Monday, March 14, 2011

சோனியாவுக்கு ராகுல் ஜாதகமும் ஆப்பு

பீகார் மேட்டர்லயே ராகுல் டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இருந்தாலும் அதை ஜோதிட ரீதியாவும் உறுதிப்படுத்திக்கனுங்கற எண்ணத்துல தான் இந்த பதிவே . ஐயாவுது மிதுன லக்னம்,விருச்சிக ராசி. ஜாதகத்தை தூக்கி பக்கத்துல வைங்க. தாளி விருச்சிக ராசிங்கறதே அரசியலுக்கு ஒரு டி க்வாலிஃபிகேஷன் தேன். மக்கள் ஆதரவு பெறனும்னா சந்திர பலம் ரெம்ப முக்கியம். விருச்சிகத்துல தான் சந்திரன்  நீசமாகறாரே. அப்பாறம் எங்கே சப்போர்ட்டு ? Read More

Sunday, March 13, 2011

சோனியா ஆட்டம் க்ளோஸ்

சோனியாவின் ஆட்டம் க்ளோஸ்!
வணக்கம்ணே.காங்கிரஸ் பீகார் தேர்தல்ல பல்பு வாங்கறதுக்கு முந்தியே ஆங்கிலம் தெலுங்கு தமிழ்னு மும்மொழில பதிவு போட்டுஅபாயச்சங்கு ஊதின பார்ட்டி நானு.இத்தனைக்கும் அப்ப ஜஸ்ட் நியூமராலஜிப்படியான ஆய்வுத்தேன்.

இப்ப நம்ம டவுசர் பாண்டி தகவலால அம்மாவோட முழு ஜாதகத்தை கண் முன்னாடி வச்சுக்கிட்டு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். ஆரோ ஒரு ஜோதிடத்திலகம் அம்மாவ ஆதி சக்தி ரேஞ்சுக்கு சொன்னதா ஒரு தகவல். (கமெண்ட்ல பாருங்க)

அம்மாவோட ஜாதக விவரம்: கடக லக்னம் , லக்னத்துல சனி . நாலாவது இடத்துல சூர்யன் குரு, அஞ்சுல செவ்,புதன்,சுக்கிரன் ,கேது , 11ல சந்திரன் ராகு ( அதாவது  ரிசபராசிங்க. லக்னாதிபதி உச்சம் - அக்காங் நம்ம கலைஞர் தாத்தா ஜாதகத்துல உள்ள அதே அம்சம்தேன். இங்கன ராகு சேர்ந்து தொலைச்சுட்டாரு.

லக்ன சனி:
இந்த அமைப்பு இளமையில் முதுமையை தரும். ஜாதகருக்கு மட்டுமில்லிங்கண்ணா ஜாதகரோட வாழ்க்கைத்துணைக்கும் முதுமைதேன் பரிசு. மேலும் கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினைகளையும் தரும். ஒரு லேபரை கணவராக்கும் (ராஜீவ் காந்தி அந்த சமயம் ஏதோ ப்ரிக் ஃபேக்டரில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருனு ஞா)

இதுமட்டுமில்லிங்கண்ணா சீக்கிரமே வா.து யோட கதையை முடிச்சுரும். சனி பிதுர்களுக்கும்,ப்ரேதாத்மக்களுக்கும் காரகர். அதனால ஆ.காரர் சீக்கிரம் ப்ரேதாத்மா ஆயிரவும் வாய்ப்பிருக்கு. சனி கரும காரகன். அதாவது ஏழேழு தலைமுறைக்கு மிந்தி செய்த பாவம்,புண்ணியத்துக்கெல்லாம் கூட கூலி கொடுத்துருவாராம்ல.

இவருக்கு இவிக ஜாதகத்துல சப்தமாதபத்யமும் ,அஷ்டமாதிபத்யமும்  ( கணவர் - சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள்  எல்லாரையும் காட்டுமிடம் இது) கிடைச்சது. கணவர் கதை முற்றும்ங்கறதால இந்த சனி மேற்படி  சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள்  எல்லாரையும் வாட்டி வதக்குதோனு ஒரு சம்சயம். உ.ம் ஒய்.எஸ்.ஆர். வீல் சேர்ல கலைஞர்.

இவர்  3 ஐபார்க்கிறதால சகோதரத்துக்கும் பாதிப்புத்தேன் ( ஸ்பெக்ட்ரம் ஜில அவிகளையும் விஜாரிப்பாய்ங்களாமே) ஆனால் இவரு செமை தகிரியத்தையும் கொடுப்பாருங்கோ. ( சவுண்ட் பாக்ஸு அடி வாங்கவும் வாய்ப்பிருக்கு) ஏழை பார்த்த கதை (வதை) ஆல்ரெடி ஓடிருச்சு. பத்தை வேற பார்க்கிறாருங்கோ.

இதனால சட்டையில்லாதவன் ,கிழிஞ்ச சட்டை போட்டவன், லேபர், பிச்சைக்காரி பணம் கூட அம்மாவுக்கு வந்து சேர வாய்ப்பிருக்கு. ( மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டர் தெரியும்ல)

மரணம் -மரணம் தொடர்பான சொத்து ,சுகங்களுக்கெல்லாம் சனிதேன் இன் சார்ஜு. எட்டாமிடம் காரகம். அம்மாவுக்கு  இன்னைக்குள்ள " வானளாவிய அதிகாரம்"  உயில் மூலமாவும் /வாரிசு அடிப்படையிலயும் வந்ததுதேன்.

சந்திரன் உச்சம் தேன். (மனோகாரகன்) ஆனால் ராகு கூட சேர்ந்தாரே. இதனாலதான் கடல் தாண்டியும் "விவகாரங்கள்" நடத்தின மாதிரி கீது. ராசி ரிஷபங்கறதால அம்மாவுக்கும் தாத்தாபோல பணம்,குடும்பம்னா உசுரு.

அதுலயும் ஒரு லொள்ளை பாருங்க சர லக்னத்துக்கு லாபஸ்தானம்தேன் பாதகஸ்தானம் லக்னாதிபதியே இங்கன மாட்னாரு.உபரியா ராகுவோட சேர்க்கை. அம்மாவுக்கு " நெல்ல மனசுங்கோ".

ரெண்டுக்குடையோனும் ஆறுக்குடையோனும் சேர்ந்ததால குடும்ப கலகம் ( மேனகா காந்தி எபிசோட் தெரியும்ல) மேற்படி ரெண்டுக்குடையோன்( தன பாவாதிபதி)  தூர தேசங்களை காட்டும் 9 ஆமிடத்தோனான குருவோட சேர்ந்தாருங்கோ. இதனாலதான்  ஏதோ  நோன்பு அதிரசம்  கணக்கா சொந்த பந்தத்துக்கு எதையோ அனுப்பி வச்சுட்டதா சுப்பிரமணியம் ஸ்வாமி உளறி கொட்டறாரோ என்னமோ?

இந்த சேர்க்கை 4 ஆமிடத்துல நடந்தது. 4ங்கறது தாய் வீட்டை காட்டுமுங்கோ ( இத்.........தான மானாங்கறது)
ஏதோ சிறுவாடு பணம் தாய் வீட்டுக்கு போகுது.

அடுத்து பாருங்க 4 ஆமிடத்துக்கு இம்மாம் பில்டப் இருந்தாலும் அங்கன விரயாதிபதி சேர்ந்தாருங்கோ. பிச்சையெடுத்தான் பெருமாளு அத்த பிடுங்குச்சாம் அனுமாரு கணக்கா கைய விரிச்சுருவாய்ங்களோ என்னமோ ?

4ன்னா இதயம்ங்கண்ணா இந்த பாவாதிபதியோட விரயாதிபதி சேர்ந்ததால தான் இதயமே இல்லாம நம்ம தொப்புள் கொடி சொந்தங்களுக்கு தொட்டிலுக்கு முன்னாடி சவப்பெட்டிகள் தயாரானப்பல்லாம் வேடிக்கை பார்த்தாய்ங்களோ என்னமோ?

அஞ்சாமிடத்தை பாருங்க: எண்ணிக்கைய பார்த்தா ஹவுஸ் ஃபுல்லா தோணும். ஆனால் இங்கன விரயாதிபதியான புதன் ஒக்கார்ந்தாரு. அஞ்சுன்னா புத்தி விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா புள்ளை விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா பேர்புகழ் ,மன அமைதி விரயம்னா தெரியுமில்லை.

இதுமட்டுமில்லிங்கண்ணா மிச்சம் மீதி எதுனா பெட்டர் ரிசல்ட் இருந்தாலும் அதை ஒழிச்சுக்கட்ட இங்கன கேது ஒக்கார்ந்தாரு.

என்னதான் எதிரிகளை பத்தி சதா சிந்திச்சு வாழ்ந்தாலும் ( செவ்)  சகோதரங்களை தாங்கி பிடிச்சாலும் ( புதன், செவ்) சுக போக ஆடம்பர வாழ்க்கைய நடத்தினாலும் (சுக்கிரன்)  இந்த இடத்துல கேது உட்கார்ந்ததால கடாசில மிஞ்ச ப்போறது விரக்தி.

கேது தர்ர சாய்ஸ் ரெண்டுதேன். ஒன்னு பிச்சை எடுக்கனும் அ சன்னியாசியாகனும். பிச்சையே எடுத்தாலும் கிடைக்கனுமில்லை.

இது பூர்வ புண்ணியத்தை காட்டற இடம் . இங்கன கேது உட்கார்ந்ததால அடி விழ ஆரம்பிச்சா தாளி ஏழேழு ஜன்மத்து பாவமும் ஞா வந்து ஞானத்தை தேட ஆரம்பிச்சுரனும். அப்படிவிழும். மேலும் இது வாரிசை காட்டற இடம் (ராகுல்) இங்கன கேது உட்கார்ந்ததால  தான இவருக்கு சதா சர்வ காலம் 180 டிகிரில - ஏழாவது வீட்ல இருந்து பார்வை செய்யும் ராகுவோட பேரே வாரிசுக்கு ஃபிக்ஸ் ஆச்சோ என்னமோ?

5+3 துணிச்சலான முடிவுகள் 10+3 துணிச்சலான செயல்கள் 5+12 : புத்தி யுக்தியெல்லாம் வீணாஆஆஆஆஆ போயிரனும். 5+4 சதா குடும்ப சிந்தனை ( தாய்வீடுங்கோ) 5+11 சதா லாபம் குறித்த ஆவல், 5+ கேது நிராசை,அவமானம்,அவப்பேர், விரக்தி.

இதாங்கண்ணா அம்மாவோட ஜாதக பலன். இப்பம் தசாபுக்தியை பார்ப்போம்.

சனி தசை சனிபுக்தி: ( 06/Sep/2001  => 09/Sep/2004  )
அட்டமாதிபதியான சனியோட சுயபுக்தி யோக பலனை தந்ததுன்னா தசை டப்பாஸுன்னு அர்த்தம்.

சனி தசை புத புக்தி (09/Sep/2004  => 18/May/2007 )
என்ன தான் விரயாதிபதியா இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்துல உட்கார்ந்ததால அதையெல்லாம் எக்ஸாஸ்ட் பண்ணி பலன் கொடுத்தாரு புதன். (ஃபிக்சட் டிப்பாசிட்டை உடைச்சு செலவழிச்ச மாதிரி)

சனி தசை கேது புக்தி (18/May/2007  => 27/Jun/2008 )
இவர் அஞ்சுல ஒக்கார்ந்தாலும் இவருக்கு 180 டிகிரிஸ்ல ஏழாமிடத்துல உள்ள ராகு லக்னாதிபதியோட சேர்ந்த பாவத்துக்கு ஒப்பேத்தினாரு.

சனி தசை சுக்கிர  புக்தி (27/Jun/2008  => 27/Aug/2011 )
பாதகாதிபதியோட புக்தி. லக்னாதிபதியே இங்கனதான் ராகுவோட சேர்ந்து  உட்கார்ந்தாரு பாதகாதிபதி+சுகஸ்தானாதிபதி+லாபஸ்தானாதிபதியான சுக்கிரனோட கேது சேர்ந்திருக்கிறதால  டப்பா டான்ஸ் ஆடப்போறது நிச்சயம்.

இவிக மண வாழ்வை பத்தி ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. (சுக்கிரன்) அதுக்கு காரணம்  சுக்கிரனோட கேது சேர்ந்த எஃபெக்ட் தேன். வேணம்னா குரு தசை சுக்கிர புக்தில அம்மாவோட நெலமை எப்படியிருந்ததுன்னு கூகுல்ல தேடிப்பாருங்க (17/Jul/1993  => 16/Mar/1996 ) அதே ரேஞ்சுதேன் இப்ப மறுபடி வரப்போகுது.

இன்னொரு சமாசாரம் பாஸ். சனி தசையில சூரிய புக்தி 27/Aug/2011 அன்று ஆரம்பமாகப்போகுது. இதனோட எஃபெக்ட் ஆறு மாசம் முன்னாடி இருக்கும்னு அனுபவம்.

சூரிய தசையில சனி புக்தியோ ,சனி தசையில  சூரிய புக்தியோ வந்தா நாஸ்திதேன். சூரிய குரு சேர்க்கை பத்தி ஸ்லாகிச்சு எழுதியிருந்தேன். ( 2+9) ஆனால் அதே குருவுக்கு ரோகாதிபத்யமும் இருக்குதுங்கோ.வாக்குஸ்தானாதிபதி  சத்ரு ரோக ருணஸ்தானாதிபதியோட சேர்ந்தா  நம்ம சொற்களே விற்களா மாறி கற்களை மழையா பொழிவிக்குமுங்கோ

சத்தியமே உரைச்சாலும் அது எதிராளிக்கு உரைக்காதுங்கோ . இந்த பீரியட் 08/Aug/2012 வரை நடக்குதுங்கோ. அதனால அடிமேல அடிதேன்.

கோசாரம்:
ராசிய பார்த்தா ரிசபம். 9,10 க்கு அதிபதியான சனி அஞ்சுல. இதனால "சொத்து" சேரும். ஆனால் சனியாப்பட்டவர் அஞ்சுல உட்கார்ந்து பிள்ளைய உருப்படவிடாம செய்யறதோட அவரால ஜாதகரும் உருப்படாம செய்துருவாருங்க. பாவம் ராகுல்.

பொதுவா பார்த்தா ஆகா குரு 11லதானே இருக்காருனு நினைக்கலாம். ஆனால் குரு இவிக ராசிக்கு மரணத்தை தரவேண்டிய அட்டமாதிபதி நைனா.

ராகு கேது:
மே 16 முதல் இவிக ராசில கேதுவும் ( ஜாதகத்துல அஞ்சுல கேது) ஏழுல ராகுவும் வர்ராய்ங்க. இதனோட எஃபெக்ட் 3 மாசம் முன்னாடி ஐ மீன் ஃபிப்ரவரி 16 முதலே ஆரம்பமாயிரும். பலன்: தனிமரமாதல். இருட்டில் இருத்தல் .சூழ்ச்சிக்கு பலியாதல் .

( ஆருப்பா அங்கே விசிலடிக்கிறது...)

Saturday, March 12, 2011

ராத்திரிகள் வந்துவிட்டால்



நீங்க ஏறக்குறைய என் வயசு ஆசாமியா இருந்தா கமல் ரஜினி சேர்ந்து நடிச்ச இளமை ஊஞ்சலாடுகிறது படம் ஒங்களுக்கு கியாபகம் இருக்கும் ( ரஜினி ஸ்டைலுங்கோ).

சரி சின்னவயசா இருந்தாலும் நள்ளிரவு எஃப்.எம்ல கேட்டிருப்பிங்க. - ஏதோ ஒரு பாடாவதி சானல்ல அதுல அந்த படத்துல வர்ர "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்"ங்கற பாட்டை கேட்டிருப்பிங்க/பார்த்திருப்பிங்க.

கரீட்டா .அதே பாட்டுல "ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்"ங்கற வரியை எத்தீனி பேரு கவனிச்சிங்களோ தெரியாது. நான் கவனிச்சிருக்கேன். அந்த வரி தான் இன்னைக்கு லீட்.

அதென்ன ராத்திரிகள் வந்துட்டா சாத்திரங்கள் ஓடிப்போயிருங்கறாய்ங்க. அப்ப சாஸ்திரத்துக்கு ஆஃபா. அல்லது சாஸ்திரம்லாம் ஒரு ஷிப்டுதான் வேலை செய்யனுமா?

பகலுக்கும் ராத்திரிக்கும் என்ன வித்யாசம்?

பகல்ல சூரியனோட வெப்பத்தை கிரகிச்சுக்கிட்ட பூமி அதை மாலை முதல் வெளிவிட ஆரம்பிக்கும். ராத்திரிக்கு குளிர்ந்து போகும் (இதெல்லாம் அந்த காலத்து கணக்குங்கண்ணா. இப்பல்லாம் பால்காரன் ராத்திரி ஞாபகத்துல ஹாரனை அமுக்கிற நேரம்தான் குளிருது. எல்லாம் பொல்யூஷன்.

பகல்ல சூரியனோட ஆட்சி. இவர் ஆத்ம காரகர். சுயம் அ செல்ஃப் என்ற தன்னுணர்வுக்கு காரகர். அறிவு பூர்வமா ரோசிக்க வைப்பாரு.

ஒரு மாசத்துக்கு ஒரே ராசில சஞ்சரிக்க கூடியவர் (ஸ்திரம்) வருஷத்துல ஆடிமாசத்துல கடகத்துலயும், புரட்டாசி மாசத்துல துலாலயும் கொஞ்சம்போல தள்ளாடுவார் . எங்கயாச்சும் ராகு கேது கூட லிங்க் ஆனா, சனியோட லிங்க் ஆனா கொஞ்சம் போல தடுமாறுவார்.

மற்றபடி பர்ஃபெக்ட் ஜென்டில் மேன். இந்த சந்திரன் கீறாரு பாருங்க. லொள்ளு பிடிச்ச ஆசாமி. அரசியல் வாதி மாதிரி ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிப்புடுவாரு. மாசத்துல பாதி நா வளர்ச்சி,பாதி நாளு தளர்ச்சி.

இப்படியா கொத்த பார்ட்டியோட ஆட்சி ராத்திரில நடக்குது. மேலும் இவர் மனோகாரகர். முகம் விகாரமாயிருச்சுன்னா ஒரு வாரம் அட்மிட் ஆகி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கினு வெளிய வந்துரலாம். தாளி மனசு விகாரமாயிருச்சுன்னு வைங்க.. மாசக்கணக்குல கவுன்சிலிங் , அது இதுன்னு மன்னாடனும்.Read More

Friday, March 11, 2011

தனபாவம் Vs ஆயுள் பாவம் « Anubavajothidam.com


ஜாதகத்துல லக்னத்துக்கு ரெண்டாமிடத்தை தனபாவம்ங்கறாய்ங்க. எட்டாமிடத்தை ஆயுள் பாவங்கறாய்ங்க.
ரெண்டு வாயை காட்டுது எட்டு மர்மஸ்தானத்தை காட்டுது. ரெண்டு குடும்பத்தை காட்டுது எட்டு தீர்க்க முடியாத கடனை காட்டுது. ரெண்டு பேச்சை காட்டுது எட்டு கொலை,கொலை முயற்சி, சிறைப்படல் தற்கொலை,விபத்து இத்யாதியகாட்டுது.

எல்லா கிரகங்களுக்கும் 7 ஆமிடத்தை பார்க்கிற சக்தி உண்டு. ( அதாவது தன் அதிர்வுகளை செலுத்துதல்). ரெண்டுக்கு ஏழாமிடம்னா அது எட்டாமிடம். எட்டுக்கு ஏழாமிடம்னா அது ரெண்டாமிடம்.இப்ப லிங்க் புரியுதா? இல்லியா சரி மொதல்ல .....

தனபாவத்துக்கும் ஆயுள் பாவத்துக்கும் உள்ள தொடர்பு:
தனபாவத்துல சுபகிரகம் இருந்தா ஜாதகருக்கு லீகலா, ப்ளஸ் மோரல் வேல்யூஸோட தன சேர்க்கை ஏற்படும். இவர் லக்னத்துக்கு எட்டை பார்த்தாலும் ஏதோ மருந்து மாயத்துல குணமாயிர்ர நோயா வரும். ஒரு வேளை பாபகிரகம் இருந்ததுனு வைங்க. இல்லீகலா இம்மாரல் வேஸ்ல பணம் வந்து கொட்டும். ஆனா அதே கிரகம் எட்டையும் பார்க்கிறதால பாப கிரகத்தோட காரகத்வத்துல உள்ள நோய்கள் வரும். பில்லு எகிறும், சனி செவ் சம்பந்தப்பட்டிருந்தா அறுவை சிகிச்சை ,அங்க ஹீனம் கூட ஏற்படலாம். இதான் தன பாவத்துக்கும் ஆயுள் பாவத்துக்கும் உள்ள தொடர்பு.Read More

கிரக தோஷங்கள்: கொடுத்தா போகும்.. வாங்கினா கூடும்


கிரகதோஷம்னா குறிப்பிட்ட கிரகம் வீக்கா இருக்குனு அர்த்தம். கிரகம் வீக்கா இருந்தா அதனோட காரகத்வத்துல எல்லாம் நமக்கு நஷ்டம் வரும்.

இதை தவிர்க்க நாம அந்த பேட்டையிலயே என்டர் ஆகக்கூடாது. விவரம் தெரியாம ஆல்ரெடி அந்த ஃபீல்டுல மாட்டிக்கிட்டிங்க. வெளிய வந்துதானே ஆகனும்.

அப்ப அந்த ஃபீல்டுல எதிர்படக்கூடிய நஷ்டத்தை குறைக்க /அவாய்ட் பண்ண குறிப்பிட்ட கிரக காரகத்வம் கொண்ட பொருளை பிறருக்கு கொடுக்கனும். ( அல்லாத்தையும் எங்களுக்கே கொடுன்னு அவாள் சொல்வா. அதை நம்பாதிங்க)

எந்த கிரகம் சரியில்லையோ அந்த கிரக காரகத்வம் கொண்ட குலத்தினருக்கு, தொழிலினருக்கு கொடுக்கலாம். ஸ்பீட் போஸ்ட் கணக்கா கிரகத்துக்கு மெசேஜ் போயிரும். வேலை நடக்கும். நான் கியாரண்டி. உதாரணமா சனி வீக்குன்னா தலித்துக்கு தரலாம், புதன் வீக்குன்னா ஒரு வைசியருக்கு தரலாம்.

சனி சரியில்லைன்னா ஐரன் ஸ்டில் ஆயில் தரலாம். புதன் சரியில்லின்னா ஸ்டேஷ்னரி,புக்ஸ்,பென் ட்ரைவ், கார்ட் ரீடர் தரலாம். Read More

Wednesday, March 9, 2011

முக ராசிங்கறது நெஜம்தானா? « Anubavajothidam.com


அகத்தின் அழகு முகத்தில் தெரியுங்கறாய்ங்க. "எம்.ஜி.ஆர் முகம் காட்டினால் ஆயிரம் ஓட்டுக்கள்"னு அண்ணாவே சொன்னாரு. தளபதின்னு அல்லாரும் தலையில தூக்கி வச்சு கொண்டாடற விஜயை பார்த்தா எனக்கு கடுக்கும்.

(மேட்டர் என்னடானா பார்க்க பையன் மாதிரியும் இருக்காது - ஆம்பளை மாதிரியும் இருக்காது -இதுவாச்சும் பரவால்ல பிரசாந்து பிரசாந்துன்னு ஒரு ஆக்டரு அவர் மூஞ்சி ஆம்பள மாதிரியும் இருக்காது பொம்பள மாதிரியும் இருக்காது.)

மேஷாதி மீனம் வரை 12 ராசியும் தெரியும் அதின்னாபா அது மொகராசின்னு நானும் நிறைய குழம்பியிருக்கேன்.

ஜாதகத்துல லக்னம் தேன் முகத்தை காட்டுது. அங்கன சுபகிரகம் சுபபலமா இருந்தா மொகம் அழகா இருக்கும். ( அரவிந்த் ஸ்வாமிய லேட்டஸ்டா பார்த்தியளா? அன்னைக்கு அழகா வச்சது எது இன்னைக்கு இப்படி ஆக்கினது எது?)

(லக்னத்துல சுபகிரகம் இருந்து) அழகா இருக்கிறவன்லாம் நல்லவனா? அதிர்ஷ்ட சாலியா? அப்படித்தேன் சாமுத்ரிகா லட்சணம் சொல்லுது. ப்ராக்டிக்கலா பார்க்கும்போது எவன் ஜாதகத்துலயும் எந்த கிரகமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்கிறதே கிடையாது. தேய்மானம், சேதாரம் ,செய்கூலி எல்லாம் போயி 60% நின்னா கிரேட்.அதுக்கே சனம் இந்த ஆட்டம் போட்டுருது. Read More..


Tuesday, March 8, 2011

விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும் !


அண்ணே வணக்கம்ணே,
2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற திகீர் கணிப்பை தரத்தான் இந்த பதிவை போடறேன்.ஏன் எதுக்கு எப்படினு நான் பண்ணப்போற ஆராய்ச்சில உங்கள்ள பாதி பேர் சோசியர்களாகவே மாறிடப்போறிங்க. விஷ் யு ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய சந்திராஷ்டமம் பற்றிய பதிவை 945 பேர் படிச்சிருக்கிங்க. நன்றி. ஜோதிஷ சாஸ்திரத்துல சந்திராஷ்டமம்லாம் ஜுஜுபி. பலான பலான மேட்டர் எல்லாம் எடுத்து விட்டா கஸ்டடில எடுத்து விஜாரிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

நமக்கு புகைப்பழக்கம் வேற இருக்கா..தூக்கி உள்ளாற வச்சுட்டு கை.எ போட்டா தான் சிகரட்டுன்னா படக்குனு கை.எ போட்டுத்தொலைச்சுருவமோன்னு தான் அடக்கி வாசிக்கிறேன். ஆனாலும் அதுக்காக நம்ம மம்மிய ஐ மீன் பாரத மாதாவை டீல்ல விட்டுர முடியாதே.

அதனாலதான் இந்த திகீர் பதிவு. தூக்கி உள்ள போட்டுட்டா ஏட்டுக்கு கையூட்டு கொடுத்து ஒரு கட்டு பூபால் பீடி மட்டும் அனுப்பி வச்சுட்டா போதும். (எத்தீனி பேரு ரெடி ..கைய தூக்குங்குண்ணா)

இதுக்கு ரெடியா இல்லாதவுகளும் சேர்த்து பதிவை தொடர்ந்து படிக்க இங்கன அழுத்துங்கண்ணா

Monday, March 7, 2011

உயிரையும் பறிக்கும் சந்திராஷ்டமம்


உங்க ராசிக்கு சந்திரன் எட்டுல சஞ்சரிக்கிற ரெண்டே கால் நாளைத்தான் சந்திராஷ்டமம்னு சொல்றாய்ங்க. சந்திரன் எட்டில் (அஷ்டமம்) இருத்தலே சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம்னா எல்லாருக்குமே உள்ளூற டர்ருதேன். ஒரு சிலருக்கு பல்பு வாங்கிய அனுபவமும் இருக்கலாம்.
என்ன ஏதுன்னு தெரியாட்டாலும் "அட விடுப்பா இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம்"னு கழண்டுக்கறவுக நெம்பர் சாஸ்தியாயிருச்சு.
அவிக பயப்படறதுலயும் லாஜிக் இருக்கு. சந்திரன் மனோகாரகன். இவர் நல்ல இடத்துல இருந்தா கையில கால் காசு இல்லின்னாலு மனசுல ஒரு மிதப்பு இருக்கும். இவரே அஷ்டமத்துக்கு போயிட்டா ?
சூசைட் டெண்டன்சி உள்ளவன் தற்கொலையே கூட பண்ணிக்கிடலாம். தண்ணீர் டாங்கர்ல அடிபட்டு சாகலாம். ( சந்திரன் -ஜல காரகன்) . ஏற்கெனவே நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை உள்ளவுகளுக்கு இந்த தினங்கள்ள மேல கீழே ஆயிரலாம்.
அட ஒரு போர் போட்டு தண்ணி வரலின்னா வட்டம் தானே. குழாயடி சண்டையில எத்தனை பேருக்கு மண்டை உடைஞ்சிருக்கு -கொலை நடந்திருக்கு.
இப்படியா கொத்த சந்திரன் 8 லருந்தா மட்டும் தான் ஆபத்தா? ஆறுல இருக்கலாமா? ( சந்திரன் ஆறுல இருக்கறச்ச தமிழ் சினிமா ஹீரோ மாதிரி மனசாட்சி கிட்டேல்லாம் பேசவேண்டி வந்துரும் )
12ல இருந்தா பரவால்லையா? 7ல இருந்தா பரவால்லியா? பத்துல இருந்தா பரவால்லியா?
சந்திரனோட முக்கிய காரகங்கள் :இன்ஸ்டெபிலிட்டி, அன் செர்ட்டினிட்டி, எதிர்பாரா தன்மை, நகர்வு, தண்ணீர், மனம் ,நுரையீரல்,சிறு நீரகம். சந்திரன் மரணத்தை காட்டும் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் போது இவை பாதிக்கப்பட்டால் என்ன கதி?
பதிவை தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க

Thursday, March 3, 2011

பங்காரு அடிகளார் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு?

பாவம் பங்காரு அடிகளார் ஊருக்கெல்லாம் அருள் வாக்கு சொல்ல அவருக்கு நாம அருள் வாக்கு சொல்ற மாதிரி ஆயிருச்சு. அவரோட 71 ஆவது பிறந்த நாளை பத்தி சில வரிகள் சொல்லிட்டு அப்பாறம் நீதிமன்ற அவமதிப்பு மேட்டருக்கு போகலாம். ( ஆக்கப்பொறுத்தவுக ஆற பொறுக்கனுமப்பு).

இவரோட பிறந்த தேதி 3/3/1941. எண் கணிதப்படி பிறப்பு எண்/உயிர் எண்ணும் 3 . கூட்டு எண்/ஸ்தூல எண்ணும் 3.இதுக்கு அதிபதி குரு. இப்ப 71 ஆவது வருஷத்துல அடியெடுத்து வச்சிருக்காரு. 7+1 என்றால் 8 . இதுக்கு அதிபதி சனி.

குரு சனி சேர்ந்தா குரு சண்டாள யோகம். குருன்னா கோர்ட்டு .சனின்னா பிரச்சினை. பாவம் பிறந்த நாள் விளம்பரத்துலயே இம்சை ஸ்டார்ட்.

வீ.இளங்கோ என்ற பாடலாசிரியர் ( இவரை உங்கள்ள ஆருக்குனா தெரியுங்களாண்ணா- ஒரு வேளை மேல்மருவத்தூர் சீரியல்/லோ பட்ஜெட் படத்துக்கு எழுதினவரோ?) அடிகளார் பிறந்த நாளைக்கு மாலை மலர்ல ஒரு விளம்பரம் கொடுத்திருக்காரு படத்தை பாருங்க.

மத்த பாயிண்டெல்லாம் "ஏதோ பிசினஸ் டல்லாயிருச்சு .. கேன்வாஸ் பண்றாய்ங்கனு வச்சிக்கலாம்" ஆனால் நான் ரவுண்ட் பண்ண வரிய பாருங்க..

நீதிபதிகள் உன்னை நாடிய பின் நீதியரசர்கள். அடங்கொய்யால. நீதிபதிகளை ஆரு நியமிக்கிறாய்ங்கனு கூட தெரியலை.விளம்பரம் கொடுத்த பார்ட்டி BE LLB படிச்சிருக்கு.

பாவம் நம்ம ராசாவுக்கு மேட்டர் தெரியாது போல. தெரிஞ்சிருந்தா அடிகளாரை நாடி நீதியரசராயிருப்பாரோ என்னமோ? அ நியாயத்துக்கு திஹார் ஜெயில்ல பப்பு யாதவ் அறை கிடைக்குமான்னு ஜொள்ளு விட்டுக்கினு கீறாரு.

என்னதான் விளம்பரம்னாலும் எந்த பிதற்றலையும் போட்டுர்ரதா ? இந்த பதிவு வேலையில்லாத ஒரு லாயர் கண்ணுல விழுந்து ஒரு மனுவை தட்டிவிட்டா அடிகளார் மேல நீதிமன்ற அவமதிப்பு கேஸ் பாயாதோ?

அட ..எப்படியும் நம்ம ஜாதகத்துல குரு உச்சம். தப்பித்தவறி ஆராச்சும் நீதிபதியோட மகன்/பேரன் ஆராச்சும் பார்த்து போட்டு கொடுத்துட்டா ஆப்புதான் மாப்பேய்..

Wednesday, March 2, 2011

ராத்திரி நேரத்து கலாச்சாரம் ..

 
சிவா என்ற சொல்லுக்கு இல்லாத ஒன்று அல்லது எது இல்லையோ அது என்று பொருள் .அதாவது வெற்றிடம் அல்லது ஆகாயம் என்பது பொருள்.
புத்தரும் இதையே தான் சொன்னார் .நீங்கள் யார் என்று கேட்டபோது ...நான் அனாத்மா.அதாவது நான் என்று எதுவுமில்லை.அதாவது ஆத்மா என்று கூட எதுவுமில்லை.


சிவராத்திரி என்பது இந்து மதம் மட்டும் கொண்டாடும் விழாவாக உள்ளது .இது சரியானது அல்ல .
மதத்துக்கு இங்கு வேலையே இல்லை .
சிந்து சமவெளியை ஒட்டி தோன்றிய கலாசாரம்தான் இந்திய கலாசாரம்.
இந்திய தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.
உண்மையில் இந்திய கலாசாரத்தில் உள்ள அனைவரும் தன் விழிப்புணர்வை மேம்படுத்தி கொள்ள இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பு.

நீங்கள் மண்ணுக்கு அடையாளம் கொடுக்கலாம் .வரையறை செய்யலாம். (நிலம் ,தேசம் ,என் வீடு ,என் உடல் )

மண்(உடல் ) அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் விலங்கு.


வெறும் நீர் (மனம் ) அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர் ..மனிதன் .

காற்றின் அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர் ..லட்சிய வாதி , ..சாதனையாளன்,விஞ்ஞானி...etc

நெருப்பின் அடையாளத்தோடு மட்டும் வாழ்பவன் பெயர்... விஜயகாந்த் :)) [பொதுநல வாதி,தியாகி]

ஆகாயத்தை அடையாளமாக கொண்டு வாழமுடியாது ..ஆகாயத்தை அடிமை படுத்த முடியாது ...
வேண்டுமானால் தன்னை ஆகாயத்தோடு (ஆதாயத்தோடு அல்ல :) ..அடையாள படுத்தி கொள்பவனை யோகி எனலாம்.

எல்லோருக்கும் ஒரே ஆகாயம் தான் ....

இந்த பிரபஞ்சத்தில் நெறைய சூரியன் இருக்கலாம் ....பூமி போல நெறைய உயிர் வாழும் கிரகங்கள் இருக்கலாம் ...
ஆனால் ஒரே ஆகாயம் தான் ...இதை ஒன்று என்று கூட சொல்ல முடியாது .மற்ற ஒன்று இருந்தால் தான் ஒன்று என்று வேறு படுத்த கூட முடியும் .

இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் .கடவுள் ஒரு குறிபிட்டவர்களுக்கு (மதம் ) மட்டும் சொந்தகாரர் இல்லை என்று .

இதை தான் இல்லாத ஒன்று ...சிவா என்று சொன்னார்கள் நம் இந்திய காலாச்சாரத்தில்..[ நமக்கு தெரிந்த கலாசாரம்....ராத்திரி நேரத்து கலாச்சாரம் ....I mean ஒருவனுக்கு ஒருத்தி ]

சிவராத்திரி அன்று சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்துக்கு நேர் 7ம் வீட்டிலும்(கும்பம் ) ,சந்திரன் தன் சொந்த வீடான கடகத்தில் இருந்து நேர் 7 ம் வீட்டிலும்(மகரம் ) இருக்கும்.[நன்றி :ஸ்வாமி ஓம்கார்]

மனம் (சந்திரன்) மெதுவாக நகர்ந்து ஆத்மா (சூரியனிடம் ) ஒடுங்குகிறது இந்த இரவு .
சிவராத்திரிக்கு அடுத்த நாள் அம்மாவாசை .
இது இந்த வருடம் 3-03-2011 இரவு நடக்கிறது .


இந்த இரவு நாம் தளர்வாக உடலை வைத்து கொண்டு மனதை கவனித்தபடி விழிப்புடன் இருந்தால் நல்லது.
கோவிலுக்கு செல்வது ஒரு விதத்தில் நல்லது .செல்லாமல் இருப்பது மிக நல்லது .
இதை நாம் காலியான இடம் ,மொட்டை மாடி போன்ற காற்றோட்டமான இடத்தில செய்வது மிக மிக நல்லது.

நாமும் விழிப்புணர்வு பெற ராத்திரி நேரத்து கலாச்சாரத்தை முயற்சிப்போம் :)
சிவ ராத்திரி தின வாழ்த்துக்கள் ...:)