டும் வாழ்க்கை. ஸ்கூல் காலேஜு,யூனிவர்ஸிட்டியெல்லாம் காலை 6 டு மதியம் 2 நடக்கட்டும். ஆஃபீசெல்லாம் மதியம் 2 டு இரவு 10 நடக்கட்டும். குடியா முழுகிப்போகும்.
வகுபடு எண் கொண்ட வாகனமெல்லாம் ஒரு நாள் ஓடட்டும் .வகுபடா எண்ணெல்லாம் ஒரு நாள் ஓடட்டும். டூ வீலர் எல்லாம் தடை பண்ணுய்யா. எவனோ கிராமத்துலருந்து (அதுவும் பஸ் வசதி இல்லாத ) பட்டணம் வரமட்டும் தான் டூ வீலரை பயன் படுத்தனும். அதுவும் அவனால அந்த கிராமத்து உற்பத்தி பொருள் சந்தைப்படுத்தப்படுவதோ இப்படி ஏதோ ஒரு பொது உபயோகமோ இருக்கனும். இல்லாட்டி லைசென்ஸ் கேன்ஸல் பண்ணு.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தனும். உதாரணத்துக்கு கேவலம்
செக்ஸுக்காகவே கல்யாணம் கட்டற பார்ட்டிங்களை தவிர்க்க விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம்
கொண்டுவரலாம். குடும்ப கட்டுப்பாட்டை கட்டாயமாக்கனும். கு.க.பண்ணிக்கிட்டவனுக்கு டி.வி.டி ப்ளேயரே தரலாம்.(கலைஞர் ஏற்கெனவே கலர் டி.வி கொடுத்திருந்தா) இதுல மதம் இத்யா??க்கெல்லாம் இடமே தரக்கூடாது. முக்கியமா நகரமயமாதலை தடுக்கணும். காந்தி என்ன சொன்னாரு ? கிராமங்கள் உற்பத்தி கேந்திரமா இருக்கணும். நகரங்கள் விற்பனை மய்யமா (கமல் ?) இருக்கனும்னாரு. ஆனால் நடக்கறது என்ன? எந்த குக்கிராமத்திலயும் ஷாம்பூ ,கம்பெனி கூல் ட்ரிங்க், கிடைக்குது, கிராமத்தான் நகரத்துக்கு வந்தா மொட்டை. ஏன் இதை மாத்த கூடாது. வாரத்துக்கு ஒரு நாளை மாசுக்கட்டுப்பாட்டு தினமா அறிவிச்சு அன்னைக்கு தனியார் வாகன போக்குவரத்தை தடை செய்யலாமே

தகுதியற்றவனுக்கு லைசென்ஸ்,அனாவசிய பிரயாணம் இதெல்லாம் ஒருபக்கமிருந்தா குடிச்சுட்டு வண்டி ஓட்டறது,செல் போன் பேசிக்கிட்டே ஓட்டறது. பக்கத்துல குட்டி இருந்தா அதை தடவிக்கிட்டே வர்ரது.

ஸ்டீரிங்கை கையில பிடிச்சா அது யமபாசம் மாதிரி. இன்னம் சொல்லப்போனா ட்ரைவிங் லைசென்ஸ் தரப்ப சைக்கிரியாட்ரிஸ்ட் ஒருத்தரை வச்சு பார்ட்டிய டெஸ்ட் பண்ணனும்.
அட விபத்து நடந்து போச்சு. அடிப்பட்டவனை ஆஸ்பத்திரில சேர்க்க என்ன வழி. ஆந்திராவுல 108 சர்வீஸுனு ஒன்னு கொண்டாந்திருக்காங்க .. டோல் ஃப்ரீ நெம்பருங்க ..108 க்கு ஒரு போன் போட்டா போதும் ஆம்புலென்ஸ் பறந்து வரும். இதுவரைக்கும் சரி. ஆஸ்பத்திரி
நிலைமை என்ன ? அட ஆயுசு போதாம செத்தான் மார்ச்சுவரி நிலைமை என்ன ?
எங்க ஊர்ல எம்.எல்.ஏ ஒருத்தர் மேல கொலை முயற்சி நடந்தது. அவர் பிழைச்சிட்டார். அவரோட இருந்த நகராட்சி ஊழியர் ஒருத்தர் செத்தார். கொலை முயற்சி பண்ணின கும்பல்லயும் ஒருத்தன் செத்தான் . ரெண்டு பேரோட பிணத்தையும் ஒரே நாத்தத்துல போட்டு வச்சிருந்ததை பார்த்ததும் சீ.......னு ஆயிருச்சு..
(அடுத்த பதிவுல கிரைம்ஸ் & நோய்களால் சாவை பற்றி பார்ப்போம்)

அதோ மரணம் என்னை நெருங்குகிறது

இதோ உயிர் பறவையின் சிறகுகள்
கருகிப்போய் கொண்டிர்க்கின்றன.
பறவையின் சிறகுகளை ஒத்த ஓயாது
அசைந்த காற்றுப்பை பைபிளை நீக்கிவிட்ட
பிளாஸ்டிக் உறையாக ஒட்டி நிற்கிறது

அதோ மரணம் என்னை நெருங்குகிறது
நிழலாய் ...நிஜமே போல்
மரணம் என்னை நெருங்குகிறது

இந்த இந்த கணத்தை
கலங்காது சமாளிக்கும் தயாரிப்புக்காகத்தான்
என் மொத்த வாழ்க்கையை
தாரை வார்த்தேன் . வாழ்ந்தேன்
குறைந்த பட்சம் வாழ முயன்றேன்

ஏனோ வாழ்க்கையால் வாழப்படும்
திரு நங்கைத்தனம் எனக்கு பிடிக்காமலே போய்விட்டது
என் வாழ்க்கை படகின் சுக்கானை நானே கைப்பற்றினேன்
இந்த நூல் கண்டின் முனையை தேடி முழுமூச்சோடு தான் புறப்பட்டேன்
புறம் பேசியோரும், புற உறவுகளும் என்னை குப்புற தள்ளின
நான் உதிர்த்த முத்துக்களை புறம் தள்ளின
இருந்தாலும் என்ன அவள் என்னை அள்ளிக்கொண்டாள்
என் மனதை கிள்ளித்தந்தேன்
அவளோ அவளையே தந்தாள்
எவளிலும் அவளை அரைக்கணமேனும் காணும் நிலை தந்தாள்
கலை என் கவனம் கலைத்தாலும்
அதனால் என் உடல் இளைத்தாலும்
என்னில் முளைத்தது முழுமையின் முதல் நாற்று
என்னில் புறப்பட்டது பிரபஞ்ச ப்ரேமையின் ஊற்று
இருண்ட உள்ளத்தை உலுக்கியது தேவ கிருபையின் கீற்று
என் புற வாழ்வை புறம் பேசிய உலகம்
என் அக வாழ்வை அகழ மறுத்தது
ஒழியட்டும்.
வாழ்க்கை பந்து மரண கோலை(Goal) நோக்கி விரைகிறது
எந்த பந்துக்கும் கோல் (Goal)ஒன்றே
இந்த பந்து அதை அங்கீகரித்தது
இதர பந்துகள் அம்மாவுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குரங்காட்டியின்
குரங்குகளாக

நான் நாயகியை யாசித்தேன்
சித்தம் கலங்க யோசித்தேன்
புதுமையை பூசித்தேன்
பழமையின் கருவை நேசித்தேன்

ஏன் ஏன் என்று துடித்தேன்
வாழ்வின் போக்கை படித்தேன்
மாயச்சுவரை இடித்தேன்
தருமத்தின் மருமத்தை தரிசித்தேன்
அவணி மிசை பவனி வரும் பவானியை
அர்ச்சித்தேன்
கள்ளம் கண்ட போதெலாம் கர்ஜித்தேன்
என் உளமிசை கள்ளம் கண்ட போது மூர்ச்சித்தேன்
நான் தொட்டது எல்லாம் பொன்னாகியிருந்தால்
என்னாகியிருப்பேனோ ?
அறிவுப்பசிக்கு தீனியின்றி ஞானியாகிட வழியின்றி
கொழுத்து அழுகி இருப்பேன்
மன நல விடுத்திக்கே ஓடியிருப்பேன்
என் புறப்பாட்டுக்கு முன்பே நான் புதுப்பாட்டு என்றறிவேன்
என் கண்களில் கண்ணீர் கருக்கொண்டிருக்கலாம்
என் இதயமோ என்றும் இறைத்தது அமுதம்
அமுதம் இறந்தோரை உயிர்ப்பிக்கும்
பொய்யில் உறைந்தோரை எழுப்புமோ ?

நான் கன்றுக்குட்டி கனவுகளை விட்டு வளரவில்லை
என்று மன நல நிபுணர்கள் நிர்ணயிக்கலாம்
இந்த படைப்பே ஒரு தாயாக இருக்க நான் சேயாக இருப்பதில்
யாருக்கு வலி

உறங்காத இரவுகளும் பீடிக்கட்டும்

உறங்காத இரவுகள் உறங்கும் நினைவுகளை எழுப்பி விட்டு விடுகின்றன. அவை தலைவிரித்தாடும்போது ஒரு கட்டு பீடி இருந்தால் அவற்றை ரசிக்கலாம் அ தொகுக்கலாம் கு.ப வேடிக்கை பார்க்கலாம். சோடி இல்லா இரவையும் தன் கையே தனக்குதவி என்று சமாளித்து விடலாம் .பீடி இல்லாத இரவை சமாளிப்பது தான் இம்சை. இன்று அப்படித்தான் ஆகிவிட்டது. பஸ்,ரயில் நிலையங்களில், கல்யாண வீடுகளில் இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த உ.இ களை எதிர்கொள்ளாத ஆணே இருக்கமாட்டான். அப்படி எவனாவது இருந்தால் அவன் இந்த தெலுங்கு சொலவடையை படித்து பின் பற்றியே ஆகவேண்டும் .

"திரிகி செடிந்தி ஆடதி.. திரக்க செட்டாடு மகவாடு"

இதற்கு பொருள்: ஊர் சுற்றி கெட்டாள் பெண். சுற்றாது கெட்டான் ஆண்.பெண்ணுரிமை வாதிகள் இதை எதிர்க்கலாம். ஆனால் இது புழக்கத்தில் உள்ள பழமொழி பழக்க தோஷத்தில் குறிப்பிட்டு விட்டேன்.

இது போன்ற இரவுகளில் பீடிக்கட்டு, எழுதுவதற்கு விஷயம், எழுதுமத்தனை வசதி,பொறுமை இருந்தால் அமர காவியம் உருவாகா விட்டாலும் வெட்டி ....ழ் நித்திரைக்கு கேடு என்ற கதையாகி விடாதிருக்கும்.

இப்போது நேரம் 4 மணி. ஒட்டுத் தூக்கமா பொட்டு தூக்கமா என்ற குழப்பமிருந்தாலும் உறக்கம் மட்டும் இல்லை.

வழக்கமான சால்ஜாப்புகள் ஏதும் பலிக்கவில்லை. உறக்கம் கெட ஸ்தூலமாக எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் மாதத்தில் ஒரு நாளேனும் இப்படி அமைந்து விடுகிறது. ஹிட்லர் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் தான் தூங்குவானாம். ஒரு நாள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு அதிக நேரம் தூங்கிய போதுதான் முதல் தோல்வியை சந்தித்தானாம். கண்ண தாசன் இது போன்ற ஆசாமிகளை நம்பவே கூடாது என்பார்.இது நிஜம் தான் போலும். என்னதான் பாசிட்டிவ் ஆசாமியாக இருந்தாலும் சில நெகட்டிவ் எண்ணங்கள் இதுமாதிரி உ.இ களில் மின்னத்தான் செய்கின்றன.

என் மனைவி வாயை திறந்து கொண்டுதான் உறங்குகிறாள். என் ஆரம்ப நாள் காதலி ஒருத்தியின் தங்கை கண்களை திறந்து கொண்டே உறங்குவாள். நாம் தூக்கம் கெட்டு அவதி படுகையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் உலகத்துக்கு எதிரான எண்ணங்கள் மின்னுவது சகஜம் தான் போலும்.

தூக்கம் கெடுத்தான் ஆக்கம் கொடுத்தான் என்பார் வள்ளலார். ஒரு இரண்டாம் கை சைக்கிளும், பையில் சில்லறையும் இருந்ததால் நைட் கடைக்காரன் என்று இல்லா விசேஷமாய் பீடிக்கட்டு விற்க சம்மதித்ததால் இந்த இரவில் சாரி விடியலில் எஸ்.ராமகிருஷ்ணன் சார் பாணியில் ஒரு கட்டுரை உருவாகிக்கொண்டிருக்கிறது.
(ஆமாம் அவர் கட்டுரைகளில் ஏன் ஓரிடத்திலாவது மூத்திரம் பற்றிய பிரஸ்தாவனம் வருகிறது?)

இது போன்ற உ.இ.கள் அனேகமாய் அனைத்து சாதனைகள்,முயற்சிகளுக்கு பிறகு திருமணத்துக்கு முன் எனில் ஒரு சுய இன்பத்திலோ திருமணத்துக்கு பின் எனில் ஒரு உடலுறவிலோ தான் முடியும். ஆனால் திருமணமாகி 17 வ. ஆகிவிட்ட நிலையில் "காதல் ஒருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கை கொடுத்தே" என்ற வரிகளை கேட்க கூட வாய்ப்பில்லாத/மனமில்லாத ஒரு அடம் பிடித்த ,அழும்பு பிடித்த மனைவியிடம் அதற்காக சரணடைய தன் மானம் இடம் கொடுப்பதில்லையாதலால் உ.இ கள் தொங்கலில் முடிந்து விடுகின்றன.

பீடி புகைக்க ஆரம்பித்ததுதான் என் நடுத்தர வர்கத்து ஜீன்களின் மீது நான் செய்த முதல் புரட்சி. ரிக்ஷாக்காரரிடம் பீடி வாங்கி குடித்தது புரட்சியின் உச்சம். ஆனால் பீடிக்காகவே அக்மார்க் வால் பிடி,கால் பிடி சந்தர்ப்பமும் வாய்த்தது உண்டு.கணிணியில் ஒரு ஜன்னலில் இருந்து (எதிர் வீட்டு ஜன்னல் இல்லிங்கோவ் ! விண்டோஸை சொல்றேன்) மற்றொரு ஜன்னலுக்கு மாற உபயோகிக்கும் ஆல்ட் டாப் போன்றதே பீடியும்.

மனிதர்கள் கணத்துக்கு கணம் தம் பேச்சின், செயலின் போக்கை ஒடித்து திருப்பி விடுகிறார்கள். நானோ உணர்வு பூர்வமாக ஈடுபடுபவன் . அம்மாதிரி சந்தர்ப்பங்களில் என்னை நானே மடை மாற்ற உபயோகிக்கும் மண்வெட்டி பீடி. நான் உணர்வு மயமானவன். ஆனால் உ.வசப்படுவதை இந்த உலகம் பெண் தன்மையாக பார்ப்பதோடு பலவீனத்தின் அடையாளமாகவும் பார்க்கிறது. எனவே கண்ணீரை மறைக்க தமிழ் சினிமா கதா நாயகன் கருப்புக்கண்ணாடி அணிவது போல் நான் பீடியை அணிந்து கொள்கிறேன்.

1987 முதல் எத்தனையோ நாதாரிகள் என்னுடன் ஈயும் பீயுமாய் இருந்துள்ளன . ஆனால் இன்று வரை தொடர்வது என் பீடிக்கட்டு தான். அதுவும் ஒரே பிராண்டு. சேலை கட்டிய மாதரை நம்பினால் தேம்பி திரிய வேண்டியதுதான் என்ற சித்தர் பாடலை மறந்ததால் காதல் கடிமணத்தால் அப்பாவின் பொருளாதார பாதுகாப்பை துறந்து திரிந்துள்ளேன். அது சிறிய காலகட்டம் தான் என்றாலும் (1991 நவம்பர் முதல் 1992 மார்ச் வரை) அதே காலகட்டம் 1994 ல் என் தந்தையின் மரணத்துக்கு பிறகும் ஒரு பாட்டம் தொடர்ந்தது. அந்த கட்டத்தில் என் துணை என் பீடிக்கட்டுதான்.

நான் புகைக்கும் பீடி ஒரு மல்டி பர்ப்பஸ் பிராஜக்டு மாதிரி. பசியும்,பட்டினியுமாய் கழிந்த காலங்களில் அன் டைம் க்ளையண்ட்ஸ் தரும் ஃபீசை (நான் ஒரு ஊரை ஏமாற்றாத ஜோதிடன் என்பதை ஞா படுத்திக்கொள்ளவும்) மனைவியிடம் கொடுத்து சோறாக்க சொல்லிவிட்டு வெளியே வரும்போது "இன்னா சாமி சாப்டாச்சா" என்ற கேள்வியை சமாளிக்கவும் இந்த பீடிதான் கை கொடுத்தது. (ஆச்சுபா ..சும்மா ஒரு தம் போட்டு போலாம்னு அப்படீ ..வந்தென்"

உணவுக்கு முக்கியத்துவம் தரும் வசதி இல்லாமையாலும், உணவுக்கு முக்கியத்துவம் தரும் மடமை இல்லாததாலும் அதற்கு மின்னான புகையே முக்கியம் என்ற பக்குவத்துக்கு பீடியே கை கொடுத்தது. உறங்காத இரவுகள் என்று தலைப்பு கொடுத்துவிட்டு பீடி புராணம் பாடறான் பாரு என்று அலுத்துக்கொள்ளாதீர்கள் . உ.இரவுகளுக்கும் பீடிக்கும் அப்படி ஒரு உறவு.

நான் மட்டும் விஜய காந்தா இருந்திருந்தா

1.நான் மட்டும் கர்ணனா இருந்திருந்தா திரவுபதி வஸ்திராபரணம் நடக்கும்ப்தே வெளி நடப்பு செய்திருப்பேன்
2.நான் மட்டும் காந்தியா இருந்திருந்தா முதல் பிரதமரா நானே பொறுப்பேற்று நான் கனவு கண்ட கிராம ராஜ்ஜியத்தை வடிவமைச்சிருப்பேன்
3.நான் மட்டும் என்.டி.ஆரா இருந்திருந்தா சந்திரபாபுவை பார்ட்டியிலயே சேர்த்திருக்கமாட்டேன்
4.நான் மட்டும் ஜவஹரா இருந்திருந்தா அணைகள் கட்டறத விட்டு நதி நீர் இணைப்பை மேற்கொன்டிருப்பேன்
5. நான் மட்டும் ராஜீவா இருந்திருந்தா விடுதலை புலிகள் இல்லாத ஒப்பந்தத்துல கையெழுத்தே போட்டிருக்க மாட்டேன்
6.நான் மட்டும் வி.பி.சிங்கா இருந்திருந்தா ரத யாத்திரை போன அத்வானிய கைது செய்யாமயே விட்டிருப்பேன்
7. நான் மட்டும் இந்திரா காந்தியா இருந்திருந்தா சீக்கியர்கள் கொலை சதி தெரிய வந்ததுமே பெர்சனல் செக்யூரிட்டிலருந்து அவுங்களை தூக்கியிருப்பேன்
8. நான் மட்டும் விஜய காந்தா இருந்திருந்தா ஜெ வை தவிர்த்த அனைத்து சக்திகளையும் கலைஞருக்கு எதிரா திரட்டியிருப்பேன்
9.நான் மட்டும் கலைஞரா இருந்திருந்தா முத்துவை சினிமாவுக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன்

கலைஞர் எழுதிய பலான கதை

எனது எழுத்துக்கள்

இணைய உலகத்தில் தமிழ் தெலுங்கு வாசகர்களிடையே ஓரளவு அறிமுகம் இருந்தாலும் நான் பிரபலன் இல்லை. இருந்தாலும் அவ்வப்போது சுயசரிதை தனமாக எழுதும் துடிப்பை என்னால் தவிர்க்க முடிவதில்லை. வயதாகி கொண்டிருப்பதின் அடையாளம் இதுதான் போலும்.

ஆரம்பத்தில் என் தகுதி ,முயற்சிகளுக்கு பொருத்தமற்ற ,ஓரளவு சரித்திர தனமான சம்பவங்கள் என் வாழ்வில் நடந்துள்ளதால் அவற்றை பகிர்வதால் இன்று அன்றைய என் நிலையில் இருக்கும் அன்பர்களுக்கு அவை வழிகாட்டி உதவும் என்ற பரோபகார எண்ணமும் இந்த பதிவின் நோக்கங்களுல் ஒன்றாகும்.

முதலில் ஒரு சில சரித்திர தனமான சம்பவங்கள்:
1.எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் கிருபானந்த வாரியாரின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து பரிசளிக்க அவர் வைத்திருந்த பாக்கெட் புத்தகங்கள் எலலாம் தீர்ந்து போய் முழங்கை உயர மலை வாழைப்பழம் பரிசாக கொடுத்தது
2.பத்தாம் வகுப்பு படிக்கும்போது கட்ட கடைசி வகுப்பு முடிந்ததும் மாணவிகள் அனைவரும் ஆட்டோகிராஃபுக்காக என்னை முற்றுக்கையிட்டது
3.இண்டர் இரண்டாம் வருடம் படிக்கும்போதே " உணர்ச்சியற்ற இலக்கியம் மெழுகினால் ஆக்கப்பெற்ற ஆரணங்க்காகுமே தவிர கவிதை கன்னியாகிட ஒரு போதும் முடியாது " என்று பேசி பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்றது. இந்த பேச்சால் கவரப்பட்டு அப்போதைய பெண் விரிவுரையாளர் மீரா ஷண்முகம் கல்லூரி ஆண்டு மலருக்கு கவிதை எழுதச்சொல்ல எழுதியது. டிகிரி மூன்றாம் வருடம் படிக்கையில் புதுசு என்ற பெயரில் பத்திரிக்கை துவங்கி அதே விரிவுரையாளரின் சிறுகதையை எடிட் செய்து வெளியிட்டது

ஒவ்வொரு குழந்தையிலும் அளவில்லாத சக்தியுடன் இருக்கும்.அந்த சக்தியை எப்படி செலவிடவேண்டும் என்ற முதிர்ச்சி இல்லாததால் ஓடுவதும்,குதிப்பதும் ,விழுவதும்,எழுவதும் ,கண்டதை குடைவதுமாயிருக்கும். ஆனால் அது பெற்றோராலும்,ஆசிரியர்களாலும்,அக்கம் பக்கத்தவர்களாலும் ஹிட் லிஸ்டில் வைக்கப்பட்டு சகட்டு மேனிக்கு திட்டும் உதையும் வாங்கிக்கொண்டிருக்கும். இது சாதாரண அசமஞ்ச குழந்தைகளுக்கான விதி. என் போன்ற மேதைகள் பாலியத்தில் (சரியாக படிக்கவும் பாலியலுக்கும் இதற்கும் தொடர்பில்லை) எப்படி இருப்பார்கள் என்பதை சொல்லத்தேவையில்லை. துஷ்டத்திலும் துஷ்டன். படு கிட்டன்.

எனது சகாக்களின் டேஸ்டுகள் அந்தந்த வயதில் அந்தந்த வயதுக்கேற்ற வகையிலேயே இருக்க என் ரசனை மட்டும் இறக்கை கட்டி பறந்தது. அந்த அதி வேகத்தால் தானோ என்னவோ இந்த 42 வயதுக்கே லோகாயத விஷயங்களை பற்றி என்னிடம் அளக்கும் மனிதர்களை கண்டால் கொலை வெறியும், பரிதாபமும் ஒருசேர எழுகின்றன. ஆக அந்தந்த வயதில் சகாக்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத ரசனையும்,கருத்துக்களுமே என்னை எழுத தூண்டின.

மேலும் நான் நிஜ வாழ்க்கையில் பயங்கர சொதப்பல் மன்னன். அவ்வப்போது சொதப்பல்களால் சோர்ந்து போன நிலையில் நடந்தவற்றை அசை போடவும், எதிர்காலத்தை திட்டமிடவும், கற்பனை செய்யவும் எழுத்து உதவியுள்ளது.

என் சகாக்கள் கிணற்று நீச்சலுக்கும், மாங்காய் தோப்புக்கும், ஆற்றில் மீன் பிடிக்கவும் அலைந்து கொண்டிருந்த போது என்னை விட பல வயது மூத்த பெண்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும் என்னை எழுத்தாளனாக்கியது என்று நம்புகிறேன்.

பெண்ணுக்கும் இயற்கைக்கும் அனேக ஒற்றுமைகள் உண்டு. இரண்டையும் வெகு எளிதாக ஆக்கிரமிக்க முடியும். ஆனால் ஆக்கிரமிப்பு மட்டும் அவை குறித்த ஞானத்தை தராததோடு , பெரும் சிக்கல்களிலும் ஆழ்த்திவிடுகிறது. இயற்கை மற்றும் பெண் குறித்த விரிவான புரிதல் ஒன்றே ஆணை பக்குவப்படுத்துகிறது என்பதை சிறு வயதிலேயே புரிந்து கொள்ள முடிந்ததில் நான் பாக்யவானானேன். எழுத்தாளனானேன்.

எனது எழுத்து நடை:
என் லக்னம் கடகம். லக்னாதிபதியான சந்திரன் சூரியனின் ஒளியை பெற்று பிரதிபலிப்பது போல் அவ்வப்போது ஒவ்வொரு எழுத்தாளரை நகலெடுத்தாற்போல் எழுதி வந்ததும் உண்டு. ஆனால் பாக்யாவில் முதல் கதை பிரசுரமாவதற்குள் இந்த நகல் நோய் மறைந்து ஓரளவேனும் சொந்தமான நடை ஒன்று ஏற்பட்ட்விட்டது. இப்போதும் நான் என் நடையில் வெறுக்கும் தன்மை நீ............ள வாக்கியங்கள் தான்

முதல்கதை:
வயது முதிர்ந்தவருடனான இளம்பெண்ணின் திருமணம் பற்றியது. பன்ச்: இதைக்காட்டிலும் அப்பெண்ணை பாழும் கிணற்றில் தள்ளியிருக்கலாமே ! (முதல் கதைங்க)

தற்போதைய கருத்து:
அந்த வ.முதிர்ந்தவர் இன்றைய இளைஞர்களை போல் பான்,பீடி,சிகரட்,சுய இன்பம், ஹோமோ ,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இத்யாதிகளை தொடாதவராய் வாழ்ந்திருந்தால் மனதை சற்றே ரீ ரைட்டபிள் சிடி தனமாய் வைத்திருந்தால் அது சூப்பர் சோடியாகியிருக்கும். பெண் ஆணில் தன் தந்தையை தான் தேடுகிறாள் என்று ஃப்ராய்டு கூறுகிறார்.

மற்றொரு துறையில் நிபுணரான எல்டர் ஃப்ரெண்ட் ஒருவருடன் இந்திய திருமண,தாம்பத்ய வாழ்விலான சிக்கல்களை அலசி பிரச்சினைகளுக்கு தீர்வா நான் செய்த ப்ரபோசலை இங்கே எழுதினால் கொலையே விழலாம். அட கொலையே விழுந்தாலும் என்ன போச்சு..சொல்லியே உடறேன். அதாவது ஒவ்வொரு இளைஞனும் தன்னைவிட கு.ப. 15 வயது பெரிய பெண்ணுடன் கெட் டு கெதர் செய்யனும். (கு.ப. 2 வருடம்) அதற்கு பிறகு 2 வயது குறைந்த பெண்ணை மணந்து கொள்ளலாம். அதே போல் பெண்ணும் தன்னைவிட கு.ப 15 வயது மூத்த ஆண்மகனுடன் கெட் டு கெதர் செய்யனும் (கு.ப.2 வருடம்) இது எப்படியிருக்கு ?

கலைஞரின் வான் கோழி:

எட்டாம் வகுப்பு படிக்கிறப்பவே பத்திரிக்கைகளுக்கு என் படைப்புகளை அனுப்பத்துவங்கி விட்டேன். சில மாதங்களில் வெக்ஸ் ஆகி குங்குமத்துல யாரோ முருகன் எழுதின கதைய என் கதையா பீலா விட்டுட்டன்.

(இந்த சந்தர்ப்பத்துல கலைஞர் எம்.ஜி.ஆரை மனதில் வைத்து எழுதிய வான் கோழி என்ற கதை நினைவுக்கு வருகிறது. அதில் கதானாயகனுக்கு கவிதை எழுதி பேர் வாங்க ஆசை. ஆனால் எழுதற ஸ்டஃப் கிடையாது . சேரிக்கு போய் கவிதைய வாங்கி வந்து தான் எழுதினதா பேர் பண்ணீ ........பேர் வாங்கறார். அவருக்கு ஆண்மை கிடையாது. ஆனால் கல்யாணம் பண்ணிக்கிறார். முதலிரவு. பெட் ரூம்ல இருக்கிற பாத்ரூம்ல வேலைக்காரனை ஒளிச்சு வச்சுர்ரார். இவரு பந்தாவா உள்ளாற போய் கொஞ்சி குலவிட்டு பாத்ரூம் போயிர்ரார். வேலைக்காரனை வேலை எடுக்க அனுப்பிராரு.

எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை கேவலமான கற்பனை பாருங்க ! அதிலயும் ஹீரோவுக்கான வர்ணனைகள் அப்படியே எம்.ஜி.ஆரை உறிச்சு வச்சிருக்கும்.

ஆண்,பெண் சரீர சம்பந்தமின்றி

சினிமா சினிமா
வாழ்க்கை ஒரு சினிமா சினிமா என்பது பாபா பட(பப்பட) பாட்டு. நான் பார்த்ததில் முதலில் என்னை பாதித்த சினிமா அடுக்கு மல்லி.அதில் அண்ணன் ,தம்பிகளின் ஒற்றுமையை இயக்குனர் கோபால கிருஷ்ணன் மாய்ந்து மாய்ந்து சித்தரித்திருந்தார். அண்ணன் உயிருடன் இருக்கையில் அண்ணிக்கு தெரியாது சிகரட்டு கை மாறும் காட்சி. பின் அண்ணன் இறந்து போகிறார். குடும்பத்தில் பயங்கர பணக்கஷ்டம். அண்ணி மைத்துனரின் சட்டையை தோய்க்க எடுக்கிறாள் அதில் பீடிக்கட்டு. சிறு புன்னகையுடன் அதை எடுத்து வைத்துவிட்டு சட்டையை எடுத்துச்செல்லுகிறார்கள்.
. "விஷுவலைசேஷன்" "காட்சிப்படுத்துதல் " இத்யாதி வார்த்தைகளை விரயம் செய்யும் உத்தேசமில்லை. அன்புமணி சொல்வதை கேட்டு இயக்குனர்கள் சிகரட் பற்றிய கற்பனைகளுக்கே தடா விதித்துக் கொண்டுவிட்டால் "க்ரியேட்டிவிட்டி" நைந்துவிடாதோ?

சரி ஒழியட்டும் அரசாங்கம் இன்னும் எத்தனைதான் கவைக்குதவாத விஷயங்களில் மூக்கை நுழைக்குமோ புரியவில்லை. என்னை பொறுத்தவரை தவிர்க்க முடியாதவற்றை,தடுக்க முடியாதவற்றை அனுமதித்து விடுவதே மேல்.உதாரணம் விபச்சாரம்

எங்கே ஆரம்பித்தேன் அடுக்கு மல்லி.இடையில் இந்த கனகாம்பரத்தனமான இடைச்செருகல்கள். சரி கதம்பமாகவே கிடக்கட்டுமே என்ன போச்சு !குடும்பம் மட்டுமா மனித வாழ்வே கதம்பம் தானே

சரி ..அடுக்கு மல்லிக்கு வருவோம். அடுக்கு மல்லி என்னை ஏன் பாதித்தது? அதிலான குடும்ப அமைப்பா? அல்லது அழகியலா? அல்லது ஃபிக்ஷன் தனமான கற்பனையா?இல்லை
இதிலேதுமில்லை. அந்த அண்ணி கேரக்டர் தான் என்னை அந்த சினிமாவின் பால் இழுத்திருக்க வேண்டும். ஏறக்குறைய சம வயதுள்ள ஆண்,பெண் சரீர சம்பந்தமின்றி அன்பு காட்ட முடியும்,அன்னியோன்னியமாக வாழ முடியும் (சரீர சம்பந்தமென்ற க்ளமேக்ஸுக்கு பின்னான வீழ்ச்சி இருக்காதே தவிர ஒரு மெல்லிய கவர்ச்சி ..அதில் சரீர இச்சையும் ஒளிந்திருக்கலாம்) என்ற கருத்து,காட்சிப்படுத்துதல் தான் என்னை கவர்ந்திருக்க வேண்டும்.

1967ல் பிறந்த நான் 19 வயதிலேயே சரீர சம்பந்தங்க்களின் வலுவற்ற தன்மையை,அடித்தளமற்ற தன்மையை,மாறும் தன்மையை நிறையவே அனுபவித்துவிட்டிருந்த காரணத்தால் பால்யத்தில் அடுக்கு மல்லி போலவே 19 வயதில் மற்றொரு படம் என்னை பெரிதும் கவர்ந்தது. ஒரு வகையில் பெரியதிருப்பத்தையும் தந்தது என்று உறுதியாக கூறலாம்.

இத்தனை நாளாய் எழுதும் தவிப்பு என்பது நப்பாசையாகவே நின்று விட்ட நிலயில் இந்த நேரம் இப்படி விஸ்தாரமாய் சினிமா பற்றி எழுதும் சக்தியை ,மூடத்தனத்தை கொடுத்தது மீண்டும் ஒரே ஒரு சினிமாதான் என்று சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. (கமலின் பம்மல்.கே. சம்பந்தம்)

திருமணத்துக்கு முன் எனக்கு கிடைத்த உடலுறவு சந்தர்ப்பங்கள் மிக அதிகம். அவற்றை உபயோகிக்காது விட்டதில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி என்னால் கூற முடியும். அதனால் தானோ என்னமோ ஆண் பெண் உறவுகளை செக்ஸை தாண்டி என்னால் அவதானிக்க முடிந்திருக்கிறது.

எங்கே விட்டோம்? அடுக்கு மல்லி. அம்மாத்தனமான பெண்ணின் பிம்பம் பிரதி ஆண் மகனிலும் உண்டு என்பது சிக்மன் ஃப்ராயிடு தத்துவம்.(பெண்களில் இது தந்தை தனமான ஆண் வடிவமாக இருக்கும்) . ஆண் தன் தாயை தேடுவதும் , பெண் தன் தந்தையை தேடுவதும் ஏன் என்று ஃப்ராயிடு சொல்ல மறந்துவிட்டார். நான் கண்டு கொண்டேன். வேறெதுக்கு பழி வாங்கத்தான். தன் சிறகுகளை வெட்டி எறிந்து, சுயேச்சையான உருவாக்கத்தை தடை செய்து தம்மை கேவலம் அவர்களின் நகல்களாக சிதைத்து விட்ட தம் பெற்றோரை எந்த மகன்/ மகள் மன்னிக்க முடியும்.

ஒவ்வொரு ரசிகனும் கதாநாயகனின் இடத்தில் தன்னை கற்பனை செய்து கொண்டு கண்டு களிக்கிறான். (தன் நிறைவேறாத எண்ணங்களால் தன்னில் ஏற்பட்டுவிட்ட முடிச்சுகளை அவிழ்க்கிறான் என்றும் கூறலாம்.)