Sunday, May 25, 2008

ஏழ்மை மனிதனை என்ன செய்யும். அது ஏதும் செய்யாதிருக்க மனிதன் என்ன செய்யவேண்டும்

ஏழ்மை வேறு ஏழ்மையை அங்கீகரித்துவிடுவது வேறு
ஏழ்மை என்பது பல காரணங்களால் ஏற்பட்டுவிடுகிறது. என் விஷயத்தில் 1987 நவ‌ம்பரில் முதல் கதை பாக்யாவில் வெளியானதுமே அனைத்து பத்திரிக்கைகளிலும் என் படைப்புகள் வெளிவந்தாக வேண்டும் என்று நினைத்து ,யதார்த்தம் மறந்து, சூதாடித்தனமாய் தபால்களுக்கு செலவழித்தது ஒருபுறம், ஜால்ரா போட முடியாது தந்தையை அண்ணன் கள், தம்பிக்கே விட்டுக்கொடுத்துவிட்டது ஒரு புறம், நோய்களின் பிறப்பிடம்,சோம்பலின் மறுபெயர் என்பதை அறியாது வன்னிய குலப்பெண்,சத்திரிய குணங்கள் மற்றும் தியாகத்துடன் என் போருக்கு உதவி புரிவாள் என்று என் மனைவியை விவாகம் புரிந்தது ஒரு புறம், எதிராளி சொல்றதுக்கு தலையாட்டிடு, அப்புறமா நீ செய்றத செய்துட்டு போ என்ற நாவிதனின் யோசனையை கூட பின்பற்ற முயலாத அப்பாவித்தனம் ஒரு புறம், இன்றைய ஆதி தத்துவத்தின் மொட்டு கூட பிறந்திருக்காத நேரம் மறு புறம் எல்லாம் சேர்த்து நான் ஏழையானது உண்மை. ஏழ்மை என்னை எரித்தது உண்மை. ஆனால் அந்த ஏழ்மையை அங்கீகரிக்காது அதனுடன் தொடர்ந்து போரிட்டேன். வென்றேன். (இது கூட தவறுதான் குன்ஸாக ஜகா வாங்க கற்றுக்கொண்டேன்.

மக்கள் என்னமோ தினத்தந்தியில் வாரி கொட்டுவதாய் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கே கிடைப்பது ஒரே ஒரு ரூ.3000 மட்டுமே. மற்ற 1000த்து சில்லறை நான் செலவிட்ட பணத்தின் ரீபேமெண்டுதான். மற்றபடி அன்று என்ன செய்தேனோ அதையே தான் செய்து வருகிறேன். என்ன ஒரு வித்யாசம் என்றால் தினத்தந்தி எம்.டி.க்கு தந்தி வளர்ச்சிக்கு யோசனைகள் தெரிவித்து எழுதிய கடிதம் தவிர எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.


இதற்கு காரணமாய் நேரம்,காலம் என்று ஆயிரம் கூறலாம். அவை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் என் வாதம் ஒன்றே. ஏழ்மையை அங்கீகரிக்காது அதனுடன் தொடர்ந்து போரிட்டேன். களத்தில் நின்றேன். எங்கள் சரவணனை போல் எல்.ஐ.சி. மூட் அவுட் என்ற பெயரில் பாட்டிலை பிடித்திருந்தால் கதை கந்தல்தான். பார்ப்போம் ஏழ்மை மனிதனை என்ன செய்யும். அது ஏதும் செய்யாதிருக்க மனிதன் என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் பின்னொருமுறை பார்ப்போம்