Friday, April 29, 2011

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திடீர் ராஜினாமா - திகீர் பின்னணி

நமக்கு மீடியா மேலயோ , மீடியா ஒலி/ஒளி பரப்பற செய்திகள் மேலயோ எந்தவிதமான ஆர்வமோ - அக்கறையோ கிடையாது. ஆனா ஒன்னு இந்த செய்திகள் எல்லாம் எடிட்டர் டேபிள்ள குப்பையா விழுந்துகிடக்கிற ஃபிலிம்  மாதிரி.

இதுல எதை எடுக்கனும் - எதை தள்ளிடனும் - எதை எதுக்கு முன்னே - எதுக்கு பின்னே ஒட்டனும் -எதை வெட்டனும்னு தெரிஞ்சிக்கிட்டா ஓரளவு யூஸ் ஃபுல் தேன். நமக்கு அந்த கப்பாசிட்டி இருக்குதுங்கற நினைப்புல அப்பப்போ செய்திகள் பார்க்கிறது வழக்கம்.

அப்படி அசால்ட்டா இன்னைக்கு மதியம் பார்த்துக்கிட்டிருந்தப்பதேன் "  இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா"ங்கற செய்தி நம்ம கண்ல பட்டுது.

மேம்போக்கா பார்த்தா இது ஒரு வழக்கமான சம்பவமா தோணும். இதில் உள்ள திகீர் பின்னணியை தெரிஞ்சுக்கனும்னா உங்களுக்கு சரித்திரம் தெரிஞ்சிருக்கனும்.

அமெரிக்க தூதரகம்னா அதனோட முழு முதல் வேலை உளவு சொல்றதுதான். (அமெரிக்க தூதர்கள் தம் தாய் நாட்டுக்கு அனுப்பினதா  விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள்களோட விவரம் ஞா இருக்கில்லை?) உளவுன்னா வெறும் படைபலம் இத்யாதி மட்டுமில்லை.

அமெரிக்கா போட்ட கோட்டை குறிப்பிட்ட நாடு தாண்டாம இருக்கா? அமெரிக்க நலனுக்கு எதிரா எதுனா காரியம் நடக்குதா? - அமெரிக்க எதிரிகளோட செயல்பாடுகள் என்ன?  அமெரிக்கா தடை செய்த  அமைப்புகளோட அரசாங்கம்/ ஆளுங்கட்சி /எதிர்கட்சிகள்/இதர அமைப்புகள் எதுனா தொடர்பு வச்சிருக்கா?
இந்த மாதிரி மேட்டரை எல்லாம் தூதர்கள் அனுப்பிக்கிட்டே இருக்கனும்.

இதான் அமெரிக்க தூதர்களோட அஜெண்டா. இதுல இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எங்கயோ கோட்டைவிட்டுட்டாப்ல இருக்கேன்னு கெஸ் பண்ணா வெரி குட். நெஜமாலுமே அதான் நடந்தாப்ல இருக்கு.லேட்டஸ்டா வெளி வந்த  தமிழக அரசியல் பத்திரிக்கையில  இதுக்கான க்ளூ இருக்கு. -அது என்னங்கறதை ஓப்பன் பண்ற வரை சின்ன சஸ்பென்ஸ். ஒரு சில மாண்டேஜ் ஷாட்ஸை பாருங்க.


* மும்பை தாஜ் ஹோட்டல் சம்பவம்

* சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகளின் பட்டியல் வெளியீடு

* பாக் வழக்கமான சால்ஜாப்புகள்

* இந்தியா ,  இந்த மேட்டரை பைசல் பண்றவரை ஒன்னோட பேச்சே இல்லைனு பாக்கிஸ்தானுக்கு    சொல்லிருது.

                                                             இங்கே ஷாட் கட் பண்ணா

இந்தோ -பாக் கிரிக்கெட் போட்டியை பார்க்க பாக் ஜனாதிபதி வராரு. இடையில என்ன நடந்தது? தமிழக அரசியல் ஸ்டேட்மென்ட் படி பார்த்தா ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கு. இதுல அமெரிக்காவால்
" ஆய் பையனு " டிக்ளேர் செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ காரவுகளும் இருந்திருக்காய்ங்க.

இந்த மேட்டரை ஸ்மெல் பண்ணி - ஒடனே கேபிள் கொடுக்காம என்னய்யா புடுங்கிக்கிட்டிருந்தேன்னுட்டு தூதரை காச்சியெடுத்து ராஜினாமா செய்யச்சொல்லியிருக்க வாய்ப்பிருக்கா இல்லியா?

சிம்பிள் லாஜிக்.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..