Wednesday, June 6, 2012

வெறும் பேச்சால் "அது" போச்சு


அண்ணே வணக்கம்ணே !
<இஸ்மாயில் சார் சொன்ன ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ் > <பாப்பா> <அதை வளர்க்க பைசா> <லைஃப் ஸ்மூத் கோயிங்கா இருக்க கில்மா> இந்த வரிசையில வரும்போது படக்குன்னு தொடரோட தலைப்பை மாத்தி <படுக்கையறை மர்மங்கள்>ங்கற தலைப்புல ரெண்டு அத்யாயம் மறுபடி டைட்டில் மாத்தி <12+12 பாலியல் விருப்பம்>னு இந்த தொடர் போயிக்கிட்டிருக்கு.

இந்த செனேரியோல 12 விதமான லைஃப் பிக்சர்ஸ் கொடுத்து அதுல பாசிட்டிவ் நெகட்டிவ் காட்டி பரிகாரம் சொல்லலாம்னு ப்ளான் பண்ணோம். இடையில பரிகாரம் இல்லாம வெறுமனே ச்சூ காட்டிட்டு போறாப்ல இருக்கோன்னு ஒரு கில்ட்டி. அதனால படக்குனு பரிகாரத்துக்கு தாவிட்டம்.

இதுல மொதல் பிக்சருக்கு விளக்கம் - பரிகாரம்லாம் நேத்து கொடுத்தம். இன்னைக்கு செகண்ட் பிக்சருக்கு போயிரலாம்.

இங்கன வாயை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கிடனும். யாகாவாராயினும் நா காக்கன்னு வள்ளுவர் சொன்னாரு. இதுல டபுள் மீனிங் இருக்கு. ஒன்னு ருசிக்காக வவுத்தை செப்டிக் டாங்கா மாத்திராதிங்க. இன்னொன்னு தேவையில்லாம வாயை கொடுத்து பைல்ஸ் வரவச்சுக்காதிங்க.

சிலர் பேசுவாய்ங்க. எப்டி இருக்கும் தெரீமா அப்டியே மடியில "தாச்சுக்க "சொல்லி தாலாட்டு பாடறாப்லயே இருக்கும். வவுத்துல இருக்கிற புள்ளை அப்டியே நழுவி வெளிய வந்துரும். உபமான உபமேயம்,பழமொழி, தத்துவம் இப்படி ஒன்னு விடாம உபயோகிச்சு அவ்ளோ சூப்பரா பேசுவாய்ங்க. எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு "யப்பா.. மூக்குப்பொடி"க்கு ஒரு ரெண்டு ரூபா கொடேம்பாய்ங்க.

நம்மாளு ஒருத்தன் இருக்கான். ஏரியால ஆல் இண்டியோ ரேடியோ மாதிரி. செய்திகள் வாசிப்பதுன்னுட்டு ஆரம்பிக்க மாட்டான் அதான் வித்யாசம். "தகவல் வெள்ளம் "அப்டியே பாயும்.. கொய்யால அதுல முக்காவாசி "கிசு கிசு" ரேஞ்சுல தான் இருக்கும்.

தன்னை பத்தி அதி வீர பயங்கரமா பீத்திக்குவான். பிரச்சினைன்னு வந்தா மட்டும் ஆளு காயப் (மாயமா மறைஞ்சுருவான்) அப்படி மறைய நேரமில்லாம புக் ஆயிட்டா ஒன் பாத்ரூம் டூ பாத்ரூம் எல்லாம் சகஜம்.

நாட்ல உள்ள ரவுடிக்கெல்லாம் தானே கேர் ஆஃப் மாதிரி பீலா விடுவான்.ஒரு ஹோம் கார்ட் இவன் கிட்டே நின்னு பேசிட்டா டி.ஐ.ஜி கிட்டயே பேசிட்டாப்ல அலைப்பறை .

இந்த பராக்ரமங்களை சொல்றச்ச ஹை டெசிபல்ஸ் வேற. நாம தான் லைஃப்ல அடிப்பட்டு உதைப்பட்டு கிடக்கமே. எவனாச்சும் "சுமாரா பேசினாலே" அலார்ட் ஆயிருவம் (வைக்கப்போறாண்டா ஆப்புன்னுட்டு) இந்த பிக்காலிக்கிட்ட மாட்டுவமா என்ன?

டாப் சீக்ரெட்:
அப்படியும் அய்யோ பாவம்னுட்டு ரூ.3000 கடனா கொடுத்துட்டு அதை வசூலிக்க பெரிய பெரிய சதி திட்டம்லாம் தீட்ட வேண்டி வந்துருச்சு .அது வேற கதை.

இந்த கேரக்டரை பத்தி முழுக்க சொல்லனும்னா வடிவேலுவை போட்டு ஒரு படமே எடுத்தாகனும். அடடா முக்கியமான மேட்டரை விட்டுட்டமே. கில்மா மேட்டரு.

என்னவோ ஊரு உலகத்துல உள்ள பொம்பளை எல்லாம் தூக்கிக்கிட்டு நிக்கிறாப்லயும் ( வண்டியில ஏற கொசுவத்தை சொன்னேங்ணா) இவரு பெரிய மதன காமராசன் போலவும் ஏகத்துக்கு பில்டாப் பண்ணுவான்.

ஒரு தாட்டி ஒரு ஆசாமி ஒரு கில்மா பார்ட்டிய சொல்லி பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருக்காரு. நம்மாளு போனான் . வந்துட்டான்.

அதுக்கு அந்த ஆசாமி கேட்ட கேள்வி " கொய்யால வாய்ல போட்ட பாக்கு கூட மசியலை .அதுக்குள்ள வந்துட்ட .. என்ன சொம்மா பார்த்துட்டு வந்துட்டயா"

ஃபேஸ் டு ஃபேஸோட நின்னிருந்தா பரவால்லை. ஃப்ரீ டெலிகாஸ்ட் -ஃப்ரீ ப்ராட்காஸ்ட் வேற பண்ணிட்டாரு அந்த ஆசாமி.

இன்னைக்கும் இந்த கேரக்டர் வெறும் வாய வச்சுக்கிட்டு இன்னம் மேனேஜ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கு.

ஆனால் குட்வில்? அது அதலபாதாளத்துக்கு வந்துருச்சு. கூட்டம் குறைஞ்சு போச்சு. எவனும் சீந்தறதில்லை. அக்கா மகளை தான் கட்டியிருக்கான். அக்காவும் - அக்கா மகளும் உட்கார்ரான்னா உட்காரனும் எந்திரிடான்னா எந்திரிக்கனும் இது நிலைமை.

ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் - பிச்சுப்பார்த்தா ஈறும் பேனுமாம் கதைதான். ஓசியில தின்னு தின்னு அல்சர் வந்துருச்சு. ஓசியில குடிச்சு குடிச்சு லிவர் வீங்கிருச்சுன்னா கிட்னி போச்சுன்னா பொஞ்சாதி தெருத்திண்ணையில கொண்டு வந்து போட்டுருவா.

இம்மாம் பெரிய உபகதையை இங்கன கொண்டு வந்தது எதுக்குன்னா உங்க மைண்ட்ல ஒரு பிக்சர் வரனும்னு தேன். வெறுமனே பேச்சுல கலர் கொடுக்கிறது ,பீலா விடறது மட்டுமில்லை. அலங்காரமா எழுதறது -பேசறதுல்லாம் கூட இதே கேட்டகிரிதான்.

வெறும் பேச்சுங்கறது எம்ப்டி ஸ்பூன் மாதிரி . எம்ப்டி ஸ்பூனை கொண்டு வவுத்தை நிரப்ப முடியுமா என்ன? வாத்தியார் கூட "கத்தி வச்சுக்கங்க" "போஸ்ட் கார்ட் விலையை குறைப்பேன்" "மானில சுயாட்சிக்காக ராணுவத்தை சந்திப்பேன்"ன்னு பாம்பு விட்டாரு .

அவருது இன்னா மேரி கேரக்டரு. அதுல இந்த பேச்சு எவ்ளோ கலீஜா இருக்குது பாருங்க.காமராஜர் "பார்க்கலாம்ணே"னுட்டா மேட்டர் க்ளோஸ். . மன்சன்னா அப்டி இருக்கோணம். முரசொலியில கலைஞர் பக்கம் பக்கமா அள்ளி விடற மாதிரி விட்டா கதை கந்தலாயிரும்.

மீறி அள்ளி விட்டா வாய் கோணிக்கும் - திங்க சோறு கிடைக்காது - குடும்பம் உருப்படாம போயிரும். கண்ணு டப்ஸாயிரும்.

இதுவரை சொன்னது பிக்சர்ல குவார்ட்டருதேன் . அடுத்த குவார்ட்டரு இன்னாடான்னா திங்கறது . இதை பத்தி விவரமா சொல்ல விரும்பலை. நாம ஏற்கெனவே எழுதின வாயும் இன உறுப்பும் பதிவை படிச்சாலே போதும்.

பேச்சு .. ஆன்டி டேட் போட்ட செக் மாதிரி. செயல் தான் கேஷ். ச்சொம்மா ரப்பர் செக்கை விட்டுக்கிட்டிருந்தா லைஃபே ஸ்மாஷாயிரும். இந்த ரெட்டை வேடம் ,கில்ட்டி, தாழ்வு மனப்பான்மை எல்லாம் சேர்ந்து பேட்டரியை ஒரு வழியாக்கிரும். "பாச்சா குட்டியா" உச்சா மட்டும் தேன் போக முடியும்.

நம்ம பேச்சை ஆரும் நம்பமாட்டாய்ங்க. குடும்பத்துல உள்ளவுக கூட " அதும்பாட்டுக்கு எதுனா பினாத்திக்கிட்டு கிடக்கும் .. அந்த ரிமோட்டை எடும்பாய்ங்க" இந்த பிக்சருக்கு என்ன பரிகாரம்னு நாளைக்கு பார்ப்போம்.