"சீடை " இந்த வார்த்தைக்கு உங்களுக்கு தெரிந்த பொருள் கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் ஒரு தின்பண்டம் என்பதே. ஆனால் இதற்கு என் அகராதியில் அர்த்தமே வேறு.
பயிருக்கு பூச்சி பிடிப்பதை தெலுங்கில் "ச்சீடா" என்பார்கள். மனிதனுக்கு 9 கிரகங்களும் எதிராகி ,வறுமையின் பிடியில் சிக்கி, அவனது சகலமும் வறுமைக்கு இலக்காகி விட்ட நிலையை சீடை என்று நான் குறிப்பிடுவது வழக்கம்.
உபயம்: என் சகோதரர் அமரர். செல்வராஜ் அவர்களின் நண்பர் திரு வளையாபதி
வெறுப்பில் இருக்கும்போது ஷீடை என்றும் சொல்வதுண்டு.
சீடை அடித்துவிட்ட சமயம் மனிதனின் முகம்,உடல்,எண்ணம்,பாடி லாங்குவேஜ் எல்லாமே மாறிவிடுகிறது. இது போல் சீடை பிடித்த பார்ட்டிகள் என் வாழ்வில் அடிக்கடி குறுக்கிடுவது வழக்கம். சில சமயம் விதியின்றியும், சில சமயம் திமிர் காரணமாயும் இவர்களை என் வாழ்வில் அனுமதிப்பதுண்டு. இதில் லேட்டஸ்ட் உதாரணம் பேட்டை சரவணன் மற்றும் பிள்ளை.
பேட்டை சரவணன் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவில் சொல்லியாயிற்று. எனவே அவரது தற்போதைய நிலையை பற்றி சிறு குறிப்புடன் முடித்து பிள்ளையை பற்றி சொல்கிறேன். பேட்டை சரவணன் எல்.ஐ.சி.ஏஜெண்டாக இருந்து , பஜாஜுக்கு மாறி சிலகாலம் எனது இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப்புக்கு அட்வர்டைஸ்மெண்ட் ரெப்பாக பணியாற்றினார்.
முதலிரண்டு இஷ்யூவுக்கு நேரம் நல்லாருந்து தப்பிச்சுட்டார். நான் கோழி . ஆசனம் நோக முட்டை போட்டான பிறகு அதை எடுத்டுக்கிட்டு ஃபீல்டுக்கு போவார். கடந்த இஷ்யூவின் போது குருட்டு நாய்க்கு காய்ந்த நரகல் கிடைத்தது போல் (என் தாத்தாவின் பிரயோகம்) ஏதோ கிடைத்துவிட்டது. ஆன சீன் எல்லாம் போட்டார். இந்த முறை என்னிடம் ரூ.2000 முன் பணம் கேட்டார். ஏதோ செட்டியார்கள் சகவாசத்தால் எனக்கும் ஓரளவு வியாபாரம் தெரிந்திருப்பதால் ரூ.,1000 மட்டும் கொடுத்தேன். இம்முறை ரூ.500 க்கான விளம்பரம் மட்டும் கிடைத்தது. அதுவும் பப்ளிஷ் ஆனபிறகே பணம் என்ற நிபந்தனையுடன்.
இந்நிலையில் பிரிட்டீஷ் காரனை காந்தி சத்தாய்த்தது போல் என்னை சத்தாய்க்கும் என் மனைவியையே நல்லவளாக்கி விட்டார் சரவணன். அழி என்னவோ அதே வழிதான். ஒத்துழையாமை இயக்கம். நான் என்ன பொறுமையில் பூமா தேவியென்றா சொல்லிக்கொண்டேன். அவளே இப்போது பூகம்பம் மூலம் தன் எதிர்ப்பை பதிவு செய்ய துவங்கிவிட்டாள். தங்கள் சேவைக்கு இப்போது தேவையில்லை ஓடிப்போயிருங்க அட்வான்ஸ திருப்பி கட்டுங்க என்று ஸ்கட் விட்டுவிட்டேன்.
அந்த சீடை அடித்த பார்ட்டி எனக்கு சீடை அடிக்கசெய்துவிடும் நிலை வந்துவிட்டதால் கழட்டிவிட்டேனே தவிர இப்போதும் என்னில் விரோதமில்லை. உட்கார்ந்திருக்கும் கிளையை வெட்டிதள்றானே என்ற ஆத்திரம்தான்