அ
தவமிருந்தேன் வரம் பெற்றேன்
என்றே அமைதியுற்றேன்
எங்கெங்கு காணினும் சக்தியடா
என்றே பாரதி ஆர்பரித்தான்.
சக்தி நீயே காப்பென்று
கவிஞன் நானும் உயிர் தரித்தேன்
சக்தி நீயென் உளமிருந்தும்
எங்கும் சதியே நான் கண்டேன்
பணமும் காசும் எண்ணித்தந்தாய்
பாவியர் உறவை அள்ளித்தந்தாய்
சோம்பிக்கிடந்தே சோறுண்டு
தொந்தி வளர்த்தேன் அம்மாவே !
தாயகம் காக்க நானெழுந்தேன்
தரம் தாழ்ந்தே சகதியில் நான் விழுந்தேன்
தொந்தி கொழுத்து புண்ணியம் என்ன ?
அந்திப்பொழுதில் அன்னியமானேன்
அம்மா உனை நான் மறந்திட்டு
ஆயிரம் பெற்று என்ன பலன் /
சந்தியில் நின்று கதறுகின்றேன்
கசடர் உறவே உதறுகின்றேன்
கண்டுணர்ந்த உண்மைகளை
உலகிற்குரைத்து நாட்டுக்கே
நன்மை பலவும்
கூட்டுவிக்க நாட்டம் கொண்டேன் நாயகியே !
உலகம் உய்திட உழைத்திட்டேன்
நான் உயர்ந்தால் உய்வித்தல்
எளிதென்று உயர்வுக்காக நோட்டமிட்டேன்
அம்மவோ சதி யது ஒன்றுத்தான்
எண் திக்கும் நின்றுஎள்ளுதெனை
நாளும் பொழுதும் அலை மோதி
உடலும்,உள்ளமும் பழுதாகி
கணிணியில் காவியம் தீட்டிடவே
கவிஞன் நானும் வந்தமற
அதுவும் என்னை கெக்கலித்தால்
யாதோ செய்வேன் என் தாயே
எரிமலை வெடித்த கதையாக
உணர்வுகள் லாவா போலாகி இதயத்தட்டை முட்டிடவும்
எரிதழல் வீசி தீர்த்திட்டேன்
அவளே என்னை பெற்றாளோ
நானே அவளை பெற்றேனோ
உனை போல் என் பால் கருணை காட்டும்
மழலை மனதை நோகடித்து
சற்றே தெளிந்த என் மனதை
சகதியாக்கி போட்டதுவே
இவ்விரவை நரகாக்கி
என் உயிரை விறகாக்கி
உதிரம் கொதிக்குதடி
சக்தி நீ எந்தன் தவம் மெச்சி வரம் தந்தாய்.
சக்தி தந்த வரம் சாபமாகி வாட்டுதலோ ?
நீ சொரிந்த தேன் மலர்கள் தேளாகி கொட்டுவதோ?
செவிட்டு ராஜ்ஜியத்தின் செவியென்று திறக்குமோ ?
செறிவு நிறை என் உரையே இவர் செவியை திறக்குமோ ?
என்ன பாவம் செய்தனடி
எனது கரம் கொய்கின்றனை
கரம் கொய்தால் முளைத்திடுமே
சிரம் கொய்தே என் கதையை கற்பகமே நீ முடி
தாய் மடியை தேடி வந்தேன்
சேய் என்னை தவிக்க விட்டாய்
கேட்டவரம் தா என்றே தாயுன்னை கேட்டேனே
யுத்த சன்னத்தம் நிறைவு பெறத்தான் கேட்டேன்.
வெற்றி வேண்டி கொற்றவையே
உன் முற்றம் வரவில்லை
அயற்சி அறியாத முயற்சி தோற்கலாமோ ?
உன் கரமே இங்கெனக்காய் சவத்துணி நூற்கலாமோ?
பிரளயம் உன் நோக்கம்
என் கவியோ அதை தடுக்கும்
எதையும் தடுப்பதல்ல என் குறி
ஏகாம்பரி நீயறி
சுவர்கம் நரகமெலாம் என் நோக்கில் இல்லையடி
என் உயிரோடு வந்ததொரு ஞானக்கிள்ளையடி
அக்கிள்ளை மொழி கேட்டு பிள்ளை மனம் கொண்டே
சிந்தனை செய்து வந்தேன்
உருவம் எதுவாயினும்
ஊறும் சக்தி ஒன்றல்லோ
பாதை மாறி நானே போதையில் கிடந்த போதும்
ஒரு குரல் ஒலித்திருந்து என்னை காத்ததடி.
அக்குரலும் என் குரலும் எக்குரலும் உனதல்லோ !
உதவி கேட்டு உமையாளே கூக்குரலிட்ட போதும்
எங்கே உன் பதில்
என்னதான் உண்டு உமையே உன் மனதில்
தாய் என்பது உறவு
அதனை பதவியென்று எண்ணி விட்டால்
துள்ளி எழுந்திடுமே
ஆழ நான் புதைத்த பூதம் ஒவ்வொன்றாய்
என் தமிழே மந்திரமாம்
கட்டிக் கொணருமடி
என் காலடியில் வீழ்த்துமடி.
பாடு பாடு எனில் பாடிட மாட்டேனோ
படு படு என்றே பாடுற வைத்திட்டால்
பண்ணில் பரவசம் கூடுமோடி
பின் புத்தி கொண்டதினால்
எனை பின்னிருந்து தாக்குகின்றாய்
முன்னொரு காலத்தில்
மூவேளை உணவுண்டே
உயிருக்கு உணவுன்னை மறந்தேன்
மூன்றை இரண்டாக்கி பனிரண்டு வருடமாச்சு
ஒரு வேலையில்லாது
என் வேலை கெடுப்பதுவே
உன் வேலை ஆகிவிட்டால்
வேலை பிடித்தவனாம் மழலை முருகனுக்கும்
அவன் தாய் இங்குனக்கும் என்னடி வேறுபாடு
என் தமிழே தரணியெங்கும் வலம் வந்தால்
இடம் போகும் உலக பீழையெல்லாம்
என் திட்டம் அமலானால் செல்வமகன் ஆகானோ உலக ஏழையெலாம்
விரல் நுனியில் வைத்துள்ளேன் விசுவத்து நோய்க்கெல்லாம்
விரைவான தீர்வுகளை
வேலை தனை எடுத்தாய்
புது வேலை நீ தரவே அதை பறித்தாய் என்றிருந்தேன்
தொழிலை துவள வைத்தாய்
தொழிலில் எழிலை கூட்ட
உந்தியில் தழலை வைத்தாய்
என்றே மழலை நான் நினைந்தேன்
இடி பல இறக்குகின்றாய் இங்கென் தலை மேலே
மின்னல் ஒளி கொண்டு
என் தலை மேல் எழுத்தினையே
படித்து திருத்துவை என்று கவி நான் கவி புனைந்தேன்.
ஆருண்டு உனக்கென்று அகிலமிசை பாட்டு தர
உனை விடுத்தால் பல கோடி தேவர்கள் எனக்குண்டு
அவரும் உன் போலே ஊற வைத்திட்டால்
பகுத்தறிவு பகலவனாம்
பெரியார் தந்திட்ட நாத்திகம் தானுண்டு நெஞ்சுக்கு உறுதி தர
இறுதியாய் கூறுகின்றேன்
இன்னல் யாவுக்கும் இறுதி என்றிடுவாய்
என் பாட்டின் மறைபொருளை
உணர்ந்து கன்னம் கன்றிடுவாய்
அம்மா நானுனக்காய் பாடி வைத்த பாட்டெல்லாம்
பார் மிசை இசையானால்
தீரா விசையாகும்
மண்ணுலகே பொன்னுலகாய் பேரொளி வீசுமடி.
அதற்கொரு வழி காட்டி
கொண்ட பழி துடைக்காது
மேலும் வருத்துகின்றாய்
வறுமையிலே பொருத்துகின்றாய்
நித்தியம் தொழுதிட்டேன்
சத்தியம் துலங்கியது
துலங்கி என்ன பயன் கவி புவி செவி சேரனுமே
உளம் நொந்து சொல்லுகின்ற சொல்லு
அந்த ஸ்ரீராமன் கை கொண்ட வில்லு
காத்து விடு காத்து விடு என்னை
காக்க விடு காக்க விடு தாய் நாட்டு மண்ணை.
Saturday, July 18, 2009
நாத்திகம் : அதுவும் அமுதானது அய்யா வழங்கியபோது
ஆத்திகம் அது ஒரு நரகம்
நாத்திகம் அது ஒரு நரகம்
இரண்டு நரகங்களுக்கிடையில் 6 வித்யாசங்கள் உண்டு
ஆத்திகத்தில் அறியாமை ஸ்வர்கம்
நாத்திகத்தில் அது நரகம்
ஆத்திகத்தில் சோதனை எங்கிருந்தோ வந்ததாக கருதப்படும்
வேதனையும் சாதனையாகும்
நாத்திகத்தில் (பரி) சோதனை தன்னிலிருந்தே துவங்கும்
அறிவுடைமை குழலொளியில் ஆன்ம வைரம் மங்கும்
ஆத்திகத்தில் தோல்விகளே வெற்றியை நோக்கி விரட்டும்
நாத்திகத்தில் வெற்றிகளே தோல்வியை கொண்டு சேர்க்கும்
ஆத்திக பயணத்தில் மூட நம்பிக்கைகள் தடைக்கற்கள்
நாத்திக பயணத்தில் அறிவியல் நம்பிக்கைகளே தடைக்கற்கள்
இரண்டு பயணங்களின் இலக்கும் ஒன்றுதான் அது உண்மை
ஆத்திகம் கிழக்கில் உள்வாங்கிவரும் அமுதக்கடல்
அது எங்கே சுனாமியாகுமோ தெரியாது
பொங்கி வழியும் விஷக்கலயம் நாத்திகம்
அதுவும் அமுதானது அய்யா வழங்கியபோது

Wednesday, July 15, 2009
தமிழ் ப்ளாக் அக்ரகேட்டர்கள் பற்றி சில சந்தேகங்கள் !

1.முதலில் தமிழ் மணம் ஊரார் வீட்டு பதிவுகள் எல்லாம் தெரிகிறது. என் பதிவு மட்டும் கண்ணாமூச்சி காட்டுகிறதே ஏன் ? (கருவிப்பட்டை எல்லாம் பதிஞ்சிருக்குண்ணா ! ஆனால் ஏதோ ஒரு கிரகம் உச்சத்திலிருந்தாலன்றி அது என் ப்ளாகில் தெரிவதில்லை. தெரிந்தாலல்லவா "அளி"க்க.
2.சங்கமம்,தமிலிஷ், நம் குரல்,இடமில் (இடமில்லைனு சுருக். காக சொல்றாங்களா ?
3.வேலை வெட்டியின்றி மேற்சொன்ன தளங்களை திறந்து பார்த்து தேடு தேடு என்று தேடினாலும் கிடைப்பதில்லை என் பதிவு (பாவம் ஏசு நாதர் அவர் காலத்தில் இந்த லொள்ளு எல்லாம் கிடையாதா அவர்பாட்டுக்கு "தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்" என்று சொல்லிவிட்டார்
4.மேற்சொன்ன வலைதளங்களுக்கெல்லாம் இணைப்பும் கொடுத்துள்ளேன்
இன்னும் என்னதான் செய்யனும் ? விசயம் ( நன்றி தினத்தந்தி) தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கனா

Tuesday, July 14, 2009
விஷயம் தெரியாம இப்படி வாழ்க்கையால வாழப்பட்டுக்கிட்டு
திரிசூலம் படத்துல கே.ஆர்.விஜயா மாதிரி, மனசுல என்னதான் வேதனை இருந்தாலும் வாயெல்லாம் சிரிப்பா வளைய வந்த என் அம்மா யூட்ரஸ் கேன்ஸர் வந்து, அதை அறுத்து எறியர வாய்ப்பு இருந்தும் வயிற்றுக்கும் பரவி ரேடியம் ட்ரீட்மென்டால முடியெல்லாம் கொட்டிப்போய் , போன்சாய்க் வாழைமரம் மாதிரி குறுகி செத்தாளே அப்பவே மரணம் என் சிந்தனைப்போக்கை ஒடைச்சு திருப்பிருச்சு.
நல்ல மாட்டுக்கு நல்ல சூடுமாதிரி என் அப்பா வாழ்ந்த நடுத்தர வர்க ஹிப்பாக்ரட் வாழ்க்கைய நான் வாழக்கூடாதுனு முடிவு செய்து பலகாலம் ஆச்சு. தொடர் மரணங்கள் அதுவும் அந்த மரணங்களுக்கு முன் பின்னான க்ளிப்பிங்குகள் என்ன ரொம்பவே பக்குவப்படுத்திருச்சு. ஓகே.
இருந்தாலும் என் மனதில் ஒரு சின்ன ஆசை மட்டும் துளிர் விட்டுக்கிட்டே இருக்கு. அது என்னன்னா என்னை சுத்தி இருக்கிற மக்கள் (உங்களையும் சேர்த்துதான்) விஷயம் தெரியாம இப்படி வாழ்க்கையால வாழப்பட்டுக்கிட்டு இருக்காங்களோ விசயம் என்னன்னு என் ஸ்டைல்ல சொல்லி தீர்த்து வச்சுட்டா திருந்திப்போட்டு யார் வாழ்க்கைய அவங்க வாழ்வாங்களே ங்க ஆதங்கம்தான். கவிதை07 பேர்ல நான் வச்சு கிழிச்சிக்கிட்டு இருக்கிறதெல்லாம் இந்த ஒரே ஒரு அற்ப ஆசைலதான்.
மரணங்கற கத்தி தலைக்கு மேல தொங்கிகிட்டே இருக்கு. இந்த வாழ்க்கைல என்ன வந்தாலும்,எது போனாலும் மிஞ்சப்போறது சில நினைவுகள் தான். அந்த நினைவுகள் தான் நம்மோட அடுத்த பிறவிய நிர்ணயிக்க போறது.
1989 முதல் கிரகங்களோட செயல்பாடுகளை கவனிச்சுக்கிட்டே வரேன். இதுல ஒரு சின்ன சூட்சுமம் இருக்கு. நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல, ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம். அப்போ நமக்குள்ள நான் என்ற அடையாளம் இல்லே. மந்தையா இருந்தோம். மறுபடி மந்தயா மாறத்தான் துடிக்கிறோம்.
ரசிகர் சங்கம்,அரசியல் கட்சியெல்லாம் மந்தையா மாறுவதற்கான முயற்சிதான். நாம இந்த இயற்கைலயிருந்து வந்தோம். இயற்கைக்கு சுய நலம் கிடையாது, இவன் அவன் என்ற வித்யாசம் கிடயாது. கிரகங்கள் எல்லாம் இயற்கையின் படைப்பு. எவனொருவன் சுய நலமில்லாமே ,அவன் இவன் என்ற வித்யாசம் இல்லாமே செயல்படறானோ அவன் மேல கிரகங்கள் வேலை செய்யறதில்ல.
நாம என்னதான் சுய நலத்தோட வாழ்ந்தாலும் நம் உழைப்பின் பலன் பொதுவுலதான் போகுது. ஒரு தலைமுறைல ஒரு அப்பன் ஊரை அடிச்சு உலைல போட்டா அடுத்த அல்லது அதற்கடுத்த தலைமுறைலயாவது ஒருத்தன் பிறந்து வரான் மூதாதைகள் சேர்த்து வச்சதையெல்லாம் அள்ளி விட்டுர்ரான்.அவிங்க செய்த கர்மத்தை எல்லாம் தான் அனுபவிக்கிறான். உ.ம். கலைஞரின் மகன் மு.க.முத்து.
மாத்தி யோசிங்கப்பு !

Monday, July 13, 2009
3 வருடங்கள் 545 பதிவுகள் 6000 வருகைகள்
தமிழ்வாசம்,அனுபவ ஜோதிடம் ,இந்தியன் பொலிட்டிகல் க்லோசப் என்ற பெயர்களில் வலைப்பூக்களை 3 வருடங்களாக வைத்திருந்தேன். இன்று ப்ளாக் எக்ஸ்போர்ட் முறையில் அனைத்து பதிவுகளையும் கவிதை07 வலைப்பூவுக்கு கொண்டு வந்து விட்டேன்.
3 வருடங்களுக்கு 6000 வருகைகள் தானா அப்டின்னா இதேதோ மொக்கை என்று முடிவு செய்துவிடாதீர்கள். வருகைகள் குறைவாயிருக்க காரணம் ஒன்றே அது டெக்னிக்கல் தான்.
1.மேற்சொன்ன 6000 த்தில் 2,600 என்ற எண்ணிக்கை கூகுல் ப்ரொஃபைல் வ்யூஸ் தான். ஆக்சுவல் விசிட்டர்ஸ் எத்தனை பேர் என்பது எனக்கு தெரியாது. சைட் மீட்டர் மாட்டும்போது 2,600 ஐ ஸ்டார்ட்டிங் பாயிண்டாக கொடுத்தேன் அது 6000 ஐ தொட்டது.
2.ஆரம்பத்தில் பேருதவியாக இருந்த தேன் கூடு செயலிழந்து விட்டது.
3.தமிழ்மணத்தின் கருவிப்பட்டை அவ்வப்போது காணாமல் போவது. (புதிய டெம்ப்ளெட் அமைத்த போதெல்லாம்.)
4.தற்போதுள்ள அக்ரகேட்டர்ஸ் புதிய சட்டங்களை வகுத்துக்கொண்டு அனேக பதிவுகளை காட்டாமல் இருப்பது.
அடுத்து பதிவுகளின் உள்ளடக்கம்:
1.எங்கும் காணமுடியாத ஜோதிடம்,சமதர்ம சமுதாயம், ஒரே நேரத்தில் ராமனுக்கும்,ராமசாமி நாயக்கருக்கும்(பெரியார்) உண்மையாக இருப்பேன் என்ற ஸ்ட்ரேட்டஜி
2.ஆந்திரத்தமிழனாய் இருப்பதால் ஆந்திர,தமிழக அரசியல்,சினிமா,இலக்கியங்களை ஒப்பிட்டு உண்மைகளை கூறிவிடுவது(உள்ளதை சொன்னால் நொள்ளைக்கண்ணனுக்கு கததான்)
3.தொடர்ச்சியின்மை
பல்வேறு துறைகளில் உள்ள ஆர்வத்தால் நான் வைக்கும் பதிவுகளில் ஒரு தொடர்ச்சியை காண முடியாது, இதற்கு 1987 லேயே அரங்கேறியும் தமிழ் படைப்புலகத்தில் ஒரு இடத்தை பிடிக்க முடியாது போன மனக்கசப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.(என்ன எழுதி என்ன ஆயிர போவுது..

Sunday, July 12, 2009
ஜோதிட ஆராய்ச்சிக்கு ஒத்துழைத்த அன்பு நெஞ்சத்துக்கு நன்றி.
ஜோதிட ஆராய்ச்சிக்கு ஒத்துழைத்த அன்பு நெஞ்சத்துக்கு நன்றி. அந்த அன்பர் ஜாதகம் அனுப்பி வைத்தார். அந்த ஜாதகத்திலான கிரக அமைப்பு படி 5 அம்சங்களை குறிப்பிட்டு அவருக்கு அனுப்பினேன் .அதற்கு அவர் அளித்துள்ள க்ரேடிங்கை பாருங்கள். இவர் விஷயத்தில் பலன் தவற என்ன காரணம் என்பதற்கான என் விளக்கத்தையும் பாருங்கள் .
முதலில் கிரக அமைப்பு:சிம்ம லக்னம். லக்னத்தில் சூரியன் புதன்,மூன்றில் சனி,சுக்கிரன், சந்திரன், ஐந்தில் செவ்வாய் ராகு,11 ல் குரு கேது
நான் கொடுத்த பலன் & அவர் கொடுத்த க்ரேடிங் :
1.தன்னம்பிக்கை ஓவர் டோசாகி குடியை கெடுக்கும்=100%
விளக்கம்: இது லக்னம் சிம்மமானதையும் அதில் லக்னாதிபதியான சூரியன் ஆட்சி பெற்றிருப்பதையும் வைத்து கூறப்பட்ட பலனாகும். இதற்கு ஜாதகர் 100 சதவீதம் கொடுத்துள்ளார்
தூக்கமின்மை,பல்
எலும்பு,முதுகெலும்பு தொடர்பான தொல்லைகள். தந்தைக்கு அல்லது தந்தையுடனான
உறவுக்கு நல்லதல்ல
ALL above =0%
இப்பலன் தவற காரணம் என்ன ? லக்னத்தில் வெறும் சூரியன் மட்டும் இருப்பின் இதுவே பலன். ஆனால் இங்கு புதனும் உள்ளார். இதர கிரகங்களுடன் சேரும்போது அவற்றை எரித்துப்போடும் சூரியன் புதனுடன் சேரும்போது மட்டும் தான் மொக்கையாகிவிடுகிறார். மேலும் புதன் 2,11 ஆதிபத்யத்தை பெற்றுள்ளதால் சதா தனது வருவாயை உயர்த்துதல்,லாபமீட்டுதல் குறித்த யோசனைகள் வரும். இதனால் மூளை சீக்கிரம் களைத்து ஓய்வு பெற்று தூக்கம் வருகிறது. இதனால் தான் மேற்சொன்ன பலன்கள் வொர்க் அவுட் ஆகவில்லை. இது ஜோதிடனின் தவறு. ஜோதிடத்தின் தவறல்ல.
2.முறைப்படி அறியாத விஷயத்திலும் திறமையை காட்டும் திறமை = 100%
முக்கியமாக
அகவுண்ட்ஸ் ஆடிட்டிங் =never tried
மெடிக்கல் =100%,
ஏஜென்ஸி துறைகளில்முன்னணி
=never tried
விளக்கம்:இது சூரிய புத சேர்க்கையை வைத்து கூறப்பட்டது. இந்த சேர்க்கை சிம்ம லக்னத்துக்கு அதிலும் சிம்மத்திலேயே ஏற்படும்போது சூப்பராக ஒர்க் அவுட் ஆகிறது அக்கவுண்ட்ஸ்,ஆடிட்டிங்,மெடிக்கல் இதெல்லாம் சாதாரண கண்களுக்கு வெவ்வேறாக தெரியலாம். ஆனால் இதெல்லாம் புத காரகத்வம் கொண்ட தொழில்களே. எனவே இது 100 சதம்
3.எதிராளியை ப்ளாக் மெயில் செய்தல்(never),மிரட்டுதல்(never) மன அமைதியின்மை, = 10% (rarely)
கை விரல் நுனி உதறுதல்.=10%
விளக்கம்: இது சனி,சந்திர சேர்க்கையை வைத்து சொல்லப்பட்டது. இங்கு இவர்களுடன் சுக்கிரனும் சேர்ந்துள்ள காரணத்தால் இந்த கெடுபலன் 10 + 10 = 20 சதத்துடன் நின்றுவிட்டது. சனி 6,7,க்கு அதிபதி. 6 என்பது நோய்,கடன்,விரோதங்களை காட்டுமிடம். அவர் பாவர் என்பதால் 3 ல் நின்றது நலமாகவே முடிந்துள்ளது. ஆனால் 7க்கும் ஆதிபத்யம் வகிப்பதால் மனைவியாருக்கு இது நல்லதல்ல. இங்கு இரண்டேகால் நாளைக்கு ஒரு முறை ராசி மாறும் சந்திரன் சேர்ந்ததால் அவருக்கு விரயாதிபத்யம் இருப்பதால் கெடுபலன் களை விரயமாக்கி, தேவையற்ற பிரயாணங்களாக்கி (தண்ட செலவுகள்) மனக்லேசத்தை கொடுத்து அட்ஜஸ்ட் செய்கிறார்.
4.மனைவி சீக்கிரமே முதுமை அடைதல்=20%. இந்த விசயம் சுக்கிரன் 3 ல் நின்றது,சனியுடன் சேர்ந்தது, விரயாதிபதியான சந்திரனுடன் சேர்ந்து அல்லல் அலைச்சலை காட்டும் மூன்றில் நின்றதை வைத்து சொல்லப்பட்டது. இது 20 சதமே இருக்க காரணம் ,மனைவியாரின் ஜாதகத்தில் 6 மிடம் வலுத்திருக்கலாம்.(உண்மையில் அவர் ஜாதகம் அனுப்பப்பட்டும் நான் பார்வையிடவில்லை . இதுவும் ஜோதிடரின் தவறுதான்.
தாய்க்கு, தாய் வழி உறவுக்கு கேடு.=0%
ஸ்தான பலத்தை இழத்தல் குடும்பத்தில் கலகம்=0%
விளக்கம்: இந்த பலன் தவற காரணம் செவ்வாய்க்கு பாக்யாதிபத்யம் கிடைத்திருப்பதும்,ராகுவுடன் சேர்ந்ததும் காரணம் . நாலு என்பது வித்யாஸ்தானம் எனவே ஜாதகரின் படிப்பில் தடை ஏற்பட்டிருக்கலாம். தாய்க்கு ரத்தம் எரிச்சல் தொடர்பான தொல்லைகள் இருந்திருக்கலாம். அல்லது ஜாதகர் வீட்டில் தீ,மின்சாரம் தொடர்பான விபத்து ஏதும் நிகழ்ந்திருக்கலாம். ஜாதகர் தெற்கு திசையாக போகும்போது விபத்து நிகழ்ந்திருக்கலாம் . சொந்த வீடின்மை, வீட்டுப்பெயரில் லிட்டிகேஷன்ஸ் இருக்கலாம். ராகு எனில் திருடர்கள்,விஷ பூச்சிகள்,தேள்,பாம்பு,போன்றவற்றையும் ,மோசடிக்குள்ளாவதையும் காட்டும் . இந்த வழிகளிலும். இது கெடுபலனை தந்திருக்கலாம்.
5.குழந்தைகளுக்கு கேடு.=0% இது குரு கேது சேர்க்கையை வைத்து சொல்லப்பட்ட பலன். இந்த பலன் தவற காரணம். ஐந்தாமிடம் என்பது வாரிசுகளையும்,ஜாதகரின் பெயர் புகழையும் காட்டுமிடமாகும். இது குழந்தைகளுக்கு கேடு தரும் அல்லது அவப்பெயர்,புத்தி குழப்பத்தால் நம்பத்தகாதவர்களை நம்பி மோசம் போவதையும் காட்டும். வாரிசுகளில் ஒருவர் அன்னிய மதத்தினருடன் நெருங்கி பழகாலாம். அல்லது வெளி நாடு செல்லும் ஆர்வத்தில் நஷ்டப்படலாம். எது எப்படி ஜாதகர் விஷயத்தில் எப்படி ஒர்க் அவுட் ஆனதோ அதை அவர்தான் கூற வேண்டும்.
தெய்வ நம்பிக்கை/சாஸ்திர நம்பிக்கையில் குறைவு.=0%இதுவும் குரு கேது சேர்க்கையை வைத்து சொல்லப்பட்டதே . இது நாஸ்திக வாதத்தை தரலாம் அல்லது கடுமையான ஞா.மறதி, தங்கம் அடகில் மூழ்கிப்போவது,திருட்டு போவது,கொடுத்து ஏமாறுவதையும் தரலாம். அல்லது வயிறு தொடர்பான சுகவீனம் (முக்கியமாய் வாயு கோளாறுகளை தரும்.
பலன்:(அல்லது இந்த நம்பிக்கைகளை இழக்கும் அரை வாழ்வில் பெரிய முன்னேற்றம் இராது)
விளக்கம்: ஜாதகர் குருசண்டாள யோகத்தில் பிறந்துள்ளார். இது ஜாதகர் நாத்திகராவதை காட்டுகிறது. ஆனால் மாயாசக்தி ப்ரபாவத்தால் அல்லது என்விரான்மென்டல் ஃபேக்டர்ஸ் காரணமாய் அவர் தெய்வ நம்பிக்கையை தொடருகிறார். இங்கு ஒரு சிறு விஷயத்தை கூறி விளக்கத்தை முடிக்கிறேன்.
கிரகங்கள் தரும் பலன் என்பது ஆப்ஜெக்டிவ் டைப் வினாத்தாள் மாதிரி நான்கைந்து ஆப்ஷன்ஸ் இருக்கும். இதைதான் பெரியோர் "விதியை மதியால் வெல்லலாம்" என்று கூறியுள்ளனர். எனவே ஜோதிடர் ஒரு பலனை கூறியதுமே அது நடக்கவில்லை என்று முடிவு செய்து ஹை ஜோதிடம் பொய் என்று முடிவு செய்து விடக்கூடாது.
பலனை கூறுபவன் ஜோதிடன் பலனை தருபவன் இறைவன்

இலக்கியம் என்பதே கேள்வி/பதில்தான்

எல்லா இலக்கியங்களும் ஒன்று கேள்வி எழுப்புகின்றன
அல்லது பதில் தருகின்றன.
இலக்கியம் என்பது வியப்பதாக இருக்கும்.
ஒன்று படைப்பின் நேர்த்தியை அல்லது
படைப்பின் அவலத்தை
பதிவு செய்வதாய் இருக்கும்.
ஒன்று படைப்பின் நேர்த்தியை அல்லது
படைப்பின் அவலத்தை
பதிவு என்றால் உடலுறவுக்கு பின்
அந்த பெண்ணின் முலை மீது முத்தாய் நின்ற
கண்ணீர் துளியையும் சேர்த்தே!
கவிதை சுருங்கினால் அழகு
மனிதர் மனம் விரிந்தால் அழகு
சாமானியனாய் புறப்பட்டு
சரித்திரமாய் நடை போடுவதை
என்னால் உணர முடிகிறது.
என் வாழ்வில் அன்று தொடர்பற்றவையாய்
தோன்றிய சகலத்துக்குமிடையே ஒரு
ஒத்திசைவை உணர முடிகிறது.
இந்த சரித்திரம் ஏற்கெனவே எழுதப்பட்டு
அரங்கேறி வருவதை
அறிந்து கொண்டேன்.
மிச்சமிருப்பது க்ளைமேக்ஸ் யுத்தம்தான்.
அது முதல் பானிப்பட் யுத்தமா?
அசோகனின் கலிங்க போரா என்பது தான் கேள்வி
நான் என் சுயவிருப்பத்தின் பேரில் இந்த பூமி கிரகத்துக்கு
சுற்றுலா வந்தவன்.
முன்னொரு காலத்தில் நான் இந்த கிரகத்தின் குடிமகனாய்
வாழ்ந்திருக்கலாம். அந்த வாழ்வின் மிச்சங்கள்
என் ஆழ்மனதில் எச்சங்களாக இருக்கலாம் .
என்றாலும் என் தன்னுணர்வு உச்சத்திலிருக்கும் இந்த நொடியில் அடித்து சொல்கிறேன் நான் முடிக்க வேண்டிய கணக்கு ஏதுமில்லை..
இங்கெவரோடும் பிணக்கும் ஏதுமில்லை.
நான் விருட்சமாக விஸ்வரூபம் எடுக்கா விட்டாலும் வீணில்லை
நான் விதையாகத்தான் விழுந்திருக்கிறேன் என்று உணர்ந்து கொண்டேன்
இது போதும் இந்த பிறவிக்கு.
அண்டவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்
எனக்குள் சொட்டுவதை உணர்ந்ததே போதும்
மறு நொடி என் தன்னுணர்வு தள்ளாடலாம்/
மீண்டும் அற்ப எண்ணங்கள் என் மனதில் நிழலாடலாம்.
இந்த தினம்,இந்தகணம் நான் என்னை ஒப்புக்கொடுத்தேன்
படைப்பின் பரம ரகசியங்கள் குறித்து
எனக்கு துப்பு கொடுத்த தூய மாயா சக்திகளுக்கு
என் வணக்கம்.
மறுகணம் மறையலாம் இந்த இணக்கம்.
நாளைய என்னை இன்றைய என்னுடன்
ஒப்பிட்டால் கெடலாம் தூக்கம்
இவர்களோடு என்னை ஒப்பு நோக்க நானே இறைவன்.
அவன் அருள் நானே
நான் மறை ஓதும் மறை பொருள் நானே
நான் ஒரு கனவு கண்டேன்
அந்த கனவை நனவாக்க திட்டமிட்டேன்.
உயிர்த்திருக்கவே உணவெடுத்தேன்
களவும் கற்று மறந்தேன்
பலவும் பார்த்து துறந்தேன்
அவன் இருப்பதை கண்டு கொண்டேன்
விண்டவரில்லை என்ற வாக்கை வாக் அவுட் செய்விக்க
கண்டதை சூசகமாய் கவிதையில் கூற முயன்றேன்.
அப்பட்டமாய் போட்டுடைக்க நான் ரெடி
தாங்கிக் கொள்ள இவர்கள் ரெடியா?
இந்த கணம் என் மனம்
பிரபஞ்ச மனத்தோடு சேர்ந்து பாடும் டூயட் இந்த கவிதை
40 வயது முதிர்கன்னியின் முதல் கூடல் இது.
உயிர்களின் பால் என்னில் வளர்ந்த கருணை
எவரையும் உயிர்ப்பிக்காதிருந்திருக்கலாம்.
ஆனால் அது என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
என் தாய் என் தாய் தானே தரணியாகி,
அதனை தரித்த தாரணியாய் காரணியாய்
ஒற்றைக் கொசுவாய் ரீங்கரிக்கும் ஓசை ஓங்காரமாய்
என் செவி சேர என் உடல் சோர்ந்திருப்பினும்
உயிரில் ஊறுது புது சக்தி
திறமைகளை அடையாளம் காட்டுவோம் !
ஆம் நம்மை சுற்றி எத்தனையோ திறமைசாலிகள் உள்ளனர். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை. அவர்களை பதிவுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம். இந்த வரிசையில்
அம்ருதா ஷங்கர்:
இவர் சித்தூரின் நெம்பர் ஒன் கமர்ஷியல் ஆர்ட்ஸ்ட். இவர் வரைஞ்ச சைன் போர்டுங்கள பார்த்தா அப்படியே இங்கிலீஷ் சினிமா ஸ்டில்லை பார்த்த மாதிரி இருக்கும் ,அதுக்காக நம்ம பக்கத்து படம் எல்லாம் வரையமாட்டாரானு கேக்காதிங்க அதிலயும் திறமைய நல்லாவே காட்டுவார். அவர் திறமைக்கு ஒரு சோறு பதமாய் ஒரு படம்
உம் உடைகளை உறித்துப் பாருங்கள்..
சமகாலர்களே!
என் வார்த்தைகளின் பால் பாராமுகம் தொடரும்
உமக்கு என் இறுதி திருமுகம் இது
இனி நான் மட்டுமல்ல என் பேனாவும்
உங்களுக்காக குனிவதாயில்லை
நான் உரக்க சொல்லும் உண்மைகளை உரசிப்பார்க்கும்
துணிச்சல் உமக்கிருந்தால்
உம் உடைகளை உறித்துப் பாருங்கள்..
உமக்கும் மற்றெந்த மிருகத்துக்கும் வித்யாசமிருக்கிறதா என்று.
தொடர்ந்து போர்த்தப்பட்ட துணிகள்
உம் உரோமங்களை சற்றே குறைத்திருக்கலாம்.
டைனிங் டேபிளிலேயே கிடைத்து விட்ட உணவு
உங்கள் மோப்பத்திறனை சற்று குறைத்திருக்கலாம்.
பெற்றேர் ஏற்பாடு செய்யும் செக்ஸ் உறவு உங்களிலான
இணை தேடும் திறனை குறைத்திருக்கலாம்.
அதற்காக நீங்கள் மனிதர்கள் என்ற முடிவுக்கு வந்ததால்தான்
மனிதம் இம்மண்மிசை மண்ணாகிவிட்டது.
உம்மை நீங்கள் மிருகங்களாய் ஒப்புக்கொண்டாலன்றி
நீங்கள் என்றைக்கும் மனிதர்களாக முடியாது.
நோயை அங்கீகரித்தாலன்றி சிகிச்சை சிக்கலாகிவிடும்.
உம் மலச்சிக்கலுக்கே மட்டுமல்ல
மனச்சிக்கல்களுக்கும் ஒரே காரணம்தான்
நீங்கள் மிருகங்கள் என்பதை மறுத்து
மனிதர்களாய் மாறுவேடம் போடுவதுதான்.
உங்களில் இருக்கும் மிருகத்தின் உடற்பசி,உடலுறவு பசியை மறுத்து
23.59 நிமிடம் மனிதராய் வேடமிட்டு ஒரு நிமிடத்தில் மிருகமாகி
தமிழ் நாளிதழில் செய்தியாகிறீர்கள்.

Saturday, July 11, 2009
யூட்ரஸ் கேன்ஸருக்கு உடனடி சிகிச்சை கிடைக்காது அவசரமாய் தெய்வமாகிப்போனவள்.
என் வாழ்வையும் அங்காடி நாயாய் என்று வருணிக்க முடியும். இதரருக்கும் எனக்கும் என்ன ஒரு வித்யாசம் என்றால் அவர்கள் தான்,தனது,தன் குடும்பம் மிஞ்சிப்போனால் தன் நட்பு உறவு என்று உழலுகின்றனர். நான் முதற்கண் எனது நாடு விதி,ஆயுள் அனுமதிப்பின், எனது உலகம் என்று உழலுகின்றேன். இங்கே ஒரு தமாஷ் என்னவென்றால் என் முயற்சியில் நான் தோற்றாலும் அது வரலாறு. இவர்கள் முயற்சியில் வென்றாலும் அது டுபாகூரு.
நான் யார் ? ஒரு ப்யூராக்ரட்டின் மகன் அதிலும் ஒரு மெமோ கூட வாங்காது 58 வயது வரை உழைத்த ப்யூராக்ரட் என் தகப்பன். என் தாய் யார் ? கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்து யூட்ரஸ் கேன்ஸருக்கு உடனடி சிகிச்சை கிடைக்காது அவசரமாய் தெய்வமாகிப்போனவள்.
நான் பிறந்த ஜாதி ? விளக்கெண்ணைக்கு பிரபலமான ஜாதி. என் படிப்பென்ன ? கேவலம் க்ளர்க்குகளை தயாரிக்க மெக்காலே பிரபு அறிமுகம் செய்த படிப்பு, நான் தேங்கி போக இப்படி எத்தனையோ வழிகள் இருந்தாலும் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் துடிப்பும், அதை செயல் படுத்தும் துணிவும் என்னில் பிறக்க காரணமான காரணம் எதுவோ அதுவே என் முயற்சியில் வெற்றியையும் கொடுக்கும்,
அட தோற்றுத்தான் போகட்டுமே. என்ன போச்சு ? என்னை பொருத்த வரை நிறைவாக உணர்கிறேன். என் சக்திக்கு பலமடங்கு அதிகம் முயற்சித்தேன். எத்தனை கீழுக்கு இறங்கவேண்டுமோ அத்தனை கீழுக்கு இறங்கினேன். என் நோக்கம் என்ன இவர்களின் பிரச்சினைகள் பிரச்சினைகளே அல்ல இருப்பது ஒரே பிரச்சினை அது ஏழ்மை. அதை ஒழிக்க வழி கண்டேன். இவர்கள் எனக்கு காது கொடுக்க வேணுமே என்று சுய இன்பம் முதல் ஹோமோ செக்ஸ் வரை பேசினேன். இருந்தும் என்ன புண்ணியம் ? இன்றும் நான் இவர்களுக்கு அன்னியம்.

Friday, July 10, 2009
சபிக்கப்பட்ட வம்சங்கள் பொய்க்கும் ஜோதிடம்
நானும் மனிதாபிமானம் மிக்கவன் தான். விதியை மதியால் வெல்ல வேண்டும் என்று எண்ணுபவன் தான். ஜோதிடம் கற்றதும், நூதன பரிகாரங்களை கண்டுபிடித்ததும் இதற்காகத்தான். (உண்மையில் இவை என் கண்டுபிடிப்பு என்பதில் எனக்கு சம்சயம் உண்டு. காரணம் சில ஜாதகர்களின் வாழ்வில் தெய்வாதீனமாய் அரங்கேறியவையே) ஆனால் அனுபவத்தில் பார்க்கும்போது 99.9 சதவீத ஜாதகர் வாழ்வில் பலிக்கும் ஜோதிடம் சில சபிக்கப்பட்ட வமிசங்கள் வாழ்வில் மட்டும் பொய்த்துப்போவது உறைக்கிறது .
1.பெண்களை கொடுமைப்படுத்தும்,பல தார மணம் புரியும்,வமிசங்களில் பிறக்கும் குழந்தைகள் (ஆண் பெண்) யாவுமே செவ்வாய் தோஷம்,சர்ப்பதோஷம்,சுக்கிர தோஷத்துடன் பிறக்கின்றன. எந்த வமிசத்தில் பெண்கள் திருமணத்துக்கு முன்பே இறக்கிறார்களோ?
சிறுவயதில் விதவைகளாகிறார்களோ, இரண்டாம் மனைவி அ ஆசை நாயகியராய் வாழ்ந்து மடிகின்றனரோ அக்குடும்பத்திலும் மேற்கண்ட தோஷங்களுடனேயே குழந்தைகள் பிறக்கின்றன.
2. கோவில் நிலத்தை,அண்ணன் தம்பி நிலத்தை,புறம்போக்கு நிலத்தை அபகரிக்கும் குடும்பங்களில் ஊனத்துடன் பிறத்தல், பெரும் விபத்துகளில் சிக்குதல் கூட நடைபெறுகின்றது. முக்கியமாக செவ்வாய்,சனி சேர்க்கையை இந்த குடும்பத்து ஜாதகங்களில் பார்க்கமுடியும்.
3.இந்த குடும்பங்களில் ரொட்டீணாக நடக்கும் சில அசம்பாவிதங்கள் :
துர்மரணம்(விபத்து,தற்கொலை),அகால மரணம்(அற்பாயுளில் இறப்பது),இடம் பெறும். கோர்ட்டு வழக்குகள் தொடர்ந்து வரும். திருமணங்கள் தள்ளிப்போகும். ஒருவேளை நடந்தாலும் தம்பதியிரிடையே ஒற்றுமை இருக்காது. சந்தானமிராது. முக்கியமாக ஆண் குழந்தை பிறக்காது.
இது போன்ற குடும்பத்தினருக்கு பலன் கூறும்போது நற்பலன்களை குறைத்தும்,கெடுபலன்களை உள்ளது உள்ளபடியும் கூற வேண்டும். பரிகாரங்களை கூட முழு வீச்சில் கூறவேண்டும். (உதாரணமாக: வெள்ளிக்கிழமை அம்மனையும்,திங்கள் கிழமை கணபதியையும் வழிபடுங்கள் /சர்ப்பதோஷ பரிகாரம் இது/ என்று கூறக்கூடாது. தினசரி ஐந்து வேளை என்று கூற வேண்டும்.

Subscribe to:
Posts (Atom)