Showing posts with label 12th lord. Show all posts
Showing posts with label 12th lord. Show all posts

Tuesday, February 1, 2011

12ஆம் பாவமும் பலான மேட்டரும்: 2

12 ஆம் பாவம் நீங்க செலவழிக்கும் விதம், தூக்கம்,செக்ஸ், மோட்சம் இத்யாதிய காட்டற இடம்ங்கறது ஞா இருக்கும்னு நினைக்கிறேன். கடந்த பதிவுல செக்ஸுக்கும்,செலவழிக்கும் முறைக்கும் உள்ள தொடர்பு பத்தி பொதுவா  பார்த்தோம்.

மரணத்தோட போராட செலவழிக்கிறிங்களா? அல்லது மரணத்தோட நிழல்களோட போராட செலவழிக்கிறிங்களாங்கறத பொருத்து செக்ஸுவல் பிஹேவியர் மாறும்னு கடந்த பதிவுல  சொல்லியிருந்தேன்.

கிரக நிலை:
ஏற்கெனவே  6ஆம் பாவம் பத்தின பதிவுல சொன்னதா ஞா இருந்தாலும் ரிப்பீட்டு (புதிய வரவுகளுக்காக) . 6,8,12 ல்லாம் துஸ்தானங்கள். இந்த பாவங்கள் காலியாயிருந்தா பெஸ்ட். மேற்படி துஸ்தானாதிபதிகளே துஸ்தானங்கள்ள இடம்  மாறி நின்னா பெட்டரு. உதாரணமா:

6ஆமிடத்துல எட்டாமிடத்து அதிபதி, 8ஆமிடத்துல 12 ஆமிடத்து அதிபதி, 12 மிடத்துல ஆறாமிடத்து அதிபதி. இவிக பரிவர்த்தனமும் ஆகக்கூடாது. அவர் ராசியில இவரு கூடாது. ஆட்சி பெறவும் கூடாது.

இந்த இடம் சுபபலமா இருந்தா மரணத்தோடவே மோத ஆரம்பிச்சுருவிங்க.(உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்)

உயிர் வாழ்தலின் அடையாளம் இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் . இதுல ஏதாவது ஒரு ஐட்டத்துல உங்க மைண்ட் ஃபிக்ஸ் ஆயிட்டா போதும் நீங்க மரணத்தோட மோத ஆரம்பிச்சுட்டிங்கனு அர்த்தம்.

சிலகாலம் செக்ஸ் உங்களை கவரலாம். உறவின் சமயத்தை நீட்டிக்க பெரிதும் விரும்புவிங்க. பலர் சக்ஸஸும் ஆகலாம். ஆனா நாளடைவுல இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் ஆகிய அம்சங்களின் மீதான உங்க கவர்ச்சி உங்க பாலியல் ஆர்வத்தை குறைச்சுரும்.இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் தன் உச்சத்துல இருக்கும்போது உங்க ஈகோ காணாம போயிருது. இந்த படைப்போட தொடர்பு கொண்டுர்ரிங்க.  ஒட்டு மொத்த மனித இனமே உங்களுக்கு உறவாயிருது . ஷார்ட்டா சொன்னா உங்க லைஃப்   ஆன்மீக பாதையில தறிகெட்டு  ஓட ஆரம்பிச்சுரும்

இந்த 12 ஆம் இடம் மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு மாறா தீயபலன் தரக்கூடிய வகையில இருந்தா மரணத்தோட நிழல்களோட மோத ஆரம்பிச்சுருவிங்க. ( இருட்டு -தனிமை-ஏழ்மை இத்யாதி). (உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்) இதுக்கு எவ்ள பணமிருந்தாலும் போதாது. நிழல் யுத்தத்துல வெற்றி கிடைக்க வாய்ப்பே இல்லை.அதனால தோத்துட்டதாவே நினைச்சு மறுபடி மறுபடி போராடிக்கிட்டே இருப்பிங்க.

பணம் சம்பாதிக்கனும்னா மக்களோட கொல்லும் இச்சையை நீங்க நிறைவேத்தனும். ( ஈகோவை விட்டுரனும்) . இது கொல்லும் வெறியா மாறும். அதை செக்சுல நிறைவேத்திக்க ட்ரை பண்ணுவிங்க.

ஓரளவு சம்பாதிச்சுட்டா அப்பாறம் நீங்க கொல்ல ஆரம்பிச்சுருவிங்க. இதுக்கு பணம் தேவை. பெரும்பணம். ( முகேஷ் அம்பானி வீடு கட்டினது இன்னாத்துக்கு தெரீமா .. நம்மையெல்லாம் சைக்கலாஜிக்கலா கொல்லத்தான் )  அந்த பணத்தை பெரிய அளவுல சம்பாதிக்க உங்களை நீங்க கொன்னுக்கனும். ( ஐ மீன் உங்களுக்குள்ளே இருக்கக்கூடிய மனிதத்தை,கருணையை )

மனிதனோட பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸான கொல்லும்,கொல்லப்படும் இச்சைகள் ரெண்டும் பணத்தின் மூலமாவே நிறைவேறிர்ரதால ஒரு ஸ்டேஜுக்கு அப்பாறம் செக்ஸை விட பணத்துலயே ஆர்காசம் கிடைக்க ஆரம்பிச்சிரும்.சோகம் என்னடான்னா பொருளாதார ரீதியில உசர உசர சிகரத்துல தான் தனிமை அதிகமா உணரப்படும்.  மறுபடி செக்ஸ் பேட்டைப்பக்கம் ஒதுங்குவிங்க  நடுவயசுல மறுபடியும்  செக்ஸ் உங்களை கவரும். நீங்க அதை தாண்டிவர முடியாம அதுலயே தேங்கிப்போயிருவிங்க.


தூக்கம் Vs செக்ஸ்:

தூங்கிப்போயிட்டா செக்ஸ் கிடையாது. செக்ஸ் வேணம்னா தூங்கமுடியாது. ஆனால் ஒழுங்கா தூங்கி எழுந்தா மைண்டுங்கற கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் பண்ண பிறவு அது லோட் ஆக   டைம் பிடிக்கும். அதனால உச்சத்தை தள்ளிப்போடலாம். அதுவே தள்ளிப்போகும். ஆழ்ந்த செக்ஸுக்கு பிறகு ஆழ்ந்த தூக்கம் வரும்.

செக்ஸும் -மோட்சமும்:

இதை அடுத்த பதிவுல பார்ப்போம். உடு ஜூட்..

12 ஆம் பாவமும் பலான மேட்டரும்

நீங்க செலவழிக்கும் விதம், தூக்கம்,செக்ஸ், மோட்சம் இத்யாதிய காட்டற இடம் 12 ஆம் பாவம். மொதல்ல இந்த 4 ஐட்டத்துக்கும் உள்ள பரஸ்பர தொடர்பு என்னன்னு பார்த்துருவம்.

செலவழிக்கும் விதம் Vs தூக்கம்:
மறுபடி மறுபடி சொல்றேனு நினைக்காதிங்க (  நவீன மனிதனின் மறதி எனக்கு தெரியும்ல) மன்சங்க இன்னா பண்ணாலும் அதும் பின்னாடி இருக்கிற ரெண்டே ஆசை 1.கொல்லுதல் 2.கொல்லப்படுதல். பணத்தை வச்சிக்கினு இன்னா பண்றோம்னு ரோசிச்சிங்களா?

இருட்டு ,கல்லாமை, தனிமை,பாதுகாப்பின்மை,வாரிசின்மை இதையெல்லாம் மனித மனம்  மரணத்துக்கு சமமா  பார்க்குது. அதனால தான் பணத்தை உயிரா மதிக்கிறோம். உயிரை பணயம் வச்சு பணம் சம்பாதிக்கிறோம். உயிரா மதிக்க வேண்டிய தன்மானத்தை பலி கொடுத்து சம்பாதிக்கிறோம்.

சம்பாதிச்ச பணத்தை வச்சு இருட்டை விரட்டறோம் (கரண்ட் பில் கட்டறோம்),தனிமைய தவிர்க்கிறோம்,  அறிவை விருத்தி பண்றோம்( ஸ்கூல் போறோம், ட்யூஷன் போறோம் -இதெல்லாம் டூ இன் ஒன் ப்ராஸசுங்கோ),வேலை வாய்ப்பு தேடறோம் ( பணத்துக்காக ) ,கண்ணாலம் கட்டறோம் (செக்ஸுக்காக) குழந்தை பெத்துக்கறோம் ( நம்மோட மறுபதிப்பை விட்டுட்டு போக)

இப்படி நை நைன்னு சொல்றதை விட சிம்பிளா சொன்னா பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட யுத்தம் பண்றோம். நீங்க பணம் செலவழிக்கிறதெல்லாம் மரணத்தை ஏதோ ஒரு விதத்துல எதிர்க்கத்தான். இன்னா ஒரு தமாசுன்னா நிஜத்தை விட்டுட்டு நிழலோட ஃபைட் பண்றோம்.

சர்தான்பா இது அல்லாருக்கும் பொருந்தாதே. சில பேரு கரண்ட் பில் கட்டாமயே ,கனெக்சன் கட்டானாலும்  ரீ  கனெக்சன் வாங்காமயெ இருட்லயே வாழ்ந்துர்ராய்ங்களே, படிக்காதவன் நிலை என்ன? தண்டத்தீனிங்க நிலை என்ன? கண்ணாலம் கட்டாதவன் நிலை என்ன? குழந்தை பெத்துக்காம தள்ளிப்போடறவன் நிலை என்னனு கேப்பிக.

சொல்றேன். இவிகளுக்கு ரெண்டு சான்ஸ் இருக்கு ஒன்னு மரணத்தோடயே ஃபைட் பண்ணிக்கிட்டிருக்கலாம் (நிஜத்தோட) அ தாளி அந்த மரணம் என்ன என்னை தேடிவர்ரது நானே தேடிப்போறேன் அதைங்கற நினைப்புல இருக்கலாம் ( ஐ மீன் சப்கான்ஷியஸா)

ஆக நீங்க செலவழிக்கிற விதம் ரெண்டா இருக்கலாம்

ஒன்னு:

மரணத்தோட நிழல்களோட மோதறது  அல்லது மரணத்தை ஒத்திப்போடறது. (க்ளைமேக்ஸ்ல தான் புரியும் உங்க முயற்சிகள் உங்களை  நிஜமான மரணத்தை நோக்கியே உங்களை செலுத்தியிருக்கிறதை

ரெண்டு:
மரணத்தை அதனோட எந்த வடிவத்துலயும் எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிர்ரது. ஏழ்மை ,இருட்டு,தனிமை,நிராகரிப்பு ..இப்படி எந்த வடிவத்துல வந்தாலும் தப்பியோட பார்க்காம முழுக்க ஃபேஸ் பண்றது விட்டா அனுபவிக்கிறது.

தற்கொலை எண்ணங்களோடு  மோதறது .( கணக்கு வழக்கில்லாத தீனி, தூக்கம் ,செக்ஸ், இல்லீகல் அண்ட் இம்மாரல் எர்னிங்ஸ் எல்லாமே தற்கொலை எண்ணங்களோட வெளிப்பாடுதேன்.

இந்த ரெண்டு கேட்டகிரில நீங்க எந்த பக்கம்னு பார்த்துக்கனும்.

நீங்க மொதல் கேட்டகிரியா இருந்தா  மரணத்தோட நிழல்கள்,உருவகங்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கி கை கால் உதறி கச்சாமுச்சானு சம்பாதிக்கதுடிப்பிங்க. சம்பாதிப்பிங்க. தாளி "இத்தீனி சாவு செத்து சம்பாதிச்சது செலவழிக்கத்தானே"ன்னு செலவழிக்க ஆரம்பிச்சிருவிங்க.

உங்களோட கொல்லும்,கொல்லப்படும் இச்சை ரெண்டுமே பண விஷயத்துலயே ஒர்க் அவுட் ஆயிர்ரதால செக்ஸ் மேட்டர்ல ஈடுபாடு போக போககுறைஞ்சுரும்.

இதுவே செகண்ட் கேட்டகிரியா இருந்தா இருட்டுக்கு அஞ்சமாட்டிங்க (இருட்ல தான் செக்ஸ் பீறிட்டு கிளம்பும்)  தனிமைக்கு அஞ்ச மாட்டிங்க. . நிராகரிப்புக்கு அஞ்ச மாட்டிங்க இப்படி மரணத்தோட எந்த நிழலுக்கும் அஞ்சாம மரணத்தையே எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிருவிங்க. வீரிய ஸ்கலிதத்தின் போதான அந்த குட்டி மரணம் உங்களை பெரிதும் கவரும்.

( சமிக்கனும்.. இது ஏதோ துக்கடா சப்ஜெக்டு ஒரு சாப்டர்ல அடிச்சு விட்டுரலாம்னு நினைச்சேன்.. ஊஹூம் இது பெண்டை நிமிர்த்திரும் போல இருக்கு - எனவே...................

தொ..............ட...................ரும்

Tuesday, June 1, 2010

செக்ஸும் ஜோதிடமும்

அண்ணே வணக்கம்ணே,
இந்த வில்லங்க பதிவோட பெண் சாமியார் கொலை  பீடாதிபதி விரைவில் கைது? ங்கற பர பர சுறு சுறு பதிவும் போட்டிருக்கேன். படிச்சிப்பாருங்க. உங்க கருத்தை சொல்லுங்க‌ 

தலைப்பை பார்த்து முகத்தை சுளிக்காதிங்கண்ணா. ஜோதிடம் மனிதனி ஒட்டு மொத்த‌  வாழ்க்கைக்கானது. வாழ்க்கையில் செக்ஸும் ஒரு பாகம். ஒரு ஜாதகரின் செக்ஸ் பழக்க வழக்கங்களை அவரது 7 ஆம் பாவம், 12 ஆம் பாவம் ஆகியன பிரதானமாக காட்டுகின்றன. சுக்கிரன்,குரு, சப்தமாதிபதி,விரயாதிபதி ஆகியோர் நிலை கொண்டு இவற்றை கணிக்கலாம். 18 டு 80 ஐ கவர் பண்றதுக்காக இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கேன். உடுங்க ஜூட்
இன உறுப்பு,  செக்ஸ் மீதான ஆர்வம், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு  இவற்றை ஆளும் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிர கிரகம் சில லக்னங்களுக்கு பாவியாகிறார். மேசம், கடகம்,விருச்சிகம்,தனுசு,மீனம். அப்படியானால் இந்த லக்னக்காரர்களுக்கு செக்ஸ் கிடைக்காதா ? என்று கேட்டுவிடாதீர்கள். கண்ட நேரத்தில் கிடைக்கும். கிடைக்க வேண்டிய நேரத்தில் கிட்டாது ,கிடைக்க வேண்டியவர்களிடம் கிட்டாது, கிடைக்க வேண்டிய வயதில் கிடைக்காது என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை முடிவு செய்ய இன்னும் ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. பாவியான சுக்கிரன் இவர்கள் ஜாதகத்தில் 3,7,10 ஆகிய இடங்களில் அமைந்தாலோ 6 ஆமிடத்தில் அமைந்தாலோ இந்த நிலை மாறும். மேலும் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமித்தல் இத்யாதி நடந்தாலும் ஓகே.

இதர லக்னத்தாருக்கு இந்த சித்தாந்தத்தை அப்படியே உல்டா அடிக்க வேண்டியதுதான். அதாவது ரிஷபம்,மிதுனம், சிம்மம், கன்னி,துலா, மகரம்,கும்ப லக்ன காரவுகளுக்கு சுக்கிரன் 3,7,10ல அமைய கூடாது. 6 ல நிக்க கூடாது. சூரியனோட சேர்ந்து அஸ்தமிக்க கூடாது. அப்படி நடந்தா என்னாகும்னு பார்ப்போம்.

சுக்கிரன் 3:
3ங்கறது தைரிய ஸ்தானம். மொத மொத ஒரு குட்டிய கணக்கு பண்ணும்போது அட்வான்ஸ் ஆக வேண்டியது பையனோட டூட்டி. (இப்ப குட்டிங்கதான் அட்வான்ஸ் ஆகுதுனு கேள்வி).கசமுசா பண்றதுக்கும் ஒரு தில்லு வேணம். சுக்கிரன் பெண்கிரகம்ங்கறதால இந்த அமைப்பு உள்ளவங்களுக்கு தைரியமே வராது.

சுக்கிரன் 7:
7ங்கறது மனைவிய காட்டற இடம். இங்கே களத்திர (மனைவி) காரகனான சுக்கிரன் நின்னா என்ன தப்புன்னு கேப்பிக. குரு புத்திர காரகன். ஆனால் அவரு புத்திர பாவத்துல நிக்க கூடாது. நின்னா ஆண்குழந்தை கிடையாதுனு ஒரு ரூல்.7ங்கறது மனைவிய காட்டற இடம். ஸோ இங்கே களத்திர காரகனான சுக்கிரன் உட்கார கூடாதுங்கறது ரூல். இதனோட பலன் எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னா..

 7ஆமிடத்துக்கு காரகத்துவம் வகிக்கும் கிரகம் சுக்கிரன். இவர்  காரகத்வம் வகிக்கிற முக்கியமான சமாசாரம் உடலுறவு. ஸோ இந்த பாட்டிங்க ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் யாரா இருந்தாலும் அவிகளை பலான கண்ணோட்டத்துலயே பார்த்து  பலான சமாசாரத்தையே மனசுல  வச்சி குமைஞ்சிக்கிட்டிருப்பாய்ங்க.

ஒரு விசயத்தை மறுபடி மறுபடி அசை போட்டுக்கிட்டிருந்தா அந்த விசயத்துல தூள் கிளப்பிரலாம்னு  நாம நினைக்கிறோம். ஆனால் செக்ஸ் விஷயத்துல எவனொருத்தன் அதை நினைச்சு உளப்பிக்கிறானோ அது அவனுக்கு பின்னடைவைத்தான் தரும்

ஏற்கெனவே பலதடவை சொல்லியிருக்கேன்..7 - 23 இந்த ரெண்டு நெம்பரை கரெக்டா ஞா வச்சுக்கிட்டா உங்க மேட்டர் சூப்பர் டூப்பர் ஹிட்டாயிரும்.ஆமாங்க உடலுறவுல ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள்ளாற இன்செர்ட் ஆன பிறகு 7 அசைவுக்கு ஆண் அவுட். பெண் உச்சம் பெற அவளுக்கு  23 அசைவுகள் தேவையாம். 7க்கும் 23க்கும் வித்யாசம் என்ன? 16 . இந்த 16 அசைவு வரை நாக் அவுட் ஆகாம (வீரியம் ஸ்கலிதமாகாம பார்த்துக்கிடனும். இதுக்கு அவன் செய்யவேண்டியது என்ன?

காரியத்துல இறங்கிற அந்த செகண்ட் வரை மேற்படி எண்ணமே இல்லாம இருந்தா தான் மேற்படி வித்யாசத்துல (16) நாலில் ஒரு பாகமாவது (4) பாலன்ஸ் பண்ண முடியும்.

இதனால சதா சர்வ காலம்  மனசளவுல அதையே போட்டு உளப்பிக்கிட்டிருக்கிறவன் பெண்ண நெருங்கற சமயத்துல  வீரியம் உறுப்பின் அடிபாகம் வரை வந்திட்டிருக்கும். இன்செர்ட் பண்ணதுமே வாந்தி தான். ஆட்டம் க்ளோஸ்.

ஒரு பெண்ணே கூட 24 மணி நேரம் தன்னை பலான கண்ணோட்டத்துலயே பார்க்கிறதுல சகிக்க மாட்டாள். ஆணோ பெண்ணோ இன உறுப்புல தான் வித்யாசம் உண்டே தவிர உணர்வுகள், வலி, ரசனை , மூட் மாற்றம், சில சமயங்களில் தனிமையை விரும்புதல், இப்படி எல்லாம் இரு பாலாருக்கும் பொதுவானது. அவள் தாய் தந்தையருக்கு மகளா, அண்ணனுக்கு தங்கையா, தம்பிக்கு அக்காவா, மாமியார் மாமனாருக்கு மருமகளா இப்படி தசாவதாரம் எடுத்து செயல்பட வேண்டியிர்க்கு. அவளுக்கு தூக்கம்,பசி எல்லாம் உண்டு.

இதனால இப்படி 24 மணி நேரமும் தன்னை  பலான கண்ணோட்டத்துல பார்க்கிற அதுவும் செயலில் வீணனான ஆணை வெறுக்க ஆரம்பிச்சுருவாள்.

10ல் சுக்கிரன்:
பத்துங்கறது ஜீவன ஸ்தானம். செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம். நாம செருப்பை சனியன்னு சொல்லலாம். செருப்புகடைக்காரருக்கு? அழுக்கு துணியை தரித்திரம்னு சொல்லலாம் லாண்டரி காரருக்கு? அது தான் லட்சுமி.சுக்கிரங்கறது காதல், காமம்,உடலுறவை காட்டற கிரகம். எப்படிப்பட்ட ஸ்த்ரீ லோலனா இருந்தாலும் குளிக்காம கடைக்கோ, தொழில் செய்ற இடத்துக்கோ போகமாட்டான். ஆனால் பத்தில் சுக்கிரன் உள்ள பார்ட்டிங்க வேலை செய்ற இடத்துலயே பலான வேலையையும் பார்க்க ஆரம்பிச்சுருவாய்ங்க. இதனால என்ன ஆயிரும்னு கேட்கலாம்.

டாக்டர் நர்சை லவ் பண்ண வேண்டி வரலாம்.  எம்.டி. தன் பி.ஏவை  லவ் பண்ண வேண்டி வரலாம். மேஸ்திரி சித்தாளை  லவ் பண்ண வேண்டி வரலாம். அப்படி லவ் வரும்போது தொழில்ல கான்சன்ட் ரேசன் அடி வாங்கிரும். தொழில் நொடிச்சு போயிரும். தலைக்கு ஏறின காமம் இறங்கி வரும்போது அவளை பார்த்தா என்ன தோணும். என் அழிவுக்கு இவ தான் காரணம்னு ஒரு எண்ணம் வரும். அப்புறம் அவிக மத்தில எப்படி காதல் வரும்.

ஒர்க் வைல் ஒர்க் ப்ளே வைல் ப்ளேங்கற கட்டுப்பாடு இல்லாததால ரெண்டும் கெட்டான் பேரணாம்பட்டான் மாதிரி ஆயிரும்.

சுக்கிரன்+சூரியன்:
சுக்கிரன் சிற்றின்ப காரகன். சூரியன் ஆத்ம காரகன், சுய  மரியாதைக்கு காரகன். அகந்தைக்கு காரகன். பகுத்தறிவுக்கு காரகன். சிற்றின்பத்தில் சுயமரியாதை, அகந்தைகளுக்கு இடம் கிடையாது. திருமணத்துக்கு முன்னான உறவில் " ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே தடவை "என்பதே  காரிய ஜெயம் தரும் மந்திரவார்த்தை.

கால படுக்கையிலிருந்து எழுந்து செல்லும் போது மனைவி (அந்த காலத்துலங்கண்ணா) கணவனின் காலை தொட்டு கும்பிட்டுவிட்டு போவாளாம். காரணம் என்னன்னா பலான மேட்டர்ல இவள் கால் அவன் தலை மேல பட்டிருக்கலாம், மார் மேல பட்டிருக்கலாம் (எப்படி பட்டிருக்கும்னு ரோசிச்சி பாருங்கண்ணா) அதுக்காக சொல்ற சாரி ட்ஹான் கால தொட்டு வணங்கறது. இதை எதுக்கு சொல்றேன்னா செக்சுல செல்ஃப் ரெஸ்பெக்டு வெங்காயத்துக்கெல்லாம் இடமே கிடையாது. தன்னை தான் தொலைக்கத்தான் செக்ஸ். ஆனால் இந்த சுக்கிர சூரிய சேர்க்கை கொண்ட பார்ட்டிகள் "அவளா கூப்பிடட்டும்னு இருக்கிறதோ,  கெஞ்ச வேண்டிய நேரத்தில போடி ங்கொய்யாலனு எந்திரிச்சு போயிர்ரதோ கூட நடக்கும். இதுக்கு காரணம் என்னன்னா (லக்னம் துலா,ரிஷபமா இருந்தா இது க்கு வாய்ப்பு அதிகம்) விந்து வறண்டிருக்கும். நீர் சத்து குறைவா இருக்கும். வறண்டு இருக்கிற விந்து பெருஸா அதை வெளி யேற்றனுங்கற உந்துதலை தராது. இதனால வந்தா வாடி வராக்காட்டி போடினு விட்டுருவாய்ங்க. இது படிப்படியா தாம்பத்ய உறவை மட்டுமில்லாம , கணவன் மனைவிங்கற ரிலேஷனுக்கும் ஆப்பு வச்சிரும். இதுக்கெல்லாம் பரிகாரம்:

நாம தொடர்ந்து எழுதற பலான பதிவுகளை படிக்கிறதுதான்.