அண்ணே வணக்கம்ணே !
என்னடா இந்தாளு ஒரு பக்கம் ஜோதிடம்ங்கறான் -இன்னொரு பக்கம் பெரியார்ங்கறான் -இப்ப பார்த்தா "அவா" கணக்கா உபன்யாசம் ஆரம்பிச்சுட்டான்னு கன்ஃபீஸ் ஆயிராதிங்க. நமக்கு மன்சன் முக்கியம். மன்சனோட பிரச்சினைகளுக்கு சொல்யூஷன் பெரியார்கிட்டே கிடைக்கிறாப்ல இருந்தா பெரியார் ( உ.ம் குரு+ராகு/கேது/சனி சேர்க்கை இருக்குன்னு வைங்க .பெரியார் தான் ஒரே வழி)
ஜோதிடத்துல தீர்வு கிடைக்குதுன்னா ஜோதிடம். அதுலயும் தீர்வு கிடைக்கலின்னா ஆத்தா . இதான் நம்ம ஸ்ட்ராட்டஜி. சர்வே ஜனா சுக்கினோ பவந்து .
சொந்த வாழ்க்கைய பொருத்தவரை ஜோதிடத்தை தாண்டி வந்துட்டம். ஆகே பீச்சே மூடிக்கிட்டு நடக்கறத நடக்க விட்டுட்டா எந்த கிரகத்தாலயும் எந்த பிரச்சினையும் வரதில்லை . ஆத்தா மேட்டர்ல கூட சொந்த மேட்டர்ல -சொந்த வேலை வரைக்கும் பார்த்துக்கறாப்ல இருந்தா ஹாய் சொல்ட்டு போயிக்கினே இருக்கலாம்.
எங்கே என்ன மிஸ்டேக் ஆயிருச்சோ தெரியல.. நம்ம லட்சியம் சொந்த ஊரு ,மானிலம்,நாடுன்னு எக்ஸ்டென்ட் ஆயிட்டே போயிருச்சு .விட்டா ஐ.நா.சபையில ஒரு நாள் க்ளாஸ் எடுக்கிற சான்ஸ் கிடைச்சா கொய்யால உலகத்தையே மாத்திரலாங்கற அளவுக்கு மதிமயக்கம். தப்பித்தவறி ஆத்தா ஏமாந்தா இந்த உலகத்தையே மாத்திரலாமேன்னு ஒரு நப்பாசை .
இந்த இழவுக்குத்தேன் சத நாமாவளி அது இதுன்னு ஆத்தாவுக்கு சோப் ஃபேக்டரியே இறக்கிக்கிட்டிருக்கன். நிற்க. சத நாமாவளி விளக்கவுரைக்கு போயிரலாமா?
51.மார்க்கண்டேய வரப்ரதாயை
மார்கண்டேயனுக்கு வரம் கொடுத்தவளே -மார்க்கண்டேயன் கதை தெரியுமில்லை? அது சரி மார்க்கண்டேயனுக்கு வரம் கொடுத்தது சிவன் தானே. இதுல ஆத்தாவ மார்கண்டேயனுக்கு வரம் கொடுத்தவளேன்னு எப்படி சொல்றது? இதானே கேள்வி. அய்யா சாமி மாரே.. அர்த நாரீஸ்வரர்னா என்ன? 50-50 .ஐயா கொடுத்தாலும் அது அம்மா கொடுத்தமாதிரி.அம்மா கொடுத்தாலும் அது அய்யா கொடுத்தமாதிரி ஓகேவா உடுங்க ஜூட்டு.
52.மஹா மாயா ஸ்வரூபின்யை
மாயா..ங்கற வார்த்தைக்கு பொருள் சொல்லனும்னா இருக்கிறாப்லயே இருக்கும்.ஆனால் இருக்காது- இருக்காது ஆனால் இருக்கிறாப்லயே ஒரு ஃபீல் ஆகும்னு சொல்லலாம்.. இந்த விதிக்கு சம கால உதாரணம் சொல்லனும்னா தமிழகத்துல நிர்வாகம்.
சாதாரணமா மாயாங்கற வார்த்தைய ஜேஜிக்கும் -பக்தனுக்கும் இடையில் தடையா இருக்கக்கூடிய வஸ்துவா சொல்வாய்ங்க.
இங்கே பார்த்தா அந்த மாயா ரூபத்துல இருக்கிறதே ஆத்தாதான். மாயா ஸ்வரூபினியும் அவளே ! ஞான ஸ்வரூபினியும் அவளே! தெய்வம் என்றால் அது தெய்வம் -வெறும் சிலை என்றால் அது சிலைதான்னு கண்ணதாசன் சொல்வாரே அந்த மோமென்ட்.
மாயான்னு புரிஞ்சுக்கிட்டா அவளே ஞான ரூபிணி . புரிஞ்சுக்கலின்னா மாயா ஸ்வரூபிணி . அவளே அவளை மறைக்கும் மாயாவாகவும் இருக்கிறாள்.அவளே அந்த மாயாவை கிழித்தெறியும் ஞானமாகவும் இருக்கிறாள்.
53.மோஹின்யை
இதன் வேர் சொல் மோகம். மோகிக்க செய்பவள் மோகினி. ஆதி யோகி சிவன். மரணம் கோலோச்சும் இடுகாட்டில் வசிப்பவன். பிணங்களை எரித்த சாம்பலையே பூசி ,பாம்புகளை அணி கலனாய் அணிந்து பேயாட்டம் போடும் பேயாண்டி.அவரையே ஜொள் விடவைக்கனும்னா என்னா மாதிரி கவர்ச்சி இருக்கனும்.
54.மீனாக்ஷ்யை
மீன் போன்ற கண்கள் கொண்டவள் . தூங்காத கண்களை கொண்டது மீன். ஆத்தாவும் BPO கணக்கா நைட் ட்யூட்டி பார்க்கிறவளாச்சே. ( நன்றி: வாரியார்)
55.மஹோதர்யை
பெரிய வயிறு கொண்டவள். அத்தனை உயிர்களையும் பெறுபவளும் அவளே. விழுங்கி முடிப்பவளும் அவளே.
56.மணி த்வீப பாலிகாயை
த்வீபம் = தீவு ,பாலிகா = ஆள்பவள். எல்லாம் சரி மணி த்வீபம் எங்க இருக்கு? மணி பூரக சக்கரமா?
57.மஹிஷாசுர மர்த்தினியை
மஹிஷம் =எருமை எருமை தலை கொண்ட அசுரனை கொன்றவளே.எருமைத்தலைங்கறது உருவகம். எருமை போன்ற அசமஞ்சனா இருந்த பார்ட்டிய போட்டுதள்ளியிருக்கலாம். ( நமக்குள்ளயும் ஒரு எருமை இருக்குங்கோ..அதான் ஈகோ -அதை சம்ஹாரம் பண்ண சொல்லி கேட்போமே)
58.நித்யாயை
புனரபி மரணம் -புனரபி ஜனனம் . உறங்குவது போலும் சாக்காடு -உறங்கி விழிப்பது போலும் பிறப்பு -இதெல்லாம் நமக்குத்தேன்.ஆனால் ஆத்தா ? நெவர் . அதனாலதேன் அவள் நித்யா.
59.ஓம்கார ரூபின்யை
இதை பத்தி எழுதனும்னா ரெம்ப கஷ்டம்.சொம்மா.. ஓஷோ சொன்ன ஒரு வரியை சொல்லி அம்பேல்.“ஓம் உங்களால் உச்சரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. உங்களில் ஒலிப்பது. கேட்கப்பட வேண்டியது”
அந்த ஓம் என்ற ஒலிக்கு உருவம் கொடுத்தா அதான் ஆத்தா. ஓங்கார நாத ஸ்வரூபினியும் அவளே
60.பாசாங்குச தாரின்யை
பாசம் =(எம) பாசம் , அங்குசம் = ஆனைய ஹேண்டில் பண்றாய்ங்களே அது பாஸூ. இதை எல்லாம் கையில வச்சிருக்கறவள்.
61. பஞ்ச தசாக்ஷர்யை
சமஸ்கிருதத்துல உள்ள அம்பது எழுத்துக்களாவும் இருக்கிறவள்னு அருத்தம். சகலத்திலும் இருப்பவள்,சகலமாக இருப்பவள். (தெலுங்குல சகலம்னா-உடைந்த-முறிந்த- பாகங்கள்னும் ஒரு அர்த்தம் வருது) நாம நம்ம பேட்சுல உள்ள உதவாக்கரைய ஸ்க்ராப் னு சொல்றமே அந்த ஸ்க்ராபும் ஆத்தாவோட உருவம் தான்.
62.பூர்ணாயை
பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை தின்னிருப்பிங்க. அரிசி மாவுல கன்டெய்னர்.அதுக்குள்ளாற ஷுகர் லெவல்ஸை விலைவாசி கணக்கா உயர்த்தக்கூடிய இனிப்பு.அதை கூட பூரணம்னு சொல்றாய்ங்க. அதுவும் சேர்ந்ததுதான் கொழுக்கட்டை.
சகலத்திலும் -சகலமாவும் இருக்கிற ஆத்தா கொழுக்கட்டைக்குள்ள பூரணமா இருக்கமாட்டாளா என்ன?பாய்ண்டுக்கு வந்தா பூரணம்னா முழுமைன்னு அருத்தம். இங்கே உள்ள ஆண்,பெண் எல்லாமே அரைகுறை . ஆணில் பெண்மை குறைவு ,பெண்ணில் ஆண்மை குறைவு .
ஆனால் ஆத்தாவுல டெஃபிஷியன்சிங்கற பேச்சே கிடையாது. முழுமைன்னா சாதா முழுமை இல்லிங்கோ. முழுமைன்னா அதுலருந்து எதையாச்சும் பிச்சுட்டா அது முழுமையா தொடர முடியாது.
ஆனா ஆத்தா அப்டி இல்லை. கச்சா முச்சான்னு அவளோட மகோதரத்துலருந்து கோடி கோடியா உசுருங்க வந்துக்கிட்டே இருந்தாலும் முழுமையாவே தொடரும் முழுமை.
ஓம் | பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே | பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ||
63. பரமந்த்ர சேதினி
பர = பிறரின் ; மந்த்ர =மந்திரங்கள் ; சேதினி =அழிப்பவள்.அதாவது பிறரின் மந்திரங்களை தாக்கி அழிப்பவளேனு அருத்தம் சொல்லலாம்.
மந்திரத்துல மாங்கா விழாதும்பாய்ங்க. மனம் ஒன்றானால் மந்திரம் தேவையில்லைம்பாய்ங்க. இது ரெண்டையும் க்ளப் பண்ணி ரோசிங்க. அலைபாயும் மனம் மந்திரம் ஜெபிச்சாலும் மாங்காய் விழாது. அதே நேரத்துல மனம் குவித்து சிந்திப்பவர்கள் மந்திரம் சொல்லாவிட்டாலும் மாங்காய் விழும்.
ஒரு வேளை மனம் குவித்து சிந்திக்கக்கூடியவர்கள் மந்திரமும் ஜெபித்தால் ?
ஆக மந்திரம்ங்கறது ஒரு ஃபோர்ஸ்/சோர்ஸ் . பிறர் நம்மை காரணமே இல்லாம வெறுக்கலாம் – நாம நாசமா போகனும்னு நினைக்கலாம். அட மந்திரமே கூட ஜெபிக்கலாம். அப்ப நம்ம நிலைமை என்ன?
அவிக மந்திரங்களை ஆத்தா அட்டாக் பண்ணி ஒன்னும் இல்லாம பண்ணிருவா. இங்கே ஒரு விஷயத்தை ஞா படுத்தனும்..
நீங்க தப்பான ஆளு – எக்ஸ் பார்ட்டி சரியான ஆளுன்னு வைங்க .ஆத்தா பரமந்த்ர சேதினியா உங்களுக்கு வேலை செய்யாம போகலாம். ஆனால் எக்ஸ்பார்ட்டிக்கு கட்டாயமா ஒர்க் அவுட் பண்ணிருவா. ஆகவே சரியான ஆளா மாற பாருங்க.
64.பரபல விமர்த்தின்யை
பிறருடைய பலத்தை அழிப்பவள் . மேற்படி நாமாவுக்கு கொடுத்த விளக்கமே போதும்னு நினைக்கிறேன்.
65.பரப்ரம்ஹ ஸ்வரூபினி
பிரம்மனுக்கும் பிரம்மாவுக்கும் வித்யாசம் தெரியுமில்லை.பிரம்மான்னா மும்மூர்த்திகளில் ஒருத்தரு. ப்ரம்ஹம்னா இந்த மும்மூர்த்திக்கெல்லாம் தாத்தா. பிரம்மத்துக்கு உருவம் -நோக்கம் -செயல் இப்படி பலதும் கிடையாது.படைப்பின் மூலம் – அசைவு -முடிவு எல்லாத்துக்கு காரணமான பவரை பிரம்மம்னு சொல்றாய்ங்க. அந்த பரபிரம்மத்தின் உருவாகவும் அவளே இருக்கிறாள்.
66.ராஜ ராஜேஸ்வர்யை
ராஜாவுக்கெல்லாம் ராஜா ஆரோ அந்த ராஜாவுக்கும் ஈ ஸ்வரி ஆத்தாதான். Eswar(i) ங்கற வார்த்தையில swar ங்கறதை மட்டும் ஆராய்ச்சி பண்ணா பதவி ஏற்றுக்கொள்/பட்டம் சூடிக்கொள்னு அருத்தம் சொல்லனும்.ஆமாவா? இல்லையா?
67.சச்சிதானந்த ஸ்வரூபினி
சத்+சித்+ஆனந்தம். சத் =நல்ல/பாசிட்டிவ் ; சித் =மனம் . நல்ல மனதில் திகழும் ஆனந்தமும் அவளே.
68.சூக்ஷ்ம்னா த்வார மத்யாயை
மூக்கோட ரெண்டு துவாரங்கள் தெரியுமில்லையா? இதுல சுவாசம் நடக்கிறதை வலது புறம்னா சூரிய நாடி -இடது புறம்னா சந்திர நாடின்னு சொல்றாய்ங்க. (இடா,பிங்களான்னும் சொல்வதுண்டு). மனம் எண்ணங்களால் நிறைந்திருக்கும் போது அந்த எண்ணங்களின் தன்மைக்கேற்ப சுவாசம் மாறும் . எண்ணமே இல்லாத நிலையில சுவாசம் நின்னுரும். (டிக்கெட் இல்லிங்கோ)
ஆனால் முதுகெலும்புக்குள்ளாற ஒரு பாதை இருக்கு. அந்த பாதை வழியா சுவாசம் நடக்கும்னு யோக சாஸ்திரம் சொல்லுது. அந்த பாதைக்கு சூக்ஷ்ம்ணா நாடின்னு பேரு .த்வாரம் =துளைன்னும் சொல்லலாம் , வாசல்னும் சொல்லலாம். தலைவாசலை சிம்ஹத்வாரம்னு சொல்லுவாய்ங்க.
இதையே வேறு வார்த்தைகளில் சொல்ல ட்ரை பண்றேன்.
சுவாசம் இது ரெண்டுலயும் மாறி மாறி நடக்கும். மனசு அலைபாய்வது குறைய குறைய சுவாசத்தின் வேகம் குறையும்.மனசு ஒரே பாய்ண்ட்ல “ஜாம்”ஆயிருச்சுன்னு வைங்க. சுவாசமே நின்னுரும். அந்த நேரம் சுவாசம் இன்னொரு வழிக்கு பை பாஸ் ஆயிருது.அதான் சூக்ஷ்ம்னா நாடின்னு சொல்றாய்ங்க.
எட்டுங்கற எண்ணை தலையில தட்டி மல்லாக்க போட்டு ,காலால லெஃப்டுக்கு ஒரு உதைவிடுங்க. இப்படியே மேல மேல நிறைய எட்டுக்களை ஒன்னு மேல ஒன்னா லேண்ட் ஆக செய்தாச்சுன்னா அதான் முதுகெலும்பு.
எட்டுல இருக்கிற ரெண்டு பூஜ்ஜியங்கள் வழியா நிறைய கேபிள் கனெக்சன்லாம் இருக்கு. ஒன்னு அவுட் கோயிங் -அடுத்தது இன் கமிங்குனு அனாட்டமி சொல்லுது.
யோக சாஸ்திரத்துல மேற்படி 2 பூஜ்ஜியத்துக்கும் இடையில ரெம்ப மைன்யூடா ஒரு பூஜ்ஜியம் இருக்கிறதாவும் அதுவழியாத்தான் குண்டலி ட்ராவல் பண்ணுதுன்னும் சொல்றாய்ங்க. இதான் சூக்ஷ்ம்னா துவாரம். துவாரம்னா துளைன்னு அருத்தமில்லிங்ணா. கதவுன்னு அருத்தம். மனசிலாயி?
69.சர்வ ஸ்வதந்த்ரா
100% சுதந்திரமானவளேனு அருத்தம்.. காற்றுக்கென்ன வேலி,கடலுக்கென்ன மூடிங்கற மாதிரி இதுவரை பட்டியலிட்ட நாமாக்களோ -இனி விளக்கப்போற நாமாக்களோ அவற்றுக்கான விளக்கங்களோ அவளை பைண்ட் ஓவர்பண்ண முடியாது.
அனாமிகான்னாலும் அவள் தான். நூறு பேரால ,ஆயிரம் பேரால ஸ்தோத்திரம் பண்ணாலும் அவள் தான். (லலிதா சஹஸ்ர நாமம்) கன்யாகாயைன்னாலும் அவள் தான் ,குமார ஜனனி,கணேச ஜனனின்னாலும் அவள் தான்.
70. ஸ்ரீ சக்ர வாசினி.
இந்த சக்கரங்களை பொருத்தவரை பலர் பலவிதமான வியாக்யானங்கள் கொடுத்திருக்கலாம். நானே கூட மாயா பீஜம் ஜெபிக்க ஆரம்பிச்ச புதுசுல ஸ்ரீ சக்ரம்லாம் வச்சு ட்ரை பண்ணியிருக்கன்.
கடைகள்ள கண்ட சக்கரங்களை வச்சு பூஜை பண்ற சனங்களை “கொய்யால இதெல்லாம் எம்ப்டி சிடி மாதிரி . இதுக்குண்டான மந்திரத்தை நீ லட்சம் தடவை ஜெபிச்சா தான் அந்த மந்திரத்தை சொல்றா தகுதி ஏற்படும். அதுக்கு பிறவு லட்சம் தடவை ஜெபிச்சா வேணம்னா இந்த சக்கரம்லாம் ஒர்க் அவுட் ஆகலாம். இல்லின்னா இதுகள வச்ச இடம் வேஸ்ட்,காசு வேஸ்ட், ஊதுவத்தி வேஸ்டுன்னு பெரியார் தனமா பகுத்தறிவு (?) பிரச்சாரம்லாம் செய்திருக்கன்.
எனக்கென்னமோ போக போக இந்த சக்கரம்லாம் ஸ்தூலமான மேட்டர் இல்லை. குண்டலி எழுச்சி பெற்று ஒவ்வொரு சக்கரத்தை டச் பண்ணும் போது இந்த சக்கரம் போன்ற காட்சிகள் கலர் எஃபெக்டோட சாதகனுக்கு தெரிஞ்சிருக்கலாம். அந்த சமயம் அவனோட உடல் சில பல அதிர்வுகளை உணர்ந்திருக்கலாம்.
ஞாபகத்துக்கோ அல்லது பிறரின் பால் கருணை காரணமாவோ ஞாபகத்துலருந்து இந்த சக்கரங்களை வரைஞ்சிருக்கலாம். தகட்டுல கீறி கொடுத்திருக்கலாம்ங்கற மாதிரி ஹஞ்ச் வந்துருச்சு. எப்படியோ ஸ்ரீ சக்கரம் தான் எல்லா சக்கரங்களுக்கும் தாத்தா. ஒரு வேளை குண்டலி சஹஸ்ராரத்தை தொடும் போது இதன் வடிவம் சாதகர்களுக்கு மனக்கண் முன்னேதோன்றியிருக்கலாம்.
இந்த ஸ்ரீ சக்கரத்துல வசிப்பவள் ஸ்ரீ சக்கர வாசினி. ஓகேவா.
71.ஸ்வயம் ப்ரகாசாயை
சந்திரன் சூரியனோட ஒளிய கடன் வாங்கி பிரகாசிக்கிறாப்ல இல்லாம சுயமாகவே பிரகாசிப்பவள்.
72.சுர பூஜிதாயை
அசுரன்னா தெரியும் இதுக்கு எதிர்பதம் சுரன். தேவர்களால் பூஜிக்கப்படுபவள். கச கசாவை ப்ராசஸ் பண்ணி ஒரு திரவம் தயாரிச்சு அதை அவாள் குடிப்பாளாம்.அதுக்கு சுரபானம்னு பேரு. சுர பானத்தை அருந்துவோர் சுரர்கள்.அருந்தாதவர்கள் அசுரர்கள்னு கூட சொல்லலாம். சுரபானம் அருந்துபவர்களால் பூஜிக்கப்படுபவள்ங்கறது இந்த நாமாவோட பொருள்.
73.சுந்தர்யை
சுந்தரம்னா அழகுனு அருத்தம். ஆத்தாவ விட அழகான குட்டி வேற ஆரா இருக்க முடியும்? சிவனை ஆதியோகிம்பாய்ங்க. சுடுகாட்ல பிணத்தை எரிச்ச சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கிட்டு ,பூத கணங்களோட க்ரூப் டான்ஸ் ஆடற பார்ட்டி ஈஸ்வரன். அந்த ஈஸ்வரனே கவுந்துட்டாருன்னா ஆத்தா எப்பேர்கொத்த பர்சனாலிட்டியா இருக்கனும். ரோசிங்க.
74.சுக தாயின்யை
சுகத்தை தருபவளே.
75.சனகாதி முனி ஸ்துதாயை
சனகர் முதலான முனிவர்களால் போற்றிப்புகழப்படுபவளேனு அருத்தம்.