Friday, April 29, 2011

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திடீர் ராஜினாமா - திகீர் பின்னணி

நமக்கு மீடியா மேலயோ , மீடியா ஒலி/ஒளி பரப்பற செய்திகள் மேலயோ எந்தவிதமான ஆர்வமோ - அக்கறையோ கிடையாது. ஆனா ஒன்னு இந்த செய்திகள் எல்லாம் எடிட்டர் டேபிள்ள குப்பையா விழுந்துகிடக்கிற ஃபிலிம்  மாதிரி.

இதுல எதை எடுக்கனும் - எதை தள்ளிடனும் - எதை எதுக்கு முன்னே - எதுக்கு பின்னே ஒட்டனும் -எதை வெட்டனும்னு தெரிஞ்சிக்கிட்டா ஓரளவு யூஸ் ஃபுல் தேன். நமக்கு அந்த கப்பாசிட்டி இருக்குதுங்கற நினைப்புல அப்பப்போ செய்திகள் பார்க்கிறது வழக்கம்.

அப்படி அசால்ட்டா இன்னைக்கு மதியம் பார்த்துக்கிட்டிருந்தப்பதேன் "  இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா"ங்கற செய்தி நம்ம கண்ல பட்டுது.

மேம்போக்கா பார்த்தா இது ஒரு வழக்கமான சம்பவமா தோணும். இதில் உள்ள திகீர் பின்னணியை தெரிஞ்சுக்கனும்னா உங்களுக்கு சரித்திரம் தெரிஞ்சிருக்கனும்.

அமெரிக்க தூதரகம்னா அதனோட முழு முதல் வேலை உளவு சொல்றதுதான். (அமெரிக்க தூதர்கள் தம் தாய் நாட்டுக்கு அனுப்பினதா  விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள்களோட விவரம் ஞா இருக்கில்லை?) உளவுன்னா வெறும் படைபலம் இத்யாதி மட்டுமில்லை.

அமெரிக்கா போட்ட கோட்டை குறிப்பிட்ட நாடு தாண்டாம இருக்கா? அமெரிக்க நலனுக்கு எதிரா எதுனா காரியம் நடக்குதா? - அமெரிக்க எதிரிகளோட செயல்பாடுகள் என்ன?  அமெரிக்கா தடை செய்த  அமைப்புகளோட அரசாங்கம்/ ஆளுங்கட்சி /எதிர்கட்சிகள்/இதர அமைப்புகள் எதுனா தொடர்பு வச்சிருக்கா?
இந்த மாதிரி மேட்டரை எல்லாம் தூதர்கள் அனுப்பிக்கிட்டே இருக்கனும்.

இதான் அமெரிக்க தூதர்களோட அஜெண்டா. இதுல இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எங்கயோ கோட்டைவிட்டுட்டாப்ல இருக்கேன்னு கெஸ் பண்ணா வெரி குட். நெஜமாலுமே அதான் நடந்தாப்ல இருக்கு.லேட்டஸ்டா வெளி வந்த  தமிழக அரசியல் பத்திரிக்கையில  இதுக்கான க்ளூ இருக்கு. -அது என்னங்கறதை ஓப்பன் பண்ற வரை சின்ன சஸ்பென்ஸ். ஒரு சில மாண்டேஜ் ஷாட்ஸை பாருங்க.


* மும்பை தாஜ் ஹோட்டல் சம்பவம்

* சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகளின் பட்டியல் வெளியீடு

* பாக் வழக்கமான சால்ஜாப்புகள்

* இந்தியா ,  இந்த மேட்டரை பைசல் பண்றவரை ஒன்னோட பேச்சே இல்லைனு பாக்கிஸ்தானுக்கு    சொல்லிருது.

                                                             இங்கே ஷாட் கட் பண்ணா

இந்தோ -பாக் கிரிக்கெட் போட்டியை பார்க்க பாக் ஜனாதிபதி வராரு. இடையில என்ன நடந்தது? தமிழக அரசியல் ஸ்டேட்மென்ட் படி பார்த்தா ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கு. இதுல அமெரிக்காவால்
" ஆய் பையனு " டிக்ளேர் செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ காரவுகளும் இருந்திருக்காய்ங்க.

இந்த மேட்டரை ஸ்மெல் பண்ணி - ஒடனே கேபிள் கொடுக்காம என்னய்யா புடுங்கிக்கிட்டிருந்தேன்னுட்டு தூதரை காச்சியெடுத்து ராஜினாமா செய்யச்சொல்லியிருக்க வாய்ப்பிருக்கா இல்லியா?

சிம்பிள் லாஜிக்.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..

Monday, April 25, 2011

சத்ய சாய்பாபாவுக்கு கேன்சர்?

சத்ய சாய்பாபா கேன்சரால் அவதிப்பட்டதாக பிரபல மருத்துவர் ஒருவர் தனியார் தெலுங்கு சேனலில் சொன்னார்.அதுவும் ஆண்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய  ப்ரோஸ்டட் சுரப்பியில் 17 வருடங்களுக்கு முன் கேன்சர் வந்ததாகவும் ஒரு அறுவை சிகிச்சையின் மூலம் அது  நீக்கப்பட்டதாகவும்  அவர் தெரிவித்தார்.

நம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் ப்ரோஸ்டட் சுரப்பி என்பது சிறு நீர்பாதையில் விந்துவை உந்தி தள்ள இயற்கை வைத்துள்ள ஏற்பாடு.

முதியவர்கள் விஷயத்தில் இந்த சுரப்பி தேவையின்றி வளர்ந்து கொண்டே போவதால் தான் அவர்களுக்கு அடிக்கடி சிறு நீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு இது கேன்சராகவும் பரிணமிப்பதுண்டு. யோகி ராம் சுரத்குமாரும் இதே நோயால் அவதிப்பட்டது நினைவிருக்கலாம்.

கேன்சர் என்பது தேவையற்ற வளர்ச்சி. அதி விரைவு வளர்ச்சி. மனித உடலில் எந்த பார்ட் எல்லாம் விரைவில் வளருதோ அந்த பார்ட்ல எல்லாம் கேன்சர் வர்ரது யதேச்சையானதுனு சொல்லமுடியாது. உ.ம் பெண்களில் மார்பகம், கருப்பை, ஆண்களில் ப்ரோஸ்டட்

இன்னம் டீப்பா தெரிஞ்சிக்கவிரும்பறவுக இங்கிலிபீஸ்ல படிச்சுக்கங்கப்பா!


Prostate is a glandular organ present only in males. It surrounds the neck of bladder & the first part of urethra and condributes a secretion to the semen. The gland is conical in shape and measures 3 cm in vertical diameter and 4 cm in transverse diameter.It has got five lobes anterior,posterior,two lateral and a median lobe.Since the first part of the urethra pass through it any lesion in the prostate will produce difficulty in passing urine.

சோர்ஸ்:www.findarticles.com

டாக்டர் மேலும் சொன்னதாவது:

மேற்படி கேன்சர் எலும்புக்கு பரவியிருக்கு. அதனால எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கு. அதனாலதான் பாபா வீல் சேர்ல வாழவேண்டியதாயிருச்சு. இந்த வலியை சமாளிக்க டாக்டர்கள் ஸ்லீப்பிங் பில்ஸ் மற்றும் மயக்க மருந்துகளை ப்ரிஸ்க்ரைப் பண்ணியிருக்காய்ங்க. இதனாலதான் கிட்னி, கல்லீரல் எல்லாம் பாதிக்கப்பட்டது. பாபா ஒரு க்ரானிக்  ஷுகர் பேஷண்ட்.

Saturday, April 23, 2011

உஜிலா தேவியும் -உஜாலா சொட்டு நீலமும்

அண்ணே வணக்கம்ணே!

வம்பு வழக்கு வேணாம்னு ஒதுங்கி ஒதுங்கி போனாலும் 6 மாசத்துக்கு ஒன்னு வந்து மாட்டிக்குதுங்கண்ணா.

என்னவோ பெரியமன்ச தராவா கீதேனு அப்பப்போ பார்த்துக்கிட்டிருந்த
உஜிலா தேவி  யை உஜாலா சொட்டு நீலம் இல்லாமயே வெளுக்க முடிவு பண்ணிட்டன்.

மேற்படி   வலைப்பூவில் பா.ஜ.க வாசம் வீசுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டவன் நான். மேற்படி வலைப்பூ
//இன்றைய கிறிஸ்த்துவர்களில் 98 சதவீதம் பேர் இயேசுவை அறியாதவர்கள், இயேசுவை புரியாதவர்கள் அவர் சொற்படி நடக்காதர்கள் இன்று தங்களை கிறிஸ்த்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் மனிதர்கள் அவர் கூறியப்படி மட்டுமே வாழ்க்கை முறையை நடத்தி கொண்டிருந்தால் இன்யை உலகில் எந்த சிக்கலுமே இல்லாமல் இருந்திருக்கும்// என்கிறது .

இதே பத்தியில் ஏசு என்ற இடத்தில் இந்துக்டவுளருள் ஒருவர் பெயரையும் கிறிஸ்தவர்கள் என்ற இடத்தில் இந்துக்கள் என்ற வார்த்தையையும் போட்டு எழுத உஜிலா தேவிக்கு மனம் + தில் இருந்தால் பா.ஜ.க வாசம் என்ற குற்ற்ச்சாட்டை  வாபஸ் வாங்கிக்கொள்ள நான் தயார்.

வார்த்தைகளை மாற்றிப்போட்டு எழுத அவர் தயாரில்லை என்றால் என் குற்றச்சாட்டு அக்மார்க் உண்மை என்று அர்த்தம் 

பை தி பை அவன் அவள் அது தொடரை ஆவலுடன் படிக்கும் அந்த நானூறு பேரில் நீங்களும் ஒருவரானால் பத்தாம் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க

Friday, April 22, 2011

அவன்-அவள்-அது : 9

இந்த அவன்-அவள்-அது தொடரை படிச்சுட்டு சமைத்துப்பார் புஸ்தவம் மாதிரி ஆன்மீக முன்னேற்றத்துக்கான டூஸ் அண்ட் டோன்ட்ஸை பத்தி ஒரு பதிவு போட்டா என்னன்னு மஸ்தா பேரு கேட்டுக்கிட்டே இருக்காய்ங்க. (ஹி ஹி ஒரே ஒரு பார்ட்டிதேன்.அதுவும் ஒரே ஒரு தாட்டித்தேன்)

என்னை நான் ஆன்மீக விஞ்ஞானின்னெல்லாம் சொல்லிக்கிட்டு வரைஞ்சு தள்ள ஆரம்பிச்சா  அது கேணத்தனமாயிரும்.  நமக்கு நடந்ததெல்லாம் ஜஸ்ட் ஆக்சிடென்டல். மேலும் படிக்க

அவன்-அவள்-அது : 9

இந்த அவன்-அவள்-அது தொடரை படிச்சுட்டு சமைத்துப்பார் புஸ்தவம் மாதிரி ஆன்மீக முன்னேற்றத்துக்கான டூஸ் அண்ட் டோன்ட்ஸை பத்தி ஒரு பதிவு போட்டா என்னன்னு மஸ்தா பேரு கேட்டுக்கிட்டே இருக்காய்ங்க. (ஹி ஹி ஒரே ஒரு பார்ட்டிதேன்.அதுவும் ஒரே ஒரு தாட்டித்தேன்)

என்னை நான் ஆன்மீக விஞ்ஞானின்னெல்லாம் சொல்லிக்கிட்டு வரைஞ்சு தள்ள ஆரம்பிச்சா  அது கேணத்தனமாயிரும்.  நமக்கு நடந்ததெல்லாம் ஜஸ்ட் ஆக்சிடென்டல். மேலும் படிக்க

Wednesday, April 20, 2011

"ஜெ" தோற்பது உறுதி - ஜெயேந்திரர்

அண்ணா வணக்கம்ணா!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்பது உறுதின்னுட்டு  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சொல்ட்டாருங்கண்ணா. இன்னா நைனா ஒனக்கு மட்டும் ஸ்பெஷலா எஸ்.டி.டி போட்டு சொன்னாரான்னு கேப்பிக.சொல்றேன்.

தாளி..யாரு இந்த பார்ட்டி? இதுக்கு மிந்தி நாம அப்பப்போ எழுதிப்போட்ட பதிவுகளை ஒரு தாட்டி க்ளிக்கி பார்த்திங்கனா  இந்தாளோட பர்சனாலிட்டி தெரியவரும்.

http://kavithai07.blogspot.com/2010/05/vs.html
http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_12.html
http://kavithai07.blogspot.com/2009/09/blog-post_24.html

சுருக்கமா சொன்னா ..

இவரு போட்ட கெட்ட ஆட்டத்தை தட்டி கேட்ட சங்கரராமனை போட்டு தள்ள கூலிப்படைய ஏவினவர். அன்றைய ஜெ அரசால் கைது செய்யப்பட்டவர். பெரியாரின் சீடர் -அண்ணாவின் தம்பி கலைஞரோட காலை கட்டி ஓலை வாங்கி வெளிய வந்தவர்.

கொசுறு:
எழுத்தாளர் அனுராதா ரமணன் முன்னாடியே வேற ஒரு பார்ட்டியோட தக்ஜம் பண்ணி காட்டினவரு (ஆதாரம்: தமிழ் ஓவியா)  மூடை கிளப்பறாராம்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்பது உறுதின்னுட்டு  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சொன்ன தகவல்  நமக்கு எப்படி கிடைச்சதுன்னா கூகுலாண்டவர் புண்ணியத்துலதேன்.

கே.என் ராவ்.ங்கற பார்ட்டி தன்னோட ப்ளாக்ல எழுதியிருக்காருங்கோ அவர் இங்கிலி பீஸ்ல  பீசிக்கிற மேட்டரோட சுருக்கம்.

" ஜெயேந்திர சரஸ்வதி தில்லில இருப்பாரு - நீ அவரை சந்திச்சே ஆகனும்னு ஏப்ரல் மாசம் எல்.என்  எனக்கு தகவல் தெரிவிச்சாரு.போய் சந்திச்சேன். அப்போ ஸ்வாமி புன் சிரிப்போட இந்த தடவை அந்தம்மா தோற்கப்போறாய்ங்க - தி,மு.க அரசு ஏற்படும்"னு சொன்னாரு.

அடங்கொய்யால .. நீ இஷ்டாத்துக்கு கூத்தடிப்பே. கேள்வி கேட்ட சங்கர் ராமனை கூலிப்படை வச்சு போட்டு தள்ளிருவே ..ஒரு முதல்வருங்கற வகையில வாழ்க்கையில தான் செஞ்ச மிக குறைவான நல்லவேலைகளில் ஒன்னா உன்னை உள்ளே  தூக்கிப்போட்டா அது பஞ்சமா பாதகம். அதுக்காவ அந்தம்மா தோத்துப்போகனும்.

எச்சரிக்கை:
இந்த பதிவு போடப்பட்ட தேதி MAY 15, 2006 ஆம் தேதி
பதிவர் ஜெ.சரஸ்வதியை மீட்பண்ணது 2006 ஏப்ரல்,28

மேற்படி பதிவுக்கான தொடுப்பு இதோ http://vivekajyoti.blogspot.com/2006/05/shankaracharya-proved-right-woman-has.html
அல்லாம் சரி கே.என்.ராவு.. 2011 தேர்தல்ல அம்மா வரப்போறாய்ங்க - கும்மி எடுக்கப்போறாய்ங்கனு நேத்து முந்தா நேத்து ஜெயேந்திர சரஸ்வதி உங்களுக்கு ஏதும் சொல்லலியா?

Sunday, April 17, 2011

பாம்பு விடறான்யா

அவன் அவள் அது தொடர்பதிவுல மாயா பீஜத்தை சான்ட் பண்ணிக்கிட்டிருந்த சமயம்  பாம்பு வந்துருச்சுன்னு சொன்னேன். அதை படிச்சுட்டு மஸ்தா பேரு பாம்பு விடறான்யானு நினைச்சிருக்கலாம்.

ஒரு காலத்துல பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் நாம. ஆனால் ஒரு கட்டத்துல "ங்கொய்யால எவனுக்கோ பயந்து நாம ஏன் இப்படி பீலா விட்டு எதை விட்டோம்னு ஞா வச்சுக்கிட்டு சாகனும். இந்த சொசைட்டியே பொய் - இந்த மனிதர்களே பொய் -இவிக நம்மை பார்த்து டர்ராகனும்னா தாளி உண்மைய சொல்றதுதான் வழிங்கற முடிவுக்கு வந்துட்டு சொல்ல ஆரம்பிச்சுட்டேன். Read More

Friday, April 15, 2011

இன்று முதல் கவுண்ட் டவுன்

எதுக்குன்னு கேப்பிங்க! சொல்றேன். ஜோதிட ரீதியிலான  காரண காரியங்களை எதிர்பார்க்கிறவுக இங்கே அழுத்தி  ரத்த அழுத்தத்தை கொஞ்சம் ஏத்திக்கங்க.

இப்ப ப்ராக்டிக்கல் மேட்டருக்கு வரேன். நான் சொல்லப்போற மேட்டரோட சாரம் மத்திய அரசு கவிழ்தல் - சந்தடி சாக்குல பாக்,சீன நேரடி தாக்குதல் அ தாஜ் ஹோட்டல் பாணியில  உள்ளடி - மக்கள் அல்லாட்டம்.இதுக்கான கிரவுண்ட் இப்பமே ரெடியாயிட்டிருக்கிறதை கோடி காட்ட விரும்பறேன். 1.தமிழகம்:
சனம் தமிழ் நாட்ல திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் எள்ளும் தண்ணியும் இறைக்கப்போறது  நிச்சயம். ( இதை நாம கூட்டுக்கும் முந்தியே சொன்னது தான் சோதிடத்துக்கு பெருமை)

தாத்தா மூக்குக்கு ஏதோ தப்பான வாசனை தெரிஞ்சுருச்சு அதாவது காங்கிரஸுக்கு வாய்தா பூட போகுதுன்னா? அல்லது நமக்கு ஆப்பே காங்கிரஸுதான்னுட்டா தெரியலை. அதனாலதான் சேஃப்டிக்கு இல கணேசனுக்கு வாழ்த்து - பா.ஜ.க 234 லயும் போட்டி (எதிர்ப்பு ஓட்டுக்கள் ஜெ வுக்கு போகாம இருக்க) கலைஞர் டிவில பா.ஜ.க ப்ரஸ் மீட்டுக்கு கூட கவரேஜ்.

மானிலத்துல ஆட்சி இருந்தப்பயே ஸ்பெக்ட்ரம் ஜியை வச்சுக்கிட்டு காங்கிரஸ் பண்ண அலப்பறைக்கு தாத்தாவுக்கு டங்குவார் அறுந்துருச்சு. ஆட்சியும் போன பிற்பாடு நிலைமை நாறிடும். அதனால தாத்தாவும் தன் பங்குக்கு கம்யூனிஸ்டு..அந்த இஸ்டு இந்த இஸ்டுன்னு பிடிச்சு மத்தியில ஆட்சியை கவிழ்க்க களத்துல இறங்கிருவாரு.


2.ஆந்திரம்;
ஒய்.எஸ்.ஆரோட மகன் ஜகனை  இடைத்தேர்தல்ல எப்படியாவது மொக்கையாக்கனும்னு ஒட்டு மொத்த அரசு இயந்திரமே கங்கணம் கட்டி வேலை செய்யுது. இவிக நோக்கம் ஜகனை தோற்கடிக்கறதில்லை. அது முடியாதுன்னு அவிகளுக்கே தெரியும். முடிஞ்ச மட்டும் மெஜாரிட்டிய குறைக்கறது. ஆனால் இதெல்லாம்  கருவாடு மீனாகற கதை . ஜகன் எப்படியும் டாப் மெஜாரிட்டியோட ஜெயிக்கப்போறது நிச்சயம். இந்த இடைத்தேர்தலோட ரிசல்ட் வந்த 24 மணி நேரத்துல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜகன் பின்னாடி  க்யூ கட்டி நிற்பாய்ங்க. ஆட்சி ஃபணால்.

ஜகனோட டார்கெட் கிரணோ ,மானில கட்சியோ அல்ல. சோனியாதான். எம்.பிக்களும் ஜகன் பக்கம் இழுக்கப்படுவது கியாரண்டி. ஜகனுக்கு சரத்பவாரோட நல்ல டெர்ம்ஸ் இருக்கு. அவரும் சந்தர்ப்பத்துக்காகத்தேன் காத்திருக்காரு.  சமீபத்துல அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு முதல் பலியா இவரை போட்டது ஞா இருக்கலாம். சோனியா அம்மா உத்தமி பவார் பட்டும் பஜாரின்னு உலகத்துக்கு காட்டற இந்த பிட் எல்லாம் பவாருக்கு தெரியாதா என்ன?

மத்தியில ஆட்சி ஃபணால் ஆகறதும், மன்மோகனார் சுதந்திரம் பெறுவதும் நிச்சயம் (சனி விட்டுருமில்லை- நான் சிம்மராசிக்கு சொன்னேன் தலை)  இதெல்லாம்  ஒரு ஷெட்யூல் படி நடக்கப்போற மேட்டர். 

3.ஸ்பெக்ட்ரம் ஜி:
ஆட்சி கவிழும் காட்சி ஒரு புறம்னா கோடிகளை கொட்டிக்கொடுத்து ( டைரக்ட் + இன்டைரக்ட்)  ஸ்பெக்ட்ரம் கற்றைகளை வாங்கின கம்பெனிக்காரவுக கோர்ட்டுல குடியிருக்க விரும்புவாய்ங்களா?

கிருஷ்ணா  கோதாவரி பேசின்ல ரிலையன்ஸுக்கு கிடைச்ச எரிவாயு மேட்டர்ல அவிக  மேடம் கிட்டே  டைரக்ட் டீலிங்ல இருந்தாப்ல இருக்கு. ரெட்டிகாருவுக்கு மேட்டர் தெரியாம  மூக்கை நுழைச்சதுக்குத்தேன் ஒய்.எஸ்.ஆர் கதி அதோகதியாச்சு.

அதாவது ஒரு  கார்ப்போரேட் அமைப்பு  ஏதோ ஒரு பவர் சென்டருக்கு "அழுத்தின " பிறகு வேலை தடை படறதை விரும்பறதே இல்லை. கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிக்க அவிக என்ன டெப்பாசிட்டா பண்ணாய்ங்க.

ஒய்.எஸ்.ஆர் டிமாண்டும் பண்ணலை - கையையும் நீட்டலை - யாருக்கே அழுத்திட்ட மேட்டர் தெரியாம கட்டைய போட்டாரு. கட்டையில போக வச்சுட்டாய்ங்க.

ஸ்பெக்ட்ரம்ஜில டிமாண்ட் பண்ணியிருக்காய்ங்க -கைய நீட்டியிருக்காய்ங்க - அழுத்தவேண்டியவுகளுக்கு அழுத்தியிருக்காய்ங்க - இப்ப கோர்ட்டு பேரை சொல்லி கைய நீட்டினவுகளே கட்டைய போட்டா என்ன ஆகும்? என்ன ஆகும்ணேன்?

4.சீனா :
இலங்கையில புனர் நிர்மாண வேலைக்குன்னுட்டு சிறைக்கைதிகள்ங்கற பேர்ல தண்டு இறக்கியாச்சுன்னு மீடியா அலறுது.  இதுவுமல்லாது பாக் பிடிச்சு வச்சிருக்கிற காஷ்மீர் பகுதிகள்ளயும் தண்டு இறங்கியிருக்குன்னு செய்திகள் வருது.

கூட்டிக்கழிச்சு பாருங்க. லோக்கல்லயா ஆட்சி ஃபணால் - ஸ்பெக்ட்ரம்ஜி மேட்டர்ல ரெட்டிகாரு கணக்கா ஆராச்சும் கட்டையில அனுப்பப்பட்டா - பை மிஸ்டேக் அது ஒரு விவிஐபியா இருந்தா நாடுமுழுக்க குழப்பம்.. குழப்பம்.. குழப்பம் ..

நான் லோக்கல்லயா எதிரி பவர்ஃபுல்லா இருக்கான்.  நம்ம எதிரிகளோட  நெருக்கமா இருக்கான். நமக்கு கிட்டக்க இருக்கான்.  எப்படியா கொத்த மாங்கா மண்டையனுக்கும்  ஒரு கல்லு விட்டுப்பார்ப்போமேன்னு தோணத்தானே செய்யும்.

அது ஏதோ நேர வந்தா பரவால்லை. தாஜ் ஹோட்டல் ரேஞ்சுல வந்தா ? அதுவும் ஒரே நேரத்துல நாலஞ்சு சிட்டியை குறி வச்சா?

அதுலயும் இத்தீனி நாளு நானும் மனசை தேத்திக்கிட்டுதான் இருந்தேன். லேட்டஸ்டா சீனம் பேச்சு வார்த்தை அது இதுன்னு ஆரம்பிச்சிருக்கிறதா நியூஸை பார்த்து டர்ராயிட்டன். அவிக ஸ்டைலே ஒரு கையால கை குலுக்கிக்கிட்டே , இன்னொரு கையால  ...........பிடிச்சு நசுக்கிர்ரதுதேன்.

"இந்தோ சீனா பாய் பாய்" கோஷம் ஞா இருக்கா.. இன்னம் நிறைய மேட்டர் இருக்குங்கண்ணா கூட்டிக்கழிச்சு பார்த்தா அச்சாணியமா இருக்கு. இதோட நான் ஆட்டத்துக்கு அம்பேல்.. நீங்க உடுங்க ஜூட்..

Monday, April 11, 2011

2 வருசத்துக்கப்பாறம் அரசியலுக்கு : ரஜினி தகவல்


தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரியை வீட்டுக்கு அழைச்சு பேசிட்டிருந்தப்ப ரஜினிய அவரு கூப்டாராம் ( வேற எதுக்கு? அரசியலுக்குத்தேன்) அப்ப ரஜினி அய்யா ஒடைச்சு சொன்னாராம். சினிமால இருந்துக்கிட்டு அரசியலுக்கு வரமாட்டேன். என் கடைசி படத்தை முடிச்ச பிறவு 2 வருஷம் கழிச்சு வருவேன்னாராம்.

அடங்கொய்யால நீ வா .. வராம போ. ஆனால் இந்த மேட்டரை ஷேர் பண்ணிக்க செலக்ட் பண்ண மன்சனை வச்சே உன் ரூட்டு எப்டினு கணக்கு போட்டுருவம்.

கலைஞரை ஆஹா ஓஹோனு புகழ்ந்ததையெல்லாம்  கலைஞர் டிவில போட்டு தாளிக்கிறாய்ங்க. கண்டுக்கலை. ஸ்டாலின் வந்தா சால்வை போடற. யாரோ பாய் வந்தா விஷ் பண்றே. கலைஞர் டிவில பா.ஜ.க தலைவருங்க  பேட்டியெல்லாம் வருதுங்கண்ணா..

அப்போ சோனியா கை கொடுக்கப்போறது நெஜம் தானா? தாத்தாவுக்கு மூக்குல வேர்த்துதான் உறவுக்கு கை கொடுக்க ஆரம்பிச்சிட்டாரா?

ரஜினிய நேரடியா சேர்த்துக்கிட்டா லொள்ளு ( ஸ்டாலினுக்கு பிரச்சினையாயிருமே) அதனால பா.ஜ.க வுல வுட்டு ஆட்ட சொல்லலாம்னு கணக்கா..

மண்டை காயுதுப்பா..

செய்தி உபயம் : சாட்சி தெலுங்கு தினசரி

Wednesday, April 6, 2011

"அவாளுக்கு"வந்த விபரீத ஆசை

இன்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது " நீங்க ஏன் பிராமணர்களை-பிராமணீயத்தை  விமர்சிக்கிறிங்க. இதனால உங்க நம்பகத்தன்மை குறையாதானு கேட்டார்.

நான் "அவிகளை அவாய்ட் பண்ணிட்டு  எழுதினா ஆந்த்ரபாலஜி - வரலாறு  - பொருளாதரம் இப்படி எதை எழுதினாலும் அது முழுமையாகாது.

அட அவிகள விட்டுட்டு எதையாவது புரிஞ்சிக்க பார்த்தா அந்த புரிதல் கூட  முழுமையானதா இருக்காதுனு சொல்லிட்டிருந்தேன்.

சூத்திரன் உருப்பட்டா நாட்டுக்கு லாபம். பார்ப்பான் கெட்டாத்தான்  நாட்டுக்கு லாபம் (உ,ம் பாரதியார்). சுத்திரன் உருப்படனும்னா அவன் எப்படி கெட்டான்னு அவனுக்கு சொல்லியாகனும். மேலும் இது என் 24 ஹவர்ஸ் சர்விஸ் கிடையாது.

நானும் மன்சன் தானே "அல்லாத்தையும்" மறந்துட்டு இருக்கும்போது அவிகளே நம்ம அலார்ட் பண்ணிர்ராய்ங்கப்பானு பேசிட்டிருந்தேன்.

சொல்லி வாய மூடலை இதொ இந்த பதிவு கண்ல பட்டது.

பூணூல் தன்மானத்தின் சின்னம்!
பூணூல்பற்றி கருணாநிதி பேசினால் வாஞ்சிநாதனாக மாறுவோம்

இதை படிச்சா ரத்தம் கொதிச்சா கிழிக்கத்தோணுமா தோணாதா? இவிகளை திருத்தவே முடியாதப்பா?
அன்னிய சக்திகளுக்கு  பாரதமாதாவை - காட்டி,கூட்டி கொடுத்த கூட்டம் -துபாஷிகள் கூட்டம் தன்மானத்தை பத்திபேசுது.. அவா பாஷையிலயே சொன்னா கலி முத்திப்போச்சு.

பூணூல்ல முதுகு சொறிஞ்சிக்கறது நாங்களா நீங்களா?
புருசனை பார்த்ததும் தாலி தொட்டுப்பார்த்துக்கறாப்ல விசேஷத்துல மட்டும் பூணூல் இரவல் வாங்கறது நாங்களா?  நீங்களா?

வாஞ்சி நாதன் வாழ்ந்திருந்தப்போ அவனை அபிஷ்டு ,அச்சு பிச்சுன்னு சொல்லியிருப்பானுவ. இப்பம் வாஞ்சி நாதன் அவிகளுக்கு ஒரு ப்ராண்ட் வேல்யூ உள்ள பேரா தோணியிருக்கு.

வாஞ்சி நாதன் கக்கூஸுல தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு அப்ஜெக்சன் பண்ண கூட்டம் இப்பம் அவர் பேரை சொல்லி மிரட்டிப்பார்க்குது.

வாஞ்சி நாதனா மாறுவோம்னா கலைஞரை போட்டு தள்ளிருவாய்ங்களோ?

நாங்களும் ரவுடிதான் நாங்களும் ரவுடிதாங்கறாப்ல இருக்கு.

அய்யர் மாருங்க மட்டும் ஒதவலைன்னா நாட்ல ஊழலே ந்டக்காதுங்கோ.. வ்ருமான வரி ஏய்ப்பே ந்டக்காதுங்கோ..

அசத்தல் அமீர்கானும் சவ சவ ரஜினிகாந்தும்

அமீர்கானை பத்தி நான் சொல்ல ஆரம்பிச்சா தம்பி மாருங்களுக்கெல்லாம் கோபம் வரும். என்னாட்டம் கிழவாடிகளுக்கு புரியனும்னு அவரோட சில சூப்பர் ஹிட்+ மெசேஜ் நிறைந்த படங்களின் பெயர்கள்
ரங் தே பசந்தி , தாரே ஜமீன் பர் .

பத்மபூசன் விருது பெற்ற பிரபல சமூக சேவகரும் முதியவருமான  (பிறப்பு: ஜூன் 15, 1938) பரவலாக அன்னா அசாரே என்று அறியப்படும் கிசான் பாபுராவ் அசாரே (Kisan Baburao Hazare)  லஞ்ச ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டமாக்கலுக்காக தில்லியில் துவக்கியுள்ள சாகும் வரை உண்ணாவிரத  போராட்டத்துக்கு அமீர்கான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நம்ம சவ சவ ( பக்கத்துல ' ம் ' சேர்த்து படிச்சுரப்போறிங்க ) ரஜினி காந்த் இதை பத்தி வாயை திறக்க காணோம்.நாட் நாட்லயே விஞ்ஞான முறையில் ஊழல் செய்த கலைஞரை இந்திரன் சந்திரன் என்று புகழும் ரஜினி காந்த் - இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக (?) சிறப்பு கோர்ட்டு அமைக்கிற அளவுக்கு ஊழல் செய்த ஜெயலலிதாவை "வீரலட்சுமி"னு  புகழ்ந்த ரஜினி காந்த் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காம இருந்தாலே நல்லது.

சந்தடி சாக்குல "அவாளுக்கு வந்த விபரீத ஆசை"னுட்டு ஒரு பரபர பதிவு ஒன்னும் போட்டிருக்கேன். கலைஞர் பூணூலை பத்தி பேசினா வாஞ்சி நாதனா மாறி போட்டுத்தள்ளிருவாய்ங்களாம்.

ங்கொய்யால நாட்ல உள்ள ஊழல்வாதிக்கெல்லாம் ஸ்கெட்ச் கொடுக்கிறதே அவாள் தான். வருமான வரி ஏய்ப்புக்கு ரூட் போட்டுக்கொடுக்கிறதே அவாள் தான். இந்தமேட்டர் எல்லாம் ஹசாரேவுக்கு தெரியாது போல.பாவம் அவர் மத்திய அரசுக்கு எதிரா மட்டும்  போராடிக்கிட்டிருக்காரு.

சரி மேட்டருக்கு வந்துர்ரன்:

மொதல்ல அன்னா அசாரே பத்தி விக்கீபீடியா என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.

இவர் ஒரு இந்திய சமூக சேவகர். மகாராட்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, ஓர் மாதிரி சிற்றூராக திகழ்ந்த,ராலேகாவ் சித்தி என்ற சிற்றூரின் மேம்பாட்டிற்காக இவராற்றிய பணிக்காக அறியப்பட்டார். இவரது பணிகளுக்கு அங்கீகாரமாக 1992ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியுள்ளது.

நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டமாக்கலுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறப்புற பணியாற்றினார். தற்போது ஊழலுக்கு எதிராகப்  ஜன் லோக்பால் சட்டமாக்கலுக்காக தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளார்.

பாருங்க இங்கே  ஒரு தாத்தா ஊழலின் ஊற்றுக்கண்ணா இருக்காரு. இன்னொரு தாத்தா அங்கே ஊழலுக்கு எதிரா போராடறாரு.

2011ஆம் ஆண்டு அன்னா அசாரே வலுவான ஊழலெதிர்ப்புக்கான லோக்பால் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட வேண்டும் என்று போராடி வருகிறார்.

இது தொடர்பாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர்.

இது அரசு பிரேரித்துள்ள லோக்பால் சட்டவரைவினை விட வலுமிக்கதாகவும் அம்புட்ஸ்மன் எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்தும் இயற்றப்பட்டுள்ளது.

 இந்த சட்டவரைவை  ஏற்க இந்தியப் பிரதமர்  மறுத்து விட்டார்.

ஊழல் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் நடுவண் "லோக்பால்" மற்றும் மாநில "லோக் ஆயுக்த்" நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கும் வகையில் வலுவான லோக்பால் சட்டவரைவினை இயற்ற அரசு பிரதிநிதிகளும் குடிமக்கள் பிரதிநிதிகளும் இணைந்த கூட்டுக்குழு ஒன்றினை அமைக்கக் கோரி ஏப்ரல் 5, 2011 அன்று தில்லியிலுள்ள ஜன்தர் மந்தரில் சாகும்வரை உண்ணாவிரப் போராட்டத்தை துவக்கியிருக்கிறார்.

உண்ணாவிரதம்னா ஒரு சில மணி நேரங்கள் இல்லிங்கண்ணா சாகும் வரை.. உண்ணாவிரதம்.

லஞ்சம்னா அது ஏதோ ஒரு அரசியல் வாதியோட சொந்த விவகாரம்னு  நினைச்சுராதிங்க. ஒரு ரூபா காண்ட்ராக்ட் சமாசாரத்தை எடுத்துக்குவம்.  ஒரு அரசியல் வாதி ஜஸ்ட் 10% க்கு கைய  நீட்டிட்டாருனு வைங்க.பர்சண்டேஜ் கொடுத்து காண்ட்ராக்ட்  வாங்கின பார்ட்டி தான் செய்யற வேலையில பத்து பர்சண்ட் க்வாலிட்டிய குறைச்சுரும்.

இது காண்ட்ராக்ட் வாங்கி தானே சுயமா செய்யற பார்ட்டிக்கு தான் பொருந்தும். ஒரு வேளை காண்ட்ராக்ட்
வாங்கின பார்ட்டி இன்னொரு அரசியல் வாதி அ பவர் ப்ரோக்கர் அ பினாமினு வைங்க இவன் ஒரு பத்துபர்சன்ட் லாபம் வச்சு அதை காமாத்திவிட்டுருவான்.

வேலை ஆரம்பமாகுதுனு வைங்க நிச்சயம் குவாலிட்டி சரியிருக்காது, குவாலிட்டி கண்ட்ரோலுக்குனு  கையெழுத்து காலெழுத்து போட மூட்டை அவுக்கனும் , ஆஃபிசர் முரண்டு பிடிச்சா  நாலு தட்டு தட்ட ஆளு வேணம் அதுக்கு செலவழிக்கனும் - ரெம்பவே முரண்டு பிடிச்சா போட்டு தள்ள ஸ்பெஷல் பார்ட்டிகள் தேவை.அதுக்கும் செலவழிக்கனும். இந்த செலவையெல்லாம் சமாளிக்க குவாலிட்டிய குறைக்கனும்.  தப்பித்தவறி வேலை முடிஞ்சதுன்னா அப்பாறம் பில் வாங்கற வேலை ஆரம்பம். இதுக்கும் அலையனும், அல்லாடனும், குளிப்பாட்டனும், மூட்டை அவுக்கனும்.இதெல்லாம் போக மிச்சம் மீதியில கட்டறதாலதான் பாலங்கள் பல்லிளிக்குது, ரோடெல்லாம் இந்த கதியா கிடக்கு.

ஒரு ரூபா காண்ட்ராக்டிலான இந்த 10 பைசா  லஞ்சம் ப்ராஜக்டையே  டோட்டலா நாஸ்தி பண்ணிருது. இப்பல்லாம் மூட்டை அவுத்து அவுத்து மூட்டை காலியாகி கட்டாத பாலத்தை கட்டினதா கணக்கு பண்ணி பில் வாங்கினாதான் கட்டுப்படியாகும்ங்கற ரேஞ்சுக்கு வந்துருச்சு.

சிவில் வேலையிலான காண்ட்ராக்ட்னாலும் பரவால்ல. இதுவே தேச பாதுகாப்பு தொடர்பான காண்ட்ராக்டா இருந்தா என்னாகும்?  லஞ்சம்னா காண்ட்ராக்ட்லதான் லஞ்சம்னுல்ல ஒரு வேலைய செய்ய லஞ்சம், செய்யாம இருக்க லஞ்சம் , சீக்கிரமா செய்ய லஞ்சம், லேட்டா செய்ய லஞ்சம், பில் பாஸ் பண்ண லஞ்சம், பில்லை செக்ஸ்லிப் போட லஞ்சம்.

காலேஜ்ல சீட்டுக்கு லஞ்சம் , வேலை கிடைக்க லஞ்சம், ப்ரமோஷனுக்கு லஞ்சம், அரியர்ஸ் பில் வாங்க லஞ்சம், லோன் வாங்க லஞ்சம், லஞ்சம் ...............லஞ்சம்........ தாளி தூண்லயும் துரும்புலயும் கடவுள் இருக்காரோ இல்லியோ தெரியாது லஞ்சம் இருக்கு.

விலை வாசி உயர்வு பத்தி பேசறாய்ங்க.  விலைவாசி  உயரக்கூட லஞ்சம் தான் காரணம். 

சரக்கோட பாதையில எத்தனை செக் போஸ்ட் இருந்தா அத்தீனி லஞ்சம். வியாபாரி என்னை இதையெல்லாம் கைய உட்டா கொடுப்பான். அல்லாத்தையும் தூக்கி சரக்கு மேல போடறான்.விலை ஏறுது.

விலையேற்றத்தை பார்த்து பெருவாரியான சனம் வாங்காம ஒதுங்கினா யாவாரி விலைய குறைக்க பார்ப்பான். ஆனால் "சொம்மா வந்த பணம்தானேன்னு அள்ளி வீசுது ஒரு கும்பல். அட இன்னா விலை வச்சாலும் சரக்கு நிக்கரதில்லைப்பானு யாவாரி ஏத்திக்கிட்டே போறான்.

நெல்லுக்கு பொழியும் மழை புல்லுக்கும் பொசியுமாம்ங்கறாப்ல லஞ்சப்பணம்  சுத்தி வர்ர சர்க்கிள்ள பணம் சாக்கடையா பொங்குது. இவிகளை அண்டி பிழைக்க ( ஆடிட்டர் , லாயர் , டாக்டர் ) ஒரு கூட்டமே ப்ரிப்பேர் ஆயிருது.

லஞ்ச சர்க்கிளோட பணம் மட்டுமில்லை ,மாறிப்போன அவிக குணமும்,பணம் பற்றிய பார்வையும் சமூகத்துல அபான வாயுவா பரவுது. நாறிப்போகுது.


இந்த பதிவை மஸ்தா பேரு படிக்கனும் ரோசிக்கனும் பத்து பேருக்கு பரப்பனும்னு தான் எப்படி எபபடியோ  மேக்கப் பண்ணியிருக்கேன்.  நீங்க மட்டும் படிச்சா போதாது. பத்து பேருக்கு ஷேர் பண்ணுங்க ப்ளீஸ்..

Tuesday, April 5, 2011

அனுமனை அண்டினால் சர்வதோஷ பரிகாரம்

வழக்கமா ஒவ்வொரு கிரக தோஷம் குறைய ஒவ்வொரு சாமிய கும்பிடச்சொல்லி எங்காளுங்க
( ஜோதிடர்கள்).சொல்வாய்ங்க   நம்ம பர்சனல் ப்ரிஸ்க்ரிப்ஷன் கடாசில தந்திருக்கன்.

ஆனால் அனுமனை அண்டி  வணங்கினா, அவருக்கு ப்ரீதியான ராம நாமத்தை ஜெபிச்சா சர்வதோஷங்களும் பரிகாரமாவதோடு - ஆன்மீக ரீதியிலான முன்னேற்றமும் உறுதி என்பது என் அனுபவம்.Read More

Monday, April 4, 2011

வடிவேலுவுக்கு அஞ்சுல சனி

இறைவனுக்கு இணை வைப்பதை ஹராம் என்று கருதும்  மதம் இஸ்லாம். ஆனால் அல்லாஹ்விற்காக எழுதப்பட்டு ,அல்லாஹ்விற்காக பாடப்பட்ட பாட்டை கலைஞருக்கு பொருத்தி வியாக்யானம் பண்றது எந்தவகையில நியாயம்? Read More

Sunday, April 3, 2011

இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலீஜியன்



நம்ம கிருமி சார்.. வித்யாசமான பார்ட்டி. எடிட் பண்ணாதிங்க - வேணம்னா நீக்கிருங்கன்னுட்டாரு. நான்  நான் எடிட் பண்றதா இல்லை ( கிருமி சாரோட நட்பு முக்கியம்) நீக்கறதாவும்  இல்லை.( நிறைய விஷயங்களை சூப்பரா சொல்லியிருக்காரு) அதனாலதான் இந்த பதிவு. 

தலைப்பு நீளமா இருக்கக்கூடாதுனு பாதி மேட்டரை தான் சொன்னேன். மீதி மேட்டர் முஸ்லீம்ஸ் ஆர் தி ஒர்ஸ்ட் ஃபாலோயர்ஸ்.

வட்டியை தடை செய்த மதம், சமத்துவம் -சகோதரத்துவம் - சாரிட்டியை மதக்கடமையாக்கின மதம் - செக்ஸ் மேட்டர்ல ப்ராக்டிக்கல் அப்ரோச் உள்ள ஒரே மதம் இஸ்லாம் தான், இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்கு.

நான் ஏற்கெனவே ஒரு தாட்டி சொல்லியிருக்கேன். "இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின் பற்றப்படுமேயானால் இந்த உலகத்துல வேறு மதமே இருக்காது"  இதான் நம்ம கருத்து.  நான் ஏதும் தேர்தல்ல நிக்கப்போறதில்லை ( சமீபத்துல)  அதனால  மைனாரிட்டி பிரிவு மக்களை மயக்கவேண்டிய அவசியமும் நமக்கு கிடையாது. இருந்தாலும்   ஒரு ஜோதிடனாக என் கருத்தை சொல்லியாகனும்னு தான் இந்த பதிவு.


கிருமி சார் பதிவை தூளா ஆரம்பிச்சிருக்காரு. Read More

Saturday, April 2, 2011

நீங்க எழுதினா (தான்) நான் எழுதுவேன்

அட.. இப்படி சொல்லிட்டா ..   நீங்க எழுதினா ( தான்)  நான் எழுதுவேன். ஆமாங்கண்ணா 1,500 பதிவுகளுக்கு மேல எழுதியும் எனக்குள்ள ஒரு கில்ட்டி இருக்கு. எதை எழுதறதுங்கற  என் ப்ரியாரிட்டீஸை நானே கவர் பண்ணலை.  இந்த அழகுல மத்தவுகளை குறை சொல்லி என்ன பயன்?

என் ப்ரியாரிட்டீஸ் இதுதான்.

1.மனித உயிர்களுக்கு பெருகி வரும் ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்  மேலும் படிக்க

Friday, April 1, 2011

விசயமே இல்லாத விசயகாந்த் ஜாதகம்


எச்சரிக்கை;
நூலை போல சேலைம்பாய்ங்க. அப்படி பர்த் டீட்டெயில்ஸை வச்சுத்தேன் ஜாதகம். ஏதோ நம்மாளு ஒருத்தரு கும்ப லக்னம்னு கொடுத்த க்ளூவை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதனோட அடிப்படையில போடற பதிவு இது.

இருந்தாலும் நம்ம ஸ்டைல்ல அனுபவத்தையும் - கிரகஸ்திதியையும் மொதல்ல க்ராஸ் செக் பண்ணிருவம். ஐ மீன் இந்த ஜாதகத்துல விசயகாந்த் தெரியறாரா பார்த்துருவம்.

லக்னாதிபதியே எட்டுல கீறாரு ( இதுக்கு எங்க ஊரு சோசியர் கொடுத்த பலன் என்ன தெரியுமா தானும் கெட்டு ஊரையும் கெடுத்துரும்)

லக்னம் வேறயா இருந்திருந்து , அதிபதி  சனியா இல்லாம இருந்திருந்தா  எட்டுல நின்னதுக்கு .. மாணாம் வாத்யாரே. ( எட்டுன்னா மரணம் - லக்னாதிபதின்னா ஜாதகர்ங்கற க்ளூவ மட்டும் கொடுத்துட்டு கழண்டுக்கறேன்)

பப்ளிக்ல வேட்பாளரை மொக்கறது, கொடியை  வச்சு வில்லங்கம் பண்றதுக்கெல்லாம் காரணம்னு இன்னொரு மேட்டரை சொல்றாய்ங்க. அதெல்லாம் தேவையே இல்லாம தனக்கு தான் ஆப்பு வச்சுக்கறதுல நெம்பர் ஒன் இந்த ஜாதகர். சுய புத்தியும் இருக்காது .  சொல் புத்தியும் இருக்காது.

மேலும் சனின்னா ஆசனம் (பைல்ஸ் இருக்குமோ?) நரம்பு ( நரம்பு கோளாறோ) .

2/11 க்கு அதிபதி போய் 3 ல மாட்டினாரு. ரிஸ்க் எல்லாம் ரஸ்கு சாப்ட மாதிரின்னுட்டு சம்பாதிச்ச காசையெல்லாம் செல்ஃப் ஷேவ் பண்ணி  தொலைச்சுக்கட்டிருவாருங்கோ. ( கூடவே குளிகன் மாந்தியும் இருக்காய்ங்க - அப்போ நிலைமை எவ்ள தீவிரமா இருக்கும்னு பாருங்க )

5/8 க்கு அதிபதியான புதன் போய் ஆறுல நின்னாரு கூட கேது சேர்ந்தாரு. அஞ்சுதான் நேம் அண்ட் ஃபேமை,வாரிசுகளை, அதிர்ஷ்டத்தை  காட்டற இடம் . இவருக்கு பேருனு வந்தா " மொக்கறதாலயோ" "ரேங்கறதாலயோ தான்" வரும். இவரோட சிந்தனையே நெகட்டிவா இருக்கும். ஆரை ரேங்கலாம்ங்கற மாதிரி. இவரை பொருத்தவரை இவரோட  வாழ்க்கையே இவர் கட்டின கல்யாண மண்டபம் மாதிரிதான். நல்லாவே இருக்கும். ஆனா இருக்காது. படக்குனு புல்டோசர் வந்து குப்பையாக்கிட்டு போயிரும். இதே பலன் தான் இவரோட வாரிசுகளுக்கும்.

இந்த கெட்டதுல ஒரு நல்லது இருக்கு. அது என்னடான்னா அஷ்டமாதிபத்யம் வாங்கின புதன் 6 ல நின்னது. இதனால கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும்.

இப்பம் நடக்கிற தசையே புத தசை  தான் . இதனோட பலன் என்ன? கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும்.
எதிரி ஒழியனும்னு நினைச்சா கடன் தீராது. கடன் தீரனும்னு நினைச்சா எதிரி ஒழியமாட்டான்.

ஏழாவது இடத்தை பாருங்க. இங்கன சுக்கிரன் நின்னாரு. 7 ல சுக்கிரன் நின்னாலே நாஸ்தி. இதுல அவரு சூரியனோட வேற சேர்ந்திருக்காரு. மனைவியால யோகம்னு சொல்றது தவறு.  7 ல சுக்கிரன் நிக்கிறது ஜாதகரை போலவே அவரோட மனைவிக்கும் நல்லதில்லை.  கூட சூரியன் சேர்ந்தது அதைவிட மொக்கை. சுக்கிரனை எரிக்கப்பட்டுட்டாரு.

இப்பம் புததசையில சுக்கிர புக்தி தேன் நடக்குது (  20/Aug/2010  => 20/Jun/2013 ) இந்த காலகட்டத்துல சுக்கிரனோட பலன் மருந்துக்கு கூட நடக்காது. சூரியன் தேன் 7ல இருந்து மனைவிக்கும்,  லக்னத்தை  பார்த்து ஜாதகருக்கும் தூக்கமில்லாம செய்வாரு. கை கால் வலி, முதுகு வலிதான் மிச்சமாகும். வேணம்னா ஒன்னு சொல்லலாம் இவர் மேல மனைவியோட கமாண்ட் அதிகமா இருக்கும். ஆனால் இதனால மனைவிக்கு நோய்கள் தான் வருமே தவிர இவரு திருந்தவும் போறதுல்லை. வருந்தவும் போறதில்லை.

அடுத்துபாருங்க பாக்ய பாவத்துல சந்திரன் நிக்காரு. ஒரு ஜாதகனோட நீண்ட கால திட்டங்களை எல்லாம் காட்டறது 9 ஆமிடம் . அங்கே ரெண்டே கால் நாளைக்கொரு தாட்டி ராசி மாறிர்ர சந்திரன் நிக்கிறாரு. இவரோட ப்ளான் ரெண்டே கால் நாளைக்கொருதாட்டி கம்ப்ளீட்டா மாறிரும். ஒரு ரெண்டே கால் வருசம் ஏறுமுகம்னா அடுத்த ரெண்டேகால்லயே இறங்கு முகம் ஆரம்பமாயிரும்.

மேலும் இவருக்கு ரோகாதிபத்யம் வேற கிடைச்சிருக்கு. இதனால எதிரி நண்பனாதல் - நண்பன் எதிரியாதல் எல்லாம் இவர் லைஃப்ல சகஜமப்பா. தேர்தலுக்கப்பாறம் தாத்தா கால்ல விழுந்தாலும் நான் ஆச்சரிய படமாட்டேன். அட கட்சியை கலைச்சுட்டா கூட ஆச்சரியப்படமாட்டேன்னா பார்த்துக்கங்களேன்.

சிரஞ்சீவியாச்சும் பரவால்லை . நாய் பிடிக்கிற  வண்டிய  முனிசிபாலிட்டில நிறுத்தின மாதிரி  நிறுத்தினாரு. நம்மாளு அதுகூட செய்யமாட்டாரு. பாதிவழில இறக்கி "வண்டி இதுக்கு மேல போகாதுன்னிருவாரு"

பத்துல செவ்வாய் நிற்கிறார். இவர் 3,10 க்கு அதிபதி.  3 ன்னா தைரியம் , பத்துன்னா தொழில் . பேசாம போலீஸ் வேஷம், மிலிட்டரி வேஷம் போட்டுக்கிட்டு காலத்தை கழிச்சிருக்கலாம். அந்த சான்ஸும் போச்சு.
தேர்தலுக்கப்பாறம் அம்மா கழட்டிவிட்டா " நேக்கு யாரை தெரியும்? நான் எங்கே போவேன்"னு போயஸ் கார்டன் வாசல்ல டயலாக் பேசவேண்டியதுதான்.

தேர்தலுக்குள்ள, முடிவு தெரியறதுக்குள்ள அம்மாவோட மன நிலை நிமிச  நிமிசத்துக்கு மாறுமுங்கோ.  விரயத்துல உள்ள ராகுதான் தெலுங்கரான இவரை உசுப்பேத்தி இப்படி விரயம் பண்ணிக்கிட்டிருக்காருபோல.

ராசிப்படி பார்த்தா ஏழரை ஆரம்பம். அடுத்து வரப்போறது ஜன்ம சனி. இதனோட எஃபெக்ட் ஜூன் 12 முதலே ஆரம்பம். வாழ்க்கையே தேங்கிப்போன ட்ரெய்னேஜ் ஆயிருமோ என்னமோ?

மே 8 வரை குரு  6 ல . அரசியலுக்கு குரு தான் ரெம்ப முக்கியம். மே 16 முதல் ராகு கேது 2/8 க்கு வராய்ங்க. அப்படியே தனிமைப்பட்டு போயிருவாரு.

இதான் நம்ம அனாலிசிஸ். நமக்கு விசயகாந்துக்கும் வரப்பு தகராறு - வாய்க்கா தகராறு  ஏதும் கிடையாதுங்கண்ணா. இன்னம் சொல்லப்போனா ரஜினி ரசிகனா இருந்து அவரால ஏமாத்தப்பட்ட
( வருவேன்..ஆனா வரமாட்டேன்)நமக்கு  வந்தே உட்ட விசயகாந்த் மேல ஒரு மதிப்பு கூட உண்டுங்கண்ணா.

ஆனா ஜாதகம்னு பார்த்தா விசயமே இல்லிங்கண்ணா. நான் என்னத்தை போட்டு நிரப்பி சொல்ல?