Thursday, June 28, 2012

12+12 பாலியல் விருப்பங்கள்: முடிவுரை


அண்ணே வணக்கம்ணே !
தெலுங்குல கோடி வித்யலு கூட்டி கொரக்கேன்னு ஒரு பழமொழி இருக்கு. அதாவது உலகத்துல கோடி கணக்கான திறமைகள் இருந்தாலும் எல்லாம் "புவ்வா"க்காகத்தானு அருத்தம். ஆனால் ஒரு கேட்டகிரி சனம் மட்டும் பலான மேட்டருக்காகவே திறமைகளை வளர்த்துப்பாய்ங்க, உள்ள திறமைகளையும் பலான மேட்டருக்கே யூஸ் பண்ணுவாய்ங்க. இவிக பத்தாவது கேட்டகிரி. (ச்சீக்கிரமே இதையும் இழந்துருவாய்ங்க - டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் இல்லியா? )

மேற்படி ஆர்வம் கட்டுக்குள்ள இருந்தாலோ -சப்கான்ஷியஸ்ல இருந்தாலோ அது பாசிட்டிவ். இதுக்கு விரோதமா ஆர்வம் கட்டுக்குள் இல்லாத போனாலோ -கான்ஷியஸாவே இருந்தாலோ அது நெகட்டிவ்.

அதே போல ஃபைனான்ஸ் மேட்டர்லயும் இவிக பிஹேவியர் இப்படித்தான் இருக்கும். பணம் பத்தும் செய்யும்னு கேள்விப்பட்டிருப்பிங்க.ஆனால் இவிக மட்டும் பணம் செய்யக்கூடிய மத்த 9 அம்சங்களையும் கண்டுக்கிடமாட்டாய்ங்க. ஒரே ஒரு அம்சமான "கில்மா"வை மட்டும் மண்டையில நிரப்பிக்கிட்டு பாடுபட்டு ஈட்டிய பொருளையெல்லாம் ஒளிச்சு கட்டிருவாய்ங்க.

பணத்துக்காவ வர்ரவ மனசை நிரப்ப முடியாது. மனசை நிரப்பக்கூடியவ பணத்துக்காவ வரமாட்டா. பொளப்பு நாறிரும்.

இந்த சீரிஸ்ல 11 ஆவது கேட்டகிரியிருக்கே.. ரெம்ப விசித்திரமான கேரக்டர். இவிகளை பத்தி வண்டையா ஒரு பாய்ண்ட் சொல்வாய்ங்க " கொய்யால அவனா.. காரியத்தை முடிச்சுட்டு -அவள் புடவையிலயே ... சிட்டு வந்துருவான்"

சாதாரணமா எவ்ளோ பெரிய கஞ்ச பிரபுவா இருந்தாலும் பலான மேட்டருன்னு இறங்கிட்டா ரெம்ப லிபரலாயிருவான்.அள்ளி விடுவான்.ஆனால் இந்த 11 ஆவது கேட்டகிரி மட்டும் அதுலயும் எனக்கென்ன லாபம்னு கணக்கு போடுவான்.

தங்கச்சி பலான மேட்டர்ல ஒர்த்லெஸ்ஸுன்னுட்டு சொந்த மச்சானை பலான இடத்துக்கு தள்ளிக்கிட்டு போயி அவன் காசுலயெ இவன் காரியத்தையும் முடிச்சுட்டு வந்த ஆசாமியை நாம சந்திச்சிருக்கம்.

இன்னொரு ஆசாமி டே புக்கிங் பண்ணிட்டு கூட்டாளிங்களை வரவழைச்சு அவிக கிட்ட வசூல் பண்ணி செட்டில் பண்ணிருவான்.

இந்த மாதிரி ஜென்மங்கள் 11 ஆவது கேட்டகிரி. இந்த லாபம் பார்க்கிற போக்கு சோஷியலா அனுமதிக்கப்பட்டதா இருந்தா, லீகலா இருந்தா சரி. அது பாசிட்டிவ். சமூகம் அனுமதிக்காகாததா -இல்லீகலானதா இருந்தா நெகட்டிவ்.

அடுத்து வர்ரது 12 ஆவது கேட்டகிரி. இவன் கிணறு வெட்டுவான் எவனோ தண்ணி குடிப்பான். இவன் நமக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்னு ரிட்டர்ன் ஆயிட்டா அது பாசிட்டிவ். ஆசிட் பாட்டிலை தூக்கிக்கினு ஓடினா நெகட்டிவ்.

ஆக 12+12 பாலியல் விருப்பங்கள் தொடர்ல சொல்லவேண்டிய விஷயங்களையெல்லாம் சொல்லியாச்சு. ஆமாம் பரிகாரங்கள் சொல்றதை எந்த கேட்டகிரியில நிறுத்தி தொலைச்சுட்டம்.? ஞா இல்லியே.. ஆருனா ஞா படுத்துக்கங்கப்பா..

நாளைக்கு தீர்த்துவச்சிருவம்.

Friday, June 8, 2012

பொம்பளைய நம்பலாமா: 2


//ஹெல்த்தியா உள்ள 45 வயசு காரன் கையில இருக்கிற வாக்கிங் ஸ்டிக் கணக்கா தாய்குலத்தோட டீலிங் வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ்.//

இது நேத்து நாம விட்ட பஞ்ச். இப்படி டீலிங் வச்சுக்க முடியாதவுக லைஃப் பிக்சரை நேத்து சொல்லியிருந்தம்.

இவிகளுக்கு என்ன தான் பரிகாரம்?

எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஜஸ்ட் சின்ன புரிதல்தான். சீனம்,சீனா,சைனா இப்படி எந்த பேர்ல குறிப்பிட்டாலும் ஒரே நாட்டை தான் குறிப்பிடறோம்.

அங்கன கிடைக்கிற களி மண்ணை சைனா க்ளேன்னு சொல்றோம். நம்ம ஒக்காபிலரியில சைனா டிஷ் அ பீங்கான்.

இந்த மெட்டீரியல்ல சிரிக்கும் புத்தர் சிலையும் கிடைக்குது , கப் அண்ட் சாஸரும் கிடைக்குது , கக்கா போறதுக்கான டபுள்யூ சியும் கிடைக்குது.

புத்தர் சிலைக்கு பூ போட்டு வணங்கறோம்.கப் அண்ட் சாசர்ல டீயோ காஃபியோ சாப்பிடறோம். இன்னொரு சமாசாரத்தை அல்ப சங்கியைக்கு உபயோகிக்கிறோம்.

பீங்கான்ல செய்த புத்தர் சிலையை வணங்கறதால அதே மெட்டீரியல்ல செய்த கப் அண்ட் சாஸர்ல டீ சாப்பிடமாட்டேன். அல்ப்ப சங்கியைக்கு ஒதுங்கமாட்டேன்னா அது பை. தனம்.

இதே விதத்துல தாய்,சகோதிரி , நண்பி ,லவ்வர், பொஞ்சாதி எல்லாரும் ஒரே ஜாதி தான்.ஆனால் அவிகவிகளை எப்படி டீலிங் பண்ணிக்கனுமோ அப்டி பண்ணிக்கனும். குழப்பிக்க படாது.

அதே போல பெண் வாழ்க்கையில ஒரு பார்ட். (முக்கியமான பார்ட்டுன்னு வேணம்னா வச்சுக்கலாம்) அதை விட்டுப்போட்டு எட்டாத காய் பார்த்து கொட்டாவி விடறதெல்லாம் வெட்டி.

அந்த பெண்ணே கூட தனக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறவனை சிலகாலம் பிரமிப்பா பார்க்கலாமே தவிர அவளோட காதலை பெற - அவளோட வாழ அது ஒன்னே தகுதி கிடையாது.

ஒவ்வொரு மன்ச ஜென்மமும் சேற்றில் முளைத்த செந்தாமரைதான். ச்சொம்மா ஜூம் போட்டு தாமரையை மட்டும் பார்த்துக்கிட்டிருந்துட்டு திடீர்னு சேற்றை பார்த்தா லவ் எல்லாம் ஓடிப்போயிரும்.

அதனால எதிராளிய பார்க்கும் போதே அப்பப்போ மிட் ஷாட், லாங் ஷாட்டுன்னு பார்த்துக்கிட்டிருக்கனும். இல்லின்னா மிரண்டு போயிருவம்.

பெண் என்பவள் இரண்டு விதமாக இருக்கிறாள். ஒன்று அவளது உடல் ரீதியான பலவீனம் தந்த குறுக்கு புத்தி, வியூகங்கள், பாதுகாப்பற்ற தன்மை இதெல்லாம் சேர்ந்து தயாரித்த தற்போதைய பெண்.

மற்றொரு பெண் ஒவ்வொரு பெண்ணிலும் அவளது மன ஆழத்தில் இருக்கிறாள். அவள் சில மில்லி கிராம் அன்புக்கு ஏங்கியபடி, அது கிடைத்தால் ஆதிசக்தியாகி அந்த அன்பை செலுத்தியவனுடைய குடும்பம்,வம்சம்,ஏன் அவன் ஊர்,உலகத்தையே காத்து ரட்சிக்கக்கூடிய இயற்கையின் பிரதி நிதியான பெண்ணும் இருக்கிறாள். -(இது சீரியஸ்)

கண்ணாலத்துக்கு மிந்திதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு கேரக்டர். கண்ணாலத்துக்கு அப்பாறம் அவள் ஜஸ்ட் மனைவி " ஏன் லேட்டு " " இந்த சம்மருக்குன்னா ஊட்டி உண்டா இல்லியா" " ஊர்ல இருக்கிறவனுக்கெல்லாம் ஓடி ஓடி செய்விங்க என் தம்பின்னா மட்டும் இளக்காரம்"

மைண்டு ஒரு குட்டி பின்னாடி ஓடுதுங்கற ஃபீலிங் வந்த ஒடனே இந்த தத்துவம்லாம் ஞா வராது. சின்ன வயசுல காட்லிவர் ஆயில் சாப்டிருந்தா ஞா வரும் .தப்பிச்சுக்கலாம் (இது காமெடி)

ஒரு பொருளை பெறும் தகுதி தனக்கிருக்குங்கற நம்பிக்கை இருந்தாலே அந்த பொருள் மேல ஆர்வம் குறைஞ்சுரும்.

அதை பெறும் தகுதி தனக்கில்லையோ -எவனாச்சும் முந்திக்குவானோ - எவனாச்சும் அடிச்சுக்கிட்டு போயிருவானோங்கற பீதியிருக்கும் போது தான் ரெஸ்ட்லெஸ்னெஸ் வந்துரும். பரபரப்பு,பதைப்பு வந்துரும்.

அப்பாறம் தத்துவம் கித்துவம்லாம் சைடு வாங்கிரும். மூளை டார்ஜான் வைரஸ் புகுந்த கம்ப்யூட்டர் மாதிரி ஆயிரும்.

உங்க ஃபோட்டோவை வச்சு பூஜை பண்றாங்கற ஒரே காரணத்துக்காவ நீங்க விரும்பாத பெண்ணை உங்களால லவ்வ முடியுமா? ரோசிங்க. நம்ம மாதிரிதானே தாய்க்குலமும்.

இப்பல்லாம் இந்த குட்டிங்க எந்த மாதிரி பயலுவளை விரும்பறாய்ங்கன்னு சர்வேல்லாம் வருது. அதையெல்லாம் படிச்சு குவாலிஃபைடாகி அப்பாறம் லவ்வறதுதேன் அல்லாருக்கும் சேஃப்டி.

எங்க காலத்துலல்லாம் ஹையர் சைக்கிள்ள ஹேண்டில் பார்லருந்து ரெண்டு கைய தூக்கிட்டு வந்தாலே குட்டிங்க செம பார்க்கும். விளுந்தா செம சில்லறை கிடைக்கும்.

இன்னைக்கு லட்ச ரூவா பைக்ல டெத் ரேஸ்ல போயிட்டிருந்தா கூட "பாவம்.. இன்ஷியூர் பண்ணானோ இல்லியோ"ங்கற கமெண்ட் தான் கிடைக்கும். தவறினா சங்குதேன்.

சத்தியம் அந்த முனைலயும் நஹி இந்த முனையிலயும் நஹி அது மையத்துல இருக்கு. பெண்ணை வெறுக்கவும் தேவையில்லை. பூஜை பண்ணவும் தேவையில்லை. சக மனுச சன்மமா ட்ரீட் பண்ணா போதும்.

ஒரு பெண் உங்க வாழ்க்கைய ஸ்வர்கமாக்கவும் போறதில்லை - நரகமாக்க போறதுமில்லை. சாதிக்கிறவன் பொஞ்சாதி நச்சரிப்பை மீறித்தான் சாதிக்கிறான். வாழ்க்கையில தோத்துப்போறவன் கலைவாணியே பெண்ணுரு கொண்டு பொஞ்சாதியா வந்தாலும் தோத்துத்தான் போவான்.

இந்த பொம்பளை மேட்டரை ஃப்ரீயா உட்டுட்டு நார்மலா இருக்க ட்ரை பண்ணனும்.

உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன.

இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் ,காமம், காதல் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் . இந்த எண்ணங்களை நம் ஜாதகத்திலான சந்திரனின் இருப்பு கட்டுப்படுத்துது.. ( மறுபடி மொதல்லருந்தா...ஆஆஆஆஆஆஆஆஆ)

வேணாம் பாஸ் நாளைக்கே பார்ப்போம்..

Thursday, June 7, 2012

பொம்பளைய நம்பலாமா?


//வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலே//ங்கற இன்றைய திரைப்பாடல்லருந்து

//ஆலகால விஷத்தை நம்பலாம், கோலமாமத யாணையை நம்பலாம்,
கொல்லவரும் வேங்கைபுலியை நம்பலாம். காலன்விடும் தூதையும் நம்பலாம்.
சேலைகட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று திகைப்பார்தாமே, //ங்கற சித்தர் பாடல் வரை தாய்க்குலத்துக்கு ஆன்டியாவே இருக்கே . இன்னாபா மேட்டருனு கேப்பிக,

(சப்ஜெக்ட் தாவலை தலை! நம்ம தொடர்பதிவோட லைன் அப்பை விட்டு டைவர்ட் ஆகலை பாஸு.. ச்சொம்மா போற போக்குல டச் பண்றேன் தட்ஸால்)

எங்கயோ கேட்டது/படிச்சது.

ஹெல்த்தியா உள்ள 45 வயசு காரன் கையில இருக்கிற வாக்கிங் ஸ்டிக் கணக்கா தாய்குலத்தோட டீலிங் வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ்.

அதை விட்டுட்டு தாத்தா கையில உள்ள கைத்தடி கணக்கா ரெம்ப ஊனி நடந்தா மூஞ்சி பல்லு பேர்ந்துரும். பொம்பளைய நம்பாதேன்னவுகள்ளாம் முட்டாள் "பெண் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி" ன்னு சொன்ன நாந்தேன் க்ளெவருன்னு நான் சொல்லமாட்டேன்.

இந்த ஒலகத்துல எல்லா நிஜமும் நிஜமில்லை. எல்லா பொய்யும் பொய்யில்லை. எந்த நிஜமும் 100 சதம் நிஜமில்லை . எல்லா பொய்யும் 100 சதம் பொய்யுமில்லை.

எல்லா நிஜமும் 24 மணி நேரமும் நிஜமா இருக்கிறதில்லை. எல்லா பொய்யும் 24 மணி நேரமும் பொய்யா இருக்கிறதில்லை.

இங்கன எல்லாமே மாறும் .ஆளை பொருத்து , நேரத்தை பொருத்து . டீலிங்கை பொருத்து மாறும்.மாறிக்கிட்டே இருக்கும்.

சகோதிரிகள் உள்ள ஆண், சகோதரர்கள் உள்ள பெண் இவிக லைஃப் பிக்சரை பார்க்கலாம். சகோதிரின்னா ஆரு? தாயின் பிரதி.

ஒவ்வொரு ஆண் குழந்தையும் தாய் மீது மையல் கொள்ளும்னு சைக்காலஜி சொல்லுது. ( அப்பனை போட்டுதள்ளிர்ர ரேஞ்சுக்கு போயிட்டா அது ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் - மனோவியாதி) சகோதிரி தாயின் பிரதி.

சகோதிரிகளிடை வளரும் ஆண் குழந்தை விவரம் தெரியறதுக்கு மிந்தி வெள்ளந்தியா ஒன்னு மண்ணா கிடக்கும். டீன் ஏஜ்ல ஒரு மிரட்சி வரும். நெருங்கலாமா கூடாதா?

இந்த மிரட்சி எல்லா பெண்கள் விஷயத்துலயும் பரவிருச்சுன்னா நாஸ்தி.. கான்ஷியஸ் மைண்ட்ல "கூடவே கூடாது"ங்கற கான்செப்ட் இருக்கும். சப் கான்ஷியஸா " வேணும்"ங்கற கான்செப்ட் இருக்கும். நிலத்துல புதை படும் நிலக்கரி அழுத்தம் காரணமா வைரமா மாறலாம். ஆனால் மனசுக்குள்ள அழுத்தப்பட்ட உணர்வு காஷ்மோரா மாதிரி . 12 வருசத்துக்கப்பாறம் பீறிட்டு கிளம்பலாம்.

மேலும் சகோதிரிகளோடு வளரும் ஆண்குழந்தை கொஞ்சம் பயந்த சுபாவமா ஃபிமிலிஷ் ஆ இருக்க வாய்ப்பிருக்கு. (என்விரான்மென்ட்) .

அதுலயும் சுருட்டை முடி,அழகான கண்கள்னு வடிவேலு சொல்றாப்ல சூப்பர் ஃபிகரா இருக்கிற சகோதிரிகள் இடையில் வளர்ர ஆண்குழந்தை பயந்த சுபாவமா வளர வாய்ப்பிருக்கு.

ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா பால்யத்துல ரெம்ப துணிச்சலா இருக்கிறதும் - டீன் ஏஜ்ல பயந்த சுபாவமா மாறுவதும் உண்டு.

பயம் செயல்படுவதை தடுக்கும். சிந்தனையை வளர்க்கும் . அது ஆக்கப்பூர்வமானதா இருந்தா நோ ப்ராப்ளம். இதர ஃபேக்டர்ஸ் சரியில்லின்னா அது பகல் கனவா மாறும்.

ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா செய்த அட்வென்சர்ஸ் - அந்த குழந்தைய சூடு கண்ட பூனையா மாத்தலாம். ஆனால் இயற்கை விதிகளின் படி பூனை பால் குடிச்சே தீரனும். ( பால்னா இங்கன நான் சொல்றது வள்ளுவர் சொன்ன 3 ஆவது பால்) . இதனால மன அழுத்தம், கான்ட்ராடிக்சன் இத்யாதி இத்யாதில்லாம் டெவலப் ஆகும்.

நினைவெல்லாம் நித்யாங்கற மாதிரி சப் கான்ஷியஸ் முழுக்க பிட்டு படமா ஓடும்.. அதனால ஒரு கில்ட்டி. தன் மேல தனக்கே நம்பிக்கையில்லாத நிலை.

அதனால கில்மாவுக்கு வாய்ப்பே இல்லாத வயசு, முறை உள்ளவுகளோட மட்டும் பழகலாம். அப்படி பழகும்போது உள்ளாற அழுத்தப்பட்ட காஷ்மோரா கிளம்பிருச்சுன்னா நாறிரும்.

இங்கே இன்னொரு பாய்ண்டை சொல்லனும். இறைக்கிற கேணி தான் ஊறும்ங்கறது லாஜிக்.ஆனால் இருக்கிற தண்ணி வயலுக்கு பாய்ஞ்சா தேன் கிணறு தன் கப்பாசிட்டிக்கு ஊறும்.

ஐ மீன் ஒரு ஆண் செக்ஸ் குறித்த நேரிடை கருத்துக்களுடன் "செயல்படுவதற்கான" வாய்ப்புகளுடன் இருக்கும் போது அவனோட பாடி கரீட்டா ஒர்க் அவுட் பண்ணி வைக்கும்.

எதிரிடையான கருத்துக்கள் இருந்தாலோ - செயல்படுவதற்கான உந்துதலோ -ஊக்கமோ இல்லாம இருந்தாலோ விந்து உற்பத்தியே குறைஞ்சு போயிரும்.

இதுல இன்னொரு லாஜிக். பால் பாத்திரம் நிரம்பி இருந்து -அதை காய்ச்ச ஆரம்பிச்சா நேரம் பிடிக்கும். இதுவே அதுல ஒரு ஸ்பூன் பால் மட்டும் இருக்குன்னு வைங்க. என்னாவும்?

படக்குனு காய்ஞ்சி , பொங்கி ,தீஞ்சுரும். இதெல்லாம் - இந்த சிக்கல் எல்லாம் அவிக உள் மனசுக்கு தெரியாட்டாலும் - பாடிக்கு தெரியும்.

மனசை உருவாக்கிறது இயற்கையிலருந்து விலகி ஓடிக்கிட்டிருக்கிற சமூகம். பாடியை உருவாக்கிறது ஆதி நாட்கள்ளருந்து அதே தாது உப்புக்கள்,விட்டமின்ஸ்,கார்போ ஹைட்ரேட், ப்ரொட்டீன்ஸ் தான், இதனால மனசை விட பாடிக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கும்.

எதிர்காலத்துல இருக்கவே போறதில்லைங்கற "அலார்ம்" ஒலிச்சிட்டே இருக்க இவன் என்ன பண்ணுவான்? "காஞ்ச மாடு கம்பங்கொல்லை மேஞ்ச மாதிரி " செக்குக்கும் சிவலிங்கத்தும் வித்யாசம் தெரியாத மாடு மாதிரி .. போய்க்கிட்டிருப்பான்

இப்படியா கொத்த பார்ட்டிங்க தான் பொம்பளைய தாத்தா கைத்தடியா உபயோகிச்சுக்கிட்டு - இந்திரியம் தீர்ந்து சுந்தரியும் பேய் போல ஆகிர .. பதிவின் ஆரம்பத்துல சொன்ன தத்துவம்லாம் சொல்லிக்கிட்டு கிடப்பாய்ங்க. இது 12+12 பாலியல் விருப்பத்துல லைஃப் பிக்சர் நெம்பர்: 3

(இது பவர்கட் நேரம் மீதியை நாளைக்கு பார்க்கலாம்)

Wednesday, June 6, 2012

வெறும் பேச்சால் "அது" போச்சு


அண்ணே வணக்கம்ணே !
<இஸ்மாயில் சார் சொன்ன ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் > <பாப்பா> <அதை வளர்க்க பைசா> <லைஃப் ஸ்மூத் கோயிங்கா இருக்க கில்மா> இந்த வரிசையில வரும்போது படக்குன்னு தொடரோட தலைப்பை மாத்தி <படுக்கையறை மர்மங்கள்>ங்கற தலைப்புல ரெண்டு அத்யாயம் மறுபடி டைட்டில் மாத்தி <12+12 பாலியல் விருப்பம்>னு இந்த தொடர் போயிக்கிட்டிருக்கு.

இந்த செனேரியோல 12 விதமான லைஃப் பிக்சர்ஸ் கொடுத்து அதுல பாசிட்டிவ் நெகட்டிவ் காட்டி பரிகாரம் சொல்லலாம்னு ப்ளான் பண்ணோம். இடையில பரிகாரம் இல்லாம வெறுமனே ச்சூ காட்டிட்டு போறாப்ல இருக்கோன்னு ஒரு கில்ட்டி. அதனால படக்குனு பரிகாரத்துக்கு தாவிட்டம்.

இதுல மொதல் பிக்சருக்கு விளக்கம் - பரிகாரம்லாம் நேத்து கொடுத்தம். இன்னைக்கு செகண்ட் பிக்சருக்கு போயிரலாம்.

இங்கன வாயை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிடனும். யாகாவாராயினும் நா காக்கன்னு வள்ளுவர் சொன்னாரு. இதுல டபுள் மீனிங் இருக்கு. ஒன்னு ருசிக்காக வவுத்தை செப்டிக் டாங்கா மாத்திராதிங்க. இன்னொன்னு தேவையில்லாம வாயை கொடுத்து பைல்ஸ் வரவச்சுக்காதிங்க.

சிலர் பேசுவாய்ங்க. எப்டி இருக்கும் தெரீமா அப்டியே மடியில "தாச்சுக்க "சொல்லி தாலாட்டு பாடறாப்லயே இருக்கும். வவுத்துல இருக்கிற புள்ளை அப்டியே நழுவி வெளிய வந்துரும். உபமான உபமேயம்,பழமொழி, தத்துவம் இப்படி ஒன்னு விடாம உபயோகிச்சு அவ்ளோ சூப்பரா பேசுவாய்ங்க. எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு "யப்பா.. மூக்குப்பொடி"க்கு ஒரு ரெண்டு ரூபா கொடேம்பாய்ங்க.

நம்மாளு ஒருத்தன் இருக்கான். ஏரியால ஆல் இண்டியோ ரேடியோ மாதிரி. செய்திகள் வாசிப்பதுன்னுட்டு ஆரம்பிக்க மாட்டான் அதான் வித்யாசம். "தகவல் வெள்ளம் "அப்டியே பாயும்.. கொய்யால அதுல முக்காவாசி "கிசு கிசு" ரேஞ்சுல தான் இருக்கும்.

தன்னை பத்தி அதி வீர பயங்கரமா பீத்திக்குவான். பிரச்சினைன்னு வந்தா மட்டும் ஆளு காயப் (மாயமா மறைஞ்சுருவான்) அப்படி மறைய நேரமில்லாம புக் ஆயிட்டா ஒன் பாத்ரூம் டூ பாத்ரூம் எல்லாம் சகஜம்.

நாட்ல உள்ள ரவுடிக்கெல்லாம் தானே கேர் ஆஃப் மாதிரி பீலா விடுவான்.ஒரு ஹோம் கார்ட் இவன் கிட்டே நின்னு பேசிட்டா டி.ஐ.ஜி கிட்டயே பேசிட்டாப்ல அலைப்பறை .

இந்த பராக்ரமங்களை சொல்றச்ச ஹை டெசிபல்ஸ் வேற. நாம தான் லைஃப்ல அடிப்பட்டு உதைப்பட்டு கிடக்கமே. எவனாச்சும் "சுமாரா பேசினாலே" அலார்ட் ஆயிருவம் (வைக்கப்போறாண்டா ஆப்புன்னுட்டு) இந்த பிக்காலிக்கிட்ட மாட்டுவமா என்ன?

டாப் சீக்ரெட்:
அப்படியும் அய்யோ பாவம்னுட்டு ரூ.3000 கடனா கொடுத்துட்டு அதை வசூலிக்க பெரிய பெரிய சதி திட்டம்லாம் தீட்ட வேண்டி வந்துருச்சு .அது வேற கதை.

இந்த கேரக்டரை பத்தி முழுக்க சொல்லனும்னா வடிவேலுவை போட்டு ஒரு படமே எடுத்தாகனும். அடடா முக்கியமான மேட்டரை விட்டுட்டமே. கில்மா மேட்டரு.

என்னவோ ஊரு உலகத்துல உள்ள பொம்பளை எல்லாம் தூக்கிக்கிட்டு நிக்கிறாப்லயும் ( வண்டியில ஏற கொசுவத்தை சொன்னேங்ணா) இவரு பெரிய மதன காமராசன் போலவும் ஏகத்துக்கு பில்டாப் பண்ணுவான்.

ஒரு தாட்டி ஒரு ஆசாமி ஒரு கில்மா பார்ட்டிய சொல்லி பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருக்காரு. நம்மாளு போனான் . வந்துட்டான்.

அதுக்கு அந்த ஆசாமி கேட்ட கேள்வி " கொய்யால வாய்ல போட்ட பாக்கு கூட மசியலை .அதுக்குள்ள வந்துட்ட .. என்ன சொம்மா பார்த்துட்டு வந்துட்டயா"

ஃபேஸ் டு ஃபேஸோட நின்னிருந்தா பரவால்லை. ஃப்ரீ டெலிகாஸ்ட் -ஃப்ரீ ப்ராட்காஸ்ட் வேற பண்ணிட்டாரு அந்த ஆசாமி.

இன்னைக்கும் இந்த கேரக்டர் வெறும் வாய வச்சுக்கிட்டு இன்னம் மேனேஜ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கு.

ஆனால் குட்வில்? அது அதலபாதாளத்துக்கு வந்துருச்சு. கூட்டம் குறைஞ்சு போச்சு. எவனும் சீந்தறதில்லை. அக்கா மகளை தான் கட்டியிருக்கான். அக்காவும் - அக்கா மகளும் உட்கார்ரான்னா உட்காரனும் எந்திரிடான்னா எந்திரிக்கனும் இது நிலைமை.

ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் - பிச்சுப்பார்த்தா ஈறும் பேனுமாம் கதைதான். ஓசியில தின்னு தின்னு அல்சர் வந்துருச்சு. ஓசியில குடிச்சு குடிச்சு லிவர் வீங்கிருச்சுன்னா கிட்னி போச்சுன்னா பொஞ்சாதி தெருத்திண்ணையில கொண்டு வந்து போட்டுருவா.

இம்மாம் பெரிய உபகதையை இங்கன கொண்டு வந்தது எதுக்குன்னா உங்க மைண்ட்ல ஒரு பிக்சர் வரனும்னு தேன். வெறுமனே பேச்சுல கலர் கொடுக்கிறது ,பீலா விடறது மட்டுமில்லை. அலங்காரமா எழுதறது -பேசறதுல்லாம் கூட இதே கேட்டகிரிதான்.

வெறும் பேச்சுங்கறது எம்ப்டி ஸ்பூன் மாதிரி . எம்ப்டி ஸ்பூனை கொண்டு வவுத்தை நிரப்ப முடியுமா என்ன? வாத்தியார் கூட "கத்தி வச்சுக்கங்க" "போஸ்ட் கார்ட் விலையை குறைப்பேன்" "மானில சுயாட்சிக்காக ராணுவத்தை சந்திப்பேன்"ன்னு பாம்பு விட்டாரு .

அவருது இன்னா மேரி கேரக்டரு. அதுல இந்த பேச்சு எவ்ளோ கலீஜா இருக்குது பாருங்க.காமராஜர் "பார்க்கலாம்ணே"னுட்டா மேட்டர் க்ளோஸ். . மன்சன்னா அப்டி இருக்கோணம். முரசொலியில கலைஞர் பக்கம் பக்கமா அள்ளி விடற மாதிரி விட்டா கதை கந்தலாயிரும்.

மீறி அள்ளி விட்டா வாய் கோணிக்கும் - திங்க சோறு கிடைக்காது - குடும்பம் உருப்படாம போயிரும். கண்ணு டப்ஸாயிரும்.

இதுவரை சொன்னது பிக்சர்ல குவார்ட்டருதேன் . அடுத்த குவார்ட்டரு இன்னாடான்னா திங்கறது . இதை பத்தி விவரமா சொல்ல விரும்பலை. நாம ஏற்கெனவே எழுதின வாயும் இன உறுப்பும் பதிவை படிச்சாலே போதும்.

பேச்சு .. ஆன்டி டேட் போட்ட செக் மாதிரி. செயல் தான் கேஷ். ச்சொம்மா ரப்பர் செக்கை விட்டுக்கிட்டிருந்தா லைஃபே ஸ்மாஷாயிரும். இந்த ரெட்டை வேடம் ,கில்ட்டி, தாழ்வு மனப்பான்மை எல்லாம் சேர்ந்து பேட்டரியை ஒரு வழியாக்கிரும். "பாச்சா குட்டியா" உச்சா மட்டும் தேன் போக முடியும்.

நம்ம பேச்சை ஆரும் நம்பமாட்டாய்ங்க. குடும்பத்துல உள்ளவுக கூட " அதும்பாட்டுக்கு எதுனா பினாத்திக்கிட்டு கிடக்கும் .. அந்த ரிமோட்டை எடும்பாய்ங்க" இந்த பிக்சருக்கு என்ன பரிகாரம்னு நாளைக்கு பார்ப்போம்.

Tuesday, June 5, 2012

1-3 பாலியல் விருப்பங்கள் & பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
12+12 பாலியல் விருப்பங்கள் தொடரில் 3 விதமான செனேரியோவை கொடுத்திருந்தம். இந்த செனேரியோக்கள்ள வாழ்ந்துக்கிட்டிருக்கிறவு இன்னா மேரி பரிகாரங்களை செய்துக்கலாம்னு இன்னைக்கு பார்த்துரலாம். நாளையிலருந்து 4 , 5 , 6 ன்னு 12+12 வரை பார்ப்போம்.

மொதல்ல கொடுத்த 3 வகையான செனேரியோல எந்த பிரச்சினையும் இல்லாம வண்டி ஓடிக்கிட்டிருந்தா அவிக எந்த பரிகாரமும் செய்ய தேவையில்லை. பிரச்சினை உள்ளவுக மட்டும் பரிகாரம் செய்தே ஆகனும்.
இத்தீனி நாள் நம்ம ப்ளாகை/சைட்டை ஃபாலோ பண்ணாதவுக வசதிக்காக மேற்படி 3 செனேரியோவை இங்கே மறுபடி தரேன்.

1.சுகமான கற்பனைகள் - நல்ல ரசனை - கலைகள்ள ஈடுபாடு -பெண்களுடன் இரண்டற கலக்கும் மென்மை/பெண்மை உ.ம் ரெசிப்பி பத்தி கூட டிஸ்கஸ் பண்ணுவாய்ங்க. டிப்ஸ் கொடுப்பாய்ங்க. இவிகளை பொருத்தவரை வீடு,வாகனம்லாம் அனுபோகத்துல இருக்கும். (சொந்தம்னு அடிச்சு சொல்லவரலை -எவனுதோ இவிக தங்களோடதை போல அனுபவிக்கறாபல் ஒரு அமைப்பு.

பிரச்சினை:
கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி கியாரண்டி இதை சீரணிச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ் இல்லின்னா பிரச்சினைதேன்.

பரிகாரம்:

1.சாயந்திரம் போடப்போற பதிவை பத்தி காலையில ரோசிச்சா புண்ணியம் உண்டு. அட்லீஸ்ட் வேலை கிடைச்சு,அது பர்மனன்டாகி , தரகர் கிட்டே ஜாதகம் கொடுத்துட்டு வந்து பொஞ்சாதிய பத்தி கற்பனை பண்ணா புண்ணியம் உண்டு. அதை விட்டுட்டு "ஆலு லேது ச்சூலு லேது கொடுக்கு பேரு சோமலிங்கம்"னுட்டு கற்பனை குதிரையை விரட்டக்கூடாது. ( ஆலு=மனைவி ; ச்சூலு = கர்பம் ; கொடுக்கு =மகன் ) பொஞ்சாதியும் இல்லை -அவள் கர்பமாவும் இல்லை. பிள்ளை பேரு சோமலிங்கம்னு கற்பனை பண்றது வீண் தானே.

முதலிரவு அறைக்குள்ள நுழையறதுக்கு முந்தி கற்பனை செய்தா விந்தும் முந்தும் ( சூப்பர் எதுகை மோனைப்பா) அப்பாறம் இல்லாத பொல்லாத இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இழந்த சக்தி வைத்தியர்கள் இதெல்லாம் தேவையா?

கற்பனைக்கு கர்த்தா நாம. அதனால கற்பனை பழைய தமிழ்படம் மாதிரி ஸ்மூத் கோயிங்கா இருக்கும். ஆனால் லைஃப் ? இதுக்கு கர்த்தா நம்ம கருமம். டப்பிங் தெலுங்கு படம் மாதிரி கத்தி,குத்து,ரத்தம்லாம் இருக்கும்.

நல்லதை நினைக்கும் போதே கெட்டதையும் நினைச்சு பாலன்ஸ் பண்ணிக்கிரனும். அதுலயும் இந்த கில்மா மேட்டர்ல அசலான வேலைய செய்ய வேண்டியது வேற டிப்பார்ட்மென்ட். கற்பனைக்கு கேந்திரம் மூளை.

காமம் தலைக்கேறின்னு சொல்வாய்ங்க. அப்படி ஏறிட்டா "கிளிச்சுரலாம்"ங்கற மாதிரி ஒரு ஐடியா வரும். மேட்டர் இன்னாடான்னா காமம் தலைக்கு ஏறக்கூடாது. ( ஐ மீன் அது குறித்த எண்ணங்கள் ,கற்பனைகள்) அப்டி ஏறிருச்சுன்னா பெர்ஃபார்மென்ஸ்ல பல்பு வாங்கிர வேண்டியதுதான்.

இந்த பாய்ண்டையெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு அடக்கி வாசிக்கனும். கற்பனைய தூண்டக்கூடிய உப்பு,காரம்,புளிப்பு, தனிமை , மசாலா ,ஸ்வீட்ஸ், ஸ்ன்ட், நொறுக்கு தீனி ,பட்டை ,லவங்கம் முதற்கொண்டு நம்ம சைட்டு உட்பட எல்லாத்தையும் தவிர்க்கனும்.

லைஃப் ஸ்டைலை மாத்திக்கிடனும். கடுமையான் உடல் உழைப்பு , ஆழ்ந்த தூக்கத்தை தரும். ஆழ்ந்த தூக்கத்துல கனவு வராது.

பாடியில ஜெனரேட் ஆகக்கூடிய எனர்ஜியை எங்கேஜ் பண்ணிரனும்.உபரியா உள்ள எனர்ஜி நிச்சயமா செக்ஸ் பவராத்தான் வெளிப்படும். இந்த புரிதல் தான் முழு முதல் பரிகாரம்.

நல்ல ரசனை - கலைகள்ள ஈடுபாடு :

ரசனைன்னு சிம்பிளா ஒரே ஒரு வார்த்தை.ஆனால் வாழ்க்கைக்கான அருத்தமே இதுல அடங்கிருது. ரசனை இல்லாதவன் மன்ச ஜன்மமே கிடையாது.

நம்ம ஃப்ரெண்டு ஒருத்தரு கீறாரு . நல்ல உயர்தர சைவ உணவகத்துக்குத்தான் போவாரு. இட்லி தோசை இத்யாதிக்கு என்னெல்லாம் சைட் டிஷ் இருக்கோ எல்லாத்தையும் கேட்டு வாங்குவாரு. ரெண்டு மூனு வாய் தனித்தனியா தொட்டு சாப்பிடுவாரு. அப்பாறம் என்ன பண்ணுவாருன்னா எல்லா சைட் டிஷ்ஷையும் ப்ளேட்ல கவுத்து பிசைஞ்சு ( சாரி .. ரெம்ப குமட்டுதோ?)

ஒரு செருப்பு வாங்க நூறு ஜோடியையாவது பார்த்துருவாரு. ஐ நூறு,ஆயிரத்துக்கு குறைச்சு எடுக்கவே மாட்டாரு, வயசு 55 இதுவரைக்கு கண்ணாலமாகல்லை.

இன்னொரு ஃப்ரெண்டு . 1987 ல திடீர்னு அப்பா செத்துப்போக 007 ஜீ.ஓ படி அவர் வேலைய இவருக்கு கொடுத்தாய்ங்க. அப்பாவோட பாண்ட் சட்டை எல்லாத்தையும் அள்ளிட்டு போயி ஆல்ட்டர் பண்ணி அதையே 3 வருசம் போட்டாரு.

அதையாவது ஒரு ரீஜனா போடுவாரு -களட்டி வைப்பாருன்னா ஊஹூம்.பாண்டோடயே தூங்கிருவாரு. தூங்கி எந்திரிச்சு அப்டியே ஆஃபீஸ் வந்துருவாரு.

மொதல் கல்யாணம் 35 வயசுல நடந்தது. ரெண்டு வருசத்துல பொஞ்சாதி செத்துப்போச்சு. போன வருசம் செகண்ட் மேரேஜ்.

ஒரு அய்யரு வீடு. கோவில்ல பூஜைல்லாம் கூட செய்துக்கிட்டிருந்தாய்ங்க. ஃப்ரீயா வர்ர வேட்டி,துண்டையெல்லாம் கடையில வித்துருவாரு போல. அவர் கட்டியிருக்கிற வேட்டி துண்டை பீத்துணியை கூட வச்சு விளையாடற நாய் குட்டி. கூட சீண்டாது. அம்மாம் அழுக்கு. அவிக வீட்டுக்குள்ள காலை வச்சு எடுக்கிறதுக்குள்ள நம்ம பாதங்களோட அடையாளம் கிருஷ்ண ஜெயந்தி கணக்கா பதிஞ்சுரும். அம்மாம் தூசு.

பிள்ளை குட்டி கிடையாது. வெள்ளையோ வெள்ளையா ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்த்தாய்ங்க. அதுவும் கண்ணாலம் கட்டிக்கிட்டு பூட்ச்சி. திரும்பி பார்க்கலை. அய்யரும் போய் சேர்ந்துட்டாரு. அய்யரம்மா தனிமரமா நிக்காய்ங்க.

இதையெல்லாம் படிச்சுட்டு ஓஹோ.. ரசனையோட வாழ்ந்தாதான் கண்ணாலம்,கில்மா, பிள்ளை குட்டில்லாம் அமையுமோன்னு ஒரு முடிவுக்கு வந்துராதிங்க.

இதே ரசனை ஓவரா போனாலும் சுக்கிர பலம்லாம் அதுக்கே செலவாகி கண்ணாலம்,கில்மால்லாம் கானல் நீரா போயிரும். சாக்கிரதை .

வசதியான வீடு இருக்கு. ஏஜ் பார் ஆயிட்டே இருக்கு. கண்ணாலம் அமையலியா? ஒரு பத்து ரூபா ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி உங்க வீட்டை லட்சுமிக்கு எழுதிவச்சுர்ரதாவும் வாழ் நாள் முழுக்க பிரதி மாதம் 1 முதல் 5 ஆம் தேதிக்குள்ள ரூ.108 லோக்கல் பெருமாள் கோவில் உண்டியில செலுத்திர்ரதாவும் கமிட் பண்ணிக்கங்க.

இதுல நீங்க ரூ.108 போடறது ஸ்தூலமான சமாசாரம் இது முக்கியம் கிடையாது. வாடகை வீட்ல இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் உங்க மனசுல இருக்கனும். அதான் முக்கியம். வாகன மேட்டர்லயும் இதே ஃபார்முலாவ யூஸ் பண்ணுங்க.

படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்களை அவாய்ட் பண்ணிருங்க. சீக்கிரமே தூங்கப்போயி விடியல் 4 அ 4.30 க்கெல்லாம் எந்திரிச்சுருங்க. நடனம், சங்கீதம் மாதிரி ப்ரோக்ராம்ஸுக்கு காசு கொடுத்து டிக்கெட் வாங்கி போய் பாருங்க

தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாக்களை நீங்க அவாய்ட் பண்ணுங்க. ஃப்ரெண்ட்ஸ் கேட்டா வாங்கி கொடுங்க.

ஏசி இருந்தா அதை அப்பப்போ ஆஃப் பண்ணிருங்க. பயணம்னு கிளம்பினா ஸ்லீப்பர், சூப்பர் டீலக்ஸ் இத்யாதியை அவாய்ட் பண்ணுங்க.

வீட்டுக்கு தென்கிழக்குத்திசையில பள்ளம், வீட்டுல உபயோகிக்கிற தண்ணீர் வெளிய போறது இத்யாதி இருந்தா மாத்துங்க.

நட்பு ,உறவு வட்டத்தில் விசேஷங்களுக்கு வெள்ளிச்சாமான்களை ப்ரசன்ட் பண்ணுங்க. நீங்க பெண்ணா இருக்கும் பட்சத்துல ப்யூட்டிபார்லரை கட்டாயம் அவாய்ட் பண்ணுங்க.

குறிப்பு: 3 செனேரியோவுக்கும் பரிகாரம் கொடுத்துரலாம்னு பார்த்தேன். ஊஹூம்.. வேலைக்காகலை . நாளைக்கு பார்ப்போம்.

சீ யு..

Monday, June 4, 2012

12+12 பாலியல் விருப்பங்கள்: 5 « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே !

2000,ஜூலை,31 ஆம் தேதி ப்ளாக் ஆரம்பிச்சம்.டஜன் கணக்கா வலைப்பூக்கள். அதுல உருப்பட்டது நிர்வாண உண்மைகள் ஒன்னுதேன். இன்னைய தேதிக்கும் வித் அவுட் அப்டேட்ஸ் 500+ ஹிட்ஸ் கியாரண்டி.

( அனுபவஜோதிடம் ப்ளாக் சோனி) அனுபவஜோதிடம் சைட்டு ? ஊஹூம்.. ஜா.ரா வருகைக்கு மிந்தி ஏதோ உருப்படியான டிஸ்கஷனாவது நடந்துக்கிட்டிருந்தது. இப்பம் அதுவுமில்லை.

ஃபேஸ்புக்ல ஒரு பேஜ் ஆரம்பிச்சம். அதுவும் பேர் சொல்ல மாட்டேங்குது. இதுல தேன் கூடு,தமிழ்வெளியில பிங் பண்ண முடியாததால ஓவரால் ஹிட்ஸ்ல சுமார் 200 வரை ஆப்பு.

இன்னாடா மேட்டருன்னா நம்ம ஸ்டேட்ல ஜகன் இஷ்யூ பத்திக்கிச்சா தெலுங்கு பக்கம் பார்வைய திருப்பினமா அங்கே ஹிட்ஸ் எங்கயோ போயிட்டிருக்கு. முந்தா நாள் டாப் ஒன்ல கூட நின்னம்.

ஆக கணக்கு ஒன்னுதேன் ஓஷோஒரு கதை சொல்லுவாரு ஒரு மிருக காட்சி சாலையில சிம்பன்சிகளுக்கு காலையில 3 மதியம் 2 கொட்டைகள் கொடுப்பாய்ங்களாம். அதை அந்த காப்பாளர் காலையில 2 மதியம் 3 ன்னுட்டு மாத்தினாராம். ஒடனே சிம்பன்சி எல்லாம் ஸ்ட்ரைக்.

ஏதோ இந்த கதைய ஏற்கெனவே படிச்சதால உ.வ படாம இருக்கம். தமிழ்ல வந்தா என்ன தெலுங்குல வந்தா என்ன ஹிட்ஸ் ஹிட்ஸுதானே.( நம்முது ஆளில்லாத டீக்கடையில்லை. அதுவே போதும்)

ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ்ல கில்மா மேட்டருக்கு வந்தம். 12+12 பாலியல் விருப்பங்கள்னு ஆரம்பிச்சம். இதுவரை ரெண்டு விதமான லைஃப் பிக்சர் தான் கொடுத்திருக்கம். இன்னைக்கு 3 ஆவது .பிக்சரை கொடுக்கனும். மலைப்பா இருக்கு.

பேஸிக்கலாவே பதிவு போடறதுல ஆர்வம் குறைஞ்சு போச்சு . பவர் கட் வேற பயங்கர காலாய்ப்பு. காலை 3 மணி நேரம் ,மதியம் 3 மணி . நேரம்.

நம்மாளுங்க நிறைய பேரு சோசியம்னா ஒரு சில விதிகளை "பட்டி" அடிச்சுட்டா போதும். நாமும் புலியாயிரலாம்னு நினைக்கிறாய்ங்க. அது தவறுன்னு என்னைக்கு புத்தியில உறைக்குதோ அன்னைக்குத்தேன் 00.01 சதவீதம் சோசியத்தை தெரிஞ்சுக்கிட்டிங்கன்னு அருத்தம்.

உபதேசம் போதும்.பதிவுக்கு போயிரலாம்.

இவிகளுக்கு சகோதிரிகள் இருக்க வாய்ப்பு அதிகம் - ஆளும் பயந்த சுபாவமா இருப்பாய்ங்க. பால்யத்துல க்லை,இலக்கியம்,சங்கீதம், ஹேண்டி கிராஃப்ட்ல செமை இன்டரஸ்ட் இருக்கும். பிக்னிக்,டூரு ,அவுட்டிங்ல மஸ்தா ஆர்வமிருக்கும்.

இவிகளோட பாலியல் விருப்பம் ரெண்டு பக்கமும் கொளுத்தப்பட்ட மெழுகு வர்த்தி போல ஜொலிக்கும்.தகிக்கும். இவிக செக்ஸ் பவர் கூட இதே கதைதான்

மறு நாள் பரீட்சைனுட்டு இன்னைக்கு நள்ளிரவு வரை விழிச்சு ஏழெட்டு தாட்டி மாடல் எக்ஸாம் எழுதி பார்த்துட்டு எக்ஸாம் ஹாலுக்கு போனா என்னாவும்? தூக்கம் தேன் வரும். அந்த கதைதேன் இவிகளோட கதையும்.

ஆணின் காமம் பால் மாதிரி பொங்கி தணிஞ்சுரும். பெண்ணின் காமம் அரிசி உலை மாதிரி கொதிச்சு "வெந்த பிறவுதேன்" அடங்கும்னு . நானே ஒரு பதிவுல சொன்னதா ஞா.

ஆனால் ஆண் பெண் வித்யாசமில்லாம காமம்ங்கறது அரிசி உலை கணக்கா இருக்கனும். அப்பத்தேன் உடல்,உசுரு எல்லாம் குளிரும்.

பைக் வாங்கின புதுசுல அ மேலுதட்டுல கருமை படர்ந்த புதுசுல எல்லாத்துலயும் வேகம் வேகம் வேகம் தான் கவரும். ஸ்லோ அண்ட் ஸ்டெடிங்கற ஸ்டேஜ் எப்ப வரும்? மிடில் ஏஜ்ல வரலாம். இது லாஜிக்.

ஆனால் தம்பி மாருங்க கிளவாடி மொக்கை போட ஆரம்பிச்சுட்டான்யான்னு சலிச்சிக்கிட்டாலும் சரி இங்கே ஒரு பளமொளிய சொல்லியே ஆகனும்." நிறை குடம் தளும்பாது"

ஸ்ட்ரீட் ஃபைட்ல பார்த்திங்கனா எவன் வீக்கோ, எவன் ஒல்லி பீச்சானா இருக்கானோ அவன் தான் மொதல்ல கைய ஓங்குவான்.( அப்பாறம் செமர்த்தியா வாங்கிக்கட்டிக்குவான் அது வேற மேட்டர்)

ஆண் கொளந்தை பனிக்குடத்துல நீந்திக்கிட்டிருக்கிறச்சே ( மிதந்துக்கிட்டு?) அதன் குறியில் விறைப்பு ஏற்படுமாம். இதுல அது வெளிய வந்து அதை தூக்கி இடுப்புல வச்சிக்கிட்டு அலைஞ்சா -அதுலயும் ஆன்டிங்கன்னா கேட்கவே வேணாம் - விறைப்பு ஏற்படுமாம்.

ஆனால் அதெல்லாம் ச்சொம்மா ட்ரயல் ரன் மாதிரி . பாடி கனெக்சனை சரி பார்த்துக்கும் போல. இன்னைக்கு நம்ம பசங்க சாப்பிடறதெல்லாம் உடனடி லாட்டரி கணக்கா ப்ளான் பண்ண ஃபாரம் கோழி, குறுகிய கால பயிர், ஃபாஸ்ட் ஃபுட் ,இன்ஸ்டன்ட் ஃபுட் இதான். அட ஒரு மவுஸ் கதைய பாருங்க. இத்தீனி க்ளிக் வரை கியாரண்டின்னுதேன் போட்டிருக்கான். மவுசை கம்ப்யூட்டர்ல கனெக்ட் பண்றதுக்கு மிந்தி அடிக்கிற க்ளிக்கும் கணக்குதேன்.

மேற்சொன்ன கேரக்டர்ஸுக்கு அவிகளோட சப்கான்ஷியஸ் முன் கூட்டி உணர்த்துமோ என்னமோ தெரியாது. " நைனா ஒரு பீரியடுக்கு அப்பாறம் நீ -அதுக்கு-உபயோகப்படமாட்டே -காத்து இருக்கும் போதே தூத்திக்க"ன்னு சொல்லுமோ என்னமோ?

மதன காமராசர்கள் கணக்கா - வெளிய எடுக்காம ( நான் சொல்றது பார்வையை) அனுபவிக்க பார்ப்பாய்ங்க மவுஸை கம்ப்யூட்டர்ல கனெக்ட் பண்றதுக்கு மிந்தியே மவுஸுக்கு வாயிதா பூடும்.

இவிக என்னா மேரி பரிகாரம் பண்ணிக்கனும்னு நாளைக்கு சொல்லிர்ரன். (பை தி பை கடந்த 3 வகையான பிக்சர்ஸுக்கும் பரிகாரம் நாளைக்கே)

உஸ் அப்பாடா இதுவரை எதிர்பாரா பவர் கட் - ரீ ஸ்டார்ட் இல்லை - இனி எப்படியோ?