மனம் என்றொரு வெங்காயம் - இரண்டு
காதல் பிறக்க சரியான இடம்... இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன என்றும் பார்த்தோம். கடற்கரை, கல்யாண மண்டபம், பக்கத்துக்கு வீடு, மொட்டை மாடி, நிறுவனத்தில் இருக்கிற லிப்ட், சாலையில் வேகமாக இரு சக்கர வாகனம் நாம் மேலாக இடித்தபிறகு... பேருந்து, இப்படி நிறைய இருக்கிறது. இடம் முக்கியமானால் , அப்படி ஒரு இடம் இருந்தால் எல்லோருமே அங்கே போய் நின்று விடுவோம். (இப்பொழுது கூட)
மனத்தில் இருக்கிற காதல் முக்கியம். கடற்கரைக்கு உங்கள் மனைவியை அழைத்துசெல்லுங்கள்... புதிதாக காதலிக்க தோன்றும். வானில் முழு நிலவை பார்த்துக்கொண்டே இருங்கள்... காதலின் புது விஷயங்கள் தோன்றும். நீங்கள் பார்க்கும் அதே வேளையில் எத்தனை ஆயிரம் காதலர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ணங்களை வான் நிலவு உங்களிடம் பாய்ச்சலாம் அல்லவா?
அடுத்த முறை காதலை சொல்லும் பொது சரியான நபரை மட்டுமல்ல, இடத்தையும் தேர்ந்து எடுங்கள் .
நாம் சுவாசிக்கிற காற்று போல, எங்கெங்கும் மனதின் எண்ண அலைகள் மிதக்கின்றன. நமக்குள் ஏற்படுகிற வெற்று இடத்தில் தானாகவே வந்து அமர்கின்றது. தனக்குள்ளே பிறந்த ஓன்று வெளிச்சென்று மீண்டும் நமக்குள்ளே வலிமையோடு வந்து அமரும்.
கீழே கிடந்த காசை ஏன்டா எடுத்தேன் என்று எப்போதாவது நினைத்து இருகிறீர்களா?
கண்டிப்பா யாராவது வந்து காப்பாதுவங்கன்னு நினைச்சேன் அதே நடந்தது....
நல்லவருக்கு நல்லவன் உதவுவதும், கெட்டவனுக்கு கேட்டவன் உதவுவதும் இதன் அடிப்படைதான். அந்த அடிப்படை நீங்கள்தான். வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்... உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்... யாரேனும் ஒருவரோடு பேசிகொண்டிருக்கையில் முதல் 10 நிமிடம் பொது விசயமாகவே பேசப்படும், அப்படியே காலம் கடக்க ஒரே விஷயத்தை இருவருமே பேசிக்கொண்டிருப்பதை காண முடியும்.
அதோடு நீண்ட பேச்சின் உடே சில போது விஷயங்கள், பேசிக்கொண்டிருக்கிற அந்த இடத்தின் பொதுவான தன்மை கலந்த விஷயங்கள் வரும். சில வெட்டு குத்துக்கள் அதே இடங்களில் நடப்பதை உணர முடியும். சில நட்பு அதே இடங்களில் உருவாக கூடும். சில காதல் திடீரென அந்த இடத்தில் மட்டும் பிறக்க கூடும். சில கல்யாண நடவடிக்கைகள் அங்கே முடிவு செய்யப்படும்.
சில சேவல் பண்ணைகளில் ஒரே நேரத்தில் உற்சாக விழாவும், பெண்கள் ஹாஸ்டல்களில் ஒரு சேர விலக்கம் ஆவதும் இப்படித்தான். சில எதிர்பாரத விஷயங்கள் நடக்கும் போது " எப்படி இது தோணிச்சுன்னு தெரியல்ல, எல்லாம் சுமுகமா நடந்தது" என்பதெல்லாம் நம்மை சுற்றி இருக்கிற எண்ணங்கள் தன் இயக்கத்தை உணர வைக்கின்றன.
மனிதனின் இயக்கம் மனம், மனதின் இயக்கம் எண்ணம், எண்ணத்தின் இயக்கம் மனிதனின் செயல்பாடு. இப்பொழுது ஒரு வட்டம் வந்து விட்டது.
ஒவ்வொரு மனிதனுடைய எண்ணம், சொல், செயல் எல்லாமே மனதிலே அடக்கம். மனமே மனிதனின் அகமும் புறமும். அவனின் தோற்றம் மட்டுமே அவனை சொல்லுவதில்லை. ஒருவனை பற்றி, அவனை உரித்து பார்க்கவேண்டுமானால் அவனின் சில சொல், செயல் கவனித்தால் போதும்.
ஆக, நாம் சரியான அலை வரிசையில் இயங்க வேண்டுமானால் நாம், நம்மை செம்மை படுத்தியாக வேண்டும்.
ரொம்ப சீரிஸ் பேசிட்டோம்... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவோம்...
மருத்துவமனையில்
செவிலி: ஒரு அரை மணி நேரம் தாமதமா வந்திருந்தா நோயாளியை பொழைக்க வச்சிருக்கலாம்...
ஒருவர்: எப்படி சொல்றிங்க?
செவிலி : டாக்டர் வீட்டுக்கு போயிருப்பார்
கடற்கரையில்
காதலன்: டியர்... எனக்கு ஆச்சரியமா இருக்கு, எனக்கு வேலை இல்லன்னு தெரிஞ்சும் எப்படி உங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க?
காதலி: பையன் என்ன பன்றாணு கேட்டாங்க... வயித்தில எட்டி ஒதைக்கிரான்னு சொன்னேன்
:)