பேட்டை சரவணன். எல்.ஐ.சி. ஏஜெண்ட், சிலமாதம் பஜாஜ் எல்.ஐ.சி ஏஜெண்டாகவும், தற்போது எங்கள் சொந்த பத்திரிக்கையான இண்டியன் பொலிட்டிகல் க்ளேசப் பத்திரிக்கையின் விளம்பர நிர்வாகியாகவும் வேலை பார்க்கும் பார்ட்டி. இவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்.. குண்டியை சுற்றி கடன். காலையில் ஒரு கடன் காரன் வந்து கடன் கேட்டுவிட்டால் டவுனுக்கு வந்ததும் குவார்ட்டர் அடித்து விட்டு மிட்டூர் பார்க்கிலோ , ஆர்.டி.சி. பஸ்ஸ்டாண்டையும் திருத்தணி பஸ்ஸ்டாண்டையும் இணைக்கும் சந்தில் இருக்கும் கோயிலில் மட்டையாகி விடுவார்., அங்கே வாங்கி இங்கே கொடுத்து, இங்கே வாங்கி அங்கே கொடுத்து நிரந்தரம் கடனில் இருப்பார், அதுவும் விஷம் போல் ஏறிக்கொண்டே இருக்கும். எல்.ஐ.சி.யில் டார்கெட்டை கவர் செய்ய தானே ப்ரிமியம் கட்டி ஷெட் ஆகிவிட்டதாய் சொன்னதாய் ஞா.
தவறான முடிவால் நஷ்டப்பட்டுவிடுவதோ,கடனில் இருப்பதோ,குடிப்பதோ தவறு என்று சொல்லி விடும் அசம்ஞ்சம் நானில்லை. எங்கள் சத்யா கூட தீர்த்தம் போடுகிறான். மதியம் போட்டதும்,படுத்ததும், எழுந்ததும் தெரியாது, ராத்திரியில் 10 மணிக்கு கடைசி பைசா வரை கணக்கு பார்த்துவிட்டு தீர்த்தம் போடுவான். 1961 லிருந்து பஜாரில் எந்த செட்டியார் யாரை வைத்திருந்தார், எவர் மகள் எவனுடன் ஓடிப்போனாள் போன்ற புள்ளிவிவரங்களை எடுத்து விட்டபடி, தானும் சிரித்து அடுத்தவரையும் சிரிக்கச்செய்து போய் படுத்து விடுவான்,
பேட்டை சரவணன் மாதிரி விக்கியதற்கும், குசு வந்ததற்கும் குடிக்க ஆரம்பித்தானென்றால் அவன் மதுவுக்கு அடிமையாகிவிட்டான், குடிக்க காரணம் தேடுகிறான் என்று அர்த்தம்.
பெண்டாட்டிக்கு தாய் வீட்டில் போட்ட நகைகளை அடகு வைத்துவிட்டதாகவும்,அதை மீட்டு கொடுத்தால் ஒரு வாரத்தில் திருப்பி விடுவதாகவும் கூறிய சரவணன், எங்கள் பத்திரிக்கைக்காக தான் புக் செய்த விளம்பர கட்டணத்தை வசூலிக்க போவதாக கூறிவிட்டு (கமிஷன் 30 சதம்) செய்யும் கன காரியங்கள் என்ன தெரியுமா?
டீ கடையில் டீ சாப்பிட்டு, சஃபாரி போட்டுக் கொண்டு தமிழ்,தெலுங்கு தினசரிகளை மணிக்கணக்கில் படிப்பதும், தனது ஆட்டை தூக்கி மாட்டில் போடும் வேலைகளை பார்ப்பதும் தான்.
இத்தனைக்கும் ஆஃபீஸ் சாவி, எம் வீட்டு தெரு ரூம் சாவி, சைக்கிள் சாவி எல்லாம் கொடுத்து செலவுக்கு சில்லறையும் கொடுத்து அனுப்புவேன். இருந்தும் இந்த இழவு. எரிச்சலூட்டும் விஷயம் என்னவென்றால் போன் போட்டால் எடுக்கவே மாட்டான்.
இந்த பார்ட்டிக்கு உதவாக்கரை போனை அடகு வைத்து ரூ.500 ம், புரோ நோட்டு எழுதி 5,000 ம் ஏற்பாடு செய்திருக்கிறேன்.
எதிர்காலம் குறித்த திகிலில் மிஸஸ் சரவணன் குருவி மாதிரி ஆகியிருக்க , சின்னஞ்சிறு குழந்தை வேறு. இந்த இம்சையை எங்கு சொல்ல..