Tuesday, October 26, 2010

சோனியா & கோ மீது மைக்ரோ ஃபைனான்ஸ் சேறு

மகளிரை பலி கொண்ட மைக்ரோ      ஃபைனான்ஸ் அழிச்சாட்டியம்
மத்திய அரசு  தலையிடாது - மத்திய நிதி மந்திரி அறிவிப்பு
ஏற்கெனவே டிவிட்டர்ல அரை குறையா சொன்ன விஷயம் தான். மைக்ரோ ஃபைனான்ஸுங்கற பேர்ல தாய்குலத்தை ரீடெய்லாவும், ஹோல்சேலாவும் கடன் காரிகளாக்கி தூக்கு போட்டு சாக ,ஊரை விட்டு ஓட ,ஏன் ஊர் மேல போகக்கூட வச்சிட்டானுவ.இது கடந்த வாரம் பத்திக்கிச்சு.

எங்க ஊரு தாத்தா ரோசய்யா இந்த பேப்பர் காரவுக ரவுச பொறுக்க முடியாம தகிரியமா ஆர்டினென்ஸ் எல்லாம் கொண்டுவந்தாரு. (கட்டாய வசூல் கூடாது அது இதுன்னு) ஏதோ கொஞ்சம் போல லாந்தர் ஜோதி கணக்கா  டப்பு டப்புனு அடிச்சிட்டிருந்த நம்பிக்கையை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி உஃபுனு ஊதி அணைச்சுட்டாரு. இந்த மேட்டர்ல மத்திய அரசு தலையிடாது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களே விதிகளை உருவாக்கி சுயக்கட்டுப்பாடோட செயல்படனும்னு சொல்ட்டாரு. ( நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்னு சொல்வாய்ங்களே ஞா வருதா)

போறாததுக்கு தாத்தா கொண்டு வந்த உளுவுளா காட்டி ஆர்டினென்ஸுல கடுமையான நிபந்தனைகள் உள்ளதாவும் அதையெல்லாம் நீக்கனும்னு சொல்லியிருக்காரு.உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னா இதான் போலும்.

அது சரி பாஸ் இந்த பிஸ்கோத்து மேட்டர்ல் மத்திய நிதிமந்திரியே தலையிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களோட நாடு தழுவிய நெட் ஒர்க்கின் தலைவருக்கு சோனியா,ராகுலுக்கும் என்ன சம்பந்தம்னு ஃபோட்டோவோட பார்ப்போம்.


அதுக்கு மின்னாடி இந்த மைக்ரோ ஃபைனான்ஸுங்கற விஷ வலைய  பத்தி சின்னதா அறிமுகம். மகளிர் சுய உதவிக்குழுன்னு அமைச்சாய்ங்க. தெரியும்ல. பெண்கள் ஒரு க்ரூப்பா சேர வங்கி க்ரூப்புக்கு கடன் தரும் ( மந்திரி சபை மாதிரி கூட்டு பொறுப்புங்கண்ணா. க்ரூப்ல ஒரு மெம்பர் திவாலாயிட்டாலோ, செத்துப்போனாலோ, காணாம போயிட்டாலோ வங்கிக்கு அதோட லின்க் கிடையாது. மத்த மெம்பர்ஸ் எல்லாம் சேர்ந்து வாங்கின கடனை கட்டித்தான் ஆகனும்.

இந்த ஃபார்முலா வங்கிகளோட பாதுகாப்புக்கு செமர்த்தியா ஒர்க் அவுட் ஆகவே தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் கஜானாவை திறந்து விட்டுது. க்ரூப் மெம்பர் செத்தா எவளோ செத்தா எனக்கின்னா போச்சுனு பல் குத்திட்டு இருக்கலாம்ல.

இதை பார்த்த சில வட்டி வியாபாரிங்க மைக்ரோ ஃபைனான்ஸுனு ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பதிவு பண்ண வேண்டியது. அதும் பேர்ல கடனை அள்ளிவிட வேண்டியது.   என்ட் ரன்ஸ் ஃபீஸு, சப்ஸ்க்ரிப்ஷன், சங்கம் பதிவு,  வங்கி கணக்கு துவங்க இப்படி பல செலவுகளை மெம்பர்ஸ் தலைமேல போட்டு கடனும் தருவாய்ங்க  (வட்டியெல்லாம் வெண்ணை தடவி விட்டாப்ல  தீட்டிப்புடுவாய்ங்க)

இன்னைக்கு கவர்மென்டு கன்செர்ன்னாலே மோசம்பா. பேசாம ப்ரைவைட்டைஸ் பண்ணிரனும்னு புலம்பறாய்ங்களே அவிகளுக்கு அசலான மேட்டர் தெரியாது. ப்ரைவேட் கன்செர்ன் வந்தா அவனோட நோக்கம் ஜஸ்ட் லாபம்தேன்.

நான் கூட சித்தூர் வேலூர் பஸ்ல செக்கிங்கா செய்திருக்கேன். தினசரி பத்தா பத்து ரூபா. சம்பளம் ரூ 200 (கிம்பளம் பெருசாவரும் அது வேற சங்கதி) ஆனால் அரசு போக்குவரத்து கழகத்துல நடத்துனர்,ஓட்டுனர்க்கு இன்னா சம்பளம்னு பார்க்க மாட்டாய்ங்க. கடேசி சிங்கிள்ளே  ஒரு பல் போன பாட்டி, காலொடிஞ்ச ஆடு, மூக்குல ஒழுகுற குழந்தை மட்டும் ஏறினாலும் அரசு பஸ் போயே ஆகனும்.ப்ரைவேட்டுன்னா சிங்கிள் கேன்சல் நடந்து போன்னிருவான். நிற்க..


மேற்சொன்ன மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகளொட கிளைகளை  தெருவுக்கு தெரு ஆரம்பிச்சுட்டாய்ங்க.  இதுக்கெல்லாம் ஒரு நெட் ஒர்க். அதனோட அதிபதி நம்ம இளவரசரோட நெருங்கிய சினேகிதர். மேல் விவரம் மஸ்தா கீது.அதையும் தந்திருக்கேன். தொடர்ந்து படிங்க.


நம்முது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. ஏழை குடும்பங்கள்ள வேணம்னா "இன்னா சொம்மா பேசினிக்கினே போற .. நீ டைஃபாய்ட் வந்து நட்டுக்கினி கடந்தியே அப்போ  நானு நாலு ஊட்ல பத்து பாத்திரம் தேச்சு கொண்டாந்த  துட்ல  வவுத்த கழுவனதெல்லாம் மறந்து போச்சானு" கேட்பா

மிடில் க்ளாஸுன்னாலே ரெண்டும் கெட்டான்.இதுல லோயர் மிடில் கிளாஸ் சனத்தோட நிலைம எப்படியிருக்கும்னு ரோசிங்க.லட்சம் சொன்னாலும் தாய்குலத்துக்கு மணி சீக்ரெட்ஸ் தெரியவே தெரியாது.

சித்தாளு 100 ரூக்கு  மூக்குத்தி வாங்கி  கஷ்டத்துக்கு 30 ரூ க்கு விப்பா. மிடில் க்ளாஸு நகைய மாத்தி செய்யனு போய் ஏமாறுவா. .  எப்படியோ தாளி ஒரு பொம்பளையோட கப்பாசிட்டி  10 ஆயிரம்னா அவளுக்கு பத்து கம்பேனிக தலா பத்தாயிரம் கொடுத்து தொலைச்சிட்டானுவ.

தொழில்,முதலீடு,கொள்முதல்னு கணக்கா இருந்தவுக எஸ்கேப். கண்ணாலம், காட்சி,சீமந்தம், புருசனுக்கு டயாலிசிஸுனு கடன் வாங்கினவுக வசம்மா மாட்டினாய்ங்க.

க்ரூப் லீடருனு உள்ளவுகல்லாம் படாடோபத்தோட லீட் பண்ணிக்கிட்டே க்ரூப் மெம்பர்ஸுக்கு தெரியாம கடன் வாங்கி லம்பா அழுத்தி -மேனேஜ் பண்ணிக்கிட்டே வந்து ஒரு கட்டத்துல ஓடிப்போன கதையெல்லாம் மஸ்தா நடந்து கீது.

ஒவ்வொரு பொம்பளையும் ஏழு க்ரூப்ல மெம்பர்.ஏழு க்ரூப்லயும் கடன் வாங்கிருவா. தினசரி தவணை கட்டணும் (ஒவ்வொரு லோனுக்கு) இதில்லாம ஓடிப்போனவ செத்துப்போனவ பங்கை மத்த உறுப்பினர்கள் சேர்ந்து கட்டனும்.

தவணை நின்னா வங்கி கணக்கா ரெஜிஸ்டர் தபால் எல்லாம் வராது (அவிக கூட பழைய தமிழ் சினிமா கணக்கா அடியாட்களை அனுப்பறதா தகவல்.) க்ரூப் மெம்பர்ஸ் மொத்த பேரும் வீட்டாண்டை வந்துருவாய்ங்க. சரோஜா தேவி நாவல் எல்லாம் பிச்சை வாங்கனும்.

"எங்கனா போடி" " நான் அனுப்பறேன் வரியா" " நான் சொல்ற ஆள் கிட்டே படுத்துக்கோ" "பணத்தை நான் வாங்கிக்கறேன்" இதெல்லாம் ச்சொம்மா ஜுஜுபி. நேர்ல கேட்டா வா.வெ.

பாலியல் தொழிலுக்கு நான் எதிரி இல்லை.ஆனால் அது சட்டப்படி நடக்க சட்ட திருத்தம் வரனும்னு கேட்கிற  சட்டத்தை மதிக்ககூடிய பிரஜை. ஆனால் பாருங்க ஒரு பொம்பள அவளுக்கு,அவளோட திருப்பித்தரும் தகுதியை மீறி  திணிக்கப்பட்ட கடனுக்கான தவணைக்காக அட் லீஸ்ட் 200 ரூ 300 ரூ க்காக அவள் விருப்பத்துக்கு எதிரா பாலியல் தொழிலாளியா மாத்தப்படறத ஏத்துக்க நான் தயாரா இல்லை.

இந்த  நாடகங்களையெல்லாம் அரங்கேத்திக்கிட்டிருக்கிற நெட் ஒர்க்கோட சி.இ.ஓ விக்ரம் சமீபகாலத்துல ஏறக்குறைய திவால் பார்ட்டி. ஆனால் இன்னைக்கு பல லட்சம் கோடிகள் புழங்குது எப்படி ? எப்படி? ( மேலதிக விவரங்களுக்கு -ஆங்கிலத்தில் இங்கேஅழுத்துங்க உபயம் வால் ஸ்ட் ரீட் ஜர்னல்)

விக்ரம் சார் இளவரசரோட நண்பர். ராஜ மாதாவுக்கு வேண்டப்பட்டவர். தாளி இந்த மேட்டர்ல தலையிடறதா இல்லைன்னு பிரணப் அறிவிக்கலைன்னா டங்குவார் அறுந்துராதா?

கர்நாடகால ரெட்டி ப்ரதர்ஸ் மேல ஒரே  நேரத்துல 65 இடத்துல இன் கம் டேக்ஸ் ரெய்டு விட்டாய்ங்களே பார்க்கலை. பிரதர்ஸ் உத்தம சீலருங்கனு சொல்ல வரலை.
ஒய்.எஸ் சி.எம்மா இருந்தாரே 5  வருஷம் + 4 மாசம் அப்ப ஏன் ரெய்டு விடலை?

பா.ஜ.க மந்திரி சபைய கவிழ்க்க ஒர்க் அவுட் பண்ணாய்ங்களே அப்ப ஏன் ரெய்டு விடலை. நேத்திக்கு பா.ஜ.க அரசை காப்பாத்தினாய்ங்க.அந்த கடுப்புல கப்புனு
இப்ப ரெய்டு. கப்படிக்குதுப்பா..

தனக்கு வந்தாதான் தலைவலிங்கற ரேஞ்சுல சனம் வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க. ஒரு ஆட்டுமந்தைக்கு ஒரு புலி குறிவச்சதாம். ஒரேயடியா மந்தைல புகுந்தா தேவர் படம் மாதிரி முட்டி தள்ளீரும்னு தனி தனியா பிக் பண்ணி ஒவ்வொரு ஆட்டுக்கும் சொல்லுச்சாம் " நீ ஆடே இல்லை. நீயும் என்னை மாதிரி புலிதான். மத்ததெல்லாம் ஆடுங்கதேன்"

மோட்டிவேஷன் முடிஞ்ச பிற்பாடு தினசரி ஒரு ஆட்டை ஆட்டைய போட்டு தின்னு தீர்த்துருச்சாம் அப்படித்தான் இன்னைக்கு ஒவ்வொரு அமைப்பும் நம்மை தின்னு தீர்த்துக்கிட்டிருக்கு.

ஜெவும் கலைஞரும் பேசி ஒரு அண்டர் ஸ்டாண்டிங்குக்கு வந்து ரெண்டு பார்ட்டியும் காங்கிரஸை கழட்டி விட்டுரனும்பா.. இம்சை தாங்க முடியலை