ஜோதிடம் பெயரால் நடைபெறும் மோசடிகளை ஒரு தொழில் முறை ஜோதிடனான நானே எடுத்துக்கூற இருப்பது தங்கள் பூர்வ ஜென்ம புண்ணியமென்றே கூற வேண்டும்.
1.பேர் ராசிக்கு பலன் சொல்லி ஜல்லியடிப்பது. இது 100 சதம் போலி. சிலர் ரொம்பவே சாலாக்குடன் 30 வயசுக்கு பிறகு வச்ச பேருதான் வேலை செய்யும் என்பதும் உண்டு. என் கேள்வி : நாய்க்கு டைகர் என்று பெயர் வைத்த மாத்திரத்தில் அது புலியாகிவிடுமா என்ன ?
இதே மாதிரி கல்யாண பொருத்தத்திலும் மோசடிகள் நடைபெறுகின்றன. வச்ச பேரு, வீட்டுல கூப்புடர பேரு, செல்ல பேருக்கெல்லாம் பொருத்தம் பார்க்கிறது வேஸ்ட். ஜாதகம் பொருந்தனும். தோசங்கள் சமமா இருக்கனும். தச வித பொருத்தங்கள்ள ரஜ்ஜு நாடி கரெக்டா இருக்கனும் தட்ஸ் ஆல்
2.ஜன்ம நட்சத்திரம் அல்லது ஜன்ம ராசியை வைத்து பலன் சொல்லிவிட்டு இதுதான் உன் எதிர்காலம் என்பது. இதுவும் மிகப்பெரிய தவறாகும். மோசடி என்றே கூறலாம். வாழ்க்கை எனும் ரயில் ஜாதகப்படி நடைபெறும் தசாபுக்திகள்,தற்கால கிரக சஞ்சாரம் எனும் 2 தண்டவாளங்களின் மீது பயணிக்கும். வெறுமனே கோச்சார பலனை சொல்வது ஊரை ஏமாற்றும் செயலாகும்.(பத்திரிக்கைகளில் வெளியாகும் ராசிபலன்கள் கூட மோசடிதான்.
3.உண்மையில் கோச்சாரப்படி சொன்ன நல்லதோ கெட்டதோ நடைபெறுமானால் உங்கள் ஜாதகம் சப்பை,தக்கை ,என்று அர்த்தம்.
4.சூரியன்,சந்திரன்,செவ்வாய்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் என்று 9 கிரகங்கள் இருந்தாலும் ஒவ்வொரு லக்னத்துக்கும் 3 கிரகங்கள் தான் சுபர்.அதாவது நன்மை செய்யும் கிரகங்கள். சர்ப்ப தோஷமில்லையென்றால் ராகுவும் நலம் புரிவார். எனவே அது உச்சம், இது உச்சம் என்று பூ சுற்றினால் நம்பாதீர்கள். லக்னத்துக்கு சுபனாக இருக்கும் கிரகம் உச்சம் பெற வேண்டும் . அது கூட ஸ்தான பலம், அஸ்தமனம்,வக்கிரம் போன்ற லொள்ளுக்கு உள்ளாகாது இருக்க வேண்டும். அப்போதுதான் பஞ்சமகா புருஷ யோகங்கள் (கிரகம் உச்சம் பெற்ற) வேலை செய்யும்.
5.அப்படியே கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் நீங்கள் அந்த கிரகம் தொடர்பான கல்வி,தொழிலில் ஈடுபடுவதோடு, மேற்படி கிரகம் தொடர்பான மனிதர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் தான் அந்த கிரகம் தரும் யோகம் வேலை செய்யும்.
6.தனயோகம் என்பது வாயை கட்டி,வயிற்றை கட்டி ஒன்று அல்லது இரண்டு லட்சங்களை சேர்த்துவைத்து ஊர் வாயில் போட்டு முழிப்பதல்ல. எத்தனை லட்சங்களை வீணாக்கினாலும் மீண்டும் மீண்டும் லட்சங்கள் வரவேண்டும் அதுதான் தனயோகம்.
7. சுப கிரகங்கள் தரும் யோகம் ஒரு விதமாக, அசுப கிரகங்கள் தரும் யோகம் வேறு விதமாக பலன் தரும்.
8. வீட்டுக்கு கடைக்கால் எப்படியோ ஜாதகத்துக்கு லக்னம் முக்கியம். லக்னம்,லக்னாதிபதி கெட்டிருந்து எத்தனை யோகங்கள் இருந்தாலும் வேஸ்டுதான்
9.ஒரு ஜாதகனுக்கு பணம் வரக்கூடாது என்று சொல்லக்கூடிய நாள் எதுவும் கிடையாது/எவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் வரலாம். (அஷ்டமாதிபதி தசையில் கூட கால் போய்,கை போய் பணம் வந்திருக்கிறது) என்னவொரு பிரச்சினை என்றால் கெட்ட நேரத்தில் வரும் பணம் வீணாகும். நல்ல நேரத்தில் வரும் பணம் உபயோகப்படும்.
Sunday, June 28, 2009
மறு மொழிக்கு மறுமொழி :சுன்னத் செய்து கொண்டுவிட்ட ஆணுக்கு
நண்பரே !
ஆக்கப்பூர்வமாக அணுகி பொறுமையுடன் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தமைக்கு நன்றி. பிறப்புறுப்புகளுக்கு் கடைசிச்சொட்டு சிறு நீரே கேடு விளைவிக்கும் என்றால் ஜன சஞ்சாரமிக்க இடங்களில் கிடைக்கும் கற்களில் அதுவும் மழைகாலங்களில் என்றால் சொல்லவே தேவையில்லை. அவற்றில் எத்தனை கோடி கிருமிகள் இருக்குமோ சிந்தித்து பாருங்கள். நாயகம் கூறியது பாலை நிலத்துக்கு 100 சதம் பொறுத்தம்.
அழுக்கை சுத்தப்படுத்தத்தான் தண்ணீர் இருக்கிறதே (In our country) . பாலை நிலத்தில் தண்ணிர் கிடைப்பது துர்லபம். எனவே தான் நாயகம் இப்படி கூறியிருக்கிறார். சற்றே சிந்தித்து பாருங்கள். சுன்னத் செய்து கொண்டுவிட்ட ஆணுக்கு எப்படி அழுக்கு சேர முடியும் ?
மருத்துவர்கள் நீரையோ,வென்னீரையோ, ஏன் டெட்டால் கலந்த நீரையோ ரெகமண்ட் செய்வார்களே தவிர ஆயிரம் பேர் உபயோகித்த கற்களை ரெகமென்ட் செய்யமாட்டார்கள்.
<முகங்களை மூடிமறைக்க இஸ்லாம் சொல்லித்தரவில்லை>
இது நிச்சயம் எனக்கொரு செய்தியே ! வரவேற்கத்தக்கது . <முஸ்லீம் பெயர் தாங்கிகள் > ஆஹா அற்புதமான பிரயோகம் ?
நான் மேற்சொன்ன <முஸ்லீம் பெயர் தாங்கிகள் >சொன்னதை இஸ்லாமாக புரிந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.
மீண்டும் சொல்கிறேன்.. இஸ்லாம் மட்டும் நூற்றுக்கு நூறு பின்பற்றப்படுமேயானால் சர்வ நிச்சயமாக வேறொரு மதம் இந்த பூமியிலேயே தொடர முடியாது.
<முஸ்லீம் பெயர் தாங்கிகள் > செய்வதை பார்த்து இஸ்லாமை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் என்றீர்கள் . பெரும்பாலான முஸ்லீம்கள் பின்பற்றும் பலவும் இஸ்லாமுக்கு விரோதமாக இருப்பதை காண்கிறேன். அவை குறித்த விவரங்களை தனிப்பதிவாகவே இட்டால் நலம்.
ஔரங்கசீப் தர்காவுக்குள் செல்வார். சலாம் அலைக்கும் என்று சலாம் கூறுவார். தர்காவுக்குள் புதை பட்டிருக்கும் பெரியவரிடம் பிரதி சலாம் வர வேண்டும். இல்லையோ அந்த தர்கா இடிக்கப்படும்.
அவ்வாறே எந்த ஒரு மசூதிக்குள் தொழுகை நடத்தும்போது ஔரங்கசீபுக்கு இணக்கமான வைபரேஷன்ஸ் கிடைக்கவில்லையோ அந்த மசூதி இடிக்கப்படும். ஔரங்கசீபின் இறை நம்பிக்கைக்கு ஒரு உதாரணம். ஔரங்கசீப் தொழச்செல்லும் மசூதி வாயிலில் எப்போதும் ஒரு குருடன் இருப்பது வழக்கம். ஒரு நாள் ஔரங்கசீபுக்கு தோன்றியது "இறைவன் பேரருளாளனாய் இருக்கும்போது மசூதி வாயிலிலேயே இருக்கும் இந்த குருடனுக்கு ஏன் பார்வை கிடைக்கவில்லை..? ஆம் இவன் இறை நம்பிக்கையற்றவனாய் தான் இருக்கவேண்டும் அதனால் தான் பார்வை பெறவில்லை. இறை நம்பிக்கைக்கு களங்கம்கற்பிக்கும் வகையில் இவன் இங்கே இருக்கக்கூடாது "என்று முடிவு செய்தார்.
குருடனை அழைத்தார். " இதோ பார் ! நான் தொழுகைக்கு சென்று திரும்புவதற்குள் உனக்கு பார்வை கிடைத்திருக்கவேண்டும் இல்லை
என்றால் உன் கழுத்தை வெட்டியெறிவேன்"
தொழுகைக்கு சென்றார். திரும்பினார். குருடன் பார்வை பெற்றிருந்தான் . இது தான் ஔரங்கசீபின் இறை நம்பிக்கைக்கான அடையாளம். அவர் குரான் பிரதி எடுப்பதிலும், தொப்பிகள் தயாரித்து விற்பதிலும் கிடைத்த பணத்தை மட்டுமே சொந்ததுக்கு உபயோகித்து வாழ்ந்தார் என்பது யாவரும் அறிந்ததே. பாபர் ,ஹுமயூன் கதை தெரியுமா? அது அடுத்த பதிவில்

Saturday, June 27, 2009
ஔரங்கசீப் தர்காக்களை,மசூதிகளை கூட இடித்து தள்ளியிருப்பது தெரியுமா?
இஸ்லாமில் என்னை கவர்ந்தவை (சில உறுத்தல்கள்)
இஸ்லாமில் என்னை கவர்ந்தவை :
வட்டியை தடை செய்துள்ளமை. (யதார்த்தத்தில் பலரும் வட்டி வாங்குவதும் கொடுப்பதும்)
வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர் (யதார்த்தத்தில் வரதட்சிணை கொடுக்கல் வாங்கல் உள்ளது)
சமத்துவம், சகோதரத்துவம் நமாஸ் வேளைகளில் யார் முன்னே வந்தால் அவருக்கு முதலிடமே தவிர இந்து கோவில்கள் போல் கொள்ளையடிப்பவனுக்கு பூர்ணகும்பம் எல்லாம் கிடையாது
(யதார்த்தத்தில் பார்க்கும்போது என்னென்னவோ பிரிவினைகள் சன்னி,ஷியா,லெப்பை)
இறைவனை தவிர வேறு எவனுக்கும்,எதற்கும் தலைவணங்காமை (இதுவும் நடைமுறையில் 100 சதம் பின்பற்றப்படுவதில்லை) இதே கான்செப்ட் இந்து மதத்தில் ஊடாடினாலும (நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்) தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று கூறி மைல் கல்லுக்கெல்லாம் படையல் போடுகிறோம்.
ஔரங்கசீப் இந்து கோவில்களை இடித்ததாய் இந்துத்வாவாதிகள் வாதிடுவது உண்டு. அதே ஔரங்கசீப் தர்காக்களை,மசூதிகளை கூட இடித்து தள்ளியிருப்பது தெரியுமா? அதற்கான காரணம் எத்தனை உத்தமமானது தெரியுமா? அவை அடுத்த பதிவில்இந்து மதம் போலவே இஸ்லாமிலும் பண்டித கூச்சல்கள் அதிகமாய் உள்ளன. அண்டர்வேர் அணியலாமா கூடாதா என்று ஒரு அப்பாவி முஸ்லீம் கேட்டால் கூட ஒரே பதிலை கூற முடியாத நிலை உள்ளது. இஸ்லாம் குறித்த விவாதங்களில் தத்துவத்தின் மையத்தை விட்டு விலகிப்போகும் தன்மை உள்ளது. இதற்கு மதப்பெரியவர்களே காரணமாய் உள்ளது வருத்தம் தருகிறது.
இந்துக்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம். டம்ளர் டம்ளராக காபியும்,டீயும் உள்ளே தள்ளி மதியம் 2 க்கெல்லாம் வடை பாயாசத்துடன் விருந்து உண்கிறோம். ஆனால் ரமலான் நோன்பை பாருங்கள். நோன்பென்றால் அதுதான் நோன்பு.

முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால்
இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?
முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். அன்று,பாலை நிலத்தில் வெஜ் உணவுகள் கிடைப்பது துர்லபம் எனவே மாமிச உணவு அனுமதிக்கப்பட்டது. இன்று ?
மேலுமொரு உதாரணம்: முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடே.
பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.
ஆனால் இன்றுள்ள பொல்யூஷனுக்கு இந்து பெண்களும் புர்கா அணிவது பாதுகாப்போ என்னவோ?
தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.
மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்
நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?
இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.
இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !

Friday, June 26, 2009
மனிதம் மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம்
முஸ்லீம் கள் காலத்துக்கேத்தாப்ல மாறனும்
இதை எழுதலாமா வேணாமானு இத்தனி காலம் ஊற வச்சிருந்தேன். நான் பிறப்பால இந்துவா இருந்தாலும் உணர்வுகளால் நான் அரை துருக்கன். ஆமாங்க அடிக்கடி சொல்வேன் " இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன் & முஸ்லீம்ஸ் ஆர் தி வொர்ஸ்ட் ஃபாலோயர்ஸ்"
இஸ்லாமை பத்தி நமக்கு (எனக்கு) தெரிஞ்சது பத்து பைசா அளவுகூட இருக்காது ..இதுக்கே பயந்துட்டன். இப்படி கூட ஒரு மதம் போதிக்குமா ? மனிதம் மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம் முஸ்லீம்களால் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்துமதத்தில் எப்படி அச்சு அசலான யோக முறைகள் எல்லாம் மூலையில் கிடத்தப்பட்டு விளக்குக்கு எத்தனை திரி போடனும் என்ன எண்ணை ஊத்தனும்னு கதை அளக்கறாப்ல இஸ்லாம்லயும் வெத்து விவாதங்கள் நிறைய நடக்கறாப்ல தெரியுது. நம்ம மதத்துல பிராமணர்கள் ஆற்றிய தொண்டை(?) அங்கே மத பெரியவர்கள் ஆற்றுகிறார்கள்.
இறைவனை தவிர வேறெதற்கும் தலை வணங்க கூடாது என்ற தலையாய விதியிருந்த போதிலும் அவர்களிலும் மூட நம்பிக்கைகள்,மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. சமத்துவம்,சகோதரத்துவம் என்பது போதிக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் பார்க்கும்போது பிளவுகள் இருக்கவே இருக்கின்றன. இஸ்லாமில் என்னை கவர்ந்த அம்சங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
நபிகள் நாயகம் போன்ற மனிதாபிமானியை நமது புராணங்களிலோ ,வேதங்களிலோ,சரித்திரத்திலோ எங்குமே காணமுடியாது ,காட்டவும் முடியாது . அது போன்றதொரு மனிதாபி மானி மனிதாபிமானத்துடன் அந்த யுத்த காலத்துக்கென்று, பாலை பூமிக்கென்று வகுத்து கொடுத்த நியதிகளை இன்றும் இந்த சாந்தி காலத்திலும், இந்த பொன் விளையும் பூமியிலும் பின்பற்றுவது எந்த அளவுக்கு அறிவுடமை என்று அவ்வப்போது கேள்விகள் எழுவது உண்டு.
உதாரணமாக : பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம். பெண்டிர் விதவைகளாவது சகஜம். அதனால் நபிகள் நாயகம் பல தார மணத்தை ஆதரித்திருக்கலாம். இன்று ? பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள். பாலை பூமிக்கு பர்தா தேவைதான். மணல் புயல் வீசும் என்பதால் . மாமிச உணவும் தேவைதான். அங்கு தாவர உணவு கிடைப்பது சிரமம் என்பதால்.
பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ?

மகளோட காதல் விவகாரம். இன்னம் ஒரு வருசத்துல அவள்
ஒரு நாள் போதுமா ?
இந்த 42 வயசுக்கு மூளைல சேர்ந்துபோன குப்பை கூளங்களை ,அதுல ஒளிஞ்சிருக்கிற மணிகளை பகிரணும்னா எத்தனை ஜி.பி.டைப் பண்ணனுமோ தெரியலை. அதனால இன்னைக்கு ஒரு நாள் என்னா கிழிச்சேனு மட்டும் எழுதறேன் தலைப்பு "ஏழைபடும் பாடு"னு வச்சா பொருத்தமா இருக்குமோ என்னவோ ? 3 வருசம் முன்னாடி உண்மையிலயும் ஏழை, சமுதாயமும் ஏழைனு நினைச்சிருந்தது.
இப்போ கதை கொஞ்சம் மாறி போச்சு. எல்லாரும் நானேதோ க்ளிக் ஆயிட்டேனு நினைக்கறச்ச ஃப்யூஸ் போயிருச்சு. ஒரு நாளிதழ்ல பார்த்துக்கிட்டிருந்த வேலை பணாலாயிருச்சு. சொந்த பத்திரிக்கை தான் சோறு போடுது. முன்னாடி வாடகை இல்லாத வீடு. கரண்டில்லாததால கரண்டு பில்லும் கிடையாது. இப்போ ?
இத்தனைக்கும் நான் ஒரு ஆஃபீஸர் மகன். சொந்த வீடும் இருந்தது. கலப்பு திருமணத்தால அப்பாவோட கனெக்ஷன் கட். அப்பா துபாய் போயிட்டதால வீட்டை வித்து அண்ணன் தம்பி பங்கு போட்டு அதுவும் டமால். நாலு பேர்ல ரெண்டு டி(வி)க்கெட்டும் டமால்.
நிற்க நான் சொல்ல வந்தது என்னன்னா.. ஏழையாவே இருந்தா நான் (சுமார் 16 வ) மேற்படி நாளிதழ் வேலையால வாலை அவுத்து விட்டாச்சு. வீட்டு வாடகை 450 ஆஃபீஸ் வாடகை 270 கரெண்டுபில் 120 டிஷ் பில் சாப்பாட்டு செலவு, மேல் செலவு, பீடி சிகரட் செலவு இப்படி செலவு கூடிப்போச்சு. இதுல தினசரி 20 30 வீதம் இன்டர்னெட் செலவு வேறே . கிழிச்சதுன்னா ஒரு மயிரும் கிடையாது. தெலுங்கு வலைப்பூவையாவது 6 மாசத்துல 16 ஆயிரம் பேரு பார்த்தாங்க . தமிழ்ல 3 வருசமா 2400 பேருதான்.
என்ன இதற்கிடையில அக்ரகேட்டர்ஸ் எண்ணிக்கை அதிகமானதால வாசிப்பும் அதிகமாகியிருக்கு. இதுல மகளோட காதல் விவகாரம். இன்னம் ஒரு வருசத்துல அவள் மேஜர். அவள் விரும்பின டுபாகூரையே கட்டி வச்சுட்டா ஒரு பீடை ஒழியும்னு நப்பாசை.
பெருமையா சொன்ன சொந்த பத்திரிக்கையோட டோட்டல் டர்ன் ஓவர் ரூ.12000 தான் இதுல செலவு போக என்னத்த மிச்சமாகி என்னத்தை செய்ய. ஆனால் சும்மா சொல்ல கூடாது நத்திங் பட் காட் தான் .இதுல ஒரு பி.எஸ்.சி.பட்டதாரிய மாத சம்பளம் ரூ.1,500 க்கு அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன்.
இன்னைக்கு காலைல என்ன நடந்தது? ராத்திரியெல்லாம் ஈரத்துணி சுத்திக்கிட்டு (பசியால இல்லிங்க , மந்திர ஜபம்) கங்கை பதிப்பகத்தோட உலக மகா நாகரீகங்களை வாசிச்சு ரெண்டு ,மூனு மணிக்கு தூங்கி காலை 7 மணி வாக்குல எந்திரிச்சேன். அய்யய்யோ ரெப் வருவாரே (நம்ம பத்திரிக்கையோட அட்வர்டைஸ்மென்ட் ரெப்) அவரு 200 ரூ முன் பணம் கேட்டாரேனு ஞா. வந்துருச்சு.
உங்களை எங்கனா கைமாத்து கேட்டுறப்போறேனு பயந்துக்காதிங்க. எப்படியோ பீராய்ஞ்சு கொடுத்துட்டன்.ஒரு இளைஞரணி தலைவர் ரூ.1000 தரனும், ஒரு ஸ்டடி சென்டர் காரன் ரூ.500 தரணும் இருந்தும் ரூ,200 கடன் வாங்கி சமாளிச்சேன். 11 மணி வரைக்கும் ரெப்பை அழைச்சிட்டு போய் மார்க்கெட்டை காட்டி, விளம்பரம் சேகரிச்சு (அய்யா சாமீ ! சின்ன விளம்பரம் கொடுங்கயா) வீட்டுக்கு வந்தேன். பசி கொல்லுது. 1997 ல யிருந்து டிஃபன் சாப்பிடறதயே விட்டுட்டன். ஒரு காலத்துல மூணு வேளைக்குமா சேர்த்து 4 மணீக்கு சாப்பிட்டதெல்லாம் உண்டு. நடுவுல லெமன் டீ சாப்பிடற பழக்கம் வந்து தான் பசிங்கறதயே உணர ஆரம்பிச்சிருக்கேன்.
சாட் நண்பர் ஒருவர் திருமண தாமதத்துக்கு பரிகாரம் கேட்க அம்மனோட சத நாமாவளிய ப்ரிண்ட் பண்ணி மக்களுக்கு இலவசமா கொடுங்கனு ஒரு சஜஷன் கொடுத்திருந்தேன். அவரு "கல்யாணம் பண்ணிக்கோனா நீயே என் பெண்டாட்டியா வான்னு சொன்ன கதயா நா காசு கொடுத்துர்ரன் நீங்களே போட்டு நீங்களே கொடுத்துருங்கனு சொல்லியிருந்தாரு.
வீடு வந்தேனா பெண்டாட்டி அரி்சி பொறுக்கிகிட்டிருந்தாளா பசி செத்துப்போய் மேற்சொன்ன சதனாமாவளி பாக்கெட் புக் வேலைய பார்க்க டி.டி.பி காரர் கிட்டே போனேன்.
இதற்கிடைல ஆரணி நிருபர் போன் பண்ணி பலான யூனிவர்ஸிட்டி ஸ்டடி சென்டர் வைக்காங்க அவங்களூக்கு கொஞ்சமா கோ ஆப்பரேட் பண்ணுங்க என்றார்.
அங்கே போய் நல்லது கெட்டதெல்லாம் சொல்லி நம்ம பத்திரிக்கைக்கு ஒரு ஃபுல் பேஜ் விளம்பரம் ஒன்னு பீராஞ்சேன். வீட்டுக்கு வரலாம்னு பார்த்தால் ஒரு டி.வி நிருபர் போன். அதேதோ T.V ப்ரோக்ராம்ல ஜோதிட கேள்விக்கு பதில் சொல்ல உங்களை ரெகமண்ட் பண்ணியிருக்கேன் உங்களுக்கு ஓகேன்னா ஒரு மேக்ஸி சைஸ் படம் கொண்டாங்க என்றார். விட முடியுமா ? இத்தனைக்கும் தேங்கா மூடி கேஸுதான். வாத்தியார் சொல்லியிருக்காரே "பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்னு" அதுக்குதான் அனுபவஜோதிடம் டாட் ப்ளாக்ஸ்பாட் டாட்காம்னு ஒன்னு ஆரம்பிச்சேன் .போனியாகலையே. ஏதோ ரெண்டு மூனு மணீயார்டர் (தலா ரூ.200) ஒரு 3 தடவை ரூ.1,500 ,ஒரு தடவை ரூ.3,000 டி.டி.வந்ததோட சரி. இப்படி டி.வி.மூலமாச்சும் புகழ் வந்தா பணம் வரும். பணம் வந்தா ஜனம் சேரும்.ஜனம் சேர்ந்தா ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை பிரபலமாக்கலாம் பத்து கோடி நிருத்யோகர்களை கொண்டு கங்கை காவிரியை இணைக்கலாம்னு நப்பாசை..
எங்கே ஓடறிங்க ..மதியம் வரைக்கும் தாங்க ஆச்சு..

Thursday, June 25, 2009
மனிதர்கள் வெவ்வேறு போர்வைகளில் செய்வது இரண்டைத்தான்.
இந்த படைப்பே ஒரு விபத்து. மனித வாழ்வு அக்மார்க் விபத்து. ஒரு எலக்ட்ரானிக் உபகரணத்தில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இருப்பது போல் ஒவ்வொரு உயிரிலும் உயிர் வாழும் இச்சையும்,தற்கொலை இச்சையும் சேர்ந்தே உள்ளன. மனிதர்கள் வெவ்வேறு போர்வைகளில் செய்வது இரண்டைத்தான். 1.கொல்வது 2.சாவது. இவை இரண்டுமே செக்ஸ்,மற்றும் பணத்தில் கைகூடுவதால் தான் மனிதனுக்கு செக்ஸ் மற்றும் பணத்தின் மீது இத்தனை காதல்.
முக்தி என்பது என்ன? எண்ணங்கள் இறத்தலே முக்தி. செக்ஸில் ஆர்காசம் அடையும்போது எண்ணங்கள் இறக்கின்றன. ஒரு செகண்ட் ப்ளாக் அவுட் ஏற்படுகிறது. இதை மீண்டும் மீண்டும் பெறத்தான் மனிதன் செக்ஸில் ஈடுபடுகிறான்.
உயிர்வாழும் இச்சை படைப்புக்கு தூண்டுகிறது. படைப்பால் மனிதன் பார்ஷியலாக இறக்கிறான். டூ இன் வன். மனித உடலில் இருப்பது ஒரே சக்தி தான். அது காம சக்தி. அவனது செயல்பாடுகளை பொருத்து அது யோக சக்தியாக மாறுகிறது.
செக்ஸில்,பிள்ளைகள் பெறுவதில் முழுமையாக செலவழித்து விட முடியாத அளவுக்கு ஆண்மை உள்ளவனே படைப்பு தொழிலுக்கு வருகிறான். அங்கும் முழுமையாக செலவழியாத காம சக்தி தான் அவனை முக்திக்கு தூண்டுகிறது.
பணம்,செக்ஸ் உதவியால் ஒரு மனிதன் முழுமையாக சாகவும் முடியாது ,எதிராளியை முழுமையாக கொல்லவும் முடியாது. தியானத்தால் இவைஇரண்டுமே சாத்தியம். இந்த உண்மையை அனைவரும் அறிய முதற்கண் அவர்களுக்கு செக்ஸும்,பணமும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். இவற்றை (ஒரு ஜோதிட ஆய்வாளனாக கிரகங்களின் பாதிப்புகளை, அவை வேலை செய்யும் விதத்தை அறிந்தவன் என்ற முறையில்) மக்கள் முழுமையாக, தங்கு தடையின்றி,சட்டப்பூர்வமாக,தரும வழியில் பெற உதவுவதே என் பதிவுகளின் நோக்கம்.
மனிதனுக்கு மரணம் என்றால் பயம். இருட்டு மரணத்துக்கு சிம்பல். தனிமை மரணத்துக்கு சிம்பல். இதனால் தான் ராத்திரியில் பவர் கட்டானால் கூட மின் நிலையங்களுக்கு போன் மேல் போன். இதனால் தான் 6 முதல் 60 வயது வரை மனிதன் காதலித்துகொண்டே இருக்கிறான். நீயே உன் ஒளியாக இரு என்றான் புத்தர். எத்தனை பேரால் இப்படி வாழ முடியும். ஏழ்மையும்,தனிமையும் மனிதனை வெருட்ட ஆரம்பிப்பதால் தான் மக்கள் பணம் பணம் என்று பறக்கிறார்கள்.ஈவ் டீசிங்,கற்பழிப்புகள்,கள்ள உறவுகள் எல்லாமே இதன் விளைவுதான்.
இதற்காகத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தீட்டினேன். அதன் அமலுக்கு 1986 முதலாக உழைத்து வருகிறேன். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
தனது அடிமனதில் உள்ள ,அடிப்படை கோரிக்கைகள் (சாவது,சாவடிப்பது) செக்ஸிலோ,பணத்தாலே நிறைவேறாது, அது தியானத்தின் மூலம் மட்டுமே சாத்தியம் என்று மனிதன் அனுபவ பூர்வமாக உணர வேண்டுமானால் பணம்,செக்ஸ் முழுமையாக, தங்கு தடையின்றி,சட்டப்பூர்வமாக,தரும வழியில் கிடைத்தாக வேண்டும். என் நாடு சித்தர்கள் சூட்சும வடிவில் இன்றும் வாழும் பொன்னாடு. இந்நாட்டு மக்கள் அனைவருமே ஞானம் பெறவேண்டும். அதற்கு முதல் படியாக
பணம் மற்றும் செக்ஸை முழுமையாக, தங்கு தடையின்றி,சட்டப்பூர்வமாக,தரும வழியில் பெறவேண்டும்.

டி.வி.சீரியலும்,கந்து வட்டியுமா காலத்தை ஓட்டிடலாமுன்னு எண்ணமா?
செவிடன் காதில் சங்கு ,அலிக்கு அரம்பை ,இந்த வரிசையில் தமிழனிடம் இன மானம் குறித்த பேச்சும் இடம் பெற்று ரொம்ப நாளாகிறது. இலங்கை வேற்று நாடுதான் இல்லை என்று கூறவில்லை. நாம் நேருவின் பஞ்சசீல கொள்கைகளை பின்பற்றுகிறோம் என்பதயும் ஏற்கிறேன். அந்த காலத்தில் அகதிகள் பிரச்சினையை முன்வைத்து கிழக்கு வங்காள விடுதலைக்கு உதவவில்லையா? அவ்ள தூரம் தயவு காட்டாட்டி போகுது. விடுதலை புலிகளை ஆதரிக்காட்டியும் பரவாயில்லை. அங்கே வீடிழந்து ,முழத்துணிக்கும்,பிடி சோற்றுக்கும் வழி இல்லாது அல்லாடும் மக்கள் குறித்தாவது சிந்திக்கலாமே.
அட டுபாகூருங்களே !
இப்படியே மானங்கெட்டு வாழ்ந்தா டி.வி.சீரியலும்,கந்து வட்டியுமா காலத்தை ஓட்டிடலாமுன்னு எண்ணமா? அதுதான் நடக்காது. முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும் /கெடுவான் கேடு நினைப்பான் / இதெல்லாம் சும்மா வேலை வெட்டியில்லாத பெருசுங்க விட்ட டகுலுனு நினைக்கிறிங்களா ?
இல்லேடா கண்ணா இதெல்லாம் பல நூற்றாண்டு கால வாழ்க்கை தந்த பாடம். நாளைய சத்தியம். தாளி ! உங்களுக்குதான் இலங்கைய தட்டி கேட்க திராணியில்லே.
ஐநாசபைல எவனோ கொண்டுவந்த தீர்மானத்தையும் தோற்கடிக்கறிங்களே ..இப்படியே போயிடுமா வாழ்க்கை ? "கொடுப்பதழுக்கறுப்பான் சுற்றம் உணவும்,உறையும் இன்றிக்கெடும்"
இந்த அலித்தனமான போக்காலதான் எங்கே போனாலும் உதை வாங்கி சாகறிங்க
அடச்சீ..ஆயுதம் தூக்கி போராடச்சொல்லலையே ! தேர்தல்ல இனமானம் காக்க எழுந்த கட்சிகளுக்கு ஆதரவா பட்டனை அழுத்த கூட தகிரியம் இல்லியா ?
முறத்தால புலிய ஓட்டினோம்னு கதையா பண்றிங்க ? ஒரு நாளில்லே ஒரு நாள் உங்க கதியும் அந்த தமிழன் கதிதான்

Monday, June 22, 2009
பாதி ராத்திரி கதவு டொக் டொக். திறந்தா கையில பெர்த்டே கேக்
நள்ளிரவு ஹேப்பி பர்த்டே !
நம்ம தமிழ் சினிமால ஹீரோயினுக்கு பிறந்த நாளுன்னா ஹீரோ பாதி ராத்திரி போன் பண்ணி ஹேப்பி பர்த்டே சொல்வாரு. இதெல்லாம் சினிமால பார்க்கிறப்ப நல்லாவே இருக்கும்.இருக்கப்பட்டவன் வீட்ல பார்த்தாலும் ஓகே தான். ஆனால் என் மகளுக்கு பெர்த்டேன்னதும் பாதி ராத்திரி கதவு டொக் டொக். திறந்தா என் மகளோட உட் பி (இதுலயே சந்தேகமிருக்குது பாருங்க).கையில பெர்த்டே கேக். அதுமேல ஒரு கேண்டில்.
பேரு சன் தீப் இங்கிலீஷ்ல எழுதி பரிச்சு படிங்க ! சேண்ட் (மணல்), மணல் எங்க இருக்கும் பாலைவனத்துல. டீப் (ஆழம்). பார்க்க நம்ம லேட்டஸ்ட் சினிமா ஸ்டார் மாதிரிதான் இருக்கான்.
உஃப்னு ஊதினா பறந்துருவான். புல் தடுக்கி. எங்க சித்தூர்ல ராத்திரி 7.30 ஆனா போதும் லாலா பார்ட்டி எல்லாம் லாலா போட ஆரம்பிச்சுரும். 9 ஆனால் போதும் கடையெல்லாம் மூடிருவாங்க ! கடை படிக்கட்டுல பிளாஸ்டிக் கிளாஸ் சகிதம் தண்ணி கச்சேரி .
மெயின் ரோட்ல போலீஸ் ரோந்து இருக்குதுன்னு சந்துகள்ள கூட இது நடக்கும். இந்த பையன் கேக்கோட வர்ரத பார்த்து எவனாச்சும் லாலா பார்ட்டி கழுத்துல கத்திய வச்சு வீடுவரைக்கும் வந்து கதவை தட்ட வச்சு உள்ளே பூந்திருந்தா என்ன நிலை? நான் என்ன ஜாக்கிசானா ! இல்லே அவன் என்ன ப்ரூஸ்லீயா !
இந்த லவ்ஸ் வந்தாலே மண்டைல ஸ்க்ரூ எல்லாம் லூஸாயிருமா என்ன? பூனை கண்ணை மூடிக்கிட்டு பால் குடிக்குமாம். எவனும் என்னை பார்க்கலைனு நினைச்சுக்குமாம். இந்த லவர்ஸ் நிலை கூட அதே தான். அவன் என்ன பண்றான்னு அவனை தவிர மத்த எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கும்.
தாளி நான் கூட காதலிச்சிருக்கேன். நம்ம காதலெல்லாம் வெரைட்டியா இருக்கும். உள்ளுக்குள்ள தெய்வீக காதலா இருந்தாலும் மேலுக்கு டவுன் பஸ்ஸுல க்ளோசப்ல நின்னுக்கிட்டு "காலேஜ் வரைக்கும் லவ் பண்ணேன்" தான்.
இவனுங்களால காதலையும் தாங்க முடியாது. காதல் தோல்வியையும் தாங்க முடியாது.
என்ன ஃபிஸிக்கோ, என்ன பழக்க வழக்கமோ ..தாளி ..ஒரு தடவை காதலி , பொறுக்கின்னிட்டா "வெறும் பொறுக்கி இல்லே கண்ணா பொம்பளை பொறுக்கி என்றுவிட்டு சாம்பார்சாதம் 2 தடவை, ரசம் 2 தடவை, மோர் 2 தடவை போட்டு மூக்கு பிடிக்க சாப்பிட்டேன்.
இவன் என்னத்த ரிஸ்க் எடுத்தான். ஒரு நாள் முகமெல்லாம் எண்ணையா என் மகளோட வீட்டுக்கு வந்தான். "என்னா கண்ணா லவ்வா" ன்னேன். என் மக தான் ஆமா போட்டா. நான் வச்சுக்க நீனிட்டேன்.
காதல் தோல்வில மூக்குபிடிக்க சாப்பிட்டா நான் எங்கே ! வில்லனாக வேண்டிய அப்பனே ப்ரோக்கர் ஸ்டேஜுக்கு வந்து " நைனா அங்கே இங்கேல்லாம் மீட் பண்ணாதே .. நேர நம்ம வீட்டுக்கு வந்துடு" என்று சொன்ன பிறகும் வேளைக்கு சாப்பிடாம அல்ஸர் வந்து ரத்த வாந்தி எடுக்கிற இவன் எங்கே..
இவனையெல்லாம் நம்பி எதிர்கால இந்தியா !

அவன் மனைவியை அனுபவிச்சே,அவனுக்கு தெரிஞ்சு போய் வெட்ட வந்தான்
வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி
ஆம். நாம் அனைவருமே திட்டமிடுகிறோம். நம் திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால் வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி
எங்கள் சந்திரபாபு முதல்வராக இருந்த போது விஷன் 2020 என்று ஒரு உட்டாலக்கடியை பற்றி தொண்டை வறள பேசிக்கொண்டிருந்தார். கம்யூனிஸ்டுகள் அதை விஷன் 420 என்று கிண்டலடித்து வந்தனர்.
நிற்க என் நண்பன் ஒருவனின் திட்டமிடல் பற்றியும் வாழ்க்கை அவனை எப்படி லொள்ளு செய்தது என்பதை பற்றியும் சில வரிகள். அவன் பெயர் ..வேண்டாம். ஏடுகொண்டலு என்று வைத்து கொள்வோம். பட்சி தோஷம்(?) காரணமாய் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாத உருவம். பள்ளி ஆசிரியரான அப்பா. உப தொழில் இலவசமாய் வரன் பார்த்தல். அம்மா ஹவுஸ் வைஃப். அந்த காலத்து கலப்பு திருமண தம்பதி. கச்சாமுச்சான்னு பசங்க. நம்ம ஏடுகொண்டலு சின்ன வயசுலயே வறுமை நிலைக்கு பயந்துட்டான். திறமை இருக்குங்கறதை மறந்துட்டான்.
இதில் அவன் ராசி வேறு ரிஷப ராசியாச்சா.. பேச்சுன்னா வெல்லம். பெண்கள் என்றால் ஜொள், தீனிப்பண்டாரம்,கல்யாணம், காரியம் ஒன்னு விடமாட்டான். மேலும் வேலி தாண்டி மேய்வதில் ஒரு ருசி. பாகாலாவில் ரயில்வே எம்ப்ளாயியின் ஆசைநாயகி, தங்கள் காலனி லாரி ட்ரைவரின் மனைவி,(அந்த நேரம் நம் ஏடு கொண்டலு பிரைவேட் லைன் மேனிடம் உதவியாள்தான்),பாகாலாவிலேயே கோர்ட்டு குமாஸ்தாவின் மனைவி. அவன் மேய்வதும்,பிடிபட்டு அவதி படுதல்,உதைபடுதல் ஏதோ ஒரு வகையில் நான் காப்பாற்றியோ,ஒப்பேற்றியோ விடுதல் நடந்து வந்தது.
இதெல்லாம் ஒரு புறம் என்றால் அவன் திட்டமிடல் தான் எரிச்சலூட்டும் விஷயம். காலனிக்கு செல்லும் டவுன் பஸ்ஸின் நேரத்தை கூட தெரிந்து வைத்துக் கொண்டு பத்து முறை நேரம் பார்த்து பார்த்து பேசுவது நம்மை பைல்ஸ் நோயாளி போலாக்கிவிடும். சரி ஒழியட்டும்.
லாரி ட்ரைவர் மனைவி விஷயத்தில் காலனிக்கே போக முடியாத நிலைமை ஆகிவிட்டது. நான் பாகாலாவில் ஏடுகொண்டலு குட் வில்லில் வீடு பிடித்து வாழ்ந்து வந்த கட்டம். பயங்கரமாய் சாமி கும்பிடுவான் . என்னடா வேண்டறே என்றால் லாரி ட்ரைவர் செத்துடனும்னு வேண்டறேன் என்றான்.
"சரிப்பா நீ அவன் மனைவியை அனுபவிச்சே,அவனுக்கு தெரிஞ்சு போய் வெட்ட வந்தான் ஓடி வந்துட்டே..இப்போ அவன் சாகனும்னு சாமி கும்பிடறே, அவன் செத்துட்டா அவன் பெண்டாட்டிய நீ கட்டிக்கறயா/இல்லை வச்சுக்கறயா/சரி போவட்டும் அவளுக்கு பசங்க வேற இருக்காங்க அதுல யாரையாவது தத்தெடுத்துக்கறயா/ உன் டீல் என்ன சொல்லு நானும் உனக்கு சப்போர்ட்டா வேண்டிக்கிறேன்."என்றேன்.
ஊஹூம் என்று விட்டான். இன்று மின் துறையில் வேலை வந்து,திருமணமாகி ஒரு பெட்டை குட்டி போட்டு,சுகர் வாங்கி கடைகளில் தூசு தட்டும் குச்சி மாதிரி ஆகிவிட்டிருக்கிறான். ஊரில் உள்ள எல்.ஐ.சி. எல்லாம் கட்டி (சாவு பயம்?) குடும்ப செலவுக்கு கூட யோசிக்க வேண்டிய நிலை .
இந்நிலையில் திருவள்ளூரில் ஒரு திருமணத்துக்கு போக வேண்டிவந்தது. நான் ஒன்றும் கூகுள் எர்த் மேதை இல்லாவிட்டாலும் குன்ஸாக ஒரு குன்ஸ் வைத்திருப்பேன். நாயக்கரே! திருத்தணி போயிட்டு ரயில் பிடிச்சுரலாம் என்றேன். தனியார் பஸ் நின்னு போவான் அரசு பஸ் அடிச்சுகிட்டு போயிடுவான் ,ரோடு நல்லாருக்காது அது இது என்று டூர் புரோக்ராமர் ஆகிவிட்டான். எனக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை. நீதான் டீம் லீடர் ,நீ சொல்லு நாயக்கரே..நீ எப்படி சொன்னா அப்படி என்று விட்டேன். பிறகு பாருங்களேன் நாயடி.
வயா திருத்தணி சென்னை பஸ் என்றான்/பின் காட்பாடி போய் அரக்கோணம் ட்ரெயின், அங்கிருந்து பஸ்ஸுல திருவள்ளூர் என்றான். எல்லாத்துக்கும் ஓகே என்றேன். காட்பாடி ஸ்டேஷன் போனோம் மணி மதியம் 2.40. இனி 6 மணிக்குத்தான் ரயில் என்று விட்டார்கள். பின் வேலூர் பஸ் ஸ்டாண்டு. அங்கிருந்து அரக்கோணம் . ரயிலில் திருவள்ளூர். திருமணமண்டபம் சென்றதும் மூக்குக்கு நேராய் ரூம் சாவி கேட்டு அரிக்க ஆரம்பித்து விட்டான். வாங்கியும் விட்டான்.ரிசப்ஷன் ஆச்சு.விடியல்
திருமணம். நான் நள்ளிரவு வரை சென்னை நண்பரை வரவழைத்து வைத்துக் கொண்டு அவர் கதைகளை கேட்டுக் கொண்டிருந்து விட்டேன்.
குடித்த காப்பி தொண்டை குழிவரையாவது இறங்கியதோ இல்லையோ..ரயில் ரயில் என்று ஜெபிக்க துவங்கினான். அதென்னமோ எனக்கு ரயில் என்றாலே அலர்ஜி. என்னைப்பொருத்தவரை அந்த உலகமே புராதனமானது,மர்மம் நிறைந்தது. ஆபத்து நிறைந்தது.நம் செல்வாக்கு எதுவும் வேலை செய்யாத தீவு அது .
கடைசி பெட்டியில் ஒரு எக்ஸ் சிம்பல் இருக்கும் அது எதற்கு தெரியுமா ஒவ்வொரு ஸ்டேஷனிலும் டார்ச் அடித்து பார்க்கும் போது எக்ஸ் இல்லாவிட்டால் பெட்டி ஏதோ கழன்டுகிச்சு என்று தேட ஆரம்பிப்பார்களாம்.இது போன்ற பல காரணங்களால் எனக்கு ரயில் பயணம் என்றாலே வயிறு கலங்கும் (அந்த கலக்கம் இல்லிங்க)
நான் சொல்லி பார்த்தேன் நாயக்கரே ரொம்ப சுகம் தேடாதே.. இண்டியன் ரோட்ஸ் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கலாம் பஸ்லயே போலாம் என்றேன் பலவீன குரலில். ஊஹூம். அலைந்து பறை சாற்றி டிக்கட் வாங்கினான். சென்னை நண்பர் வில்லிவாக்கம் செல்ல ரயிலேறினார். அரக்கோணம் செல்லும் ரயில் வந்தது. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு மாதிரி ஏறிக்கொண்டு என்னையும் டென்ஷன்படுத்தி ஏற்றினான்.
நமக்கு ஏற்கெனவே அலர்ஜி. ரயில் உலக சமாச்சாரம்னாலே மூளை கதவு ஹவுஸ் புல் போர்டு போட்டுரும். வந்தாருயா டிக்கட் செக்கர் நீ ஆர்டினரிக்கு டிக்கட் வாங்கி,எக்ஸ்பிரஸ்ல வந்துட்ட வைய்யா ஆளுக்கு 265 னுட்டார். கூட என் மகள் வேறு.
அவன் முகத்தை பார்க்க வேண்டுமே அப்படியே பேஸ்தடித்து,கருத்து..பே பே என் கிறான். பின் நான் களமிறங்கி லாலு நமக்கு க்ளையண்டு,வேலு நமக்கு க்ளோஸ் அது இதுன்னு பேச்சு வார்த்தை நடத்தி ஒரு 265க்கு செட்டில் செய்து வெளி வந்தோம்.கையில் காலணா இல்லை. அதுவரை அவன் காட்டிய கம்பீரம்,தன்னம்பிக்கை,திட்டமிடல்,அலையல் எல்லாமே புஸ் ஆகிவிட்டது.
நமக்கு அடகு வச்சு காசு வாங்கிறதுல எக்கச்சக்க அனுபவமாச்சே ! கையில செல் இருக்கு சேட்டு கடை யில்லாத ஊர் எதுங்கறது என் தைரியம். ஏடுகொண்டலுவுக்கு பேதியாகிவிட்டது. பின் எப்படியோ ஒரு பாவாவுக்கு (வைசிய நண்பன்) போன் போட்டு அவன் அரக்கோணம் பாவாவுக்கு போன் போட்டு 150 வாங்கி ஊர் வந்து சேர்ந்தோம். தாளி ..திட்டமிடறவன் நாஸ்திகன். வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லாதவன் என்ற என் கருத்து உறுதிப்பட்டது.
ரூ.150 கைக்கு வந்ததுமே ஸ்டார்ட் பண்ணிட்டான்யா! கணேஷ் பவன்ல 3 இட்லி மட்டும் சாப்பிடனுமாம். திருத்த முடியாத ஜன்மங்கள்.

Subscribe to:
Posts (Atom)