Friday, April 1, 2011
விசயமே இல்லாத விசயகாந்த் ஜாதகம்
எச்சரிக்கை;
நூலை போல சேலைம்பாய்ங்க. அப்படி பர்த் டீட்டெயில்ஸை வச்சுத்தேன் ஜாதகம். ஏதோ நம்மாளு ஒருத்தரு கும்ப லக்னம்னு கொடுத்த க்ளூவை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதனோட அடிப்படையில போடற பதிவு இது.
இருந்தாலும் நம்ம ஸ்டைல்ல அனுபவத்தையும் - கிரகஸ்திதியையும் மொதல்ல க்ராஸ் செக் பண்ணிருவம். ஐ மீன் இந்த ஜாதகத்துல விசயகாந்த் தெரியறாரா பார்த்துருவம்.
லக்னாதிபதியே எட்டுல கீறாரு ( இதுக்கு எங்க ஊரு சோசியர் கொடுத்த பலன் என்ன தெரியுமா தானும் கெட்டு ஊரையும் கெடுத்துரும்)
லக்னம் வேறயா இருந்திருந்து , அதிபதி சனியா இல்லாம இருந்திருந்தா எட்டுல நின்னதுக்கு .. மாணாம் வாத்யாரே. ( எட்டுன்னா மரணம் - லக்னாதிபதின்னா ஜாதகர்ங்கற க்ளூவ மட்டும் கொடுத்துட்டு கழண்டுக்கறேன்)
பப்ளிக்ல வேட்பாளரை மொக்கறது, கொடியை வச்சு வில்லங்கம் பண்றதுக்கெல்லாம் காரணம்னு இன்னொரு மேட்டரை சொல்றாய்ங்க. அதெல்லாம் தேவையே இல்லாம தனக்கு தான் ஆப்பு வச்சுக்கறதுல நெம்பர் ஒன் இந்த ஜாதகர். சுய புத்தியும் இருக்காது . சொல் புத்தியும் இருக்காது.
மேலும் சனின்னா ஆசனம் (பைல்ஸ் இருக்குமோ?) நரம்பு ( நரம்பு கோளாறோ) .
2/11 க்கு அதிபதி போய் 3 ல மாட்டினாரு. ரிஸ்க் எல்லாம் ரஸ்கு சாப்ட மாதிரின்னுட்டு சம்பாதிச்ச காசையெல்லாம் செல்ஃப் ஷேவ் பண்ணி தொலைச்சுக்கட்டிருவாருங்கோ. ( கூடவே குளிகன் மாந்தியும் இருக்காய்ங்க - அப்போ நிலைமை எவ்ள தீவிரமா இருக்கும்னு பாருங்க )
5/8 க்கு அதிபதியான புதன் போய் ஆறுல நின்னாரு கூட கேது சேர்ந்தாரு. அஞ்சுதான் நேம் அண்ட் ஃபேமை,வாரிசுகளை, அதிர்ஷ்டத்தை காட்டற இடம் . இவருக்கு பேருனு வந்தா " மொக்கறதாலயோ" "ரேங்கறதாலயோ தான்" வரும். இவரோட சிந்தனையே நெகட்டிவா இருக்கும். ஆரை ரேங்கலாம்ங்கற மாதிரி. இவரை பொருத்தவரை இவரோட வாழ்க்கையே இவர் கட்டின கல்யாண மண்டபம் மாதிரிதான். நல்லாவே இருக்கும். ஆனா இருக்காது. படக்குனு புல்டோசர் வந்து குப்பையாக்கிட்டு போயிரும். இதே பலன் தான் இவரோட வாரிசுகளுக்கும்.
இந்த கெட்டதுல ஒரு நல்லது இருக்கு. அது என்னடான்னா அஷ்டமாதிபத்யம் வாங்கின புதன் 6 ல நின்னது. இதனால கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும்.
இப்பம் நடக்கிற தசையே புத தசை தான் . இதனோட பலன் என்ன? கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும்.
எதிரி ஒழியனும்னு நினைச்சா கடன் தீராது. கடன் தீரனும்னு நினைச்சா எதிரி ஒழியமாட்டான்.
ஏழாவது இடத்தை பாருங்க. இங்கன சுக்கிரன் நின்னாரு. 7 ல சுக்கிரன் நின்னாலே நாஸ்தி. இதுல அவரு சூரியனோட வேற சேர்ந்திருக்காரு. மனைவியால யோகம்னு சொல்றது தவறு. 7 ல சுக்கிரன் நிக்கிறது ஜாதகரை போலவே அவரோட மனைவிக்கும் நல்லதில்லை. கூட சூரியன் சேர்ந்தது அதைவிட மொக்கை. சுக்கிரனை எரிக்கப்பட்டுட்டாரு.
இப்பம் புததசையில சுக்கிர புக்தி தேன் நடக்குது ( 20/Aug/2010 => 20/Jun/2013 ) இந்த காலகட்டத்துல சுக்கிரனோட பலன் மருந்துக்கு கூட நடக்காது. சூரியன் தேன் 7ல இருந்து மனைவிக்கும், லக்னத்தை பார்த்து ஜாதகருக்கும் தூக்கமில்லாம செய்வாரு. கை கால் வலி, முதுகு வலிதான் மிச்சமாகும். வேணம்னா ஒன்னு சொல்லலாம் இவர் மேல மனைவியோட கமாண்ட் அதிகமா இருக்கும். ஆனால் இதனால மனைவிக்கு நோய்கள் தான் வருமே தவிர இவரு திருந்தவும் போறதுல்லை. வருந்தவும் போறதில்லை.
அடுத்துபாருங்க பாக்ய பாவத்துல சந்திரன் நிக்காரு. ஒரு ஜாதகனோட நீண்ட கால திட்டங்களை எல்லாம் காட்டறது 9 ஆமிடம் . அங்கே ரெண்டே கால் நாளைக்கொரு தாட்டி ராசி மாறிர்ர சந்திரன் நிக்கிறாரு. இவரோட ப்ளான் ரெண்டே கால் நாளைக்கொருதாட்டி கம்ப்ளீட்டா மாறிரும். ஒரு ரெண்டே கால் வருசம் ஏறுமுகம்னா அடுத்த ரெண்டேகால்லயே இறங்கு முகம் ஆரம்பமாயிரும்.
மேலும் இவருக்கு ரோகாதிபத்யம் வேற கிடைச்சிருக்கு. இதனால எதிரி நண்பனாதல் - நண்பன் எதிரியாதல் எல்லாம் இவர் லைஃப்ல சகஜமப்பா. தேர்தலுக்கப்பாறம் தாத்தா கால்ல விழுந்தாலும் நான் ஆச்சரிய படமாட்டேன். அட கட்சியை கலைச்சுட்டா கூட ஆச்சரியப்படமாட்டேன்னா பார்த்துக்கங்களேன்.
சிரஞ்சீவியாச்சும் பரவால்லை . நாய் பிடிக்கிற வண்டிய முனிசிபாலிட்டில நிறுத்தின மாதிரி நிறுத்தினாரு. நம்மாளு அதுகூட செய்யமாட்டாரு. பாதிவழில இறக்கி "வண்டி இதுக்கு மேல போகாதுன்னிருவாரு"
பத்துல செவ்வாய் நிற்கிறார். இவர் 3,10 க்கு அதிபதி. 3 ன்னா தைரியம் , பத்துன்னா தொழில் . பேசாம போலீஸ் வேஷம், மிலிட்டரி வேஷம் போட்டுக்கிட்டு காலத்தை கழிச்சிருக்கலாம். அந்த சான்ஸும் போச்சு.
தேர்தலுக்கப்பாறம் அம்மா கழட்டிவிட்டா " நேக்கு யாரை தெரியும்? நான் எங்கே போவேன்"னு போயஸ் கார்டன் வாசல்ல டயலாக் பேசவேண்டியதுதான்.
தேர்தலுக்குள்ள, முடிவு தெரியறதுக்குள்ள அம்மாவோட மன நிலை நிமிச நிமிசத்துக்கு மாறுமுங்கோ. விரயத்துல உள்ள ராகுதான் தெலுங்கரான இவரை உசுப்பேத்தி இப்படி விரயம் பண்ணிக்கிட்டிருக்காருபோல.
ராசிப்படி பார்த்தா ஏழரை ஆரம்பம். அடுத்து வரப்போறது ஜன்ம சனி. இதனோட எஃபெக்ட் ஜூன் 12 முதலே ஆரம்பம். வாழ்க்கையே தேங்கிப்போன ட்ரெய்னேஜ் ஆயிருமோ என்னமோ?
மே 8 வரை குரு 6 ல . அரசியலுக்கு குரு தான் ரெம்ப முக்கியம். மே 16 முதல் ராகு கேது 2/8 க்கு வராய்ங்க. அப்படியே தனிமைப்பட்டு போயிருவாரு.
இதான் நம்ம அனாலிசிஸ். நமக்கு விசயகாந்துக்கும் வரப்பு தகராறு - வாய்க்கா தகராறு ஏதும் கிடையாதுங்கண்ணா. இன்னம் சொல்லப்போனா ரஜினி ரசிகனா இருந்து அவரால ஏமாத்தப்பட்ட
( வருவேன்..ஆனா வரமாட்டேன்)நமக்கு வந்தே உட்ட விசயகாந்த் மேல ஒரு மதிப்பு கூட உண்டுங்கண்ணா.
ஆனா ஜாதகம்னு பார்த்தா விசயமே இல்லிங்கண்ணா. நான் என்னத்தை போட்டு நிரப்பி சொல்ல?