Showing posts with label செக்ஸ் பவர். Show all posts
Showing posts with label செக்ஸ் பவர். Show all posts

Sunday, March 4, 2012

ஜாதகம் எப்டி இருந்தாலும் ஆண்மை இழப்பு


அண்ணே வணக்கம்ணே !
இதென்னடா டகுலா கீதுன்னு பேஜாராயிராதிங்க. அல்லா வீட்லயும் ப்ராண்டட் ஆட்டா தான் வாங்கறாய்ங்க. ஆனால் அல்லார் வீட்லயும் சப்பாத்தி ஒரே மாதிரியாவா கீது. நீங்க உபயோகிக்கிற எண்ணெய், ஸ்டவ், வைக்கிற ஃப்ளேம் , போடற உப்பு,அதனோட அளவு இப்படி எத்தனையோ சமாசாரம் சப்பாத்திய சப்பையாக்கிருது. அதை போலவே தான் ஜாதகமும். எந்த ஜாதகத்துல பிறந்தாலும் ஆண்மை இழப்புக்கு வழி இருக்கு.

ஒரு காலேஜ் குட்டிகளுக்கு ஒரு குட்டி பதம்ங்கறாப்ல லக்னாதிபதியோட நிலையை மட்டும் இன்னைக்கு பார்ப்போம்.

1-1
லக்னாதிபதி லக்னத்துலயே இருந்தா../ உச்சம் பெற்றால்:

மன்சனுக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துரும். தாளி "அஞ்சு மினட்டுக்காக" என்ன இவளுகளை கெஞ்சிக்கிறதுன்னு ஹோமோவா மாறலாம்/ சுய இன்பத்துக்கு அடிமையாகலாம்.

1-2
லக்னாதிபதி ரெண்டுல இருந்தா வெறுமனே பேசியே ஓய்ஞ்சு போயிரலாம்

1-3
லக்னாதிபதி 3 ல இருந்தா ப்ரதர்ஸ் /சிஸ்டர்ஸுக்கு அதிக முக்கியத்வம் கொடுத்து அவிகளை பிரியனுமேங்கறதுக்காவ திருமணத்தை தள்ளி போடலாம். பருவத்தே பயிர் செய்யாத காரணத்தால ஆண்மை இழப்பு ஏற்படலாம்.

1-4
லக்னாதிபதி 4 ல இருந்தால் பலான பரீட்சையில செயிச்ச பிற்காடுதேன் கண்ணாலம்/ டாக்டர் பட்டம் வாங்கினபிறவுதேன் கில்மான்னு திருமணத்தை தள்ளி போடலாம். அம்மா மேல அதீத பாசம் வச்சு வர்ரவ கொடுமை பண்ணா என்ன பண்றதுன்னு தள்ளி போடலாம்.

கச்சாமுச்சான்னு வாகனசுகத்தை அனுபவிக்கலாம்/ கண்ணாலத்துக்கு மிந்தியே ஊடு கட்டி கடனாளி ஆகி கடனை நினைச்சு நினைச்சே ஆண்மை இழப்புக்கு ஆளாகலாம்.

வாகன சுகத்தால இல்லற சுகம் எப்டி பாதிக்கப்படும்?

மனித உடலின் சராசரி உஷ்ண நிலை 98.4 டிகிரி. இதுல உயிரணு உயிர் வாழமுடியாதுனுதான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளிய விட்டிருக்கு.பாடி டெம்பரேச்சர் அதிகமா இருக்கிறப்ப இன்னம் கொஞ்சம் கீழே இறங்கி சூட்டை குறைக்கற ஏற்பாடும் இருக்குது.

ஆண்கள் 24 மணி நேரம் டென்டெக்ஸ் போட்டு/ஜீன் போட்டு விதைகளை அழுத்தி வைக்கிறதால விந்துல உயரணுக்களோட கவுண்ட் குறைஞ்சி போயிருது. இதுல தாளி விழிச்சிருக்கிற நேரம்லாம் வண்டி வாகனத்துல சுத்திக்கிட்டிருந்தா என்ன ஆகும்? இதான் கணக்கு.

1-5
லக்னாதிபதி அஞ்சுல இருந்தா சதா சர்வ காலம் தன்னை பற்றியே யோசிச்சுக்கிட்டு கனவுலகுல சஞ்சாரம். ஆகாய கோட்டை கட்டிக்கிட்டு அதுலயே வாசம். இப்டி இருந்தா என்ன ஆகும்? இவரோட உலகமே வேறயா இருக்கும்.

இங்கன யதார்த்தமா உள்ள உலகம் இவிகளை நெக்லெக்ட் பண்ணிரும். கண்ணாலமாவது கருமாதியாவது.மூச்.

1-6
லக்னாதிபதி 6 லருந்தா கோர்ட்டு,போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரின்னு அலையவே நேரம் சரியா பூடும். அந்த சூழல்ல கூட சிலர் "கற்பழிப்பு/கில்மான்னு" போறாய்ங்கன்னா அவிகல்லாம் தெய்வங்க.

1-7
லக்னாதிபதி 7 லருந்தா சதா சர்வ காலம் தன் மனைவி/அவளுடனான கில்மா பற்றியே யோசிச்சுக்கிட்டு கிடப்பாய்ங்க.

இப்படி கீறவனை பொஞ்சாதியே " வேலை வெட்டி எதுனா இருந்தா பாரு - நாலு இடம் சுத்திட்டு வா.. வெறுப்பா கீது"ன்னிருவா.

கண்ணாலத்துக்கு மிந்தி கனவுகள் அதிகமா இருக்கிறதால யதார்த்தம் என்னதான் பாசிட்டிவா அமைஞ்சாலும் கனவை போல இருக்காதே.

1-8

லக்னாதிபதி எட்டுல இருந்தா என்னாகும்? லக்னாதிபதின்னா ஜாதகர். எட்டாமிடம்னா இன உறுப்பு. கூட்டி களிச்சு பாருங்க . ரெண்டு பக்கமும் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி மாதிரி சக்தி விரயம் பண்ணி அசலான நேரத்துல இழந்த சக்தி வைத்தியர்களை தேடி ஓடவேண்டி வந்துரும். மேலும் எட்டுன்னா மரணம். ஜாதகர் முகத்துல பிணக்களை வரனும். அதுக்கு அவர் பல தாட்டி சாகனும். சாக தில்லில்லாதவுக சரணடையறது செக்ஸ்ல தானே.

(லக்னாதிபதி மத்த பாவங்கள்ள இருந்தா ஆண்மை இழப்பு /திருமண தாமதம் எப்டி ஏற்படும்.அதுக்கு என்ன ரெமிடின்னு அடுத்த பதிவுல பார்ப்போம்)

உடுங்க ஜூட்

Sunday, July 3, 2011

காதல் Vs காமம்


1940 ல திருலோகசீதாராம் ( சுஜாதாவோட மொத கதைய தன் சிவாஜி பத்திரிக்கையில வெளியிட்டவர் கூட இவர் தான்னு ஞா) ஆசிரியத்துல வெளிவந்த கிராம ஊழியன் பத்திரிக்கையில அதனோட பேருக்கு பொருத்தமே இல்லாத உன்னத படைப்புகள் எல்லாம் வெளி வந்ததை போல 2000,ஜூலை,31 ஆம் தேதி துவங்கின என் கவிதை07 வலைப்பூவில் கவிதை தவிர "சகலமும்"வெளிவந்தது.

ஒரு பதிவுல வாக்குஸ்தானத்து சுக்கிரனை பத்தியும் என் கவிதா மோகத்தையும் விவரிச்சதா ஞா . கவிதையை விட்டபிறவுதான் ப்ரெட் ஹன்டிங்கே ஒரு முடிவுக்கு வந்தது .( நம்ம கடக லக்னத்துக்கு சுக்கிரன் பாதகாதிபதியாச்சே.)

இருந்தாலும் கவிதைன்னா ஒரு குன்ஸ் அப்படியே மைண்ட்ல நின்னுருச்சுங்ணா. கடந்த சில நாட்களா எழுதிக்கிட்டிருந்த காதலித்தால் செக்ஸ் பவர் ஃபணால் தொடர்ல காதல் Vs காமம்னு ஒரு உப தலைப்பை அடிச்சு கூட வச்சிருக்கேன்.

இருந்தாலும் 3 ஆம் நாள் உயிர்த்தெழுந்த தேவகுமாரன் மாதிரி மைண்டுக்குள்ள என்னைக்கோ ஏரைக்கட்டி வச்சிருந்த பாட்டெல்லாம் கியாபகம் வர ஆரம்பிச்சுருச்சு.

இன்னாங்கடா இது .." அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் " சானல் மாறி சொரியுதுன்னு நினைச்சேன். அப்பாறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு.

காதல்ங்கறது கவிதை மாதிரி. காமம்ங்கறது உரை நடை மாதிரி. கவிதையை புரியற மாதிரியும் எழுதலாம். புரியவே புரியாத மாதிரியும் எழுதலாம்.

காதல் கூட இப்படியாக்கொத்ததுதான் புரியாத கவிதை பிரமிப்பை கொடுக்கிறாப்ல - காதலும் புரியாத வரைக்கும் பிரமிப்பை கொடுக்கும்.

ஆனா காதலை டிசக்சன் பண்ணா அசலான மேட்டர் எல்லாம் வெளிய வந்துரும். வெளிய வந்த மேட்டரை பார்த்தா வாழ்க்கையே வெறுத்துரும். அவ்ளோ அக்வார்டா இருக்கும். அல்லது வெகு சாதாரணமானதா இருக்கும். அதுவும் பெண்கள் மேட்டர்ல இது மஸ்ட்.

//இந்து வதன குந்தரதன மந்தகமன மதுரவசன ககன ஜகன சொகசு லலனவே //

இந்த வரிகளை கொஞ்சம் வேகமா படிச்சா ஒரு கட்டிங் போட்ட கணக்கா இருக்கும். ஆனால் தமிழ்ல இதனோட அர்த்தத்தை சொன்ன "அட அவ்ளதானா" னு ஆயிரும்.

காதலும் அப்படித்தான்.பரபாஷையில சொல்லப்பட்ட ஆடம்பரமான வார்த்தை விளையாட்டு. பரபாஷை கவிதைய தமிழ்ல டப் பண்ண மாதிரி காதல்களை சைக்காலஜிப்படி டிசக்சன் பண்ணா 'த்து போ"ன்னு ஆயிரும்.

காதல் & கவிதை பற்றிய விளக்கம் இது.

காமம்ங்கறது உரையாடல் மாதிரி. சாதாரணமானது. ஆனால் சில நேரங்கள்ள உரையாட்லே அற்புதமான கவிதையா மாறிரும். அது கவிதையா மாறுவதும் உரையாடலா முடிஞ்சு போறதும் உரையாடற பார்ட்டிக்கையில இருக்கு.

எப்பயோ கோசாரத்துல சந்திர சுக்கிர சேர்க்கை ஏற்ப்பட்டப்பயோ அ சுக்கிரன்/புதன் இத்யாதி கிரகங்கள் அனுகூலமா சஞ்சரிச்சப்பயோ நாம கிறுக்கின வரிகளை பாருங்க..

புதுமொழி கற்பவன்
மீண்டும் குழந்தையாகிறான்.
சிந்தும் மழலை

* * *

சிக்னலில் நின்றபோது குயிலின் கூ .. கூ
அட சட் ! ரிங் டோன்

* * *

காதலும் கவிதையும் ஒன்னு. காதல் காதலிக்கிறவனுக்கு சினிமா ஸ்கோப்ல தெரியுது. தேர்ட் பார்ட்டிக்கு 35 எம்.எமல தெரியுது.

காதலிக்கிறவனுக்கே காதலிக்கிறச்ச சினிமா ஸ்கோப்ல தெரியுது. கண்ணாலத்துக்கு அப்புறம் 35 எம்.எமல தெரியுது.

ஏன்னா அது உருவாகிறது மனசுல. மனசு மாறக்கூடியது. அஸ்ட் ராலஜிக்கல் ரெஃபரன்ஸ் தரனும்னா சந்திரன் மனோ காரகன் .6 மணி நேரத்துக்கொரு தாட்டி நட்சத்திர பாதம் மாறிர்ராரு. சில நேரத்துல ராசியே மாறிர்ராரு.

உரையாடலும் காமமும் ஒன்னு.அல்லாருக்கும் புரியுது. ( புரியாத மாதிரி காட்டிக்கிறாய்ங்க அது ஹிப்பாக்கிரசி) .

அது உடலில் உருவாகுது. உடலை சுடலையில வச்சு எரிக்கிற வரை அதனோட வெப்பம் இருந்துக்கிட்டே இருக்கு.

புரியாத கவிதைய வச்சு மாரடிக்கிறதை விட புரியற உரையாடலை எப்படி கவிதையா மாத்தறதுங்கற "தில்லாலங்கடி வேலை" தெரிஞ்சா பெட்டருங்ணா.

அதுக்குன்னு காதலை இந்த தொடர்ல இருந்து கழட்டி விட்டுரலிங்ணா. அதுவும் ஒரு ட்ராக்ல போய்க்கினே இருக்கும்.டோன்ட் ஒர்ரி.


1987 முதல் 1991 வரை தெலுங்கு சினிமா பாட்டுகளோட ட்யூனுக்கு நான் எழுதின சில பாட்டுக்களை/பல்லவி/ சரணங்களை கியாபகத்துலருந்து தந்திருக்கேன். ப்ராக்கெட்ல உள்ளது இன்னைய தேதிக்கு போட்ட கமெண்ட்.


அமுதமே புது வாசம் வீசும் குமுதமே
வானிலே பிறந்து வந்த நாதமே
மதனன் வரைந்த லிகிதமே
பூவில் பாரிஜாதமே (அமுதமே

குறிப்பு:
பாரிஜாதம்னு ஒரு பூவே இல்லை. இந்த மரம் சொர்கத்துல இருக்கிறதா ரெஃபரன்ஸ் இருக்கு. ஆக காதலி - காதல் எல்லாம் வெறும் கற்பனையிலதான் சாத்தியமானு கேட்டுராதிங்க)

கன்னம் கண்டு வந்த வண்டு அமரும் கண்ணே தாகம் கொண்டு
காதல் தாகம் தந்த மோகம் சொன்னேன் பாட்டு ராகம் போட்டு
காக‌ம் போன்ற‌ என்னிலே துள்ளி வ‌ந்த‌ ராக‌மே
மானே ம‌தியே ம‌தியின் ஒளியே (அமுத‌மே

குறிப்பு:
தன்னை காகம்னு தாழ்த்திக்கிறான். ஏன்?
ஆன்மா படைப்போட இணைந்திருக்கு. ஆனா அதை ஈகோ கவர் பண்ணி படைப்புலருந்து தனிமைப்படுத்திருச்சு. ஈகோவை தொலைச்சாத்தான் தனக்கு ஆன்ம தரிசனம் ஏற்படுங்கற இன்ஸ்டிங்ட் அவனுக்குள்ள இருக்கு. அதுக்கு காதலி -காதல் எல்லாம் சாக்கு.பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதிநிதி . அவளோட ஈகோ இல்லாம உறவாடுவதன் மூலம் இயற்கையோட ரீ கனெக்ட் ஆகமுடியும்னு சப்கான்ஷியஸா நம்பறான் போல.


* * *

ராக‌ங்க‌ள் ர‌த‌மாகும் சிவிகை ஏந்திடும்
சோகங்க‌ள் ம‌லையேறும் மாலை வ‌ந்திடும்
மேகங்கள் தூவாதோ பன்னீர் மழையே

காலமே மாறிடும் ஞாலமே என்னை பேசிடும்
ஆலாலம் அது கூட அமுதாய் மாறிடும்

கமெண்ட்:
//பன்னீர் மழையே // ங்கொயயால இருக்கிற பொல்யூஷனுக்கு அமில மழைதேன் பொழியும்.


***

பாச‌மில்லே ப‌ரிவுமில்லே என்ன‌ பெண்டாட்டி
பக்குவமா பார்த்துக்கிட்டேன் தன்னால் ஒரு வப்பாட்டி

தாலி க‌ட்டி போயிருப்பேன் உன்னோட‌ நான் திண்டாடி
சாவி கொடுத்த‌ பொம்மை போலே வ‌ந்திருக்கேண்டி முன்னாடி

கமெண்ட்:
என்ன கலைஞருன்னு நினைப்பா? பல தார சட்டத்துல உள்ள போட்டுருவாய்ங்க.

* * *

ஜாடிக்கேத்த மூடி போல ஏழு பொருத்தம் ஓகே..

கமெண்ட்:
அவா கிட்டே பொருத்தம் பார்த்தே போலிருக்கு. இந்த தசவித பொருத்தம்லாம் ஜுஜுபி நைனா ஜாதகம் பொருந்தனும். அதான் இம்பார்ட்டன்ட்

* * *
இந்த பாட்டுக்கு மட்டும் சிச்சுவேஷன் சொன்னாத்தான் சரியா வரும். ஹீரோயின் ஹீரோவை கலாய்க்க அவன் குளிக்கப்போறச்ச - அவனோட ட்ரஸ் எல்லாத்தையும் - பாத்ரூம் கதவு மேல கழட்டி போட்ட ட்ரஸ் உட்பட - தூக்கினு போயிர்ரா.

அப்ப ஹீரோ டர்க்கி டவலையும் உதறிப்போட்டுட்டு பாடற குத்துப்பாட்டு - ஹீரோ ஆரு தெரியுமா? நம்ம சிரஞ்சீவிதேன்


ஹே வெட்கம் விட்டுக்கடி வேணுமுன்னா தொட்டுக்கடி
மாமனோட பட்டுக்கடி வா வா

அட மந்திரம் தந்திரம் கற்றவன் சுந்தரன் நானே
பத்திரம் பத்திரம் சிதறிடும் கற்புத்தானே

கமெண்ட்:
கற்பு என்ன சூறைத்தேங்காயா.. போடா பொங்கி !

செடி கொடி மரம் எல்லாம் ஆடை கட்டுதா

கமெண்ட்:
பால் கூட ஆடை கட்டுது தெரியும்ல

பிறக்கும் போது யாருக்கும் தான் ஆடை இருந்துதா
கோட்டைக்குள்ளே கண்ணை பொத்தி பார்க்கவில்லையே

ஒரு நாளு ஸ்ரீ கிருஷ்ணந்தான் ஆடைகள் கொண்டு போனான்
இ ந் நாளு பாமாமணி என்னாடை கொண்டு போனாள்

* * *

நீ அறிந்த ரகசியம் தான் எனக்கு ஒரு அதிசயம் தான்
நீ காட்டு நீ காட்டு நானும் பரிசம் போடுறேன்
உன் மனசை திறந்து காட்டு மாலை போடுறேன்

(இது மூலப்பாடலோட ஆசிரியரின் வரிக்கான மொழிப்பெயர்ப்பு)

கமெண்ட்:
த பார்ரா பாட்டுல கூட சடன் ட்விஸ்ட் ?

* * *

Wednesday, June 29, 2011

காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா :2


நாரத பக்தி சூத்திரத்துல சொல்றாப்ல (எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான பக்தி உண்டாம்) எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான காதல் இருக்கு.

எதையுமே ஒரு சித்தாந்தத்துக்குள்ள அடைக்க கூடாதுங்கறது நம்ம சித்தாந்தம். ஆனால் என்ன பண்றது கடல் நீரை கூட ஒரு டெஸ்ட் ட்யூப்ல அடைச்சு அதை ஷூட் பண்ணி யு ட்யூப்ல விட்டாத்தான் பார்ப்போம்னு சனம் சொல்லுது.

அதனாலதான் நம்ம பாலிசிக்கு விரோதமா காதலை மொதல்ல சித்தாந்தப்படுத்தறேன். அப்பாறம் காதலித்தால் செக்ஸ் பவர் எப்படி கோவிந்தா ஆகும்னு சொல்றேன்.

காதலை பற்றி மட்டுமில்லே. ஒட்டு மொத்த படைப்பை -மனிதர்களை -உலகத்தை பிரிஞ்சிக்கிடனும்னா ஒரு அடிப்படை உண்மைய புரிஞ்சுக்கனும்.

*எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா.

*அது செல் காப்பியிங்க் மூலமா பல்கி பெருகியது

*காப்பியிங் எர்ரர் மூலமா புது ஜீவராசிகள்

*ஒரே செல் -ஒரே உயிர்-ஒரே உடலா இருந்தப்ப காலம்-தூரம்-இன் செக்யூரிட்டி-கம்யூனிகேஷன் ப்ராப்ளம் எதுவுமில்லை

*பல உடலா இருக்கிறச்ச எல்லா இழவும் ஆரம்பிச்சுருச்சு

*செல் காப்பியிங் காரணமா ஓருடல் ஓருயிரா இருந்த இனிய ஞாபகங்கள் மனித மூளைவரை வந்துவிட்டன.

*மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு ஆரம்பமாயிருச்சு

*இந்த இணைப்புக்கு தடை உடல் தாங்கற அப்செஷன் வந்துருச்சு


(இங்கு நம்ம சித்தாந்தம் முடியுது -சைக்காலஜி ஆரம்பிக்குது)

*உயிர்களின் எல்லா செயல்களுக்கும் (மனிதன் உட்பட) பின்னணியில் இருப்பது கொல்லும் -கொல்லப்படும் இச்சையே

*கற்காலத்தில் இது ஸ்தூலமா நிறைவேறிட்டு இருந்தது

*சஞ்சார வாசத்துலயும் நாட் பேட்

*ஸ்திரவாசத்துல இது குறைய ஆரம்பிச்சது

*இதுக்கு செக்சை ஒரு சிறந்த வழியா மனித மனம் அங்கீகரிச்சுருச்சு

*ஆற அமர செக்ஸில் இறங்க அதுல பெண்தான் பவர் ஃபுல்னு தெரிஞ்சுருச்சு -மேலும் சொத்தா மாறிய விளை நிலம் -அது தன் வாரிசுக்கே சேரனுங்கற துடிப்பு -காரணமா தனக்கே தனக்குன்னு ஒரு பெண் வேணும்ங்கற நிலை வந்துருச்சு.

அந்த தனக்கே தனக்கான பெண்ணுக்கான தேடலுக்கான துடிப்புத்தான் காதல்.

மேலும் மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு செக்ஸ்ல ஓரளவு - கொஞ்சம் நேரமாச்சும் நிறைவேறுது

செக்ஸ்ல கொல்லும் -கொல்லப்படும் இச்சை ஓரளவு நிறைவேறுது.

உடைச்சு சொன்னா ஆணுக்கு விந்து வெளியேறும் வரை கொல்லும் இச்சையும் விந்து வெளியேறிய பின் கொல்லப்படும் இச்சையும் நிறைவேறுது.

பெண்ணை பொருத்தவரை உச்சம் என்பது ரேரஸ்ட் ஆஃப் தி ரேரா இருக்கு. அதனால அவனுக்கு விந்து வெளியேறும் வரை இவளின் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. அவனுக்கு விந்து வெளியேறிய பின் இவளது கொல்லும் இச்சை நிறைவேறுது.

இந்த இழவெல்லாம் மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்ட். இதுக்கான பைலட் ப்ராஜக்டுதான் காதல்.

சோகம் என்னன்னா ஓருயிர் பல்லுயிரா மாறினாலும் எல்லா உயிரும் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. அந்த இணைப்பை உணர முடியாம ஈகோ தடுக்குது. ஈகோவை விட்டொழிச்சா உயிர்களிடையிலான இணைப்பை உள்ளபடி உணரலாம்.

ஆனால் ஆன்மாவை ஈகோ மூடி ஈகோவே ஆன்மா - ஈகோவே தான் என்ற மாயா உருவாகிவிட்டது.( நன்றி:ஓஷோ)

ஈகோ சுமக்கமுடியாத பாரமாயிருச்சு. அதை கழட்டி வைக்கிற இடமா மனசு காதலை நினைக்குது. அதனாலதான் காதலிக்கிறாய்ங்க.

இதான் காதல் கத்திரிக்காயோட செனெரியோ.

இப்பம் காதல்ல எத்தனை வகை இருக்குன்னு ஒரு குன்ஸா பார்ப்போம்:

1.தன் மீதான காதலால தன்னை காதலிக்கவும் ஒருத்தி வேணம்ங்கற ஈகோவால காதலிக்கிற காதல்

2.ஈகோவை சுமக்கமுடியாம ஆருக்காகவாச்சும் இந்த 'பாரத்தை" கொஞ்சம் போல இறக்கிவச்சா நல்லாருக்குமேங்கற எண்ணத்துல வர்ர காதல்

3.இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸால - தனிமை உணர்வால - சுய பரிதாபம் - தன்னவர்களால் நிராகரிக்கப்பட்ட உணர்வால வர்ர காதல்

4.தாய் மீதான காதலால் - தாயால் தள்ளி வைக்கப்பட்டு - தாய்க்கு மாற்றாக ஒரு பெண்ணை தேடும் காதல்

5.காமத்தை அங்கீகரித்து - அது குறித்த குற்ற உணர்வு ஏதுமின்றி - நேர்மையாய் அதை நிறைவேற்றிக்கொள்ள செய்யும் காதல்

6.காமத்தை ஓவர் லுக் செய்ய செக்ஸ் அப்பீலே இல்லாத சேப்பாக் கிரிக்கெட் கிரவுண்ட் தனமான சோடாபுட்டி பெண்ணை காதலிக்கும் காதல்

7.பிஞ்சிலே பழுத்து அல்லது மெச்சூர்ட் மைண்ட் காரணமாக தன் தந்தைக்கு நகலாக மாறி பெரிய மனுஷத்தனமாக விளையாட்டுத்தனம் மிக்க பெண்ணை காதலிக்கும் காதல்

8. தானும் முதலியார் -அவளும் முதலியார் - அவிகளுக்கு சினிமா தியேட்டருங்க இருக்கு -தங்களுக்கு சினிமா டிஸ்ட் ரிப்யூஷன் இருக்குன்னு கணக்கு போட்டு காதலிக்கு காதல்

9. யதார்த்த வாழ்க்கை நரகமாக இருக்க நிலத்தில் கால் பாவாத பிரதேசத்தில் சஞ்சரிக்க - சொந்த நரகத்தை மறக்க செய்யும் எஸ்கேப்பிஸ்ட் காதல்

10.சம்மதிச்சா செக்ஸ் இல்லாங்காட்டி தெய்வீகக்காதல்ங்கற சந்தர்ப்ப வாத காதல்

11.காதலிப்போம் - எல்லாம் கை கூடி வந்தா கண்ணாலமும் கட்டிக்குவோம் -இல்லாட்டி ஆருக்கு எங்கன போட்டுவச்சிருக்கோ அப்படியே நடக்கட்டும்ங்கற வேதாந்த காதல்

இப்படி நூத்துக்கணக்கான காதல்கள் நாட்ல இருக்கு. ங்கொய்யால இந்த காதல்கள் சைவமோ அசைவமோ க்ளைமேக்ஸுல கில்மான்னு ஒன்னு நிச்சயம் உண்டு.

மேட்டர் இன்னாடான்னா லவ்வுன்னு இறங்கி லந்து பண்ணிக்கிட்டிருந்தா பேட்டரி வீக் ஆயிருதுங்ணா .. அது ஏன் எப்படி எந்த் அளவுக்குங்கறதை அடுத்த பதிவுல பார்ப்போம்.

ஜோதிடம் என்ன சொல்லுது:

ஜாதகத்துல களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை பெற்று - லக்னாத் சுபர்களா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா பிரச்சினை இல்லை.

அதுக்கு மாறா மேற்சொன்ன களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை இழந்து - லக்னாத் பாபிகளா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா
பேட்டரி அவுட்டுதேன். (கண்ணாலமே கட்டினாலும் பல்பு வாங்க வேண்டியதுதேன்)

அனுபவத்துல பார்க்கும் போது லவ் பண்ற பார்ட்டியெல்லாம் எந்த கிரகம் தனக்கு ஆப்பு வைக்க பைனாகுலர்ல வாட்ச் பண்ணிக்கிட்டிருக்கோ அந்த கிரகத்தோட காரகத்வமுள்ள பெண்ணைத்தேன் லவ் பண்ண ஆரம்பிக்கிறான்.

காதலில் வெற்றி விதிக்கப்பட்டுள்ள ஜாதகன் லவ் பண்ணாமயே கூட இருந்துரலாம். ஆனால் காதலால காயடிக்கப்படனும்னு இருக்கிற பார்ட்டி மட்டும் நிச்சயம் லவ் பண்றான். இம்சைய அனுபவிக்கிறான்.

ஓகே இதுல தொட்டு காட்டின காதல் வகைகள் ஒவ்வொன்னையும் அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுப்போம்.

எந்தெந்த காதல்ல பேட்டரி அவுட்டாயிரும். எந்தெந்த காதலால பேட்டரி வீக்காயிரும்ங்கறதை எல்லாம் விலாவாரியா பார்ப்போம். டோன்ட் ஒர்ரி..

Tuesday, June 28, 2011

காத்லித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா!


அண்ணே வணக்கம்ணே ..

இன்னைக்கு ஒரு மாறுதலுக்கு ச்சொம்மா கடலை போடலாம் வாங்க !
என்னதான் நாட்டு நிலைமை முதல் - சனங்கள்ள சோசியத்தை பத்தின விழிப்புணர்வு வரை கவலைக்கிடமா இருந்தாலும் எப்பப்பாரு சீரியசா ..ரோசிச்சு ரோசிச்சு மண்டை காய்ஞ்சுப்போச்சு. மெகாசீரியல் ஓடற ஹால் மாதிரி டல் ஆயிருது. அதான் ச்சொம்மா கடலை போடலாம்னு ஒரு உத்தேசம்.

இதுக்கு காரகர் சுக்கிரன் விகட ,வினோத பரிகாச பிரசங்க பிரியம். ச்சொம்மா பேசிக்கிட்டே இருந்துட்டா சுக்கிர பலம்லாம் இதுல செலவாகி கில்மா பின் தங்கிரும். காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஏசி ரெஸ்டாரண்டை அவாய்ட் பண்ணிருங்க -சோடியா டூ வீலர்ல அலையறதை விட்டுருங்க - ஜங்க் ஃபுட், பேக்ட் ஃபுட், கூல் ட்ரிங்ஸ்,சினிமா மாதிரி இழவையெல்லாம் விட்டுருங்க . இதெல்லாமே சுக்கிர காரகம் தேன்.

தப்பித்தவறி காதலிச்ச பார்ட்டியையே கண்ணாலம் பண்ணவேண்டி வந்தா மேற்படி மேட்டர்களோட விளைவா பேட்டரி வீக் ஆயிரும். இப்பல்லாம் கில்மாவுல வீக்காயிருந்தா குட்டிங்க உடனே விவாகாரத்துக்கு அப்ளை பண்ணிர்ராய்ங்களாம்.

குஷ்டம் வந்தவன் அவில் ஃபைவ் விழுங்கறான். கடப்பாறைய விழுங்கினவன் சுக்கு கஷாயம் சாப்பிடறான். அதென்னமோ நமக்கு சில்லியா சில்லி வேர்களை பிடிச்சு தொங்கற வித்தை கை வரலிங்ணா. அசால்ட்டா ஆணிவேரை புடிச்சுர்ரோம் .சனத்துக்கு கிலியடிச்சுருது. ஆப்பு வச்சிர்ராய்ங்க.

மொதல்ல கடலை -அப்பாறம் ஆப்பை பத்தி பார்ப்போம். அதுக்கு மிந்தி நேத்திக்கு நீங்க படிச்ச (ஏறக்குறைய 1094 பேர் இரவு 11.30 நிலவரம்) நவீனபரிகாரம் தொடர் 2000 வருடத்தில் ஆன்மீகம் மாத இதழ்ல துவங்கி ரெண்டு மூனு அத்யாயத்துல நிறுத்தப்பட்டதை சொல்லியே ஆகனும்.

நாம பிடிச்சதென்னவோ ஆணிவேர். அசால்ட்டா அசைக்க "அவாளோட" பழைய பொய்கள் எல்லாம் பல்லிளிக்க ஆரம்பிச்சுருச்சு.பொயப்பு கெட்டுப்போற நிலைமை வந்துருச்சு. ஆப்பு வச்சிட்டாய்ங்க.

கடலை:
வேர்கடலை விக்கிறவுகளை பார்த்திருப்பிங்க. எப்பமோ வறுத்து பொட்டலம் போட்டு வச்சிருப்பாய்ங்க. ஆனால் ச்சொம்மா சொம்மா ஜல்லி கரண்டிய வாணலில தட்டி சத்தம் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. அது விளம்பரத்துக்கு.

ஆனால் அசலான மேட்டரை விட்டுட்டு/காரியத்தை விட்டுட்டு வெட்டிப்பேச்சு பேசறதுக்கு கடலை போடறதுனு ஆரு பேரு வச்சாய்ங்க?

ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.

ஆப்பு:
மரத்தை கோடாரியில பிளக்க சின்னதா பிளவு வரும் ( ஒரே அர்த்தங்ணா - ரெட்டைன்னாலே நமக்கு பிடிக்காது - தப்பான அர்த்தம்லாம் நம்ம அகராதியில கடியாது) அதுல ஒரு மரத்துண்டை வச்சு அடிப்பாய்ங்க. மரம் பிளக்கும். அந்த மரத்துண்டுக்குத்தேன் ஆப்புன்னு பேரு. இதை எங்க அடிச்சா வலிக்கும்னு "பின்"னாடி கூட சொல்லமாட்டேங்ணா

நேத்து பதிவா போட்ட மேட்டரு கொடவுன்ல கிடந்த மேட்டருங்ணா. அந்த நாள்ள மேக்சிமம் 400 பேர் தான் படிச்சிருப்பாய்ங்க. இப்பம் ஆயிரம் தாண்டிருச்சே. மேட்டரா மாத்தி ரோசிக்க(ச்சு) சொல்ற மேட்டர் சனம் பின்னி பெடலெடுப்பாய்ங்க. பெரீ டிஸ்கசன்லாம் நடக்கும்னு நினைச்சேன். நிறைய விளக்கம்லாம் தரலாம்னு வெயிட்டிங். ஆனால் "மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படலை"

இதை ரெண்டுவிதமா புரிஞ்சிக்கிடலாம். ஒன்னு குளவி கொட்டி கொட்டி பூச்சிகளை குளவியா மாத்தினாப்ல உங்க மைண்ட்ஸையெல்லாம் என் எழுத்துக்கள் ஏற்கெனவே ட்யூன் பண்ணியிருக்கனும். அல்லது ஆரோ ஒரு பத்தாறு போட்ட கமெண்ட் தான் சனங்க கருத்தோ என்னமோ ("பினாத்தலுக்கும் அளவு வேணும்")

கடலை போடலாம் வாங்கனு தலைப்புல கூப்டாலும் டீன் ஏஜ்ல கூட கடலை போடறது நம்ம சரித்திரத்துல கிடையாதுங்ணா.

நாம என்ன செய்தாலும் அதனோட முடிவான லட்சியம் நம்ம லட்சியமாத்தான் இருக்கும். நம்ம லட்சியம் (ஆப்பரேஷன் இந்தியா 2000) தெரியும்ல.

ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனேங்கறாப்ல என் மனசு லட்சியத்துலயே நிக்குது. ( கால் வலிக்கப்போவுதுனு ஆருப்பா நக்கலடிக்கிறது?)

சமீபத்துல கலாம் அய்யாவோட மெயிலுக்கும் / விசயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்களோட மெயிலுக்கும் , தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கும் ஆ. இந்தியா 2000 திட்டத்தின் சுருக்கத்தை அனுப்பினேன்.
பதில் வரவே வராதுனு தெரியும். இதெல்லாம் தெரிஞ்சே செய்யற லொள்ளு. ம்னமே அதை விட்டுத்தள்ளு.

கிரகங்கள் மனிதர்களை / மனிதர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துதுன்னு இத்தீனி நாளூ சொல்லிக்கிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல நவகிரக பாதிப்புகளை குறைப்பது எப்படின்னும் இன்னொரு கட்டத்துல நவகிரகங்களிடமிருந்து விடுதலைன்னும் தொடர் பதிவு போட்ட பார்ட்டி நாம.

இந்த க்ஷணம் என்ன தோணுதுன்னா நாம என்னதான் பரிகாரம், விடுதலைன்னு வாய்ல வவுத்துல அடிச்சிக்கிட்டாலும் சனம் கிரகங்கள் காலால கால்பந்தாய் உதைப்படறதை எண்ணி அவிக வருந்தவும் போறதில்லை திருந்தவும் போறதில்லை. நாம எதுக்கு ச்சொம்மா நை நைன்னு அடிச்சு சுஸ்தாகனும்.பேசாம "தொழிலை" கவனிக்கலாமேனு தோணுதுங்ணா..

இதுல ஒரு லாபம் என்னன்னா .. சனம் தங்களோட வில்லை ( Will) உபயோகிச்சு நம்மை முடக்க பார்க்க பார்க்க ஆத்தாளுக்கு கோவம் பொத்துக்கினு வந்து "பெரீ பெரீ சமாசாரத்தை எல்லாம் அசால்ட்டா தூக்கி கொடுத்துக்கினு கீறா"

இவிக வில் ( Will) என்ன ராமன் கை வில்லா? ங்கொய்யால ராம பாணத்தையே டுபுக்காக்கின ராம நாமம்ங்கற ஆயுதம் நம்ம கையில கீது.

பிட்டா புடிங்க:

இன்னைக்கு இளைய தலைமுறை அசால்ட்டா உபயோகிக்கிற பல வார்த்தைகளோட அசலான அர்த்தம் விபரீதமா இருக்குங்ணா. உ.ம் ஆப்பு

என்ன ஒரு ஆறுதல்னா பண விஷயத்துல க்ளியரா இருக்காய்ங்க. என்ன ஒரு பயம்னா கிரைமுக்கு கூட தயங்க மாட்டேங்கறாய்ங்க.அந்த காலத்துல வீட்டு ஏழுமலையான் உண்டி - அம்மாவோட சீர்வரிசையை சேர்ந்த வெள்ளி டம்ளர்களோட நம்ம கிரைம் நின்னுருச்சுங்ணா.

நமக்கும் வயசு ஆகுது. ச்சொம்மா கண்டவுகளை வம்புக்கிழுத்து அவிக வவுத்தெறிச்சலை ஏன் கொட்டிக்கனும்னும் தோணுது. தாளி வழக்கு போடுவான்/டாக்சி அனுப்புவாங்கறதுக்கெல்லாம் பயப்படற கேஸ் நாம இல்லிங்ணா.

பெட்டைபுலம்பல் மாதிரி புலம்புவாய்ங்க போல.அதெல்லாம் டெலிபதில வந்து ரெம்ப டார்ச்சர் பண்ணுது. எது எப்படியோ ஜாதகங்க வந்துக்கிட்டே இருக்கு. ரவுண்ட் தி க்ளாக் ஒர்க் அவுட் பண்ணாலும் "முடியலிங்ணா" அதனால வர்ர மாசம் 7 ஆம் தேதிவரை ஆரும் ஜாதகம் அனுப்பாம இருந்தா உள்ளதை பைசல் பண்ண வசதியா இருக்கும்.

நம்ம வலைதளத்துல பதிவு போடறவுக ஃப்யூச்சர்ட் ஐட்டமா போட்டா பொருத்தமான படத்தை ஃப்யூச்சர்ட் இமேஜா பொடுங்ணா.

பாண்டியண்ணன் எப்பத்தேன் பதிவு சைஸ்ல கமெண்ட் போடறத விட்டு பதிவு போட ஆரம்பிக்கப்போறாரு கேட்டு சொல்லுங்ணா..

அப்பாறம் சமச்சீர்கல்வி ஆய்வு கமிட்டி உறுப்பினர் ஒருத்தரு தங்களோட நிறுவன ஆசிரியருக்கு சம்பளம் சரியா கொடுக்காத வழக்குல இருக்காராமே நெஜமா ஆருப்பா அது?

பிரதமர் நாளை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறாராம். வாரா வாரம் சந்திப்பாராமே.. (அய்யய்யோ அப்ப இனிமே வாரா வாரம் பல ஊழல்கள் வெடிக்கப்போவுதா?)

பொதுக்கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷிய குழு உறுப்பினர்கள் (காங்கிரஸ்) நக்கலடிச்சு சிரிச்சாய்ங்களாமே?

"நல்ல தீர்ப்பை உலகம் கூறும் நாள் வரும்போது அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது"

ராகுல் காந்தி எப்ப பிரதமராக போறாரு? தாளி ராகுல் பிரதமராகனும் - முன் கூட்டி தேர்தலுக்கு போகனும். காங்கிரஸ் போண்டியாகனும்.

ங்கொய்யால நேரு குடும்பத்துல இருந்து நாய்குட்டி வந்தா போதும் ஜெயிச்சுரலாம்னு நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையற காங்கிரஸ் கிழவாடிகளுக்கு டெப்பாசிட் கூட கிடைக்கக்கூடாது.

Monday, April 5, 2010

ஆண்மை இழப்பு

அண்ணே வணக்கம்னே..
இன்னைக்கு செக்ஸ் பவர் தொடர் பதிவு தொடருது. கூடவே ஜோதிடம் மீதான விமரிசனங்கள்+ ‍விளக்கங்கள் என்ற தனிப்பதிவும் போட்டிருக்கேன் ,இதை படிக்க இங்கே அழுத்துங்க. கையோட கையா
அசத்த போவது யாரு - ‍ஒரு விமரிசனம் என்ற சிறப்பு பதிவும் போட்டிருக்கேன். இதை படிக்க இங்கே அழுத்துங்க‌

ஜெனட்டிக் காரணங்கள்:
செக்ஸ் பவர் மட்டுமே இல்லே உயரம், எடை, உடல் வலு எல்லாமே தலைமுறைக்கு தலைமுறை குறைஞ்சிக்கிட்டே வருது. உங்களுக்கு தெரிஞ்சவக யார்  வீட்லயாவது  25 வருசத்துக்கு முன்னாடி செய்த கட்டில் எதுனா இருந்தா போய்  பாருங்க. அவிக அந்த காலத்துல ச்சும்மா அப்படி குண்டிய உயர்த்தி உட்கார்ந்த கட்டில் அது. இப்போ நாம யாராவது அப்படி உட்கார முடியுமா? ஊஹூம். ஸ்டூலை போட்டுதான் ஏறனும்.இதுலருந்து என்ன தெரியுது தலை முறைக்கு தலைமுறை உயரம் குறைஞ்சிக்கிட்டே வருது.

அந்த காலத்துல கட்டின கோவில்,கோட்டை விதானமெல்லாம்  பார்த்திங்கனா தெரியும் க்ரேன் எல்லாம் இல்லாத அந்த காலத்து மனிதர்கள் வெறுமனே தங்கள் சக்தியை நம்பி கட்டின சமாசாரம் அதெல்லாம்.

காம சூத்திரத்துல ஆணுறுப்புகளோட நீளம், பெண்ணுறுப்புகளோட ஆழத்தை பத்தி ஒரு கணக்கு இருக்கு 3,6,9,12 இதெல்லாம் செ.மீ இல்லே அங்குலம். 12 அங்குலம்னா ஒரு அடி. உருப்போட அளவுக்கும் ஆண்மைக்கும் தொடர்பில்லே. இருந்தாலும் அந்த வளர்ச்சி இப்போ ஏன் சாத்தியமில்லாம போயிருச்சுனு யோசிக்க சொல்றேன்.

இதுக்கெல்லாம் என்ன காரணம்னா ? வர்ணாசிரம தர்மம். இதை கொண்டுவந்தது ஆரு. அவாள் தான். (ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுடாய்ங்க) வர்ணாசிரம தர்மத்துல சொல்லப்பட்டதென்னவோ நாலு வர்ணம்தான் ( பிராமணன், வைசியன்,சத்திரியன், சூத்திரன்)

ஆனால் பிரிவுன்னு ஆரம்பிச்சபிறகு கச்சாமுச்சானு ஒவ்வொரு வர்ணமும் பல நூறு சாதிகளா பிரிஞ்சு போச்சு. பிரிஞ்சதால என்ன போச்சுனு நீங்க கேட்கலாம். நிறைய போச்சு. நாட்டோட ஒற்றுமை போச்சு, சுதந்திரம் போச்சு, இதையெல்லாம் ஒரு பக்கம் வைங்க.

சாதிக்கட்டுப்பாடு  காரணமா திருமணங்கள் ஒரு சின்னவட்டத்துலயே நடந்து கிட்டு வந்தது. இதனால அப்பன் 6.5 அடி, பிள்ளை 6 அடி, பேரன் 5.5 அடி, கொள்ளு பேரன் 5 அடினு குறைஞ்சிக்கிட்டே வந்துருச்சு. மேலும் விஞ்ஞான வளர்ச்சி காரணமா உடலுழைப்பு குறைய குறைய, மூளை உழைப்பு அதிகமாயிட்டே வந்தது. இதன் காரணமாவும் மனித இனத்தோட ஃபிட்னெஸ் தலைமுறைக்கு தலைமுறை குறைஞ்சிக்கிட்டே  வந்துருச்சு. இப்போ ஒட்டு மொத்தமா இந்தியர்களோட ஃபிட்னசே குறைஞ்சுருச்சு. இதனால விரிவா  கலப்பு திருமணம் பண்ணா கூட பலன் சொற்பமா தான் இருக்கு.

ஆஃப்டர் ஆல் பசு மாட்டுக்கு கூட (ஓம்கார் ஸ்வாமிகள் மன்னிக்கனும்)  ஸ்விட்சர்லாந்து பசுவோட வீரியத்தை ஊசி மூலமா செலுத்தி கருவடையச்செய்தா உயர்தரமான கன்னு கிடைக்கும்னு தெரிஞ்சு வச்சிக்கிட்ட மனித கூட்டம் தங்கள் இன வளர்ச்சில மாத்திரம் இந்த பாலிசிய பின்பற்ற மாட்டேங்குது.

நான் சொல்றது ஒன்னுதான். கலப்பு திருமணம் கட்டாயமாகனும். குறைஞ்ச பட்சம் உறவுல திருமணம் தடை செய்யப்படனும்.  வட இந்தியன் தென்னிந்திய பெண்ணை தான் மணக்கனும். தென்னிந்தியன் வட இந்திய பெண்ணைத்தான் மணக்கனும். எப்படியும் நம்மாளுங்க வேலை,வெட்டி,வியாபாரம்னு உலகமெல்லாம் போறாய்ங்க. நல்ல ஹைட்,வெயிட்,ஃபிட்னெஸ் இருக்கிற பார்ட்டிங்களை மடக்கி கண்ணாலம் கட்டுங்கப்பு.

பாடியோட ஃபிட்னெஸை பொறுத்துதான் செக்ஸ் பவரும் இருக்கும். ஃபிட்னஸே கோவிந்தான்னா செக்ஸ் பவரும் அம்போதான்.

மூளை உழைப்பு அதிகமாயிருச்சு. ஆனால் உடலுழைப்பு ரொம்ப ரொம்ப குறைஞ்சு போயிருச்சு. இதை பேலன்ஸ் பண்ணியே ஆகனும். இல்லேன்னா ஆண்மை இழப்பு அதிகமாறது உறுதி