Tuesday, February 1, 2011

12ஆம் பாவமும் பலான மேட்டரும்: 2

12 ஆம் பாவம் நீங்க செலவழிக்கும் விதம், தூக்கம்,செக்ஸ், மோட்சம் இத்யாதிய காட்டற இடம்ங்கறது ஞா இருக்கும்னு நினைக்கிறேன். கடந்த பதிவுல செக்ஸுக்கும்,செலவழிக்கும் முறைக்கும் உள்ள தொடர்பு பத்தி பொதுவா  பார்த்தோம்.

மரணத்தோட போராட செலவழிக்கிறிங்களா? அல்லது மரணத்தோட நிழல்களோட போராட செலவழிக்கிறிங்களாங்கறத பொருத்து செக்ஸுவல் பிஹேவியர் மாறும்னு கடந்த பதிவுல  சொல்லியிருந்தேன்.

கிரக நிலை:
ஏற்கெனவே  6ஆம் பாவம் பத்தின பதிவுல சொன்னதா ஞா இருந்தாலும் ரிப்பீட்டு (புதிய வரவுகளுக்காக) . 6,8,12 ல்லாம் துஸ்தானங்கள். இந்த பாவங்கள் காலியாயிருந்தா பெஸ்ட். மேற்படி துஸ்தானாதிபதிகளே துஸ்தானங்கள்ள இடம்  மாறி நின்னா பெட்டரு. உதாரணமா:

6ஆமிடத்துல எட்டாமிடத்து அதிபதி, 8ஆமிடத்துல 12 ஆமிடத்து அதிபதி, 12 மிடத்துல ஆறாமிடத்து அதிபதி. இவிக பரிவர்த்தனமும் ஆகக்கூடாது. அவர் ராசியில இவரு கூடாது. ஆட்சி பெறவும் கூடாது.

இந்த இடம் சுபபலமா இருந்தா மரணத்தோடவே மோத ஆரம்பிச்சுருவிங்க.(உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்)

உயிர் வாழ்தலின் அடையாளம் இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் . இதுல ஏதாவது ஒரு ஐட்டத்துல உங்க மைண்ட் ஃபிக்ஸ் ஆயிட்டா போதும் நீங்க மரணத்தோட மோத ஆரம்பிச்சுட்டிங்கனு அர்த்தம்.

சிலகாலம் செக்ஸ் உங்களை கவரலாம். உறவின் சமயத்தை நீட்டிக்க பெரிதும் விரும்புவிங்க. பலர் சக்ஸஸும் ஆகலாம். ஆனா நாளடைவுல இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் ஆகிய அம்சங்களின் மீதான உங்க கவர்ச்சி உங்க பாலியல் ஆர்வத்தை குறைச்சுரும்.இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் தன் உச்சத்துல இருக்கும்போது உங்க ஈகோ காணாம போயிருது. இந்த படைப்போட தொடர்பு கொண்டுர்ரிங்க.  ஒட்டு மொத்த மனித இனமே உங்களுக்கு உறவாயிருது . ஷார்ட்டா சொன்னா உங்க லைஃப்   ஆன்மீக பாதையில தறிகெட்டு  ஓட ஆரம்பிச்சுரும்

இந்த 12 ஆம் இடம் மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு மாறா தீயபலன் தரக்கூடிய வகையில இருந்தா மரணத்தோட நிழல்களோட மோத ஆரம்பிச்சுருவிங்க. ( இருட்டு -தனிமை-ஏழ்மை இத்யாதி). (உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்) இதுக்கு எவ்ள பணமிருந்தாலும் போதாது. நிழல் யுத்தத்துல வெற்றி கிடைக்க வாய்ப்பே இல்லை.அதனால தோத்துட்டதாவே நினைச்சு மறுபடி மறுபடி போராடிக்கிட்டே இருப்பிங்க.

பணம் சம்பாதிக்கனும்னா மக்களோட கொல்லும் இச்சையை நீங்க நிறைவேத்தனும். ( ஈகோவை விட்டுரனும்) . இது கொல்லும் வெறியா மாறும். அதை செக்சுல நிறைவேத்திக்க ட்ரை பண்ணுவிங்க.

ஓரளவு சம்பாதிச்சுட்டா அப்பாறம் நீங்க கொல்ல ஆரம்பிச்சுருவிங்க. இதுக்கு பணம் தேவை. பெரும்பணம். ( முகேஷ் அம்பானி வீடு கட்டினது இன்னாத்துக்கு தெரீமா .. நம்மையெல்லாம் சைக்கலாஜிக்கலா கொல்லத்தான் )  அந்த பணத்தை பெரிய அளவுல சம்பாதிக்க உங்களை நீங்க கொன்னுக்கனும். ( ஐ மீன் உங்களுக்குள்ளே இருக்கக்கூடிய மனிதத்தை,கருணையை )

மனிதனோட பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸான கொல்லும்,கொல்லப்படும் இச்சைகள் ரெண்டும் பணத்தின் மூலமாவே நிறைவேறிர்ரதால ஒரு ஸ்டேஜுக்கு அப்பாறம் செக்ஸை விட பணத்துலயே ஆர்காசம் கிடைக்க ஆரம்பிச்சிரும்.சோகம் என்னடான்னா பொருளாதார ரீதியில உசர உசர சிகரத்துல தான் தனிமை அதிகமா உணரப்படும்.  மறுபடி செக்ஸ் பேட்டைப்பக்கம் ஒதுங்குவிங்க  நடுவயசுல மறுபடியும்  செக்ஸ் உங்களை கவரும். நீங்க அதை தாண்டிவர முடியாம அதுலயே தேங்கிப்போயிருவிங்க.


தூக்கம் Vs செக்ஸ்:

தூங்கிப்போயிட்டா செக்ஸ் கிடையாது. செக்ஸ் வேணம்னா தூங்கமுடியாது. ஆனால் ஒழுங்கா தூங்கி எழுந்தா மைண்டுங்கற கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் பண்ண பிறவு அது லோட் ஆக   டைம் பிடிக்கும். அதனால உச்சத்தை தள்ளிப்போடலாம். அதுவே தள்ளிப்போகும். ஆழ்ந்த செக்ஸுக்கு பிறகு ஆழ்ந்த தூக்கம் வரும்.

செக்ஸும் -மோட்சமும்:

இதை அடுத்த பதிவுல பார்ப்போம். உடு ஜூட்..