Friday, June 8, 2012

பொம்பளைய நம்பலாமா: 2


//ஹெல்த்தியா உள்ள 45 வயசு காரன் கையில இருக்கிற வாக்கிங் ஸ்டிக் கணக்கா தாய்குலத்தோட டீலிங் வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ்.//

இது நேத்து நாம விட்ட பஞ்ச். இப்படி டீலிங் வச்சுக்க முடியாதவுக லைஃப் பிக்சரை நேத்து சொல்லியிருந்தம்.

இவிகளுக்கு என்ன தான் பரிகாரம்?

எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஜஸ்ட் சின்ன புரிதல்தான். சீனம்,சீனா,சைனா இப்படி எந்த பேர்ல குறிப்பிட்டாலும் ஒரே நாட்டை தான் குறிப்பிடறோம்.

அங்கன கிடைக்கிற களி மண்ணை சைனா க்ளேன்னு சொல்றோம். நம்ம ஒக்காபிலரியில சைனா டிஷ் அ பீங்கான்.

இந்த மெட்டீரியல்ல சிரிக்கும் புத்தர் சிலையும் கிடைக்குது , கப் அண்ட் சாஸரும் கிடைக்குது , கக்கா போறதுக்கான டபுள்யூ சியும் கிடைக்குது.

புத்தர் சிலைக்கு பூ போட்டு வணங்கறோம்.கப் அண்ட் சாசர்ல டீயோ காஃபியோ சாப்பிடறோம். இன்னொரு சமாசாரத்தை அல்ப சங்கியைக்கு உபயோகிக்கிறோம்.

பீங்கான்ல செய்த புத்தர் சிலையை வணங்கறதால அதே மெட்டீரியல்ல செய்த கப் அண்ட் சாஸர்ல டீ சாப்பிடமாட்டேன். அல்ப்ப சங்கியைக்கு ஒதுங்கமாட்டேன்னா அது பை. தனம்.

இதே விதத்துல தாய்,சகோதிரி , நண்பி ,லவ்வர், பொஞ்சாதி எல்லாரும் ஒரே ஜாதி தான்.ஆனால் அவிகவிகளை எப்படி டீலிங் பண்ணிக்கனுமோ அப்டி பண்ணிக்கனும். குழப்பிக்க படாது.

அதே போல பெண் வாழ்க்கையில ஒரு பார்ட். (முக்கியமான பார்ட்டுன்னு வேணம்னா வச்சுக்கலாம்) அதை விட்டுப்போட்டு எட்டாத காய் பார்த்து கொட்டாவி விடறதெல்லாம் வெட்டி.

அந்த பெண்ணே கூட தனக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறவனை சிலகாலம் பிரமிப்பா பார்க்கலாமே தவிர அவளோட காதலை பெற - அவளோட வாழ அது ஒன்னே தகுதி கிடையாது.

ஒவ்வொரு மன்ச ஜென்மமும் சேற்றில் முளைத்த செந்தாமரைதான். ச்சொம்மா ஜூம் போட்டு தாமரையை மட்டும் பார்த்துக்கிட்டிருந்துட்டு திடீர்னு சேற்றை பார்த்தா லவ் எல்லாம் ஓடிப்போயிரும்.

அதனால எதிராளிய பார்க்கும் போதே அப்பப்போ மிட் ஷாட், லாங் ஷாட்டுன்னு பார்த்துக்கிட்டிருக்கனும். இல்லின்னா மிரண்டு போயிருவம்.

பெண் என்பவள் இரண்டு விதமாக இருக்கிறாள். ஒன்று அவளது உடல் ரீதியான பலவீனம் தந்த குறுக்கு புத்தி, வியூகங்கள், பாதுகாப்பற்ற தன்மை இதெல்லாம் சேர்ந்து தயாரித்த தற்போதைய பெண்.

மற்றொரு பெண் ஒவ்வொரு பெண்ணிலும் அவளது மன ஆழத்தில் இருக்கிறாள். அவள் சில மில்லி கிராம் அன்புக்கு ஏங்கியபடி, அது கிடைத்தால் ஆதிசக்தியாகி அந்த அன்பை செலுத்தியவனுடைய குடும்பம்,வம்சம்,ஏன் அவன் ஊர்,உலகத்தையே காத்து ரட்சிக்கக்கூடிய இயற்கையின் பிரதி நிதியான பெண்ணும் இருக்கிறாள். -(இது சீரியஸ்)

கண்ணாலத்துக்கு மிந்திதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு கேரக்டர். கண்ணாலத்துக்கு அப்பாறம் அவள் ஜஸ்ட் மனைவி " ஏன் லேட்டு " " இந்த சம்மருக்குன்னா ஊட்டி உண்டா இல்லியா" " ஊர்ல இருக்கிறவனுக்கெல்லாம் ஓடி ஓடி செய்விங்க என் தம்பின்னா மட்டும் இளக்காரம்"

மைண்டு ஒரு குட்டி பின்னாடி ஓடுதுங்கற ஃபீலிங் வந்த ஒடனே இந்த தத்துவம்லாம் ஞா வராது. சின்ன வயசுல காட்லிவர் ஆயில் சாப்டிருந்தா ஞா வரும் .தப்பிச்சுக்கலாம் (இது காமெடி)

ஒரு பொருளை பெறும் தகுதி தனக்கிருக்குங்கற நம்பிக்கை இருந்தாலே அந்த பொருள் மேல ஆர்வம் குறைஞ்சுரும்.

அதை பெறும் தகுதி தனக்கில்லையோ -எவனாச்சும் முந்திக்குவானோ - எவனாச்சும் அடிச்சுக்கிட்டு போயிருவானோங்கற பீதியிருக்கும் போது தான் ரெஸ்ட்லெஸ்னெஸ் வந்துரும். பரபரப்பு,பதைப்பு வந்துரும்.

அப்பாறம் தத்துவம் கித்துவம்லாம் சைடு வாங்கிரும். மூளை டார்ஜான் வைரஸ் புகுந்த கம்ப்யூட்டர் மாதிரி ஆயிரும்.

உங்க ஃபோட்டோவை வச்சு பூஜை பண்றாங்கற ஒரே காரணத்துக்காவ நீங்க விரும்பாத பெண்ணை உங்களால லவ்வ முடியுமா? ரோசிங்க. நம்ம மாதிரிதானே தாய்க்குலமும்.

இப்பல்லாம் இந்த குட்டிங்க எந்த மாதிரி பயலுவளை விரும்பறாய்ங்கன்னு சர்வேல்லாம் வருது. அதையெல்லாம் படிச்சு குவாலிஃபைடாகி அப்பாறம் லவ்வறதுதேன் அல்லாருக்கும் சேஃப்டி.

எங்க காலத்துலல்லாம் ஹையர் சைக்கிள்ள ஹேண்டில் பார்லருந்து ரெண்டு கைய தூக்கிட்டு வந்தாலே குட்டிங்க செம பார்க்கும். விளுந்தா செம சில்லறை கிடைக்கும்.

இன்னைக்கு லட்ச ரூவா பைக்ல டெத் ரேஸ்ல போயிட்டிருந்தா கூட "பாவம்.. இன்ஷியூர் பண்ணானோ இல்லியோ"ங்கற கமெண்ட் தான் கிடைக்கும். தவறினா சங்குதேன்.

சத்தியம் அந்த முனைலயும் நஹி இந்த முனையிலயும் நஹி அது மையத்துல இருக்கு. பெண்ணை வெறுக்கவும் தேவையில்லை. பூஜை பண்ணவும் தேவையில்லை. சக மனுச சன்மமா ட்ரீட் பண்ணா போதும்.

ஒரு பெண் உங்க வாழ்க்கைய ஸ்வர்கமாக்கவும் போறதில்லை - நரகமாக்க போறதுமில்லை. சாதிக்கிறவன் பொஞ்சாதி நச்சரிப்பை மீறித்தான் சாதிக்கிறான். வாழ்க்கையில தோத்துப்போறவன் கலைவாணியே பெண்ணுரு கொண்டு பொஞ்சாதியா வந்தாலும் தோத்துத்தான் போவான்.

இந்த பொம்பளை மேட்டரை ஃப்ரீயா உட்டுட்டு நார்மலா இருக்க ட்ரை பண்ணனும்.

உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன.

இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் ,காமம், காதல் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் . இந்த எண்ணங்களை நம் ஜாதகத்திலான சந்திரனின் இருப்பு கட்டுப்படுத்துது.. ( மறுபடி மொதல்லருந்தா...ஆஆஆஆஆஆஆஆஆ)

வேணாம் பாஸ் நாளைக்கே பார்ப்போம்..