Saturday, June 21, 2008

70 வயது முதியவருக்கு மனைவியாக

இத்தனைக்கும் தஸ்லிமா அரசகுமாரியுமல்ல செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பெண்ணுமல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தஸ்லிமாவின் தந்தை ஒரு டெய்லர். தனது 6 குழந்தைகளை காப்பாற்ற குவைத் சென்றார். அவர்களை படிக்க வைத்தார். தஸ்லிமாவின் தந்தை அடிக்கடி கூறுவார் :" சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதே அல்லாவுக்கு நாம் காட்டும் மரியாதை "

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை‍‍ இது ஆன்றோர் வாக்கு.தந்தையின் சொல் தஸ்லிமாவின் மனதில் கல்வெட்டாய் நின்றுவிட்டது. தஸ்லிமா மனோதத்துவம் படித்தார். கேட்கும் திறன் குறைந்தவர்களைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் குறித்த சிறப்பு கல்வியையும் பயின்றார். மகளிர் பல்கலை கழகத்தின் கோல்ட் மெடலையும் பெற்றார் தஸ்லிமா.

மனிதத்தை ம‌ண்ணாக்கி வரும் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் மனிதர்களுக்கு அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு தமது கல்வி பயன் பட வேண்டுமென்ற நோக்கத்துடன் கல்வி பயின்ற தஸ்லிமா, கல்வி என்பது பொருளீட்டத்தான் என்று எப்படி நினைப்பார். அவர் பெற்ற கல்விக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்தனையோ வாய்ப்புக்கள் கதவை தட்டின. இருந்தாலும் சிறிது காலம் //DEPEP//லும் ஒரு தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றிய தஸ்லிமா மாவட்டமெங்கும் அதிர்வுகளை கிளப்பி வரும் அபயக்ஷேத்திரத்தை ஆரம்பித்தார்.

ராஜவம்சத்தினரும்,பணக்காரர்களும் ஃபேஷனுக்காகவோ,தற்பெருமைக்காகவோ சேவை(?) புரிவது வழக்கம் ஆனால் தஸ்லிமா ஒரு நடுத்தர குடும்பத்து வாரிசு மட்டுமே இருந்தாலும் அவர்

திருப்பதி பால மந்திரில் படித்துகொண்டிருந்து தூரத்து உறவினர் ஒருவரால் அழைத்துச்செல்லப்பட்டு பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவருக்கு மனைவியாக சித்திரவை அனுபவித்த 13 வயது சிறுமி