எதுக்குன்னு கேப்பிங்க! சொல்றேன். ஜோதிட ரீதியிலான காரண காரியங்களை எதிர்பார்க்கிறவுக இங்கே அழுத்தி ரத்த அழுத்தத்தை கொஞ்சம் ஏத்திக்கங்க.
இப்ப ப்ராக்டிக்கல் மேட்டருக்கு வரேன். நான் சொல்லப்போற மேட்டரோட சாரம் மத்திய அரசு கவிழ்தல் - சந்தடி சாக்குல பாக்,சீன நேரடி தாக்குதல் அ தாஜ் ஹோட்டல் பாணியில உள்ளடி - மக்கள் அல்லாட்டம்.இதுக்கான கிரவுண்ட் இப்பமே ரெடியாயிட்டிருக்கிறதை கோடி காட்ட விரும்பறேன். 1.தமிழகம்:
சனம் தமிழ் நாட்ல திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் எள்ளும் தண்ணியும் இறைக்கப்போறது நிச்சயம். ( இதை நாம கூட்டுக்கும் முந்தியே சொன்னது தான் சோதிடத்துக்கு பெருமை)
தாத்தா மூக்குக்கு ஏதோ தப்பான வாசனை தெரிஞ்சுருச்சு அதாவது காங்கிரஸுக்கு வாய்தா பூட போகுதுன்னா? அல்லது நமக்கு ஆப்பே காங்கிரஸுதான்னுட்டா தெரியலை. அதனாலதான் சேஃப்டிக்கு இல கணேசனுக்கு வாழ்த்து - பா.ஜ.க 234 லயும் போட்டி (எதிர்ப்பு ஓட்டுக்கள் ஜெ வுக்கு போகாம இருக்க) கலைஞர் டிவில பா.ஜ.க ப்ரஸ் மீட்டுக்கு கூட கவரேஜ்.
மானிலத்துல ஆட்சி இருந்தப்பயே ஸ்பெக்ட்ரம் ஜியை வச்சுக்கிட்டு காங்கிரஸ் பண்ண அலப்பறைக்கு தாத்தாவுக்கு டங்குவார் அறுந்துருச்சு. ஆட்சியும் போன பிற்பாடு நிலைமை நாறிடும். அதனால தாத்தாவும் தன் பங்குக்கு கம்யூனிஸ்டு..அந்த இஸ்டு இந்த இஸ்டுன்னு பிடிச்சு மத்தியில ஆட்சியை கவிழ்க்க களத்துல இறங்கிருவாரு.
2.ஆந்திரம்;
ஒய்.எஸ்.ஆரோட மகன் ஜகனை இடைத்தேர்தல்ல எப்படியாவது மொக்கையாக்கனும்னு ஒட்டு மொத்த அரசு இயந்திரமே கங்கணம் கட்டி வேலை செய்யுது. இவிக நோக்கம் ஜகனை தோற்கடிக்கறதில்லை. அது முடியாதுன்னு அவிகளுக்கே தெரியும். முடிஞ்ச மட்டும் மெஜாரிட்டிய குறைக்கறது. ஆனால் இதெல்லாம் கருவாடு மீனாகற கதை . ஜகன் எப்படியும் டாப் மெஜாரிட்டியோட ஜெயிக்கப்போறது நிச்சயம். இந்த இடைத்தேர்தலோட ரிசல்ட் வந்த 24 மணி நேரத்துல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜகன் பின்னாடி க்யூ கட்டி நிற்பாய்ங்க. ஆட்சி ஃபணால்.
ஜகனோட டார்கெட் கிரணோ ,மானில கட்சியோ அல்ல. சோனியாதான். எம்.பிக்களும் ஜகன் பக்கம் இழுக்கப்படுவது கியாரண்டி. ஜகனுக்கு சரத்பவாரோட நல்ல டெர்ம்ஸ் இருக்கு. அவரும் சந்தர்ப்பத்துக்காகத்தேன் காத்திருக்காரு. சமீபத்துல அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு முதல் பலியா இவரை போட்டது ஞா இருக்கலாம். சோனியா அம்மா உத்தமி பவார் பட்டும் பஜாரின்னு உலகத்துக்கு காட்டற இந்த பிட் எல்லாம் பவாருக்கு தெரியாதா என்ன?
மத்தியில ஆட்சி ஃபணால் ஆகறதும், மன்மோகனார் சுதந்திரம் பெறுவதும் நிச்சயம் (சனி விட்டுருமில்லை- நான் சிம்மராசிக்கு சொன்னேன் தலை) இதெல்லாம் ஒரு ஷெட்யூல் படி நடக்கப்போற மேட்டர்.
3.ஸ்பெக்ட்ரம் ஜி:
ஆட்சி கவிழும் காட்சி ஒரு புறம்னா கோடிகளை கொட்டிக்கொடுத்து ( டைரக்ட் + இன்டைரக்ட்) ஸ்பெக்ட்ரம் கற்றைகளை வாங்கின கம்பெனிக்காரவுக கோர்ட்டுல குடியிருக்க விரும்புவாய்ங்களா?
கிருஷ்ணா கோதாவரி பேசின்ல ரிலையன்ஸுக்கு கிடைச்ச எரிவாயு மேட்டர்ல அவிக மேடம் கிட்டே டைரக்ட் டீலிங்ல இருந்தாப்ல இருக்கு. ரெட்டிகாருவுக்கு மேட்டர் தெரியாம மூக்கை நுழைச்சதுக்குத்தேன் ஒய்.எஸ்.ஆர் கதி அதோகதியாச்சு.
அதாவது ஒரு கார்ப்போரேட் அமைப்பு ஏதோ ஒரு பவர் சென்டருக்கு "அழுத்தின " பிறகு வேலை தடை படறதை விரும்பறதே இல்லை. கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிக்க அவிக என்ன டெப்பாசிட்டா பண்ணாய்ங்க.
ஒய்.எஸ்.ஆர் டிமாண்டும் பண்ணலை - கையையும் நீட்டலை - யாருக்கே அழுத்திட்ட மேட்டர் தெரியாம கட்டைய போட்டாரு. கட்டையில போக வச்சுட்டாய்ங்க.
ஸ்பெக்ட்ரம்ஜில டிமாண்ட் பண்ணியிருக்காய்ங்க -கைய நீட்டியிருக்காய்ங்க - அழுத்தவேண்டியவுகளுக்கு அழுத்தியிருக்காய்ங்க - இப்ப கோர்ட்டு பேரை சொல்லி கைய நீட்டினவுகளே கட்டைய போட்டா என்ன ஆகும்? என்ன ஆகும்ணேன்?
4.சீனா :
இலங்கையில புனர் நிர்மாண வேலைக்குன்னுட்டு சிறைக்கைதிகள்ங்கற பேர்ல தண்டு இறக்கியாச்சுன்னு மீடியா அலறுது. இதுவுமல்லாது பாக் பிடிச்சு வச்சிருக்கிற காஷ்மீர் பகுதிகள்ளயும் தண்டு இறங்கியிருக்குன்னு செய்திகள் வருது.
கூட்டிக்கழிச்சு பாருங்க. லோக்கல்லயா ஆட்சி ஃபணால் - ஸ்பெக்ட்ரம்ஜி மேட்டர்ல ரெட்டிகாரு கணக்கா ஆராச்சும் கட்டையில அனுப்பப்பட்டா - பை மிஸ்டேக் அது ஒரு விவிஐபியா இருந்தா நாடுமுழுக்க குழப்பம்.. குழப்பம்.. குழப்பம் ..
நான் லோக்கல்லயா எதிரி பவர்ஃபுல்லா இருக்கான். நம்ம எதிரிகளோட நெருக்கமா இருக்கான். நமக்கு கிட்டக்க இருக்கான். எப்படியா கொத்த மாங்கா மண்டையனுக்கும் ஒரு கல்லு விட்டுப்பார்ப்போமேன்னு தோணத்தானே செய்யும்.
அது ஏதோ நேர வந்தா பரவால்லை. தாஜ் ஹோட்டல் ரேஞ்சுல வந்தா ? அதுவும் ஒரே நேரத்துல நாலஞ்சு சிட்டியை குறி வச்சா?
அதுலயும் இத்தீனி நாளு நானும் மனசை தேத்திக்கிட்டுதான் இருந்தேன். லேட்டஸ்டா சீனம் பேச்சு வார்த்தை அது இதுன்னு ஆரம்பிச்சிருக்கிறதா நியூஸை பார்த்து டர்ராயிட்டன். அவிக ஸ்டைலே ஒரு கையால கை குலுக்கிக்கிட்டே , இன்னொரு கையால ...........பிடிச்சு நசுக்கிர்ரதுதேன்.
"இந்தோ சீனா பாய் பாய்" கோஷம் ஞா இருக்கா.. இன்னம் நிறைய மேட்டர் இருக்குங்கண்ணா கூட்டிக்கழிச்சு பார்த்தா அச்சாணியமா இருக்கு. இதோட நான் ஆட்டத்துக்கு அம்பேல்.. நீங்க உடுங்க ஜூட்..