Monday, June 30, 2008

பிரிட்டீஷ் காரனை காந்தி சத்தாய்த்தது போல் என்னை சத்தாய்க்கும் என் ம‌னைவி

"சீடை " இந்த வார்த்தைக்கு உங்களுக்கு தெரிந்த பொருள் கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் ஒரு தின்பண்டம் என்பதே. ஆனால் இதற்கு என் அகராதியில் அர்த்தமே வேறு.

பயிருக்கு பூச்சி பிடிப்பதை தெலுங்கில் "ச்சீடா" என்பார்கள். மனிதனுக்கு 9 கிரகங்களும் எதிராகி ,வறுமையின் பிடியில் சிக்கி, அவனது சகலமும் வறுமைக்கு இலக்காகி விட்ட நிலையை சீடை என்று நான் குறிப்பிடுவது வழக்கம்.

உபயம்: என் சகோதரர் அமரர். செல்வராஜ் அவர்களின் ந‌ண்பர் திரு வளையாபதி


வெறுப்பில் இருக்கும்போது ஷீடை என்றும் சொல்வதுண்டு.

சீடை அடித்துவிட்ட சமயம் மனிதனின் முகம்,உடல்,எண்ணம்,பாடி லாங்குவேஜ் எல்லாமே மாறிவிடுகிறது. இது போல் சீடை பிடித்த பார்ட்டிகள் என் வாழ்வில் அடிக்கடி குறுக்கிடுவது வழக்கம். சில சமயம் விதியின்றியும், சில சமயம் திமிர் காரணமாயும் இவர்களை என் வாழ்வில் அனுமதிப்பதுண்டு. இதில் லேட்டஸ்ட் உதாரணம் பேட்டை சரவணன் மற்றும் பிள்ளை.

பேட்டை சரவணன் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவில் சொல்லியாயிற்று. எனவே அவரது தற்போதைய நிலையை பற்றி சிறு குறிப்புடன் முடித்து பிள்ளையை பற்றி சொல்கிறேன். பேட்டை சரவணன் எல்.ஐ.சி.ஏஜெண்டாக இருந்து , பஜாஜுக்கு மாறி சிலகாலம் எனது இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப்புக்கு அட்வர்டைஸ்மெண்ட் ரெப்பாக பணியாற்றினார்.

முதலிரண்டு இஷ்யூவுக்கு நேரம் நல்லாருந்து தப்பிச்சுட்டார். நான் கோழி . ஆசனம் நோக முட்டை போட்டான பிறகு அதை எடுத்டுக்கிட்டு ஃபீல்டுக்கு போவார். கடந்த இஷ்யூவின் போது குருட்டு நாய்க்கு காய்ந்த நரகல் கிடைத்தது போல் (என் தாத்தாவின் பிரயோகம்) ஏதோ கிடைத்துவிட்டது. ஆன சீன் எல்லாம் போட்டார். இந்த முறை என்னிடம் ரூ.2000 முன் பணம் கேட்டார். ஏதோ செட்டியார்கள் சகவாசத்தால் எனக்கும் ஓரளவு வியாபாரம் தெரிந்திருப்பதால் ரூ.,1000 மட்டும் கொடுத்தேன். இம்முறை ரூ.500 க்கான விளம்பரம் மட்டும் கிடைத்தது. அதுவும் பப்ளிஷ் ஆனபிறகே பணம் என்ற‌ நிப‌ந்த‌னையுட‌ன்.


இந்நிலையில் பிரிட்டீஷ் காரனை காந்தி சத்தாய்த்தது போல் என்னை சத்தாய்க்கும் என் ம‌னைவியையே ந‌ல்ல‌வ‌ளாக்கி விட்டார் ச‌ர‌வ‌ண‌ன். அழி என்ன‌வோ அதே வ‌ழிதான். ஒத்துழையாமை இய‌க்க‌ம். நான் என்ன‌ பொறுமையில் பூமா தேவியென்றா சொல்லிக்கொண்டேன். அவ‌ளே இப்போது பூக‌ம்ப‌ம் மூல‌ம் த‌ன் எதிர்ப்பை ப‌திவு செய்ய‌ துவ‌ங்கிவிட்டாள். த‌ங்க‌ள் சேவைக்கு இப்போது தேவையில்லை ஓடிப்போயிருங்க‌ அட்வான்ஸ‌ திருப்பி க‌ட்டுங்க‌ என்று ஸ்க‌ட் விட்டுவிட்டேன்.

அந்த‌ சீடை அடித்த‌ பார்ட்டி என‌க்கு சீடை அடிக்க‌செய்துவிடும் நிலை வ‌ந்துவிட்ட‌தால் க‌ழ‌ட்டிவிட்டேனே த‌விர‌ இப்போதும் என்னில் விரோத‌மில்லை. உட்கார்ந்திருக்கும் கிளையை வெட்டித‌ள்றானே என்ற‌ ஆத்திர‌ம்தான்

Saturday, June 28, 2008

கஜூரஹோ கண்டு வந்தோம்




சித்தூரில் காலை 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு போபால் சேர்ந்தோம்.ரயில் நிலயத்திலேயே சுத்தமான குளியல் அறைகள் உள்ளன. அங்கேயே குளித்து லக்கேஜ் ரூமில் எங்களுடைய பெட்டிகளை வைத்துவிட்டு (கட்டாயம் பூட்டு நம்மிடம் இருக்க வேண்டும் பூட்டியிருந்தால்தான் அனுமதி) ரசீது பெற்றுக் கொண்டு ரயில் நிலையத்தின் எதிரில் உள்ள தமிழ் ஓட்டலில் குளித்து டிபன் சாப்பிட்டோம். சாஞ்சிக்கு செல்ல‌ ஆட்டோ பற்றி ஓட்டல் காரர்களையே விசாரித்தோம். அவர்களே ஒரு ஆட்டோ பேசி தர புறப்பட்டோம்.(100 கி.மீ, போய்வர ரூ 400) வழியில் தேனீர்,சமோசா,ஜிலேபி வேகவைத்த முட்டை..எதுவுமே ரூ.3 க்கு அதிகமில்லை. இங்கு இரவு இட்லி கடைகள் போலே அங்கு முட்டை கடைகள். வேகவைத்த முட்டை ரூ.3, பிரட் ஆம்லெட் ரூ.10 .பஜ்ஜி,போண்டா வடைக்கு பதில் சமோசா,ஜிலேபி.

சாஞ்சியில் அசோகர் ஸ்தூபங்கள் மற்றும் மியூசியத்தில் அசோகர் காலத்து 3 சிங்கங்கள் கொண்ட அசோகர் ஸ்தூபங்கள் & போர் கருவிகள் ,பொருட்கள்,சிலைகளை பார்க்கலாம். அங்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் அதிகமானவர்கள் ஜப்பானியர்கள் & இலங்கையை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

அசோகர் ஸ்தூபம் எல்லாம் பார்த்துக்கொண்டு 6 மணியளவில் ரயில் நிலையம் வந்தோம்.

அடுத்து கஜூரஹோ செல்வத‌ற்கு இரவு 8 மணிக்கு ரயில். கஜூரஹோ செல்வதற்கு மஹோபா என்ற ஊரில் இறங்கி,80 கி.மீ தூரம் பேருந்தில் செல்ல வேண்டும்.மஹோபா அதிகாலை 3 மணிக்கு சென்றோம். ரயில் நிலையத்திற்கு வெளியே ஸ்வீட்ஸ்டால்கள் மற்றும், தேனீர் கடைகள் இரவு முழுக்க திறந்திருக்கின்றன. குளிர மிக அதிகமாக இருக்கிறது. ரயிலுக்கு காத்திருப்போர் எரியும் பொருள் எதுவாயிருந்தாலும் பொறுக்கி எடுத்துவந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். நாங்களும் ஜோதியில் கலந்தோம். அந்த குளிரிலும் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளை கொண்டு தம் ஆட்டோக்களை நிரப்புவதில் மும்முரமாயிருந்தனர். எல்லோரும் பார்க்க அழுக்காகவே காட்சியளிக்கிறார்கள். எல்லோர் வாயிலும் வகை வகையான பாக்கு தூள். எங்கு பார்த்தாலும் துப்பியபடி உள்ளனர். நம் மீதே துப்பிவிட்டார்களோ என்று பார்த்துக்கொள்ளும் படி இருக்கும். காலை பேருந்து நிலையம் சென்று கஜூரஹோ செல்லும் பேருந்தில் 9 மணிக்கு ஏறினோம். 80 கி.மீட்டர் பயணத்தில் கண்டக்டரும், ட்ரைவரும் 5, 6 இடங்களில் இறங்கி டீ குடித்தபடி 4 1/2 மணி நேரமாக்கிவிட்டனர். வ‌ழியெல்லாம் ஆட்க‌ள் துப்பாக்கிக‌ளுட‌ன் ந‌ட‌மாடுகின்ற‌ன‌ர். வாகனங்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்கிறார்க‌ள். தோட்டாக்க‌ள் அட‌ங்கிய‌ பெல்ட்டை பூணூல் மாதிரி அணிந்திருக்கிறார்க‌ள்.

ம‌திய‌ம் 2 ம‌ணிக்கு க‌ஜூர‌ஹோ போய் சேர்ந்தோம். த‌ங்குவ‌த‌ற்கான‌ அறைக‌ள் ரூ.300 முத‌ல், 3,5,10 ஆயிர‌ங்க‌ள் வ‌ரை இருக்கிற‌து. எல்லாம் வெளிநாட்டு ப‌ய‌ணிக‌ள் தான்.அனைத்து நாட்டு உண‌வ‌க‌ங்க‌ளூம் உள்ள‌ன‌. ஆனால் தென்ன‌க‌ உண‌வ‌க‌ங்க‌ள் ம‌ட்டுமில்லை. தாலி என்று ரூ.70,100 ,150,200 க்கு கிடைக்கிறது. ரொட்டி சாத‌ம் ப‌ருப்பு,பொரிய‌ல்,ஸ்வீட் அனைத்தும் அட‌ங்கிய‌ ஸ்பெஷ‌ல் பேக்கேஜ். இதை விட்டால் இருக்க‌வே இருக்கிற‌து வ‌ணிக‌ளில் பிர‌ட் ஆம்லெட்,முட்டை,பானிபூரி,வேர்க‌டலை நாங்க‌ள் த‌ங்கிய‌ அறையில் ரூ.400 க்கு 3 ப‌டுக்கைக‌ள்.. வ‌ச‌தியாக‌வே இருந்த‌து. எங்க‌ள் ப‌க்க‌த்து அறையில் இத்தாலி நாட்டினன் ஒருவன் 15 நாட்களாக தங்கியிருப்பது தெரிய வந்தது. அவ‌னே ச‌மைத்து சாப்பிட்டுகொள்கிறானாம்.

கஜூரகோவில் தெற்கு திசை & வடக்கு திசை கோவில்கள் என்று உள்ளன. வடக்கு திசையில் ஆங்காங்கே ஒன்றொன்று என ஏழு,எட்டு வரை உள்ளன. தெற்கில் ஒரே இடத்தில் 13 கோவில்கள் உள்ளன. அங்கே மாலை நேரம் தினசரி 7 மணிக்கு ஆங்கிலத்திலும் 8 மணிக்கு கிந்தியிலும் லைட் ஷோ நடக்கிறது. அதற்கு 100 ரூ கட்டணம். கஜூரஹோவின் சரித்திரத்தை ஹிந்தி நடிகர் அமிதாப்பின் குரலில் விவரிக்கப்படுகிறது.

சிற்ப‌ கோவில்க‌ள் எல்லாவ‌ற்றையும் பார்த்துகொண்டு ம‌றுநாள் மாலை 5 ம‌ணிக்கு பேருந்து மூல‌ம் ம‌ஹோபா திரும்பினோம். பேருந்தில் வழிநெடுகிலும் ஆங்காங்கு நெருப்பு எரிக்க ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறார்கள் . அத்தனை குளிர். அதை பார்ர்க்க முப்பது நாளும்பவுர்ணமி என்பது போல் 30 நாளும் அங்கு போகியோ என்று எண்ண தோன்றுகிறது. இரவு 8.30 மணிக்கு மகோபா பேருந்து நிலையம் வந்தோம். பேருந்து நிலயத்திலிருந்து ரயில் நிலையம் செல்ல 5 கி.மீ தூரமிருக்கும் . அதற்கு நபர் ஒன்றுக்கு ஷேர் ஆட்டோவில் ரூ.5 வாங்குகிறார்கள். அந்த குளிரிலும் சிறுவயது பையன் ஆட்டோ ஓட்டுகிறான். ரயில் நிலையம் அடைந்த பிறகு இரவு 12 மணிவரை நேரத்தை கொல்லவேண்டும். குளிரை சமாளிக்க வேண்டும். ரயில் நிலையம் வெளியே பெரிய பெரிய கட்டைகளை போட்டு தீமூட்டி குளிர்காய்கிறார்கள். ரயில் நிலையத்தில் இரவு முழுக்க துப்பாக்கியுடன் 3 காவலர்கள்

அன்று இர‌வு 12 ம‌ணிக்கு காசிக்கு ப‌ய‌ண‌மானோம்.ம‌றுநாள் ம‌திய‌ம் 12 ம‌ணிக்கு காசி. அங்கு திருப்ப‌தி சமீபத்திலுள்ள ஏற்பேடு ஆசிர‌ம‌ கிளை ஒன்று உள்ள‌து. இதை ந‌ண்பன் ஒருவன் மூல‌ம் ஏற்கென‌வே அறிந்திருந்த‌தால் அங்கு சென்றோம். ஒரு சாமியாரின் உத‌வியுட‌ன் எல்லா இட‌ங்க‌ளையும் சுற்றிப்பார்த்தோம். வ‌ழி நெடுகிலும் ராணுவ‌ வீர‌ர்க‌ள் துப்பாக்கியுட‌ன்,கோவிலை சுற்றி,சாலைக‌ளில் 200 மேற்ப‌ட்ட‌ ராணுவ‌ தொப்பிக‌ள். காசி ந‌க‌ர‌த்து சாலைக‌ளில் நெரிச‌ல் அதிக‌ம். இதில் ரிக்ஷாக்க‌ள் மிக அதிக‌ம். 8 கி.மீ தூர‌த்தை கடக்க 2 ம‌ணி நேரம் ஆகிய‌து.

ஆட்டோ டிரைவ‌ரை விசாரித்தால் 3 ம‌ணி நேர‌மாகுமென்றார். சாலைகளில் அந்த‌ அள‌வுக்கு நெரிச‌ல். கோவிலுக்கு செல்ல‌ சின்ன‌ சின்ன‌ ச‌ந்து போன்ற‌ தெருக்க‌ள் வ‌ழியாக‌த்தான் செல்ல‌ வேண்டியிருக்கிற‌து. தெருவெங்கும் க‌டைக‌ள். பால்,வெண்ணைய்,பன்னீர் அதிக‌மாக‌ தென்ப‌டுகிற‌து.சிறு ம‌ண்பாண்ட‌ங்க‌ளில் பாலில் த‌யாரித்த‌ வ‌கை வ‌கையான லஸ்‌ஸிக‌ள் கிடைக்கின்ற‌ன‌.

இந்க ஒருவார பயணத்தில் நாங்கள் அறையெடுத்து தங்கியது கஜூரகோவில் மட்டும் தான். மற்ற இரவுகள் எல்லாம் ரயில் நிலையத்திலேயே தங்கும்படி திட்டமிட்டுக் கொண்டோம்

Thursday, June 26, 2008

கவிஞர்களின் வாக்குகள் (கவிதை வரிகள் அப்படியே பலித்து விடுகின்றன.

தெய்வத்தால் ஆகாதெனினும் தன் மெய்வருத்தக் கூலி தரும்
எவனொருவ்ன் ஜாதகத்தில் வாக்குஸ்தானத்துடன் சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறதோ அவனுக்கு ஆசு கவி கை வரும். (நினைத்த மாத்திரத்தில் கவிதை சொல்லுதல்/ வைரமுத்து மாதிரி குடம் குடமாய் அழுது எழுதுபவன் ,பேனாவின் பின்பாகத்தை கடித்து துப்புபவன் ஜாதகத்தில் சுக்கிரன் நிச்சயம் ஃபணாலாகியிருப்பார்.

வாக்கு ஸ்தான‌த்தோடு தொடர்பு கொண்ட சுக்கிரன் கவிதையை மட்டும் தருவதில்லை வாக்கு பலிதத்தையும் தருகிறார். அதனால் தான் சில கவிஞர்களின் வாக்குகள் (கவிதை வரிகள் அப்படியே பலித்து விடுகின்றன. (உ.ம்: டி.ஆர். எழுதிய நான் ஒரு ராசியில்லா ராஜா பாட்டை பாடிய டி.எம்.எஸ் ஷெட் ஆகி விட்டார். வாயசைத்த சங்கரும் ஷெட் தான்.

டி.ஆருக்கே இத்தனை வாக்பலிதம் என்றால்..குறுகத்தரித்த வள்ளுவருக்கு இருக்காதா வாக்கு பலிதம்.

ஒன்னரை வருடங்களுக்கு முன் இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற மாதமிருமுறை பத்திரிக்கையை நான் ஆரம்பித்த போது அது லீகல் சைஸில் ஒரே காகிதத்தில் தான் வெளி வந்தது. கடந்த கங்கையம்மன் திருவிழாவுக்கு பத்து பக்கம் போட்டேன். இந்த வருடம் ஜனவரியில் இருந்து எங்கள் தொகுதியின் ஹேட்ரிக் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் ஆதரவாளர்களின் ஆதரவுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த ஸ்டேஜில் எங்கள் விளம்பர மேலாளர் திரு.(திரு திரு என்று விழிப்பதால்) சரவணன் மூக்கால் அழுவது வியப்பாக உள்ளது.

அவருக்கு வள்ளுவரின் தெய்வத்தால் ஆகாதெனினும் தன் மெய்வருத்தக் கூலி தரும்
என்ற வரிகளுக்கான பொருளை யார் விவரிப்பது?

Sunday, June 22, 2008

வீட்டு வேலைக்காரியுடன் சரசமாடச்செய்வார்.


ஜோதிடமும் செக்ஸும்
மனிதனில் மட்டுமல்ல வேறெந்த ஜீவ ராசியிலும் உள்ளது ஒரே சக்தி தான். அந்த சக்தி காமத்தின் வடிவில் வெளிப்படுகிறது. காம இச்சை அடக்கப்பட்டால் வன்முறையாக‌ வெளிப்படுகிறது.உ.ம்: ஆண் யானைக்கு மதம் பிடிக்க இதுவே காரணம்


எனவே ஒரு மனிதன் தன் செக்ஸ் வாழ்வை ஒழுங்காக திட்டமிட்டுக்கொண்டால் ஏறக்குறைய மொத்த வாழ்வுமே திட்டமிடப்பட்டுவிடும். எனவே தான் ஒரு ஜோதிட ஆய்வாளனாக இந்த பதிவை உள்ளிடுகிறேன்.

நவகிரக‌ங்களில் செக்ஸுக்கு காரகத்துவம் வகிக்கும் கிரகம் சுக்கிரன். சுக்கிரன் மேஷம்,கடகம்,விருச்சிகம்,தனுசு,மீனம் ஆகிய லக்ன காரர்களுக்கு பாவியாகிறார். எனவே இவர்களுக்கு சுக்கிரன் 3,10 ல் இருக்கும்போது செக்ஸ் தொடர்பான தொல்லைகளை தருவதில்லை. இதரர்களுக்கு?

3,10 ல் இருக்கும் போது செக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை அள்ளித்தருகிறார். லக்னத்தில் இருக்கும்போது காம நினைவு,காம கிளர்ச்சியையும், இரண்டில் இருக்கும்போது காமம் தொடர்பான பேச்சு,பாட்டையும் தருகிறார். 4ல் இருக்கும்போது வீட்டோடு இருந்து மார்னிங் ஷோ ,மேட்னி கூட போடச்சொல்கிறார். 5 ல் வரும்போது புத்தியெல்லாம் காமமே நிறைந்திருக்கும், 6ல் வரும்போது எதிரி குடும்பத்து பெண்ணுடன் காதல், காதலியுடன் ஊடல், பிறப்புறுப்பில் தொல்லையை தருவார். 8 ல் இருக்கும்போது அதீத காமக்கிளர்ச்சி, துய்ப்பினால் உடல் நலம் பாதிக்கச்செய்வார். 9ல் வரும்போது வெளியூர் சென்றாவது,சுகிக்கச் செய்வார். 11ல் இருக்கும்போது எதிர்பாராத இன்பத்தை அள்ளி வழங்குவார்.12ல் வரும்போது ஹோட்டல் சாப்பாட்டையாவது,காசு செலவழித்தாவது சாப்பிடச்செய்வார்.

கிரக‌ங்களுடன் சேரும்போது:
சூரியனுடன் சேர்ந்தால் விந்து ஊறாது. சந்திரனுடன் சேர்ந்தால் முன் கூட்டி ஸ்கலிதமாகும். ஸ்வப்ன ஸ்கலிதத்துக்கு சந்திரனே காரகர். செவ்வாயுடன் சேரும்போது பிறப்புறுப்பில் கொப்புளம்,எரிச்சல்,காயம் ஏற்படலாம். புதனுடன் சேரும்போது அரிப்பு, ராகு ,கேதுவுடன் சேரும்போது விஷப்பூச்சிகளால் பிறப்புறுப்பில் பாதிப்பு ஏற்படும்

குருவுடன் சேரும்போது மதிப்பிற்குரிய பெண்களிடம் வாலை ஆட்டச்செய்து வாங்கி கட்டிக்கொள்ளும்படி செய்வார். சனியுடன் சேர்ந்தால் நொண்டி ,முடம், வீட்டு வேலைக்காரியுடன் சரசமாடச்செய்வார்.

நவதுவாரங்கள் தான் நவகிரகங்கள். சுக்கிரன் ஜன்மேந்திரியத்துக்கு காரகர். இளமையில் சுக்கிர தசை வந்தால் பிஞ்சில் பழுத்து ஜாதகன் நாசமாவான். எனவே தான் குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் என்று ஜோதிட பழமொழி கூறுகிறது.

சுய இன்பத்துக்கு காரணம் : சுக்கிரன் லக்கினாதிபதியுடன்(ஜாதகரை காட்டுமிடம்) சேர்வது,1+12,1+7 போன்ற காம்பினேஷன் கள் காரணமாகும்

பரஸ்த்ரீ மோகம்:
1,7 ல் அநேக கிரகங்கள் இருப்பது. சுக்கிரனுடன் அல்லது சப்தமாதிபதி,அல்லது சுக்கிர‌ன் நின்ற இடத்ததிபதியுடன் அநேக கிரகங்கள் சேருவதும் பரஸ்த்ரீ மோகத்துக்கு கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்

அபய க்ஷேத்திரம் உடல் ஊனமுற்றோருக்கு வரம்


"ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" இதற்கு பொருள் இறைவன் மனிதர்கள் ரூபத்தில் எதிர்படுவான் என்பதே. இதனால் தான் பெரியோர் " மக்கள் சேவையே மகேசன் சேவை" என்று கூறியுள்ளனர். முழுமையான உடல்,மன நலம் கொண்ட மனிதர்களுகு புரியும் சேவையே மகேசன் சேவை என்றால் .. சமூகத்தால்,பெற்ற தாய் தந்தையரால் கூட நிராகரிக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு புரியும் சேவையை என்னைன்பது? மனித வாழ்வின் பொருள் என்பதா? கருப்பொருள் என்பதா?

சித்தூர் மாவட்டம், திருப்பதி புறநகர் பகுதியான ரேணிகுண்டா ரயில்வே கேட் அருகில் உள்ள அபயக்ஷேத்திரம் ஆசிரமத்தையும், சிறகொடிந்த பறவைகளாய் இருக்கும் 40 உடல் ஊனமுற்றோர்,மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளோரையும், அவர்களது தொண்டுக்கே தமது வாழ்வை அர்ப்பணித்துகொண்ட தஸ்லிமாவையும் பார்க்கும் பொழுது ஒரு கணத்தில் இத்தனை எண்ணங்கள் உங்கள் மனதில் வட்டமிடும். சர்வ மத சாரம் இது தானா என்ற ஞானோதயமும் ஏற்பட்டுவிடும்.
இத்தனைக்கும் தஸ்லிமா அரசகுமாரியுமல்ல செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பெண்ணுமல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தஸ்லிமாவின் தந்தை ஒரு டெய்லர். தனது 6 குழந்தைகளை காப்பாற்ற குவைத் சென்றார். அவர்களை படிக்க வைத்தார். தஸ்லிமாவின் தந்தை அடிக்கடி கூறுவார் :" சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதே அல்லாவுக்கு நாம் காட்டும் மரியாதை "

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை‍‍ இது ஆன்றோர் வாக்கு.தந்தையின் சொல் தஸ்லிமாவின் மனதில் கல்வெட்டாய் நின்றுவிட்டது. தஸ்லிமா மனோதத்துவம் படித்தார். கேட்கும் திறன் குறைந்தவர்களைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் குறித்த சிறப்பு கல்வியையும் பயின்றார். மகளிர் பல்கலை கழகத்தின் கோல்ட் மெடலையும் பெற்றார் தஸ்லிமா.

மனிதத்தை ம‌ண்ணாக்கி வரும் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் மனிதர்களுக்கு அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு தமது கல்வி பயன் பட வேண்டுமென்ற நோக்கத்துடன் கல்வி பயின்ற தஸ்லிமா, கல்வி என்பது பொருளீட்டத்தான் என்று எப்படி நினைப்பார். அவர் பெற்ற கல்விக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்தனையோ வாய்ப்புக்கள் கதவை தட்டின. இருந்தாலும் சிறிது காலம் //DEPEP//லும் ஒரு தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றிய தஸ்லிமா மாவட்டமெங்கும் அதிர்வுகளை கிளப்பி வரும் அபயக்ஷேத்திரத்தை ஆரம்பித்தார்.

ராஜவம்சத்தினரும்,பணக்காரர்களும் ஃபேஷனுக்காகவோ,தற்பெருமைக்காகவோ சேவை(?) புரிவது வழக்கம் ஆனால் தஸ்லிமா ஒரு நடுத்தர குடும்பத்து வாரிசு மட்டுமே இருந்தாலும் அவர்

திருப்பதி பால மந்திரில் படித்துகொண்டிருந்து தூரத்து உறவினர் ஒருவரால் அழைத்துச்செல்லப்பட்டு பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவருக்கு மனைவியாக சித்திரவை அனுபவித்த 13 வயது சிறும

மன நிலை பாதிக்கப்பட்டு,பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளாலேயே நிராகரிக்கப்பட்டு திருப்பதி தெருக்களில் அநாதையாக விடப்பட்ட சுலோச்சனம்மாள்(70)

ஏதேனும் பஸ் முன்னே தன் மகளை தள்ளி விட்டால் நஷ்ட ஈடுகிடைக்குமே என்று துடித்த தந்தை வடிவிலான எமனிடமிருந்து தப்பிய 5 வயது சிறுமி சிரிஷா

உடல் ஊனமுற்றவராயிருந்தும் பி.ஏ, பி.எட் படித்தும் வேலை கிடைக்காது வேலையில்லாமை என்னை தவணையில் கொல்கிறது,அது முழுவடுமாக என்னை கொன்று விடும் முன் நானே சாக அனுமதியுங்கள்,என்று மனித உரிமைகள் கமிஷனுக்கு கடிதம் எழுதிய இளைஞர்.

இது போன்ற‌ 40 பேருக்கும் த‌ஸ்லிமா தாயானார். எந்த‌ தாயும் தான் பெற்ற‌ குழ‌ந்தைக‌ளை ம‌ட்டும்தான் காப்பாற்றுவாள். ஆனால் த‌ஸ்லிமாவோ ந‌ம‌துஅன்னைய‌ரை ஈன்ற அன்னையாம் அம்பிகையை போல் இவ‌ர்க‌ளை காத்து ர‌ட்சித்து வ‌ருகிறார். அர‌சு த‌ர‌ப்பிலிருந்து எவ்வித‌ உத‌வியும் எதிர்பாராது ,த‌ந்தை வ‌ழி சொத்து, த‌ன‌து சொந்த‌ ப‌ண‌ம், யாரேனும் தாமாக‌ முன்வ‌ந்து அளிக்கும் ந‌ன்கொடைக‌ளின் உத‌வியுட‌ன் அப‌ய‌க்ஷேத்திராவை நிர்வ‌கித்து வ‌ருகிறார். ஆசிர‌ம‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு வெறும‌னே உண‌வு ,உடை,இருப்பிட‌ம் அளிப்ப‌தோடு த‌ஸ்லிமாவின் ப‌ணி முடிந்துவிட‌வில்லை. உட‌ல் ஊன‌முற்றோரின் நெஞ்ச‌ங்க‌ளில் த‌ன்ன‌ம்பிக்கையை துளிர்விட‌ச் செய்ய‌ அவ்ர்க‌ளுக்கு பிஸியோ தெர‌ஃபி, ஸ்பீச் தெர‌ஃபி அளிக்க‌ப்ப‌டுகிற‌து. சாதார‌ண‌ர்க‌ளுக்கு ச‌ம‌மாக‌ இவ‌ர்க‌ளை வ‌டித்தெடுக்க‌ எல்லா முய‌ற்சிக‌ளும் மேற்கொள்ள‌ப்ப‌டுகிற‌து.

ஆண்ம‌க‌ன் ஒரு குழ‌ந்தையை பெற்ற‌ பிற‌கே த‌ந்தையாகிறான். ஆனால் பெண் குழ‌ந்தையோ பிற‌க்கும்போதே தாயாக‌த்தான் பிற‌க்கிற‌து

என்பதற்கேற்ப தஸ்லிமாவின் வாழ்க்கை அமைந்துள்ளது. முழு ஆரோக்கியத்துடன் பூவாய் சிரிக்கும் பள்ளிக் குழந்தைகளின் மீது கூட எரிந்து விழும் டீச்சர்கள் அநேகம். இந்நிலையில் ஒருவருக்கு கேட்கும் திறனில்குறையிருக்கலாம். மற்றவருக்கு வேறேதேனும் குறையிருக்கலாம். இருந்தாலும் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் 40 பேரையும் கண்ணுக்கு இமையாய் இருந்து அன்றலர்ந்த மலராய் புன்னகை சிந்தியபடி வளைய வரும் தஸ்லிமாவை பார்த்தால் உருகாத நெஞ்சமும் உருகும்.

உண்மையில் இது நாம் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய சீரிய பணி. சிறுவயதில் ப்ரேயர் ஹாலில் தினசரி நாமெல்லோருமே " இந்தியர் அனைவரும் என் சகோதர சகோதிரிகள் " என்று பிரமாணம் செய்திருக்கிறோம். நம் சகோதரருக்கோ,சகோதிரிக்கோ ஊனம் ஏற்பட்டால் அவனை/அவளை அநாதையாக விட்டு விடுவோமா? //No Never !//

அபய க்ஷேத்திரத்தில் உள்ள அந்த 40 பேர் நம் சகோதர சகோதிரிகள் இல்லையா? அவர்களது சுமையை தமது மெல்லிய தோள்களில் சுமக்கும் தஸ்லிமா நம் சகோதிரியல்லவா?


வெறுமனே இருளை சபிப்பதுமூடத்தனம். சிறு தீபம் ஏற்றுவோம் !

அபய க்ஷேத்திரத்துக்கு அபயம் அளிப்போம் !

தானம் வருமான வரி தள்ளுபடியை பெற கோடீஸ்வ‌ரர்கள் பின்பற்றும் வழி மட்டுமல்ல‌

நாம் மனிதர்கள் என்றும் , நம்மில் மனிதம் இன்னும் உயிருடன் தான் உள்ளதென்றும், நம் உள்ளத்துக்கும்,இந்த உலகத்துக்கும் பறை சாற்றும் முயற்சி தானம்.

நித்தமும் ஆசைகளின் ஊஞ்சலில் அலைபாயும் மனம் ஒரு கணம் அந்த உதய சூரியனில் லயிக்கும் தங்கக்கணம் தானம்.

எவ்வளவு சிறியது..எவ்வளவு பெரியது..என்பதெல்லாம் கேள்வியே அல்ல . காதலை போலவே தானத்திலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எந்த நோக்கத்துடன் செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.

Saturday, June 21, 2008

70 வயது முதியவருக்கு மனைவியாக

இத்தனைக்கும் தஸ்லிமா அரசகுமாரியுமல்ல செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பெண்ணுமல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தஸ்லிமாவின் தந்தை ஒரு டெய்லர். தனது 6 குழந்தைகளை காப்பாற்ற குவைத் சென்றார். அவர்களை படிக்க வைத்தார். தஸ்லிமாவின் தந்தை அடிக்கடி கூறுவார் :" சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதே அல்லாவுக்கு நாம் காட்டும் மரியாதை "

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை‍‍ இது ஆன்றோர் வாக்கு.தந்தையின் சொல் தஸ்லிமாவின் மனதில் கல்வெட்டாய் நின்றுவிட்டது. தஸ்லிமா மனோதத்துவம் படித்தார். கேட்கும் திறன் குறைந்தவர்களைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் குறித்த சிறப்பு கல்வியையும் பயின்றார். மகளிர் பல்கலை கழகத்தின் கோல்ட் மெடலையும் பெற்றார் தஸ்லிமா.

மனிதத்தை ம‌ண்ணாக்கி வரும் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் மனிதர்களுக்கு அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு தமது கல்வி பயன் பட வேண்டுமென்ற நோக்கத்துடன் கல்வி பயின்ற தஸ்லிமா, கல்வி என்பது பொருளீட்டத்தான் என்று எப்படி நினைப்பார். அவர் பெற்ற கல்விக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்தனையோ வாய்ப்புக்கள் கதவை தட்டின. இருந்தாலும் சிறிது காலம் //DEPEP//லும் ஒரு தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றிய தஸ்லிமா மாவட்டமெங்கும் அதிர்வுகளை கிளப்பி வரும் அபயக்ஷேத்திரத்தை ஆரம்பித்தார்.

ராஜவம்சத்தினரும்,பணக்காரர்களும் ஃபேஷனுக்காகவோ,தற்பெருமைக்காகவோ சேவை(?) புரிவது வழக்கம் ஆனால் தஸ்லிமா ஒரு நடுத்தர குடும்பத்து வாரிசு மட்டுமே இருந்தாலும் அவர்

திருப்பதி பால மந்திரில் படித்துகொண்டிருந்து தூரத்து உறவினர் ஒருவரால் அழைத்துச்செல்லப்பட்டு பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவருக்கு மனைவியாக சித்திரவை அனுபவித்த 13 வயது சிறுமி

சர்வ மத சாரம்

அபய க்ஷேத்திரம் உடல் ஊனமுற்றோருக்கு வரம்

"ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" இதற்கு பொருள் இறைவன் மனிதர்கள் ரூபத்தில் எதிர்படுவான் என்பதே. இதனால் தான் பெரியோர் " மக்கள் சேவையே மகேசன் சேவை" என்று கூறியுள்ளனர். முழுமையான உடல்,மன நலம் கொண்ட மனிதர்களுகு புரியும் சேவையே மகேசன் சேவை என்றால் .. சமூகத்தால்,பெற்ற தாய் தந்தையரால் கூட நிராகரிக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு புரியும் சேவையை என்னைன்பது? மனித வாழ்வின் பொருள் என்பதா? கருப்பொருள் என்பதா?

சித்தூர் மாவட்டம், திருப்பதி புறநகர் பகுதியான ரேணிகுண்டா ரயில்வே கேட் அருகில் உள்ள அபயக்ஷேத்திரம் ஆசிரமத்தையும், சிறகொடிந்த பறவைகளாய் இருக்கும் 40 உடல் ஊனமுற்றோர்,மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளோரையும், அவர்களது தொண்டுக்கே தமது வாழ்வை அர்ப்பணித்துகொண்ட தஸ்லிமாவையும் பார்க்கும் பொழுது ஒரு கணத்தில் இத்தனை எண்ணங்கள் உங்கள் மனதில் வட்டமிடும். சர்வ மத சாரம் இது தானா என்ற ஞானோதயமும் ஏற்பட்டுவிடும்.

Friday, June 20, 2008

நிறை வேறாத செக்ஸ் ஆசைகள்

நிறை வேறாத செக்ஸ் ஆசைகள் வன்முறையாக வெளிப்படுகின்றன. மனிதனின் சகல செயல்பாடுகளுக்கும் உந்துதலை அளிப்பது செக்ஸுக்கான ஏக்கமும்,அதை பெறுவதற்கான வாய்ப்பும் ,அதற்கான தயாரிப்பும் தான். சில உதாரணங்கள்:

1.நிறைய பணம் சம்பாதிப்பது: நிறைய பெண்களை புணரலாம் என்பதற்காகவே
2.சிறந்த க‌லை படைப்புகளை தர தேவை: மித மிஞ்சிய செக்ஸ் பவர் , செக்ஸில் முழுமையாக செலவழிந்துவிடாது மிச்சமிருக்கவேண்டும்.
3.வீடு க‌ட்டுவ‌து: ப‌டுக்கைய‌றை இருக்குமே அத‌ற்காக‌
4.மெல்லிய,அரைகுறை உடைக‌ள் அணிவ‌து:என்னைப்பார்,என் அழ‌கைப்பார் என்ற‌ அழைப்பு

5.க்ளாஸ் ஃப‌ர்ஸ்ட் வ‌ருவ‌து: அஃதே
6.தலை மேல் கை வைத்து ஆசீர்வ‌திப்ப‌து: அப்ப‌டியே அந்த‌ த‌லையை அழுத்தி த‌ன் பிற‌ப்புறுப்புக்க‌ருகில் கொண்டு வ‌ரும் முய‌ற்சி. (ஆனால் அது முழுமைய‌டைவ‌தில்லை)
7.காலில் விழுத‌ல்: எதிராளி உறுப்பை சுவைக்க‌ த‌யார் என்ற‌ அறிவிப்பு
8.ப‌ல் தேய்த்த‌ல்: வாய்க்கும் இன‌ உறுப்புக்கும் தொட‌ர்பு இருக்கிற‌து. ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் வாய்,முடிவு குத‌ம். குத‌த்தின் அருகில் இன‌ உறுப்பு உள்ள‌து. வாயில் ஏற்ப‌டும் அசைவு இன‌ உறுப்பை அடைகிற‌து.(குள‌த்தில் க‌ல்லெறிந்தாற்போல். வாய் ஓயாது பேசுவ‌தும், மாவு மிஷ‌ன் போன்று தின்ப‌தும் கூட‌ நிறைவேறாத‌ செக்ஸ் ஆசையின் அடையாள‌ம் தான்.

Wednesday, June 18, 2008

தசாவாதாரம் - தண்ட கருமாந்திரம்.

தசாவாதாரம் உலக நாயகனை உட்டாலக்கடி ஆக்கிவிட்டதை மறுக்க முடியுமா?

கமல் நல்ல நடிகர், இதற்கு மேல் எதையும் கற்காமலே சிறந்த நடிகராகும் வாய்ப்பு கமலுக்கன்றி வேறு யாருக்கு உண்டு. என்ன ஒரு லொள்ளு என்றால் ஏற்கெனவே தன்னில் தெரிந்தோ தெரியாமலோ தங்கிவிட்டிருக்கும் கசடுகளை சுத்திகரித்து கொள்ளவேண்டும் அவ்வளவுதான். ரசிகன் கமலின் முகத்தையும், அதிலான நெற்றி,கண்கள்,புருவங்கள்,கன்னம்,மூக்கு,உதடுகள் கொட்டும் நடிப்பை காணத்தான் விரும்புவானே தவிர மாவு முகங்களை அல்ல. மேலும் இந்தியனில் அவசியம் கருதி அவன் ரசித்திருக்கலாம். தசாவதாரத்தில் என்ன அவசியம் இருக்கிறது இத்தனை வேடங்களை தரித்து ரசிகனின் பொறுமையை ஏன் சோதிக்க வேண்டும்.


நடிப்பு என்பது ரசிகனை ஜஸ்ட் நம்பவைப்பதாய் இருக்க வேண்டும். ஒரிஜனலாக செய்து அதை ரசிகன் பார்த்து ரசிப்பது வேறு. அதை சர்க்கஸ், சாகசம் என்று கூறலாமே தவிர அது நடிப்பல்ல. அந்த காலத்தில் என்.டி.ஆர் கூட ஒரே படத்தில் கர்ணன்,துரியோதனன், கிருஷ்ணர் வேடங்களை ஏற்றார் . அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதே எம்.டி.ஆர் 5 வேடம் போட்ட போது ஏற்கவில்லை. இத்தனைக்கும் வாழ்வில் முதல் முறையாக காண்டாக்ட் லென்ஸ் எல்லாம் வைத்து தான் நடித்தார் . படம் ஊத்திக்கொண்டது.

தசாவதாரத்தில் வில்லன் பாத்திரம் எவ்வித கனமோ,கண்ணியமோ இன்றி படைக்கப்பட்டிருக்கிறது. இதை கமல் ஏற்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை போன்றவையே முஸ்லீம் இளைஞர் பாத்திரம்,ஜார்ஜ் புஷ் பாத்திரம்,பாட்டி பாத்திரம். தலித் இளைஞன் பாத்திரம் பில்டப் எல்லாம் ஓகேதான். மெயின் லைனில் ஒட்ட மறுக்கிறதே. பாடக பாத்திரமும் தேவையற்ற பாத்திரம்.

என்கொய்ரி ஆஃபீஸர் பாத்திரத்தையும், விஞ்ஞானி பாத்திரத்தையும் மட்டும் கமல் ஏற்று சாதாரண படமாகவே வெளியிட்டிருக்கலாம். தேவையில்லாத பணச்செலவு.காத்திருப்பு .தண்ட கருமாந்திரம்.

Tuesday, June 17, 2008

தாயே தான் பெற்ற‌ குழ‌ந்தையை புற‌க்க‌ணிக்கிறாள்.


தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் த‌ர‌த்தினில் குறைவ‌துண்டோ?
சிங்க‌த்தின் கால்க‌ள் ப‌ழுது ப‌ட்டாலும் சீற்ற‌ம் குறைவ‌துண்டோ?

இவை க‌ண்ண‌தாச‌ன் பாட‌ல் வ‌ரிக‌ள். ஊன‌முற்ற‌ நாய‌க‌னுக்காக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரிக‌ள் இவை. அந்த‌ கால‌த்திலாவ‌து ஊன‌ம் ஒரு சாப‌மாகத்தான் க‌ருத‌ப்ப‌ட்ட‌து. ஊன‌முற்ற‌வ‌ர் எதிரில் வ‌ந்தால் அது அப‌ச‌குன‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்ட‌து. அதே ச‌ம‌ய‌த்தில் ஊன‌முற்ற‌ குழ‌ந்தைக‌ளோ, பெரிய‌வ‌ர்க‌ளோ அந்த‌ந்த‌ குடும்ப‌ங்க‌ளால் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌ட்டு தான் வ‌ந்த‌ன‌ர். ஆனால் இன்று?

ப‌த்து மாத‌ம் சும‌ந்து பெற்ற‌ தாயே தான் பெற்ற‌ குழ‌ந்தையை புற‌க்க‌ணிக்கிறாள்.(சில‌ர் கொன்றே போடுவ‌தும் அவ்வ‌ப்போது செய்திக‌ளில் வெளி வ‌ந்து கொண்டுதான் இருக்கிற‌து.) ஊன‌முற்றோரின் நிலை இதுவென்றால் மூளை வ‌ள‌ர்ச்சி பாதிக்க‌ப்ப‌ட்டோர்,ம‌ன‌நிலை த‌வ‌றியோர் நிலை ப‌ற்றி சொல்ல‌வே தேவையில்லை. இப்போதெ‌ல்லாம் புண்ணிய‌ க்ஷேத்திர‌ங்க‌ளுக்கு சில‌ர் வ‌ருவ‌தே த‌ம‌து ம‌ன‌ நிலை த‌வ‌றிய‌ உற‌வை கை க‌ழுவிச்செல்ல‌த்தான் என்ப‌தும் க‌ச‌ப்பான‌ நிஜ‌ம்.

இவ‌ர்க‌ளுக்கு அன்றாட‌ம் உண‌வு,உடை அளித்து இருப்பிட‌ம் வ‌ழ‌ங்குவ‌து ஒரு ப‌க்க‌ம் என்றால் இவ‌ர்க‌ளுக்கு போதுமான‌ ப‌யிற்சி (உட‌ல்,உள்ள‌) அளித்து சாதார‌ண‌ வாழ்க்கைக்கு கொண்டுவ‌ருவ‌து பெஉம் ச‌வாலாக‌ உள்ள‌து. ப‌ன்னூறு கோடிக‌ளில் ப‌ட்ஜெட் போடும் மாநில‌,ம‌த்திய‌ அர‌சுக‌ளுக்கே பெரும் ச‌வாலாக‌ இருக்கும் இந்த‌ சீரிய‌ ப‌ணியை ஒரு முக‌ம‌திய‌ டெய்ல‌ரின் ம‌க‌ள் கைகொண்டு "ஒண்டியாக‌" போராடுவ‌து ச‌ர்வ‌ நிச்ச‌ய‌மாக‌ ஒரு ச‌ரித்திர‌மே.தாம் கற்ற உயர்கல்விக்கு அர‌சு வேலை,த‌னியார்,அய‌ல்நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளில் வேலைக‌ள் தேடி வ‌ந்தாலும் அவ‌ற்றை உத‌றி ஊன‌முற்றோரின் ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌மாக‌ ஜொலிப்ப‌வ‌ர் த‌ஸ்லிமா.

சில‌கால‌ம் அர‌சு துறையிலும், சில‌கால‌ம் சில‌ தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ளிலும் ப‌ணி புரிந்து த‌ற்போது அப‌ய‌க்ஷேத்திர‌ம் என்ற‌ பெய‌ரில் உட‌ல்,ம‌ன‌ ஊன‌முள்ளோருக்கான‌ ஆசிர‌ம‌த்தை ஏற்ப‌டுத்தி நிர்வ‌கித்து வ‌ரும் த‌ஸ்லிமா ப‌ற்றி மேலும் சில‌ சிலிர்க்க‌ வைக்கும் த‌க‌வ‌ல் க‌ளை அடுத்த‌ ப‌திவில் த‌ருகிறேன்.

பின் குறிப்பு: தென்னிந்தியாவில்,ஆந்திர‌ மாநில‌ம், சித்தூர் மாவ‌ட்ட‌ம், திருப்ப‌தியை அடுத்துள்ள‌ ரேணிகுண்டா ர‌யில் நிலைய‌த்தை ஒட்டி உள்ள‌ அப‌ய‌க்ஷேத்திர‌த்திற்கு அர‌சு நிதி உதவி ஏதும் கிடையாது. த‌ஸ்லிமா த‌ன் கைப்ப‌ண‌த்தையும், க‌ருணையுள்ளோர் க‌னிவுட‌ன் த‌ரும் ந‌ன்கொடைக‌ளையும் கொண்டு இப்புனித‌ சேவையை தொட‌ர்ந்து வ‌ருகிறார்.

Saturday, June 14, 2008

முன்னுரை

முன்னுரை

நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் என்ற இந்த சிறு நூலுக்கு பெரிய சரித்திரமே இருக்கிறது. முருகன் என்ற இயற்பெயருக்கிணங்க வள்ளிக்குறத்தி ஒருத்தியை காதலித்ததும் , அவளுடன் ஓடிப்போய் கல்யாணம் கட்டும் முன் ஒரு மரத்தடி ஜோதிடரை சந்தித்ததும், என் காதல் கதை அவர் சொன்னபடியே முடிந்ததும் சின்ன ஆரம்பம் தான். அதற்கு பிறகு தான் ஒரிஜினல் கதையே ஆரம்பம். நான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தபோது சம்மர் லீவுக்கு மாமா ஊருக்கு போய் வந்த சிறுவன் தன் பெட்டியை குடைந்தது போலிருந்ததே தவிர புதிதாக கற்றேன் என்று கூறமுடியாது. 1989 ,பிப்ரவரியில் முதல் ஜோதிடரை சந்திப்பதென்ன 1990 மார்ச் மாதத்திலேயே ஆஃபீஸ் போட்டு ஜோதிடம் சொல்ல ஆரம்பிப்பதென்ன?

பலன் சொன்ன பிரதாபங்கள் ஒருபக்கம் என்றால்..சம்பிரதாய பரிகாரங்களின் அடிப்படையை பிடித்ததும் அவை அடிப்படையை விட்டு விலகி ஓடிவிட்டிருப்பதையும் அறிந்து நவீன பரிகாரங்களை கண்டு பிடித்ததும் பெரிய கதை.

பாகாலாவில் இருக்கும்போது நண்பன் ஒருவனை வைத்து தெலுங்கில் எழுத ஆரம்பித்ததும், அப்போது வாழ்வில் வீசிய புயலும் இந்த நவீன பரிகாரங்கள் படைப்பின் ரகசியங்கள் என்ற உண்மையை பறை சாற்றின.

பின்பு ராஜரிஷி என்ற அற்பாயுசு பத்திரிக்கையில் வெளிவ‌ந்ததும், ஆன்மீகம் மாத இதழில் பந்தாவாய் தொடராக ஆரம்பித்து படக்கென்று நிறுத்தப்பட்டதும் தனிக்கதை.
பின்பு ராஜமண்ட்ரி (தமிழில் எழுதப்படுவது போல் ராஜ முந்திரியுமில்லை திராட்சையுமில்லை) கொல்லபூடி வீராசாமி அண்ட் சன்ஸ் இதை பிரசுரிக்க முன் வந்ததும், அதை ஒரு தரம் அவர்களே தட்டச்சி ப்ரூஃப் ரீடிங்கிற்கு அனுப்பியதும், அதை சரிபார்க்க வேண்டிய ஆசாமியே போய் சேர்ந்ததும் மற்றொரு கிளைக்கதை.


2007 ஏப்ரலில் தினத்தந்தியில் சேர்ந்தேன். ஆசிரியர் தொடராவே போட்ருவம் என்று கொம்பு சீவ , சம்பள தைரியத்தில் அநியாய ரேட்டுக்கு வேலூரில் தட்டச்ச செய்து அது ஜோதிட பூமி மாத இதழில் முழுமையாக வெளிவந்தது ஒரு துணைக்கதை. பிரிண்டிங் டெக்னாலஜி வளர்ச்சி காரணமாய் புத்தகம் அச்சிட பெண்டாட்டி தாலியை அடகு வைக்கவேண்டிய‌அவசியமில்லாத காரணத்தாலும், சித்தூர் கிருஷ்ணா ஜ்வெல்லர்ஸ், தேஜா ஸ்வீட்ஸ், துர்கா ஸ்வீட்ஸ், ஆற்காடு ஸ்வீட்ஸ், துர்கா மோட்டார் டிரைவிங் ஸ்கூல் போன்ற விளம்பரதாரர்களின் பெரியமனதாலும் லோக்கல் மாதமிருமுறை நடத்திய அனுபவம் கை கொடுக்க, தினத்த‌தந்தியின் அபயக்கரம் ரொட்டி வேட்டைக்கு தள்ளாதிருக்க இந்த சிறு நூல் வெளிவருகிறது.

"விருந்துண்ணப் போகும்போது விருந்து குறித்த விளக்கம் ஏதுக்கு" என்பது தெலுங்கு

பழமொழி. எனவே குதியுங்கள் புதிய வெள்ளத்தில். அடித்து செல்லட்டும் ஜோதிடம் குறித்த தவறான நம்பிக்கைகள்.

தங்கள்,

சித்தூர்.எஸ்.முருகேசன்,
ஜோதிட ஆய்வாளர்

Thursday, June 12, 2008

விலாசமில்லாத விஜயகாந்த்



நான் ரொம்ப சின்ன ஆளுங்க.. ஆனால் சித்தூர் எஸ் முருகேஷன் ,சித்தூர் ஆ.பி என்று விலாசமெழுதி கார்டு போடுங்க பட்டுனு சேரும். ஆனால் பாருங்க விஜயகாந்து தூள் தாலா திறந்து வச்ச அவரோட தில்லி கட்சி அலுவலக முகவரிக்கு (பக்கா) கவர் அனுப்பிச்சேங்க . பட்டுனு ரிட்டர்ன் வந்துருச்சு.

என்ன விஷயம்னு கேளுங்க .. ஒரு நிறுவனத்தையோ ,கிளையையோ திறக்கறோம்னா அந்த ஏரியா போஸ்ட் ஆஃபீசுக்கு லெட்ட‌ர் மூலமா விஷயத்தை தெரிவிக்கனும். இது சாதாரண நடைமுறை. இதை ஃபாலோ பண்ற மூளை கூட இல்லாத ஆசாமி கலைஞரை கரிச்சு கொட்டறதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு

Sunday, June 8, 2008

பேட்டை சரவணன். எல்.ஐ.சி. ஏஜெண்ட்,

பேட்டை சரவணன். எல்.ஐ.சி. ஏஜெண்ட், சிலமாதம் பஜாஜ் எல்.ஐ.சி ஏஜெண்டாகவும், தற்போது எங்கள் சொந்த பத்திரிக்கையான இண்டியன் பொலிட்டிகல் க்ளேசப் பத்திரிக்கையின் விளம்பர நிர்வாகியாகவும் வேலை பார்க்கும் பார்ட்டி. இவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்.. குண்டியை சுற்றி கடன். காலையில் ஒரு கடன் காரன் வந்து கடன் கேட்டுவிட்டால் டவுனுக்கு வந்ததும் குவார்ட்டர் அடித்து விட்டு மிட்டூர் பார்க்கிலோ , ஆர்.டி.சி. பஸ்ஸ்டாண்டையும் திருத்தணி பஸ்ஸ்டாண்டையும் இணைக்கும் சந்தில் இருக்கும் கோயிலில் மட்டையாகி விடுவார்., அங்கே வாங்கி இங்கே கொடுத்து, இங்கே வாங்கி அங்கே கொடுத்து நிரந்தரம் கடனில் இருப்பார், அதுவும் விஷம் போல் ஏறிக்கொண்டே இருக்கும். எல்.ஐ.சி.யில் டார்கெட்டை கவர் செய்ய தானே ப்ரிமியம் கட்டி ஷெட் ஆகிவிட்டதாய் சொன்னதாய் ஞா.

தவறான முடிவால் நஷ்டப்பட்டுவிடுவதோ,கடனில் இருப்பதோ,குடிப்பதோ தவறு என்று சொல்லி விடும் அசம்ஞ்சம் நானில்லை. எங்கள் சத்யா கூட தீர்த்தம் போடுகிறான். மதியம் போட்டதும்,படுத்ததும், எழுந்ததும் தெரியாது, ராத்திரியில் 10 மணிக்கு கடைசி பைசா வரை கணக்கு பார்த்துவிட்டு தீர்த்தம் போடுவான். 1961 லிருந்து பஜாரில் எந்த செட்டியார் யாரை வைத்திருந்தார், எவர் மகள் எவனுடன் ஓடிப்போனாள் போன்ற புள்ளிவிவரங்களை எடுத்து விட்டபடி, தானும் சிரித்து அடுத்தவரையும் சிரிக்கச்செய்து போய் படுத்து விடுவான்,


பேட்டை சரவணன் மாதிரி விக்கியதற்கும், குசு வந்ததற்கும் குடிக்க ஆரம்பித்தானென்றால் அவன் மதுவுக்கு அடிமையாகிவிட்டான், குடிக்க காரணம் தேடுகிறான் என்று அர்த்தம்.

பெண்டாட்டிக்கு தாய் வீட்டில் போட்ட நகைகளை அடகு வைத்துவிட்டதாகவும்,அதை மீட்டு கொடுத்தால் ஒரு வாரத்தில் திருப்பி விடுவதாகவும் கூறிய சரவணன், எங்கள் பத்திரிக்கைக்காக தான் புக் செய்த விளம்பர கட்டணத்தை வசூலிக்க போவதாக கூறிவிட்டு (கமிஷன் 30 சதம்) செய்யும் கன காரியங்கள் என்ன தெரியுமா?

டீ கடையில் டீ சாப்பிட்டு, சஃபாரி போட்டுக் கொண்டு தமிழ்,தெலுங்கு தினசரிகளை மணிக்கணக்கில் படிப்பதும், தனது ஆட்டை தூக்கி மாட்டில் போடும் வேலைகளை பார்ப்பதும் தான்.


இத்த‌னைக்கும் ஆஃபீஸ் சாவி, எம் வீட்டு தெரு ரூம் சாவி, சைக்கிள் சாவி எல்லாம் கொடுத்து செல‌வுக்கு சில்ல‌றையும் கொடுத்து அனுப்புவேன். இருந்தும் இந்த‌ இழ‌வு. எரிச்ச‌லூட்டும் விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் போன் போட்டால் எடுக்க‌வே மாட்டான்.


இந்த‌ பார்ட்டிக்கு உத‌வாக்க‌ரை போனை அட‌கு வைத்து ரூ.500 ம், புரோ நோட்டு எழுதி 5,000 ம் ஏற்பாடு செய்திருக்கிறேன்.

எதிர்கால‌ம் குறித்த‌ திகிலில் மிஸ‌ஸ் ச‌ர‌வ‌ண‌ன் குருவி மாதிரி ஆகியிருக்க‌ , சின்ன‌ஞ்சிறு குழ‌ந்தை வேறு. இந்த‌ இம்சையை எங்கு சொல்ல‌..