Tuesday, October 18, 2011

ராஜ பக்சே : நவ.17 முதல் 9 நாள் கண்டம்


அண்ணே! வணக்கம்ணே .. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே அவர்களின் ஜாதக பலனை படிச்சு எஞ்ஜாய் பண்ணியிருப்பிங்கனு நினைக்கிறேன். பார்ட்டிக்கு 08/Oct/2009 => முதல் 26/Nov/2011 வரை குரு தசையில குரு புக்தி நடந்துக்கிட்டிருக்கு. இவருது கன்யா லக்னம். குரு பாவி. நல்லவன் கெட்டவனானா எப்டி இருக்கும்னு நான் சிவப்பு மனிதன் ரஜினிகாந்தை உதாரணம் காட்டி நேத்து விளக்கியிருந்தேன்.

ஒரு தசை முழுக்க முழுக்க கெடுக்கனும்னா தன்னோட சுயபுக்தியில யோக பலனை தரும்ங்கறது விதி. இந்த யோக பலன்லாம் இன்னைலருந்து ஐ மீன் அக்டோபர் 19 முதல் நவம்பர் 26 வரை தான் . ஆக்யூரேட்டா கணக்கு போட்டா அக்டோபர்ல ஒரு 12 நாள் நவம்பர்ல ஒரு 26 நாள். டோட்டலா பார்த்தா ஜஸ்ட் 38 நாளுதேன்.

அதுக்கப்பாறம் குரு தசையில சனி புக்தி ஆரம்பம். சனி சிவாஜி தி பாஸ்ல ரஜினி மாதிரி சிங்கிளா நின்னிருந்தா அந்த கதை வேற இவரு செவ்வாயோட சேர்ந்திருக்காரு. அதிலயும் நீச செவ். இவருதேன் லக்னத்துக்கு அஷ்டமாதிபதி இந்த சனி செவ் சேர்க்கைய பற்றி நேற்றைய ஆடியோ போஸ்ட்ல படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கேன்.

அதையெல்லாம் மறுபடி ரிப்பீட் பண்ணா சின்னக்குழந்தைங்க பயந்துக்குவாய்ங்க..ஆக மொத்தத்துல நவம்பர் 17 க்கு கோசார சனி ஏழுக்கு வராரு. நவம்பர் 26 க்கு அய்யாவுக்கு குரு புக்தி முடிஞ்சு சனி புக்தி ஆரம்பம். இந்த 9 நாட்கள்ளயே பல்பு வாங்கவும் வாய்ப்பிருக்கு.

இப்பம் நேரம் காலை 7.10. தாளி.. கரீட்டா எட்டுமணிக்கு பிடுங்கிருவாய்ங்க. (கரண்டை சொன்னேன்) அப்பாறம் 11 மணிக்குத்தேன் பவர். அதனால அம்பேல்.

இன்னொரு முக்கியமான சமாசாரம் நம்ம ஜா.ரா வேற ரூட்ல போயி நமக்கு ஆப்படிக்க ஆரம்பிச்சுட்டாரு. அதாவது இதர திரட்டிகள்ள நம்ம பதிவுகளை வெவ்வேறு மெயில் ஐடியில போயி BURY பண்றது. பத்து பேர் இப்படி புதைச்சாலோ - அ ப்ளாக் பண்ணாலோ நம்ம பதிவுகள் உடனே பட்டியல்ல ஏறாது. வெய்ட்டிங் லிஸ்ட்ல மாட்டிக்கும்.

இதை முறியடிக்க பதிவின் கீழே உள்ள ஓட்டுப்பட்டைகள் மூலமா பதிவுக்கு வாக்களிங்க. உடுங்க ஜூட்..

ராஜபக்சே ஜாதக பலன் : ஒரு 360 டிகிரி பார்வை


அண்ணே ! வணக்கம்ணே .. இதான் கடேசி பதிவா என்ன தெரியலை. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஜாதக பலனை ஆடியோ ஃபைலா போட்டிருக்கேன். நமக்கு கிடைச்ச பர்த் டீட்டெயில்ஸ் கரீட்டா இருந்தா பலனும் கரிட்டா இருக்கும். ( 18, நவம்பர் ,1945 ,விடியல் 3.45 , பிறந்த ஊரு: Matara )

ஆடியோவை கேட்டுட்டு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு ராட்டினம் ஏத்தினாலும் பரவால்லை ஸ்டேஷன்ல உள்ள பார்ட்டிகளுக்கு சொசியம் கீசியம் சொல்லி தப்பிக்கலாம். இலங்கைக்கு பார்சல் பண்ணிக்கினு பூட்டா தான் படா பேஜாரா பூடும்.ஆனா அம்மா கீறாய்ங்க. கு.பட்சம் முருகேசனை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக்கூடாதுன்னு ஒரு தீர்மானமாச்சும் போடுவாய்ங்க.

ரெம்ப நாளைக்கப்பாறம் ஆடியோ பதிவு போட்டிருக்கேன். காரணம் பவர் கட். பொறுமையா கேட்டு உங்க கருத்தை தெரிவிங்க.

வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி திருவாளர் ராஜ பக்சேவுடைய ஜாதக பலனை கேளுங்க.

Sunday, October 16, 2011

ஒரு குரங்கின் சுய சரிதம் « Anubavajothidam.com


ஒரு ஊர்ல ஒரு குரங்கு. பேரு மதி. ஆசையே உலகத்துன்பங்களுக்கு காரணம்ங்கற தத்துவம் சின்ன வயசுலயே தெரிஞ்சிருந்தாலும் (உபயம்: பாட புஸ்தவம்) எல்லாத்துக்கும் ஆசைப்படற வயசு.

ஊர்ல உள்ள குரங்கெல்லாம் கழுத்துல பேதி மருந்து குடிச்சா மலத்துல வர்ர நாடா புழு சைஸ்ல மைனர் செயின் போட்டுக்கிட்டு கண்டிக்கல்லு சைஸ்ல ஃபோனு, ஐ பாடுன்னு வச்சுக்கிட்டு லட்ச ரூபா பைக்குல சீறிக்கிட்டு கிடக்க

மதியோட அப்பா குரங்கு மட்டும் " தாளி ! இப்பமே ஓசோன் கிளிஞ்சு தொங்குதாம். எங்கபார்த்தாலும் ஆக்சிடெண்ட். பெட் ரோல் விலைய கூட புல்லியன் மார்க்கெட்டு கணக்கா இன்றைய பெட் ரோல் விலை நிலவரம்னு அறிவிக்க எவ்வளவோ நாளில்லை "னுட்டு தடை போட்டுருச்சு.

அசலான மேட்டர் இன்னாடான்னா " காசில்லை" அரசாங்க வேலையில இருந்தப்பயே பொறுப்பா பத்து காசு தேத்தற தெறமை இல்லை. இப்பம் எப்படா தேதி ஒன்னாகும்னு நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு கிடக்கு. இதுல வருசா வருசம் நான் உசுரோடத்தான் இருக்கேன்னு ஒரு சர்ட்டிஃபிகேட்டை வேற ட்ரஜரில சப்மிட் பண்ணனும். சென்ட்ரல் லைப்ரரியில மெம்பர் . டஜன் கணக்கா உறுப்பினர் அட்டை வச்சுக்கிட்டு வாரா வாரம் புஸ்தவமா கொண்டு வந்து படிக்கறதெ வேலை.

மதி டிகிரி முடிச்சு 10 வருசம் ஆகுது. இதுவரை நெரந்தரமா ஒரு வேலை கிடையாது. நல்ல வேளையா அப்பாகுரங்கு மத்த அப்பனுங்க மாதிரி தெண்டத்தீனி அது இதுன்னு நோகடிக்கிறதில்லை. ஆனால் உபதேச மழை பொழிஞ்சு கடுப்படிச்சிக்கிட்டிருக்கும்.

ஒரு நாள் ஸ்டோர் ரூமை ஒழிச்சிக்கிட்டிருந்தப்ப அரையடி உசரத்துல ஒரு வெள்ளி தம்ளர் ஒன்னு கிடைச்சது. அதை பார்த்ததும் மதியோட மனசுல இருந்து ஆசையே உலகத்துன்பங்களுக்கு காரணம்னு எக்கோ பண்ணிக்கிட்டிருந்த புத்தர் சின்ன வேலை இருக்கு வந்துர்ரன்னு சொல்ட்டு காணாம போயிட்டாரு

மதியோட மூளை ஃபார்மட் அடிச்ச கம்ப்யூட்டர் கணக்கா பரபரப்பாயிருச்சு. குளிச்சு ரெடியாயி என்னென்னவோ தகிடுதத்தம்லாம் பண்ணி - அப்பா குரங்குக்கு சாயந்திரம் வரைக்கும் தன்னை ஞா வராதபடிக்கு பீலா விட்டாச்சு. வெள்ளி டம்ளரை எப்படியோ கடத்தி கொண்டுவந்தாச்சு.பஜாருக்கு போயி தம்ளரை காசாக்கியாச்சு.

வெயில் கொளுத்தறாப்ல ஒரு ஃபீலிங். ஜில்லுனு ஒரு பீர் அடிச்சே தீரனும்னு ஆயிருச்சு. பங்க்ல இருக்கிறதுலயே நீளமான சிகரட்டா அரை பாக்கெட் வாங்கிக்கிட்டு இருட்டு மூலையில போய் உட்கார்ந்து ஜில்லுன்னு ஒரு பீர். பாட்டில் என்னமோ ஜில்லுன்னுதான் இருந்தாப்ல ஞா. ஆனால் ஒரு ம..ருமில்லை.

என்னப்பான்னு கேட்க பவர் கட்டுசார்னான் பையன். ஸ்வர்கமா தோனின டாஸ்மாக்கே இப்பம் நரகமாயிருச்சு.அதை விளக்கெண்ணையா நினைச்சு குடிச்சு முடிச்சுக்கிட்டு வெளிய வந்தது மதி.. கையில காசு கரையுதே தவிர எதையும் அனுபவிச்ச கதையா காணோம்.

கடேசியில எய்ட்ஸ் பயத்தை காண்டோம் கொண்டு விரட்டிட்டு அந்த பெரிய தப்புக்கும் சித்தமாகி மேற்படி கற்புக்கரசிகள் நிற்கும் ட்ரான்ஸ்ஃபாரத்தை தேடிப்போனது மதி. இருக்கிறதுலயே சகிச்சுக்கும்படியான உருப்படியை செலக்ட் பண்ணி வண்டி வருமான்னு கேட்டு பூத் பங்களா கணக்கா இருந்த லாட்ஜு கவுண்டர்ல ஒரு மணி நேரத்துக்கு அநியாயமா ரூ200 கொடுத்துட்டு - அவளுக்கும் செட்டில் பண்ணி தான் பார்த்த படிச்ச கில்மா மேட்டரையெல்லாம் ஞா படுத்திக்கிட்டு கிட்ட போனப்ப பக்கத்து அறை கதவை ஒரு கும்பலே தப தபன்னு தட்டற சத்தம் கேட்டுச்சு.

மதிக்கு பக்குனு ஆயிருச்சு வெளிய வந்து விஜாரிச்சா அந்த ரூம் காரன் காலையிலருந்து கதவையே திறக்கலியாம். கெட்ட வாடை வருதாம். போலீசுக்கு ஃபோன் பண்ணா தட்டி எழுப்பிப்பாருங்க. அரை மணியில வர்ரோம்னாய்ங்களாம். சனம் தட்டின தட்டுக்கு அந்த அறைக்காரன் எழுந்தானோ இல்லையோ மதிக்கு மட்டும் எல்லாம் ஒடுங்கி போயிருச்சு. சொல்லாம கொள்ளாம வெளிய வந்தான்.

மணி 3 ஆயிருச்சு. எத்தனையோ மாசமா தின்ன நினைச்ச கனவு பிரியாணி கடைக்கு போய் பிரியாணி கேட்க எலக்சன் டைமில்லியா தம்பி பிரியாணி தீர்ந்து போயிருச்சு. குஷ்கா தரவான்னாய்ங்க. விதியில்லாம அதையும் தின்னுப்போட்டு பீடாவுக்கு போனான். பீடாக்கடைகாரன் பழுத்த வெற்றிலைய மறைச்சு வச்சு பீடா கட்டி கொடுக்க அதை மென்றபடி கையில காசு என்ன இருக்குன்னு தடவ முழுசா ஒரு ஐநூறு ரூவா நோட்டை காணோம். அது இருக்குன்னு தான் அலட்சியமா செலவு செய்துக்கிட்டிருந்தான். அது எங்கன மிஸ் ஆச்சுன்னு ஞா வரலை.

அப்பா மதிய தூக்கத்துல இருப்பாரு.ஆளுங்கட்சியான பிறவு எதிர் கட்சில இருந்து மாறி வந்தவன் கணக்கா வீட்டுல செட்டில் ஆயிரவேண்டியதுதான். போற வழியில புதுப்பணக்காரன் கட்டின வீடு இங்கிலீஷ் சினிமாவுல போல பளபளத்தது. பத்தடி உசரத்துக்கு காம்பவுண்டு.அதுக்கும் மேல ஃபென்சிங். மதிக்கு ஏனோ தர்கமே இல்லாம உள்ளாற ஒரு ஸ்விங் ஃபூல் ,அதுல டூ பீஸ்ல ஒரு குட்டின்னு ஃப்ளாஷ் அடிக்க பர பரன்னு காமப்வுண்ட் சுவர் மேல ஏறினான். உள்ளாற நெஜமாலுமே ஒரு ஸ்விம்மிங் ஃபூல் இருக்க உள்ளே குதிச்சான். வீடு முழுக்க டை கட்டின ஆசாமிங்க இருந்தாய்ங்க. ஏதோ சி.பி.ஐ ரெய்டு போல. அவசரமா திரும்பறச்ச வால் பக்கம் எதுவோ நறுக்குன்னுச்சு. பார்த்தாமுள். பயங்கர வலி .

சூப்பர் ஸ்பெசாலிட்டில்லாம் அப்பாரம் தாளி சாதாரண எம்.பி.பி.எஸ்ஸுக்கிட்டே போற ரேஞ்சுல கூட காசில்லை. மதியம் போன லாட்ஜு கணக்கா இருந்த பில்டிங்ல வாசலுக்கு லெஃப்ட்ல சுவர் முழுக்க இழந்த சக்தி, விரை வாதம்னு பெரிய எழுத்துல எழுதப்பட்டிருக்க மதி தன் விதியை நொந்துக்கிட்டு உள்ளாற போயி மேட்டரை சொல்ல ஆயிரத்துல பேரத்தை ஆரம்பிச்சு இருபது ரூபாய்க்கு முடிச்சு ஒரு பெட்ல படுக்க வச்சாரு டாக்டரு.ஏனோ மதியம் லாட்ஜுல படுத்தது ஞா வந்தது.

டாக்டரு புதுமருமக சமையலறையில தடுமாறின கணக்கா இருக்கிற எல்லா சர்ஜிக்கல் ஐட்டங்களையும் முயற்சிபண்ணிக்கிட்டிருந்தாரு. அப்பம் பெரும்பான்மை உறுதின்னு நம்பிக்கையா ரிசல்ட்டுக்கு வெய்ட் பண்ணிக்கிட்டிருந்த பார்ட்டி சிங்கிள் டிஜிட்ல ஜெயிக்க அந்த கட்சி தலைவர் எப்படி அலறுவாரோ அப்படி ஒரு அலறல் மதிகிட்டேருந்து புறப்பட்டது.

இன்னாடா மேட்டருன்னா மதியோட வால் தமிழ்படத்துலருந்து வெட்டப்பட்ட ஈழத்தமிழர் ஆதரவு காட்சி கணக்கா கீழே கிடந்தது. மதிக்கு செமை கடுப்பாயிருச்சு. "கொய்யால .. பேப்பர் காரவுகளுக்கு சொல்லி ஒன்னை நாறடிக்கிறேன் பாரு"ன்னு ஆங்கார கூச்சலிட டாக்டரு காலை கெட்டியா பிடிச்சுக்கிட்டு "யப்பா நீ போலீஸுக்கு ஃபோன் பண்ணு - எஸ்.பிக்கு ஃபோன் பண்ணு - ஃபையர் இஞ்சினுக்கு ஃபோன் பண்ணிட்டு க்ளினிக்கையே கொளுத்திரு ஆனால் நிருபர் பசங்களை மட்டும் வரவச்சுராதப்பா.அவிகளுக்கு தினசரி வாய்க்கரிசி போட்டு குளிப்பாட்ட என்னால ஆகாது" ன்னு புலம்பவே ஆரம்பிச்சுட்டாரு.

மதி சர்ஜிக்கல் ஐட்டங்கள் இருந்த ட்ரேயில இருந்து ஒரே ஒரு கத்தியை மட்டும் எடுத்துக்கிட்டு
" ங்கோத்தா இனி எவனுக்குனா வைத்தியம் பண்ணேன்னு தெரிஞ்சது ஒரே குத்து தான் கீழ விட்டா மேல வந்துரும்" னு வார்னிங் விட்டுட்டு கத்தியை சுழட்டிக்கிட்டே வெளிய வந்தது .

நடைபாதையில ஒருத்தன் கூகுல் இமேஜஸ்ல வர முலை மங்கை கணக்கான மாங்காயை வச்சுக்கிட்டு அதை கடிக்கவும் முடியாத வெட்ட கத்தியும் இல்லாம அவதிப்பட்டுக்கிட்டிருக்க மதி கத்தியை அவன் கிட்டே கொடுத்தான்.

அவனும் சந்தோசமா மாங்காயை வெட்ட கத்தி மேடத்துக்கு தேவையான மந்திரிங்க மேட்டர்ல சட்டம் கணக்கா பொசக்குன்னு வளைஞ்சு போச்சு.

மதி கடுப்பாகி அந்த மாங்காயை பறிச்சுக்கிட்டு நடந்தது. அந்த நேரம் பார்த்து எங்கயோ லோக்கல் அம்மன் கோவில்ல கூழ் ஊத்தற விழா போல. . மேளக்காரன் ஒருத்தன் கக்கூஸு போனா கழுவற பிளாஸ்டிக் மக்ல கூழை வச்சுக்கிட்டு குடிக்க முடியாம குடிச்சிட்டிருந்தான்.

நடுத்தர வகுப்பு மக்கள் மனசுல அன்னா உபயத்துல திடீர்னு கிளர்ந்தெழுந்த ஊழல் எதிர்ப்பு கணக்கா மதிக்குள்ள திடீர்னு ஒரு கருணை பீய்ச்சி அடிச்சது. மாங்காயை அவனுக்கு கொடுத்து இதை கடிச்சக்கன்னுச்சு.

அவனும் மாங்காயையும் கூழையும் ஒரு கை பார்த்துட்டான்.மதிக்கு தன்னோட வால் ஞா வந்தது. எதிராளி மாங்காயை தின்னதா தோனலை தன் வாலை சூப் போட்டு சாப்பிட்டதா தோனுச்சு. ஒடனே மதி சதிச்சிரிப்பு சிரிச்சு " கொய்யால வாழ்க்கையில எதுவும் இலவசமா கிடைக்காது. என் வாலை கொடுத்து வாங்கின மாங்காய் அது.. அதுக்கு விலையா உன் மேளத்த எடுத்துக்கறேன்" னுட்டு மேளத்தை தூக்கிக்கிட்டு கிளம்பிருச்சு.

வாலு போயி கத்தி வந்தது டும் டும் கத்தி போயி மாங்கா வந்தது டும் டும் மாங்கா போயி மேளம் வந்தது டும் டும்னு அடிச்சிக்கிட்டே வர்ரச்ச மேளம் ஓசோன் மாதிரி கிளிஞ்சிருச்சு.

நீதி:

ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி கடைசியில எல்லாத்தையும் இழந்துர்ரதுதான் வாழ்க்கை

.



Friday, October 14, 2011

மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டரும் ஜோதிடமும் « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே !
சத்ரு ரோக ருண உபாதைகள் இல்லாத பார்ட்டி உலகத்துலயே கிடையாது. இன்னம் சொல்லப்போனா இந்த உபாதைகள் இல்லாத நாடே கிடையாது. இந்த உபாதைகளை தவிர்க்க ஒரு அயனான பரிகாரத்தை தரத்தேன் இந்த பதிவு.

"ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா"னு எழுதி வச்சாரு கண்ணதாசன். இதையே சைக்காலஜி டெக்னிக்கலா மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்னு சொல்லுது.

லக்னத்துல அ ஏழுல கச்சா முச்சான்னு கிரகங்கள் இருக்கிறது , அல்லது லக்னாதிபதி கெட்ட சகவாசம் பண்றது, மனோ காரகனான சந்திரன் சகட்டுமேனிக்கு கிரகங்களோட சேர்ந்திருக்கிறது இப்படியா கொத்த கிரக நிலைகள்ள பிறந்தவுக இந்த மன நோய்க்கு ஆளாக வாய்ப்பிருக்கு.

நம்ம ஜாதகத்துல லக்னத்துல சூரியன்,புதன், உச்ச குருன்னு 3 கிரகங்கள். இதுல லக்னாதிபதி+ மனோகாரகனான சந்திரனோட சுக்ர சேர்க்கை.

ஒரு வகையில (ஐ மீன் ஒரு கோணத்துல) பார்த்தா முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் நமக்குள்ளே இருக்கிறதா பீத்திக்கலாம்.

சூரியன் -சிவா - அழித்தல் , புதன் -விஷ்ணு -காத்தல் , குரு -பிரம்மா -படைத்தல் . ஆனால் இன்னொரு கோணத்துல பார்த்தா புதன் விரயாதிபதி , குரு ரோகாதிபதி.

சந்திர சுக்கிர சேர்க்கையிலும் ரெண்டு கோணமிருக்கு. சந்திரன் -மனம் , சுக்கிரன் -கலை ( இதையே சந்திரன்னா மனசு - சுக்கிரன்னா கில்மான்னும் அனலைஸ் பண்ணலாம்)

இதை நெகட்டிவா பார்த்தா சுக்கிரன் பாதாகாதிபதி ( நம்ம கடகலக்னத்துக்கு) . இதனாலதேன் இருக்கிறதுலயே வெள்ளை சாம்பார் தனமான ஜோதிட "கலையை" கூட நம்ம ஆசனத்துக்கு கடப்பாறை கொண்டுவர்ர ரேஞ்சுல வெளிப்படுத்திக்கிட்டிருக்கோம்.

இல்லாட்டி அய்யரு ஊஞ்சல்ல உட்கார்ந்திருந்தாரு -அய்யரம்மா காஃபி கொண்டு வந்து கொடுத்தாய்ங்கனு ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருந்திருந்தா கல்கியிலயே தொடர்கதை எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கலாம்.

சின்ன வயசுல நாம ரெம்ப சென்சிட்டிவ். "ஏண்டா பல் தேய்க்காம இட்லி சாப்பிட்டே இதைவிட ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க போட்ட கமெண்டுகளை படிக்கலாமே" னு அண்ணன் சொன்னதை தாங்கமுடியாம "உங்க சங்காத்தமே வேணாம்னு வீட்டை விட்டே வெளியேறிட்ட கேஸு.

கூச்சம் சாஸ்தி. ஒரு தாட்டி திருப்பதிக்கு போனேன். அண்ணனோட அறையில தான் ஹால்ட். சாயந்திரம் அங்கன இருந்த சொந்தக்காரவுக வீட்டுக்கு போனோம். போறச்ச கல்லா இருந்த குடல் கலக்க ஆரம்பிச்சது . நான் ரூமுக்கு போறேன்னேன். அண்ணன் ஒத்துக்கிடலை.

சொந்தக்காரவுக வீட்டுக்கு போயி போலாம். வாடான்னுட்டான். நான் ங்கோத்தா தேவையே இல்லை. விட்டுரு .ரூம்லயே பார்த்துக்கறேன்னுட்டன். ஆனால் அங்கன போனதும்..

"டே வெள்ளை! ஏதோ வேலையிருக்குன்னியே.. போகனுமா.. போறதாருந்தா போ.. போடா"னு லந்து பண்ண ஆரம்பிச்சிட்டான். பத்து நாளு தங்க போன நாம மறு நாளே பிச்சுக்கிட்டு சித்தூர் வந்துட்டம்.

இதான் நம்ம கேரக்டர். இந்த அழகுல டீன் ஏஜ் பிரச்சினைகளை எல்லாம் ஆருகிட்ட டிஸ்கஸ் பண்றதாம். அப்பத்தேன் திருச்சில இருந்து நம்ம நண்பன் சம்மர் லீவுக்கு வந்திருந்தான். ( கொல்ட்டி -சாம்பார் மேட்டர் சொல்லி நொந்த அதே நண்பன்) அவன் தான் கில்மா மேட்டர்ல அதுவரைக்கும் நமக்கு இருந்த தயக்கம்,கூச்சம், போலித்தனம் எல்லாத்தையும் ஒழிச்சு கட்டினான்.

ஆனால் அந்த ரேஞ்சுக்கு டிஸ்கஸ் பண்ண இங்கன ஆள் கிடையாது. அதனால டிஸ்கஸ் பண்ணி தெளிவு பெற ஒரு கவுண்டர் பார்ட் தேவைப்பட்டது. அப்பம் சுஜாதாவோட கணேஷ் வசந்த் ரெம்ப பிரபலம். நமக்கும் சுஜாதா மேல ஒரு அபிமானம் இருந்தது. உபரியா நாம ரஜினி ரசிகன் வேற ( அந்த காலத்துல)

சுஜாதாவோட வசந்த், நம்ம திருச்சி நண்பன், ரஜினி காந்த் + நாம எப்படில்லாம் இருக்கனும்னு நினைக்கிறோமோ அந்த அம்சங்கள் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி முகேஷ்னு ஒரு கேரக்டரை உருவாக்கினோம்.

நாம எழுதற கதைகள் நம்ம கேரக்டர் வந்தா அதுக்கு நிச்சயம் முகேஷ்ங்கற பேருதான். 1991 ல கலப்பு திருமணம் - வேலையின்மை -ஏழ்மை - நாயடில்லாம் நல்லாவே பக்குவப்படுத்த கொஞ்சம் இறங்கி வந்து "அழகு"ங்கற கேரக்டரா மாறினோம்.

முகேஷ் ஹீரோயிக் கேரக்டர். அழகு கொஞ்சம் போல மோரல்ஸ் -லட்சியம்லாம் உள்ள சாமனியன். ஓஷோவை படிக்க ஆரம்பிச்ச பிற்காடுதான் முருகேசனை இந்த முருகேசன் டோட்டலா அங்கீகரிக்க முடிஞ்சது.

இதையெல்லாம் எவனும் சொல்லிக்க மாட்டான். ஆனால் நாம சொல்லிக்குவம்.ஏன்னா நமக்குள்ள எந்த ஹிடன் அஜெண்டாவும் கிடையாது. நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதியாகனும்ங்கற மேட்டரையே உடைச்சாச்சு. இனி மறைக்க என்ன இருக்கு?

அரசியல்ங்கற சர்க்கசை பார்த்து பார்த்து சர்க்கஸ் வீரர்களை எல்லாம் அட்மைர் பண்ண ஆசாமி நாம. நம்ம கேரக்டர் பஃபூன் கேரக்டரா கூட இருக்கட்டும். இன்னைக்கு நாம பார்த்து அட்மைர் பண்ண சர்க்கஸ் வீரர்கள் ஆருமில்லை.

நோ ஐ.சி ( இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) . ஒரு கை பார்த்துர்ரதே சரி. நாம ஜனாதிபதி ஆகிறோமோ இல்லையோ. மனசை நெல்லா சூப்பர் ரின் போட்டு வெளுத்தாச்சு.

ஒதகாத மேட்டரையெல்லாம் போட்டு அடைச்சு நம்ம எழுத்தும் பேச்சும் மலச்சிக்கல் காரனோட அபான வாயு மாதிரி நாற கூடாது. சரி சைக்காலஜி போதும். அஸ்ட்ராலஜி மேட்டர் ஒன்னு சொல்றேன்.

லக்னத்துக்கு ஆறாம் பாவத்துக்கும் தொடர்பு ஏற்பட்டா கடன் ,நோய், வழக்கு இத்யாதி தொல்லைகள் வரும். எந்த காரியத்தை எடுத்தாலும் வாயிதா, தடை.

இதுக்கு நான் ஒரு சில பரிகாரம் சொல்றது வழக்கம்.

1.ஒரே சப்ஜெக்டை எடுத்துக்கங்க. அதுக்கு பாசிட்டிவா ஒரு பக்கம் - நெகட்டிவா ஒரு பக்கம் எழுதுங்க.

உ.ம் வரதட்சிணை நல்லது /வரதட்சிணை கெட்டது.

2.பத்திரிக்கைகள்ள ஆசிரியருக்கு கடிதம்னு ஒரு பகுதி இருக்கும். அதுக்கு ஏதாவது ஒரு புனைப்பெயர்ல உங்க துறை - பகுதியின் பிரச்சினைகளை எழுதி அனுப்புங்க. அந்த புனைப்பெயருக்கு சொந்தம் கொண்டாடாதிங்க.

3.எந்த ஒரு நல்ல வேலையானாலும் சொந்த காசுல செய்யாதிங்க. கடன் வாங்கி செய்ங்க.


உஸ் அப்பாடா.. சைக்காலஜி அஸ்ட்ராலஜி ரெண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு போட்டாச்சு. தமிழ் மணத்துல வெறுமனே சோசியத்தை பத்தி எழுதினா இது செல்ஃப் ப்ரமோஷன் போஸ்டுன்னு ரிமூவ் பண்ணிர்ராய்ங்க தலை.

Thursday, October 13, 2011

பாவம் கேபிள் சங்கர் !


நம்ம ஜா.ரா மறுபடி வேலைய ஆரம்பிச்சுட்டாரு. கூகுல் காரனுக்கு ஒரு புகார் தட்டி விட்டிருந்தம். அது எதுனா ப்ராசஸ் ஆரம்பமாயிருச்சா என்னனு புரியலை.

பாவம் வலையுலக சூப்பர் ஸ்டார் கேபிள் சங்கர் ஒரு லட்சியத்தோட ஆரம்பித்த யு டான்ஸ் திரட்டியில பதிவு மழையே பொழிஞ்சிருக்காரு. பதிவுன்னா என்னமோனு நினைச்சுரப்போறிங்க. அல்லாம் நம்ம அய்யர் நம்ம கேரக்டரை செரிச்சுக்க முடியாம எடுத்த வாந்திதேன். அய்யரோட பழம் பதிவுகளை அப்பாவி ப்ளாகர்ஸோட ப்ளாக்ல கமெண்டா போட வேண்டியது . அந்த பதிவுக்கான லிங்கை இணைக்க வேண்டியது.

கக்காத பிள்ளை தக்காதும்பாய்ங்க. அது ஒரு ஸ்டேஜ் வரைதேன். எருமைமாடு மாதிரி ஆன பிற்காடும் கக்கிக்கிட்டு கிடந்தா குடல் வெளிய வந்துரும். எக்கேடோ கெட்டு போகட்டும். இதுவும் ஒரு அனுபவம். இதை அஸ்ட்ராலஜிக்கலா அனலைஸ் பண்ணுவமா?

நம்ம ஜாதகத்துல 6 க்குடைய குரு லக்னத்துல உச்சம் கூட சூரியன் இருந்து அவரை கட்டுப்படுத்தறாரு. அந்த சூரியனோட புதன் சேர்ந்து சூரியனை கட்டுப்படுத்தறாரு. ஆக மொத்தத்துல குரு தர வேண்டிய பலனை சூரியன் - சூரியன் தரவேண்டிய பலனை புதன் கொடுக்க முயற்சி பண்றாய்ங்க.

புதனுக்குரிய கடவுள் பெருமாள். பார்ட்டியோட பேரும் அதே தான். பாவம்.. ஜா.ரா தனக்கே தெரியாம நமக்கு பேருதவி செய்துக்கிட்டிருக்காரு. லக்னத்துல 6 க்குடையவர் உச்சம் பெற்றால் சத்ரு,ரோக ,ருண உபாதைகள் ஏற்பட்டு நாம சீரழியனும்.

ஆனால் பாவம் ஜா.ரா .. நம்ம தலை நெல்லா இருக்கனும். அவரு ஒரு எதிரியை பத்தி ரோசிச்சிக்கிட்டு கிடந்தா நோய் வராது - ஹெல்த்தியா இருப்பாரு - வழக்கு கியக்கு பாயாது -கடன் இல்லாம இருப்பாருன்னு இப்படி லந்து பண்ணிக்கிட்டிருக்காரு. வாழ்க ! இதுவும் ஒரு அனுபவம். இந்தமாதிரி அனுபவங்கள்தான் நம்ம பதிவுகளுக்கு மூலம்.

இதுவரைக்கும் நிர்வாண உண்மைகள் வலைப்பூவில் மட்டும் 1,618 பதிவுகள் போட்டிருக்கேன். (தெலுங்கு பதிவுகள் இதில் சேர்க்கப்படலை -அது கிடக்கும் 333 ) வித் அவுட் அப்டேட்ஸ் இந்த வலைப்பூவுக்கு கிடைக்கும் ஹிட்ஸ் தினசரி 1000. சனம் இதுல ஒரு பெரிய புதை பொருள் ஆராய்ச்சியே நடத்திக்கிட்டிருக்காய்ங்க.என்ன ஒரு பிரச்சினைன்னா அன்னன்னைக்கு போட்ட பதிவை அன்னன்னைக்கு படிக்க மாட்டாய்ங்க.

ஒவ்வொரு நாள் எல்லாத்தையும் எழுதிட்டாப்ல இருக்கே. புதுசா என்னத்தை எழுதறதுன்னு ஒரு எண்ணம் வரும். ஆனா சிலசமயம் ஆரோ சொன்னாப்ல " என்னங்கடா இது ஸ்ருதி கூட்டலுக்கே இத்தீனி பதிவா? இன்னம் கச்சேரியே ஆரம்பமாகலை"ன்னும் தோணும். ( நம்முது கடகலக்னமுங்ணா)

ஏதோ நமக்குள்ள மட்டும்தேன் இத்தீனி சமாசாரம் இருக்குன்னு நினைச்சுரப்போறிங்க. ஒவ்வொரு மன்சனுக்குள்ளயும் எத்தனையோ மேட்டர் கீது. அவிகளுக்கு எழுத வாய்ப்பு கிடைக்கலை. நமக்கு கிடைச்சிருக்கு அதான் வித்யாசம்.

இந்த 44 வயசுல ஒரு வசதி இன்னாடான்னா தேவையில்லாத மேட்டர்லாம் மைண்ட்ல இருந்து எகிறிப்போச்சு. ( சில சமயம் நம்ம பழைய பட்லிங்களோட பேர் கூட மறந்து போயிருது வாத்யாரே) பல விஷயம் முக்கியமில்லாததா போயிருச்சு. டிவி விளம்பரம், புது நடிகைகளோட பேரு.. இந்த சமீப கால நடிகைகள்ளயே நம்ம மைண்ட்ல நின்னது ஒரு சங்கீதாவோட பேருதேன்.

மேலும் அனுபவங்கள் எதிரானப்ப சம்பவங்கள் நடந்தப்ப இருந்த புரிதலை விட இப்பம் சாஸ்தியாகியிருக்கு. அப்பம் புரியாத மேட்டர்லாம் இப்பம் அசால்ட்டா புரிஞ்சி போகுது. மாடு அசை போட்ட கணக்கா அசை போட்டு செரிச்சுக்க வேண்டியதா இருக்கு.ஒரு மேட்டரை பல கோணங்கள்ள பார்க்கும் கப்பாசிட்டி வந்திருக்கு. கடந்த கால அனுபவங்களை ஒரு க்ளான்ஸ் பார்த்துக்கிட்டு ஹ்யூமன் பிஹேவியர், பாடி லேங்குவேஜ் மாதிரி இன்னும் சில கான்செப்டுகளை வச்சு எதிராளி அடுத்து என்ன செய்வான்னு கெஸ் பண்ணா நூத்துக்கு 99 டாலி ஆகுது.

நம்ம அனுபவங்கள்னா கில்மா அனுபவங்கள் மட்டுமில்லை. கலந்து கட்டியான அனுபவங்கள் ஸ்கூல் போறதுக்கு மிந்தியே ஜூட்டாயிருச்சு. எங்க வீட்டு பக்கத்துல ஒரு மைதானம். அங்கன ஒவ்வொன்னா குடிசைகள் முளைச்சு சின்ன சேரியே உருவாயிருச்சு ( ஐ மீன் ஸ்லம் - தலித்துகளுக்கான குடியிருப்பில்லை ஏன்னா அதுல பல ஃபேமிலி வன்னியருங்கதேன் )

அங்கன இருந்து ஆரம்பிச்சா ஒவ்வொரு கட்டத்தையும் நம்ம அனுபவங்களையும் எழுத ஆரம்பிச்சா 44X365 பதிவுகள் போட்டுரலாம். சரிங்ணா மொக்கை போதும். மேட்டருக்கு வந்துர்ரன்.

அய்யரும் நானே முருகேசனும் நானே.

ஒரு காலகட்டத்துல அல்லாருமே "அவாளை" சகட்டு மேனிக்கு கிழிச்சிக்கிட்டிருந்தாய்ங்க. அவிகளோ கமுக்கமா இருந்தாய்ங்க. நாமதான் மாத்தி யோசிக்கிற ஆளாச்சே.

மேலும் நம்ம வாதங்களை முழு மூச்சா எடுத்து வைக்க ஒரு கவுண்டர் பார்ட் வேணமே. அதனால அய்யரா அவதாரம் பண்ணினோம். ( இப்பம் ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேன்னு பதிவு போடலியா அப்படி)

ஆனால் இந்த பாம்பு கீரிப்பிள்ளை சண்டை பதிவுலகத்துல போனியாகலை. அதனால திராட்டுல விட்டுட்டம். ஆனால் நம்ம ஜாரா இந்த மேட்டர் தெரியாம அய்யரா நாம போட்ட பதிவுகளையெல்லாம் கஷ்ட பட்டு பிரபலமாக்கிட்டிருக்காரு. அன்னார் நம்ம ஊர் பக்கம் வந்தா ஒரு இஞ்சி முரபா இலவசம்.

அன்னார் செய்து வரும் வேலைகள் நமக்கு எந்தளவுக்கு லிஃப்ட் கொடுக்குதுன்னு தெரிஞ்சும் அவருக்கு இதுவரை நன்றி சொல்லாதது தவறுதேன். சாரி ஜா.ரா அண்ட் தேங்க்யூ..

Wednesday, October 12, 2011

எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவா?

எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவாங்கற கேள்விக்கு மட்டுமல்ல எந்த மாதிரி சந்தர்ப்பத்துல வருவாங்கற கேள்விக்கும் இந்த பதிவுல நிச்சயம் பதில் இருக்கு. என்ன ஒரு லொள்ளுன்னா தேடனும் Read More

Tuesday, October 11, 2011

இரட்டை வெடி


இந்த 2011 ,அக்டோபர் மாதம் 11 ,12 தேதிகளில் அனுபவஜோதிடம் வலைப்பூ/தளத்தில் வெளியான பதிவுகளுக்கான தொடுப்பு இது.

நிர்வாண உண்மைகளை மட்டும் படிப்பவர்களின் வசதிக்காக இந்த தொடுப்பு சமாசாரம்.

கலைஞர் ஐயா போதும் விட்டுருங்க!

ஓ பக்கங்களும் ஞானியின் உளறல்களும்

Sunday, October 9, 2011

ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையே


ஜோதிடம் ஒரு விஞ்ஞானமேன்னு நிரூபிக்கிற அளவுக்கு நம்ம கிட்டே வாதங்கள் ஆயிரக்கணக்குல இருந்தாலும் அதை எடுத்து வைக்க ஒரு முகாந்திரம் வேணமே வெறுப்பு இல்லாம கொஞ்சம் பொறுப்பா வேற ஆராச்சும் ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேனுட்டு வாதங்களை எடுத்துவச்சா நல்லாருக்கும். அதை ஒரு முகாந்திரமா வச்சுக்கிட்டு நம்ம சரக்கையெல்லாம் அவுத்து விடலாம்னு கனவு கண்டேன். ஊஹூம்

கனமான வில்லன் ரோலை செய்ய பொருத்தமான வில்லன் நடிகர் கிடைக்காதப்போ ஹீரோவே டபுள் ரோல் பண்ற வழக்கத்தை துவக்கி வச்சது நம்ம தலைவருதேன். (ஹி ஹி எங்க ஊரு தேவுடு என்.டி.ஆரை சொன்னேன்)

நம்ம வாதங்களை முழுக்க கேட்டுட்டு குருவுக்கேத்த சிஷ்யனா குருவை மிஞ்சின சிஷ்யனான்னு நீங்களே முடிவு பண்ணுங்க

இப்படி வாதங்களை எடுத்து வைக்கறதே இதே வாதங்களை வேற ஆராச்சும் எடுத்துவச்சா யங் மாஸ்டர் சினிமாவுல ஜாக்கிசான் வாதாம் கொட்டைகளை நொறுக்கின கணக்கா நம்மாளுங்க நொறுக்கனும். அதுக்கான பயிற்சிதான் இந்த பதிவு. Read More

Saturday, October 8, 2011

ஜோதிடம் மூட நம்பிக்கையே - திகீர் பட்டிமன்றம்

கலைஞர் டிவில திண்டுக்கல் லியோனி பட்டிமன்ற அறிவிப்பை பார்த்த எஃபெக்ட்ல இந்த கலந்துரையாடலை துவக்கறேன்.

ஒரு சேஞ்சுக்கு ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேன்னுட்டு சேம் சைட் கோல்
போடலாம்னு இருக்கேன்.

நீங்க ஜோதிடம் விஞ்ஞானமேன்னு தான் வாதாடனும்னுல்ல நம்ம பார்ட்டிலயும்
ஜாய்ன் பண்ணலாம். ( மூட நம்பிக்கையேன்னு வாதிடலாம்)

என்ன நான் ரெடி .. நீங்க ரெடியா? ஆனால் கலந்துரையாடல் துவங்கப்போறது கூகுல் க்ரூப்ஸ்ல. அதுக்கு நீங்க இங்கன அழுத்தி வினோத்ஜீ துவக்கியிருக்கிற அனுப்வஜோதிடம் குழுவுல சேரனும். சேர்ந்தாச்சுன்னா க..ல...க்க..........லாம்.

போனஸ்:

செவன் இன் ஒன் : 7 பதிவுகள்

அண்ணே வணக்கம்ணே !

இந்த நிர்வாண உண்மைகள் வலைப்பூவை மட்டும் பார்த்தபடி ( ஐ மீன் படித்தபடி) அனுபவஜோதிடத்தை கண்டுக்காத பார்ட்டிகளுக்காக கடந்த 7 நாட்களில் அ.ஜோவில் வெளியான பதிவுகளின் சுட்டியை தந்திருக்கேன்.

படிச்சுப்பாருங்க. உங்க கருத்தை தவறாமல் கமெண்டா போடுங்க.

ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_03.html

சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_04.html

கொஞ்சல் மொழியும் எதிர்காலமும்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_06.html

கில்மா கவிதைகள்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_6702.html

மரணத்தை தியானியுங்கள்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_07.html

யோனி பொருத்தமும் - டார்வின் சித்தாந்தமும்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_08.html

Sunday, October 2, 2011

பம்பர் ஆஃபர் : ஏழு பதிவுகள்

அண்ணே வணக்கம்ணே !
ரெம்ப நாளைக்கப்பாறம் டெக்ஸ்ட் பதிவுகள் போட்டிருக்கம். அதுக்கு மிந்தி நிர்வாண உண்மைகளை மட்டும் ஃபாலோ பண்றவுக மிஸ் பண்ண ஆடியோ பதிவுகளுக்கான சுட்டி கீழே :

அடிச்சவனே ...க்காண்டி
http://anubavajothidam.blogspot.com/2011/09/blog-post_28.html

காஞ்சிபுரத்தில் மலேசிய கில்மா யோக குரு : திகீர் பதிவு
http://anubavajothidam.blogspot.com/2011/09/blog-post_29.html

நானுயர நாடுயரும் - கவிதை
http://anubavajothidam.blogspot.com/2011/09/blog-post_5144.html

பவர் கட்டால் ஆன்மீக வளர்ச்சி
http://anubavajothidam.blogspot.com/2011/09/blog-post_3684.html

கில்மா குரு மலேசிய தமிழருங்கோவ்..
http://anubavajothidam.blogspot.com/2011/09/blog-post_30.html

டெக்ஸ்ட் பதிவுகள்:

எழுத்தும் - தலையெழுத்தும்
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post.html

எங்கே தப்பு பண்றோம்?
http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_02.html