Showing posts with label warns. Show all posts
Showing posts with label warns. Show all posts

Thursday, December 30, 2010

கலைஞருக்கு நித்யானந்தா கடும் எச்சரிக்கை

ஒரு தாட்டி ஒரு  ஆனைக்கு  காலு ரயில்வே ட்ராக்ல மாட்டிக்கிச்சாம். அப்போ ஒரு எலி வந்து "ஒரே தாட்டி ப்ளீஸ்" னு தக்ஜம் பண்ண பார்த்துச்சாம். நம்ம தாத்தாவோட (கலைஞர்) நிலைமையும் அப்படி ஆயிருச்சு.  கில்மா வீடியோ புகழ்  நித்யானந்தா திருவண்ணாமலை ஆசிரமத்துல பேட்டி கொடுத்தாராம்:

கலைஞர் கிட்டே அப்பாய்ண்ட்மென்ட் கேட்டு லெட்டர் எழுதினதாவும் தான் நிரபராதினு நிரூபிக்க உதவனும்னு கேட்டு கடிதாசு போட்டதா சொன்னாராம்

அதுக்கு தாத்தா கிட்டேருந்து பதில்வரலேன்னும் சொல்லி  கீறாரு.அதோட விட்டாலும் பரவால்லை.

பக்தர்கள் கொதிச்சுப்போயிருக்காய்ங்களாம். நித்யாதான் "ஓம் சாந்தி"ன்னுட்டுஅடக்கி வச்சிருக்காராம்.

கலைஞர் தன் கடிதம் மேல  நடவடிக்கை எடுக்கலைன்னா கன்னியாகுமாரிலருந்து லட்சக்கணக்கான பக்தர்களோட பாதயாத்திரை செய்வாராம்.

கலைஞர் அவர்களே,

எப்படியும் ராஜா ராஜினாமா, சிபிஐ ரெய்டு விவகாரங்களால இனமானம், மானிலத்தில் சுயாட்சி, வடவர் ஆதிக்கம் இத்யாதிக்கெல்லாம் உசுரு கொடுத்திட்டிங்க. வேலையோட வேலையா மஞ்ச சால்வையை தூக்கிப்போட்டுருங்க. ஒரு கருப்பு சால்வைய போர்த்திக்கிட்டு  நித்யானந்தா மாதிரி டுபாகூர் சாமியார்ங்களை கிழிக்க புயல் வேக சுற்றுப் பயணம் ஒன்னு துவங்கிருங்க..


இப்படியே விட்டா   நித்யானந்தா "விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்னு"  கூட  அறிவிப்பார் போல..


பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:


* நான் நிரபராதி ( அடங்கொய்யால)

* வீடியோ எல்லாமே மார்ஃபிங் ( தோ..டா)

*ஆசிரமத்துல என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க நான் தான் கேமரா வச்சேன் ( தான் திருடி பிறனை நம்பாங்கறது சரியா போச்சு)

* சி.டியை வெளியிடாம இருக்க கோடிக்கணக்குல டிமாண்ட் பண்ணாங்க அவிக ஆருன்னு நேரம் வரப்போ சொல்வேன் (தேர்தலுக்கப்பாறமாவா?)


எச்சரிக்கை:
அண்ணே .. நேத்து நள்ளிரவு ஒரு கில்மா சிறுகதை போஸ்ட் பண்ணியிருந்தேன் படிச்சிங்களா? இல்லைன்னா இங்கன அழுத்தி படிச்சுருங்க