அண்ணே வணக்கம்ணே !
வலைப்பூ ,வலை தளம்,முக நூல் வழியா ஏற்கெனவே அறிமுகமான நாம இப்போ திரு சொக்கலிங்கம் ராம நாதன் தொகுப்பில் வெளியாகும் இந்த மின்னூல் வழியா சந்திக்கிறோம். சாதாரணமா திருமணமான பெண் பெயருக்கு மிந்தி ஸ்ரீமதி தான் வரும். ஆனால் நாம ஸ்ரீ மட்டும் தான் கொடுத்திருக்கம்.
ஏன்னா ஆத்தா டூ இன் ஒன். அவனும் அவளே.அவளும் அவளே ! டூ இன் ஒன் மட்டுமில்லை த்ரீ இன் ஒன். அவனும் -அவளும் -அதுவும் அவளே ! இது மட்டுமா? எதுவும் யாவும் அவளே தான்.
சதம் = 100 , நாமம் =பெயர் , ஆவளி =வரிசை . (தீபங்களின் வரிசை தீபாவளி - 100 நாமங்களின் வரிசை சத நாமாவளி . நியூஸ் பேப்பர்ல கொடும்பாவி எரிப்புன்னு செய்தி போடுவாய்ங்க. அந்த படத்துல பார்த்திங்கனா சோள கொல்லை பொம்மை மாதிரி ஒரு பொம்மை இருக்கும். அதன் நெஞ்சுல பலானவரோட பேரை கம்ப்யூட்டர் ப்ரிண்ட் அவுட் எடுத்து ஒட்டியிருப்பாய்ங்க. ஒடனே அந்த பொம்மை பலானவரோட உருவ பொம்மையாயிருது . இதான் பேருக்கு இருக்கக்கூடிய பவர்.
ஒரு ஏரியா. அந்த ஏரியாவோட தாதா நமக்கு ஏற்கெனவே அறிமுகம்னு வைங்க. அந்த ஏரியாவுல ஆரோ "பில்லக்கா" பசங்க வந்து நம்ம சட்டைய பிடிச்சுர்ராய்ங்க. அப்போ நாம அந்த தாதாவோட பேரை சொன்னா என்னாகும்? ஒரு தாதா பேருக்கே அந்த பவர். ஆத்தாவோட பேருக்கு எம்மாம் பவர் இருக்கும்?
செரி பெயருக்கு இருக்கும் பவரை கொஞ்சம் சீரியஸா பார்ப்பமா?
ஆன்மீகத்துல நாமம் - நாமி ( பெயர் - பெயருக்குடையவர்) ரெண்டுக்கும் வித்யாசம் கிடையாது. ரெண்டுமே சமம். அதாவது ராமனால் முடியற வேலை எல்லாமே ராம நாமத்தாலயும் முடியும். (ஒரு சந்தர்ப்பத்துல ராம நாமம் ராமனையே ஜெயிச்ச கதையும் நடந்திருக்கு )
நாம ஜபத்துக்கு நான் விரோதி இல்லை. ஆனால் நாமங்களை அவற்றிற்குரிய அர்த்தங்களோடு , தாத்பரியங்களோடு, ரெஃபரென்ஸ் டு தி கான்டெக்ஸ்டோடு சொல்ல வேண்டும் என்பது என் கருத்து, அனுபவம்.
சில சந்தர்ப்பங்கள்ள அர்த்தம் தெரியாம சொல்லிக்கிட்டிருக்கிற நாமங்கள் கூட பலன் தர்ரதுண்டு. உதாரணமா ஆஞ்சனேயருக்கு ஸ்ரீ ப்ரதாயானு ஒரு பேர் உண்டு. இதற்கு செல்வத்தை வழங்குபவனேனு அர்த்தம் அதை படிக்கிறப்பல்லாம் லட்சுமிக்கும் அனுமாருக்கும் என்னப்பா சம்பந்தம்னு நினைச்சிட்டே படிக்கிறது வழக்கம்.
சோத்துக்கு லாட்டரி அடிச்சிட்டிருந்த எனக்கு ஓரளவு மினிமம் கியாரண்டி கிடைச்சு இன்னைக்கு ஓரளவு செட்டில் ஆக காரணம் ஆஞ்சனேயர் தான்னு சில வருஷங்களுக்கு முன்னாடிதான் ஸ்ட்ரைக் ஆச்சு. சீதை செல்வத்துக்கு அதி தேவதையான லட்சுமியோட அம்சம். ராமர் சீதைய தொலைச்சுட்டு அவதிப்பட்டப்போ சீதைய மறுபடி அடைய ஆஞ்சனேயர் தானே உதவினார். ஆக அனுமார் செல்வத்தை வழங்குபவர்னுதானே அர்த்தமாகுது . அனுபவமாகுது.
என்னைக்கேட்டா எந்த ஒரு நூதன அனுபவமும் போக போக இயந்திரத்தனமா ஆயிரும். உங்க காதலி முதல் முதலா உங்க காதலிய அங்கீகரிச்சப்ப உங்களுக்கு ஏற்பட்ட புல்லரிப்பு, புளங்காகிதம், மயிர் கூச்செறிதலையெல்லாம் இப்ப உங்களால ஞா படுத்திக்க கூட முடியாது.
இந்த நாமாவளிகளும் அப்படித்தான். நாமாவளிகளை இயந்திரத்தனமா சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது. ஏற்கெனவே சொன்னபடி அந்த நாமங்களை, அவற்றின் பொருளை, உட் பொருளை, தாத்பர்யத்தை அறிந்து சொல்லனும். வெறுமனே சொல்லிட்டு மறந்துர்ரதுல்ல. அவற்றை அடிக்கடி சிந்திக்கனும்.
நாமங்கள் ஜஸ்ட் கான்ஷியஸ் மைன்டை தான் டச் பண்ணும். நாமாக்களோட பொருள் சப் கான்ஷியஸ் வரை போகும். அந்த பொருளை குறித்த நிறைவு பெறாத சிந்தனை -சிந்தனையின் தொடர்ச்சி சப் கான்ஷியஸை தாண்டியும் போகும். இந்த நிலை வரும் போது கிடைக்கும் பலன் டூ இன் ஒன்னா இருக்கும். ஐ மீன்.. லோகாயதம்+ஆத்யாத்மிகம்.
இந்த நாமாவளியில் உள்ள நாமங்கள் நானே தொகுத்தவை . நானே வரிசை படுத்தியவை ( ஆல்ஃபபடிக்கல் ஆர்டர்) . எனக்கே எனக்குன்னு உருவாக்கினதாலயா? அல்லது தொடர்ந்து படிச்சுக்கிட்டிருந்ததாலயா தெரியல .. இந்த நாமாக்கள் குறித்த மறை பொருள் எல்லாம் ஸ்பார்க் ஆக ஆரம்பிச்சது . (மறை பொருள் = மறைந்திருக்கும் பொருள் ; மறை =வேதம்??)
ஒவ்வொரு நாமத்துக்கும் பிட்டு பிட்டா ஸ்பார்க் ஆன விளக்கங்களை அப்பப்போ நம்ம தளத்துல அவுத்து விட்டுக்கிட்டிருந்தம். இதை எல்லாம் நண்பர் சொக்கலிங்கம் ராம நாதன் பொறுமையா தேடிப்பிடிச்சு தொகுத்திருக்காரு அன்னாருக்கு நன்றி . இதை படிக்க போற ஷேர் பண்ண போற உங்களுக்கும் தான்.
-சித்தூர்.முருகேசன்
அனுபவஜோதிடம் டாட் காம்