Thursday, June 26, 2008

கவிஞர்களின் வாக்குகள் (கவிதை வரிகள் அப்படியே பலித்து விடுகின்றன.

தெய்வத்தால் ஆகாதெனினும் தன் மெய்வருத்தக் கூலி தரும்
எவனொருவ்ன் ஜாதகத்தில் வாக்குஸ்தானத்துடன் சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறதோ அவனுக்கு ஆசு கவி கை வரும். (நினைத்த மாத்திரத்தில் கவிதை சொல்லுதல்/ வைரமுத்து மாதிரி குடம் குடமாய் அழுது எழுதுபவன் ,பேனாவின் பின்பாகத்தை கடித்து துப்புபவன் ஜாதகத்தில் சுக்கிரன் நிச்சயம் ஃபணாலாகியிருப்பார்.

வாக்கு ஸ்தான‌த்தோடு தொடர்பு கொண்ட சுக்கிரன் கவிதையை மட்டும் தருவதில்லை வாக்கு பலிதத்தையும் தருகிறார். அதனால் தான் சில கவிஞர்களின் வாக்குகள் (கவிதை வரிகள் அப்படியே பலித்து விடுகின்றன. (உ.ம்: டி.ஆர். எழுதிய நான் ஒரு ராசியில்லா ராஜா பாட்டை பாடிய டி.எம்.எஸ் ஷெட் ஆகி விட்டார். வாயசைத்த சங்கரும் ஷெட் தான்.

டி.ஆருக்கே இத்தனை வாக்பலிதம் என்றால்..குறுகத்தரித்த வள்ளுவருக்கு இருக்காதா வாக்கு பலிதம்.

ஒன்னரை வருடங்களுக்கு முன் இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற மாதமிருமுறை பத்திரிக்கையை நான் ஆரம்பித்த போது அது லீகல் சைஸில் ஒரே காகிதத்தில் தான் வெளி வந்தது. கடந்த கங்கையம்மன் திருவிழாவுக்கு பத்து பக்கம் போட்டேன். இந்த வருடம் ஜனவரியில் இருந்து எங்கள் தொகுதியின் ஹேட்ரிக் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் ஆதரவாளர்களின் ஆதரவுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த ஸ்டேஜில் எங்கள் விளம்பர மேலாளர் திரு.(திரு திரு என்று விழிப்பதால்) சரவணன் மூக்கால் அழுவது வியப்பாக உள்ளது.

அவருக்கு வள்ளுவரின் தெய்வத்தால் ஆகாதெனினும் தன் மெய்வருத்தக் கூலி தரும்
என்ற வரிகளுக்கான பொருளை யார் விவரிப்பது?