Wednesday, June 18, 2008

தசாவாதாரம் - தண்ட கருமாந்திரம்.

தசாவாதாரம் உலக நாயகனை உட்டாலக்கடி ஆக்கிவிட்டதை மறுக்க முடியுமா?

கமல் நல்ல நடிகர், இதற்கு மேல் எதையும் கற்காமலே சிறந்த நடிகராகும் வாய்ப்பு கமலுக்கன்றி வேறு யாருக்கு உண்டு. என்ன ஒரு லொள்ளு என்றால் ஏற்கெனவே தன்னில் தெரிந்தோ தெரியாமலோ தங்கிவிட்டிருக்கும் கசடுகளை சுத்திகரித்து கொள்ளவேண்டும் அவ்வளவுதான். ரசிகன் கமலின் முகத்தையும், அதிலான நெற்றி,கண்கள்,புருவங்கள்,கன்னம்,மூக்கு,உதடுகள் கொட்டும் நடிப்பை காணத்தான் விரும்புவானே தவிர மாவு முகங்களை அல்ல. மேலும் இந்தியனில் அவசியம் கருதி அவன் ரசித்திருக்கலாம். தசாவதாரத்தில் என்ன அவசியம் இருக்கிறது இத்தனை வேடங்களை தரித்து ரசிகனின் பொறுமையை ஏன் சோதிக்க வேண்டும்.


நடிப்பு என்பது ரசிகனை ஜஸ்ட் நம்பவைப்பதாய் இருக்க வேண்டும். ஒரிஜனலாக செய்து அதை ரசிகன் பார்த்து ரசிப்பது வேறு. அதை சர்க்கஸ், சாகசம் என்று கூறலாமே தவிர அது நடிப்பல்ல. அந்த காலத்தில் என்.டி.ஆர் கூட ஒரே படத்தில் கர்ணன்,துரியோதனன், கிருஷ்ணர் வேடங்களை ஏற்றார் . அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதே எம்.டி.ஆர் 5 வேடம் போட்ட போது ஏற்கவில்லை. இத்தனைக்கும் வாழ்வில் முதல் முறையாக காண்டாக்ட் லென்ஸ் எல்லாம் வைத்து தான் நடித்தார் . படம் ஊத்திக்கொண்டது.

தசாவதாரத்தில் வில்லன் பாத்திரம் எவ்வித கனமோ,கண்ணியமோ இன்றி படைக்கப்பட்டிருக்கிறது. இதை கமல் ஏற்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை போன்றவையே முஸ்லீம் இளைஞர் பாத்திரம்,ஜார்ஜ் புஷ் பாத்திரம்,பாட்டி பாத்திரம். தலித் இளைஞன் பாத்திரம் பில்டப் எல்லாம் ஓகேதான். மெயின் லைனில் ஒட்ட மறுக்கிறதே. பாடக பாத்திரமும் தேவையற்ற பாத்திரம்.

என்கொய்ரி ஆஃபீஸர் பாத்திரத்தையும், விஞ்ஞானி பாத்திரத்தையும் மட்டும் கமல் ஏற்று சாதாரண படமாகவே வெளியிட்டிருக்கலாம். தேவையில்லாத பணச்செலவு.காத்திருப்பு .தண்ட கருமாந்திரம்.