Showing posts with label consultancyஜோதிட ஆலோசனை. Show all posts
Showing posts with label consultancyஜோதிட ஆலோசனை. Show all posts

Friday, December 17, 2010

விஜய் தனிக்கட்சி பற்றி ரஜினி ரகசிய ஆலோசனை

டெலிகாம் ஊழலில் சிக்கி திணறும் திமுக,  விஜய் தனிக்கட்சி யோசனை இத்யாதி திருப்பங்கள் ரஜினியை குழப்ப தனக்கு பிடித்தமானவர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, சுப்பிரமணியம் ஸ்வாமி, எழுத்து சித்தர் பாலகுமாரன், கே பாலசந்தர் ஆகியோர் இறங்குகின்றனர்.

பாலகுமார‌ன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..

ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு (மேலுக்கு) வாங்க பாலகுமாரன்..

பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..

சோ: ஆமாம்..இங்கே ஆரம்பிச்சு எப்ப பாய்ண்டுக்கு வர்ரது.. நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .மேட்டர் தெரியுமில்லை ..டெலிகாம் ஊழல்ல திமுக சிக்கி தவிக்குது . விஜய் தனிக்கட்சி ஆரம்பிக்கபோறாரு இந்த நேரத்துல ரஜினி என்ன செய்தா நல்லாருக்கும்னு ஒரு டிஸ்கஷன்

பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார். அதனாலதான் ஜெயலலிதா கூட கூப்டு ஐடியா கேட்கிறாய்ங்க

ரஜினி:(எழுந்து நின்று ) முதல்ல எல்லாரும் உட்காருங்க. மேட்டர் தெரியுமில்லை.. இத்தனை நாள் நான் சால்ரா போட்ட கலைஞர் தலைமையிலான திமுக டெலிகாம் ஊழல்ல  சிக்கி தவிக்குது. சினிமா உலகமே கலைஞர் குடும்பத்தோட பிடில இருக்குன்னு பிரச்சாரம் நடக்குது. ஆட்டைகடிச்சு மாட்டை கடிச்சு  விஜய் சினிமாவுக்கே தியேட்டர் கிடைக்காத நிலை .. இதே பாய்ண்ட்ல அவரு  தனிக்கட்சி ஆரம்பிக்கப்போறாரு. அன்னைக்கு மணி ரத்தினம் எடுத்த வில்லங்க சினிமாக்களால இர்ரிடேட் ஆன எவனோ வீசின வெடிகுண்டுக்கே இர்ரிட்டேட் ஆகி இனி தமிழகத்தை ஆண்டவன் தான் காப்பத்தனும்னு வசனம் விட்டேன்.. இப்ப மவுனமா இருந்தா நல்லாருக்காது. இந்த நேரத்துல நான் செய்தா நல்லாருக்கும்னு உங்ககிட்டே  ஐடியா கேட்கத்தான் இந்த டிஸ்கஷன்

சுப்ரமணியம் ஸ்வாமி: இன்னும் என்ன தயக்கம். நம்ம ஜனதா கட்சிக்கு ஆதரவா வாய்ஸ் கொடுங்கோ  சந்திரலேகாதான் முதல்வர் கேண்டிடட்டு நான் டிக்ளேர் பண்ணிர்ரன்..

ரஜினி:  கொஞ்சம் சீரியசா பேசுங்க சார். நீங்க எப்ப சீரியஸ் எப்ப காமெடின்னே புரியறதில்லை.

சு.ஸ்வாமி: என்னை மதிச்சு ஒரு எம்.பி சீட் கொடுத்துட்டா நான் காமெடி.. என்னை மதிக்கலைன்னா சீரியஸ்.

பாலசந்தர்: நீ எதையோ முடிவு பண்ணிட்டே . அப்புறம் எதுக்கு டிஸ்கஷன் டிச்க்சன் எல்லாம். ஆமா விஸ்வ நாதன் டைரக்சன் நடிக்கனும்னு சொன்னியாமே.. நம்ம கவிதாலயாவுக்கு ஒரு படம் பண்ணக்கூடாது

ரஜினி: வேணா சாரி நீங்க அமீர்ஜானை டைரக்ட் பண்ணவைப்பிங்க. நான் டூ ஆர் டை பொசிஷன்ல இருக்கேன். இப்பயாச்சும் எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் டெடிக்கேட்டடா யோசனை பண்ணுங்க

பாலகுமாரன்: பேசாம உடையார்  கதையில நடிக்கப்போறதா அனவுன்ஸ் பண்ணிருங்க. மீடியா மொத்தம் டைவர்ட் ஆயிரும்.

ரஜினி: சுல்தன் தி வாரியரே பாதில  நிக்குது. யந்திரன் நின்னுப்போயிருதேனு சன் பிக்சர்ஸ் கிட்டே மாட்டினேன். நல்ல வேளை பிக்சர் ப்ரமோஷனுக்காக தியேட்டர் காண்டீன்ல சமோசா விக்க சொல்லலை. ப்ளீஸ் .. எல்லாரும் என்னை உபயோகிச்சுக்கத்தான் பார்க்கிறிங்களே தவிர எனக்கு உபயோகப்படற மாதிரி ஒரு வார்த்தைனா பேசுங்க சார்

சோ : விஜய் படத்துக்கு தியேட்டர் கொடுக்கனும்னு உண்ணாவிரதம் அனவுன்ஸ் பண்ணிருங்க

ரஜினி: வேண்டாங்க. அப்புறம் விஜயகுமார் வந்து என் பக்கத்துல உட்கார்ந்துக்குவாரு அவங்க அந்தப்புறமே புற நகர் டம்ப் ஸ்பாட் மாதிரி நாறிக்கிடக்கு

ரஜினி:(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்.. ஜெயசுதாவோட அப்பாவை அடிச்சப்பயும் அதைத்தான் செய்தேன். ஹிந்தி ப்ரொடியூசருக்கு காலை உடைச்சப்பயும் அதைத்தான் செய்தேன். இப்போ எங்க போறது? (மேலுக்கு)  எனக்கு ரொம்ப . ரொம்ப குழப்பமா இருக்கு. ஓப்பனா சொன்னா பயம்மா இருக்கு.  விஜயகாந்த் எனக்கு நகலா வந்தவர். விஜய்  என் ரசிகன்னு வேற சொல்லிக்கிறவரு.. இவங்கல்லாம் ஸ்க்ரீனுக்கு வந்த பிறகும் நான் சும்மா இருந்தா எப்படி? ரசிகர்கள் டைவர்ட் ஆயிருவாங்களோ.. மக்கள் ரொம்ப கேவலமா நினைச்சுருவாங்களோனு பயம்.

சோ : நீங்க தான் இதுக்கெல்லாம் காரணம். பொதுக்கூட்டத்துல சாயந்திரத்துலருந்து நள்ளிரவு வரை தலைவர் வருகிறார்.. வந்துகொண்டே இருக்கிறாருனு அனவுன்ஸ் பண்றமாதிரி பில்டப் பண்ணிங்க.. பொழுது விடிஞ்சி பல வருஷமாயிருச்சு.. இன்னமும் வருவேன்னு தான் சொல்லிட்டிருக்கிங்க

ரஜினி: ஓகே ஓகே எப்பவும் நியூஸ்ல இருக்கிறதுக்காக அப்படி பீலா விட்டது நிஜம்தான். ஆனால் இப்ப நிலைம வேற.

பாலகுமாரன்: சொந்த கட்சி ஆரம்பிச்சுருங்க.

ரஜினி: விஜய்காந்த் திராவிட கட்சிகளை கிழி கிழின்னு கிழிச்சுக்கிட்டே இருக்கார் .அப்படியும் அவருக்கொன்னும் ஆதரவு பெருகலை. நான் ஜெயலலிதாவை வீர லட்சுமினு பாராட்டியிருக்கேன். கலைஞரை அவரே வெட்கப்படும்படியா பயங்கரமா புகழ்ந்து தள்ளியிருக்கேன்..

சோ: திமுக இப்போ மூழ்கிக்கிட்டிருக்கிற கப்பல்..

பாலகுமாரன்: திராவிட கட்சிகள்ள சேர்ந்தா தானே கடந்த காலம் குறுக்க வருது .காங்கிரஸ்ல சேர்ந்துருங்க.

ரஜினி: யோவ் திமுகவாவது மூழ்கிக்கிட்டிருக்கிற கப்பல். காங்கிரஸ் மூழ்கி போச்சுய்யா. அதனோட பிணத்தை தூக்க நாலு எம்.எல்.ஏ ஜெயிச்சு வந்திருக்கான்

சோ: நீங்களும் ஒரு கட்சி ஆரம்பிங்கோ.. நான் அதிமுகவோட கூட்டுக்கு ஏற்பாடு பண்றேன். எனக்கென்ன ஒரு ராஜ்யசபா எம்பி போதும்

சுப்ரமணியம் சுவாமி: நீங்க பா.ஜ.கல சேர ஏற்பாடு பண்றேன் எனக்கென்ன ஜஸ்ட் ஒரு எம்.பி

பாலசந்தர்:அதுக்கு முன்னாலே எனக்கு ஒரு டெய்லி சீரியலாச்சும் பண்ணிக்கொடு.  நானே டைரக்ட் பண்றேன் .அப்பத்தான்  பெண்கள் ஆதரவு  உனக்கு கிடைக்கும்.

பாலகுமாரன்: எனக்கென்னவோ உடையார்தான் பெஸ்ட் சாய்ஸுனு தோனுது

ரஜினி: யோவ் ஓடிப்போங்கய்யா .. சாதிபுத்திய காட்டிட்டிங்க .. எங்கப்பா சித்தூர் முருகேசன் .. ஆன்லைன் சாட்லயாவது கனெக்ட் பண்ணுங்கப்பா..

(ஆன்லைன் சாட்)

ரஜினி: ஹலோ!

முருகேசன்: யாரு ரஜினி அய்யரா?

ரஜினி: யப்பா நான் ரொம்ப நொந்து போயிருக்கேன்.. நீயும் நோகடிச்சா எப்படி?

முருகேசன்: நீங்க சிவாஜி ராவ் சார்.. சிவாஜி மாதிரி பேசறிங்க

ரஜினி: நெலமை அப்டி.. என்னதான் நீ என்னை கச்சா முச்சான்னு திட்டி எழுதினாலும் உன் எழுத்துல என் மேல உனக்கெந்த அளவுக்கு அக்கறை இருக்குனு தெரிஞ்சிக்கிட்டேன்.

முருகேசன்:  கெட்டும் பட்டணம் சேர்ங்கற மாதிரி சனம் என் கிட்டே வராய்ங்க. தேறினதும் காணாம போயிர்ராய்ங்க. எனக்கு உங்க மேல பெருசா அக்கறையில்லை. உங்களை ஃபாலோ பண்ற யூத் மேலதான் அக்கறை .

ரஜினி: உனக்கு யார் மேல அக்கறையோ எனக்கு அக்கறையில்லை .இப்ப தலைக்கு மேல போயிருச்சு ஏதோ ஒன்னு பண்ணனும். இல்லைன்னா என்னை நானே கூட சகிச்சுக்க முடியாது..

முருகேசன்: ஓகே ஓகே.. உங்களுக்கென்ன சி.எம் ஆகனும்னு இருக்கா? இல்லை ஜஸ்ட்  சர்வைவல் ப்ராப்ளமா?

ரஜினி: என்னப்பா சூப்பர் மார்க்கெட்ல என்னவேணும்னு கேட்கிறமாதிரி கேட்கறே..

முருகேசன்: இலக்கு எதுன்னு தெரிஞ்சாதானே ரூட் மேப் போட முடியும்?

ரஜினி: ரெண்டுத்துக்குமே ரூட் மேப் போடுப்பா

முருகேசன்: சர்வைவல் போதும்னா எங்கஊரு பழைய லோக் சத்தா மாதிரி ஒரு அமைப்பை ஆரம்பிச்சுருங்க. சொந்த பத்திரிக்கை ஒன்னை ஆரம்பிச்சு கட்சி முக்கியமில்லை வேட்பாளர்தான் முக்கியம்னு ஸ்டாண்ட் எடுத்துக்கங்க. வேட்பாளர்களோட உண்மையான விவரங்களை சேகரிச்சி சொந்த பத்திரிக்கைல வெளியிடுங்க. உங்க சர்வேல நல்ல கிரேடிங்ல உள்ள வேட்பாளர்களோட பொசிஷன் வீக்கா இருந்தா   நேர்ல வந்து பிரச்சாரம் பண்ணுவேனு பயமுறுத்துங்க.

ரஜினி: எல்லா கட்சிலயும் கெட்டவங்க இருப்பாங்களே..

முருகேசன்: எல்லா கட்சிலயும் நல்லவங்களும் இருப்பாங்களே. மேலும் நீங்க தேர்தலுக்கு முன்னாடியே நெட் ஒர்க்கை ஆரம்பிச்சுட்டா எல்லா கட்சியும் உங்களுக்கும்,உங்க அமைப்புக்கும் பயந்து சுமாரான வேட்பாளர்களா பார்த்து டிக்கெட் கொடுப்பாய்ங்க

ரஜினி: பரவால்லை. டேமேஜ் குறைவாதான் இருக்கும். இது  ஓகே. ஒரு வேளை முதல்வராகிறதுதான் இலக்குன்னா?

முருகேசன்: டேமேஜ் அதிகமா இருக்கும். பரவால்லை.

ரஜினி: இதை கேட்கிறதுல எதுவும் டேமேஜ் வந்துராதில்லையா சொல்லுப்பா.

முருகேசன்: மொதல்ல உங்க சொத்தை குடும்ப உறுப்பினர்கள் எல்லாத்துக்கும் பிரிச்சு கொடுத்துருங்க. அதை பப்ளிக்கா அனவுன்ஸ் பண்ணுங்க. உங்க சொத்துல சம் பர்சண்டேஜ்ல   நல்ல சினிமாவை ப்ரமோட் பண்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துங்க அதுக்கு தலைவரா கமல் ஹாசனை போடுங்க

ரஜினி: வெரி குட். அப்புறம்?

முருகேசன்: பாதிரியார் கிட்டே பாவமன்னிப்பு கேட்கிறமாதிரி  நீங்க நாளிதுவரை என்னெல்லாம் தப்பு பண்ணிங்களோ அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணி  அதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு அதுக்கு பரிகாரமா அந்த தப்புகளை திருத்தத்தான் கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு ஒரு ஏழெட்டு பாஷைல புஸ்தவமா போடுங்க. ட்ரான்ஸ்லேஷனுக்கு வேணம்னா அய்யரு பசங்களை சேர்த்துக்கிருங்க. அதெல்லாம் கரீட்டா பண்ணுவாய்ங்க. ரேட் தான் காஸ்ட்லியா இருக்கும். அதை ஆல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ல லெஸ்ஸர் ப்ரைஸ்ல ரிலீஸ்பண்ணுங்க (உ.ம் புஸ்தவம் மலிவுப்பதிப்பு ரூ. 20 டிவிடி: 20 ) கட்சி ஆரம்பிக்கப்போறதேதிய டிக்ளேர் பண்ணீருங்க
உங்களோட அஜெண்டாவா ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ அறிவிச்சுருங்க..

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

ரஜினி: ....................

முருகேசன்: ஹலோ ஹலோ ஹலோ...

ரஜினி: ................

(முருகேசன் உடனே ராகவேந்திரா கல்யாணமண்டபத்துக்கு  ஃபோன் செய்து ரஜினி சாருக்கு என்னாச்சு பாருங்கங்கறார். அங்கிருந்து வந்த பதில் "ஒன்னும்மில்லிங்க மயக்கம் போட்டுட்டாரு )

எச்சரிக்கை: மேற்படி உரையாடல் யாவும் என் கற்பனையே.

Sunday, May 16, 2010

ஜோதிடம் தொடர்பான புது நிகழ்ச்சி ஏற்பாடு

ஜோதிடம் என்றால் உங்கள் மனதில் தோன்றும் காட்சிகளில் சில வருமாறு:
1. பிராமண கிழவர் ஒருவர், சோடா புட்டிகண்ணாடி அணிந்து  விசிறியால் முதுகு சொறிந்தபடி இருக்கும் எதையோ சொல்லிக்கொண்டிருக்கும் காட்சி.
2. கோட்டும், சூட்டுமாய் வியர்த்து வழிய  முகத்தில் திருட்டு + விஸ்கி களை சொட்ட இலக்கண பிழைகளுடன் தனியார் டிவி சேனல்களில் ஸ்பான்ஸ்ர்ட் ப்ரோக்ராமில் (பணம் கொடுத்து ஒளிபரப்ப வைக்கிற  நிகழ்ச்சிக்கு கௌரவ பேர்)   நடுத்தர வயது பார்ட்டிகள் பேசும்  காட்சி

ஆனால் 1989 முதல் தொழில் முறை ஜோதிடனாக இருக்கும் நான் கற்பனை செய்யும் காட்சியே வேறு. 

கட்டம்:1

முதல் கட்டத்துல ஜாதகம் உள்ளவுக, கு.ப டேட் ஆஃப் பர்த் தெரிஞ்சவுகளை மட்டும் ஆட்டத்துல சேர்த்துக்கனும். அவிக காசு கட்டி பதிவு பண்ணிக்கிட்ட உடனேயே அவிக ஜாதகத்தை பார்த்து/ கம்ப்யூட்டர்ல ஜாதகம் போட்டு அதுல இருக்கிற முக்கிய அம்சங்களை  ஒரு ப்ரிண்டட் ஃபார்மெட்ல  குறிச்சிரனும்.

உ.ம்: செவ்வாய் தோஷம் (4ல் செவ்வாய் ) ,சர்ப்பதோஷம்: 1-7 ல் ராகு கேது
லக்னாதிபதியாரு அவரு 6,8,12ல எங்கேனா மாட்னாரா? இல்லே அஸ்தங்கதமாயிட்டாரா? இல்லே 6,8,12 அதிபதிகளோட எங்கேனா சேர்ந்துட்டாரா? 6,8,12 அதிபதிகள் யாரு அதுல எத்தனை பேர் மேற்படி இடங்கள்ளயே உட்கார்ந்திருக்காங்க..  யோககாரகன் யாரு அவர் எங்கே இருக்கார்.அங்கே அவரோட பலம் என்ன?   அவரோட யார் சேர்ந்தார். சுபர்கள்: யார் யாரு எத்தனையாவது வீட்ல இருக்காய்ங்க. எந்த பாவத்துக்கு யார் அதிபதி அவர் எத்தனாவது பாவத்துல இருக்காரு

இப்படி ஒரு கொஸினேர் பிரிப்பேர் பண்ணி அதுல மொத்த டேட்டாவையும் என்ட் ரி போட்டுக்கனும். இதை  ஒன் ப்ளஸ் டூ  காப்பி எடுக்கனும் ஒன்னு பார்ட்டிக்கு. ஒன்னு ப்ரோக்ராம்ல என்னோட  ரெஃபரன்ஸுக்கு. ஒன்னு ஃபைல் காப்பி.

இப்படி ஆயிரம் பேருக்கு குறையாம பதிவு பண்ணிக்கிறாப்ல குட் பப்ளிசிட்டி தரனும். (அப்பத்தான் கட்டுப்படியாகுங்கண்ணா)  நெக்ஸ்ட் நம்ம கிட்டே இருக்கிற கொஸினேர் காப்பிய வச்சி எந்த அம்சம் மேஜரா நிறைய ஜாதகங்கள்ள இருக்குனு ஒரு கணக்கு போட்டு பார்த்து  அந்த வரிசைல ஐட்டம் வாரியா ஒரு அஜெண்டா பிரிப்பேர் பண்ணிக்கனும் . ரேரஸ்ட் ஆஃப் தி ரேரஸ்டா இருக்கிற அம்சங்களை கூட விடாம அஜெண்டால சேர்க்கனும்.

நிகழ்ச்சியை  இண்டோர் ஸ்டேடியத்துல ஏற்பாடு செய்யனும்.   பெரிய்ய அளவுல கூட்டம் இருக்கனும்.

(நிகழ்ச்சிக்கு வரப்ப அந்த கொசினேரை தவறாம கொண்டுவரனும்னு சொல்லி யிருக்கனும். இது ரொம்ப முக்கியம்)

நிகழ்ச்சி ஆரம்பமாகுது. சம்பிரதாயங்கள் எல்லாம் முடிஞ்ச பிறகு மதியம் வரை நான் அஜெண்டா பிரகாரம் ஸ்பீச் தரனும். என் பேச்சுல தங்கள் ஜாதகத்துக்கு பொருந்தி வர்ர ஐட்டங்களுக்கு  நான் பேசறச்ச சொன்ன பலன் கள் எந்த அளவுக்கு அவிக விஷயத்துல உண்மையாச்சுன்னு க்ளையண்ட்ஸ் க்ரேடிங் கொடுக்கனும். 

இதுக்கு கட்டணமா ரூ.500 ஃபிக்ஸ் பண்ணி காலை 6 மணிலருந்து  டீ , பிஸ்கட்,டிஃபன், லஞ்ச், ஸ்னாக்ஸ் எல்லாம் ஏற்பாடு பண்ணனும். நிகழ்ச்சி மொத்தத்தையும் வீடியோல கவர் பண்ணனும்.

இது எப்படியிருக்கு ? இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ண யாராவது ஸ்பான்சரர் முன் வந்தா  செலவு போக மிஞ்சினதுல 60% : 40% ஓகேவா.

அந்த 60% கூட எதுக்குன்னா நிகழ்ச்சில எடுத்த வீடியோவை பக்காவா எடிட் பண்ணி குறைஞ்ச விலை சனத்துக்கு தரத்தான். ( சி.டி ரூ 25 டிவிடி: ரூ.35)

Wednesday, January 6, 2010

ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மேலதிக தகவல்கள்

என் கவிதை 07 வலைப்பூவிலான என் பதிவுகளை படித்து இன்ஸ்பைர் ஆகி தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற இந்த பக்கம் வந்திருக்கும் தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்!

நான் வெறுமனே ஜோதிடனா இருந்தா ஷார்ட்டா ஒரு கட்டண அட்டவணை போட்டுட்டு முடிச்சுரலாம். பேசிக்கலா நான் ஹ்யுமேனிஸ்ட். மனிதகுலத்து மேல உள்ள கருணையாலதான் எழுத்தாளனானேன். உங்களை எஜுக்கேட் பண்ணி ஜோதிஷம்ங்கற பொக்கிஷத்தை முழுக்க முழுக்க கொள்ளையடிக்க ரூட் போட்டு கொடுக்கிறதுதான் என் உத்தேசம். அதனால பொறுமையா இந்த நாலு வரியை படிச்சுருங்க.

ஜோதிடம் ... ஆன்மீக பயணத்தில் முதல் படி!


ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்

ஆமாங்க ஜோதிஷத்துல உங்க உடல் நலம், வருமானம், உங்களை சேர்ந்தவுங்களோட லைஃப்,அவிகனால உங்களுக்கு லாபமா நஷ்டமா ? படிப்பு,தொழில்,வேலை,உத்யோகம்,காதல்,கல்யாணம் ,பிள்ளை பேறு இப்படி லௌகீகமான கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறாய்ங்க.

ஆனால் உங்க ஜாதக சக்கரத்தை வச்சி உங்க முன் பிறவி, அடுத்த பிறவி, கடந்தபிறவியிலான உங்க ஆன்மீக முயற்சிகள்,அதுக்கு தடையா இருந்த அம்சங்களை பத்தியெல்லாம் சப்ஜாடா தெரிஞ்சிக்கிடலாம்.


தெரிஞ்சுக்கிட்டு லௌகீக வாழ்க்கைல மட்டுமில்லை ஆன்மீக வாழ்விலும் சக்ஸஸ் ஆக ஜோதிஷம் உதவுது.


லௌகீகம் எல்.கே.ஜின்னா ஆன்மீகம் டாக்டரேட் மாதிரி. டாக்டரேட் வாங்கனும்னா னுலும் மொதல்ல நீங்க எல்.கே.ஜி படிச்சாகனும். இந்த கணக்குப்படி நீங்க லௌகீகமாவும் ஜெயிச்சாகனும்.


என் பதிவுகளை படித்துநான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் , ஆராய்ச்சியாளன் என்ற விஷயங்களை ஏற்கெனவே கிரகிச்சிருப்பிங்க.


என்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்களது அஃபிஷியல் நேம் (வித் இனிஷியல்) , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் (அருகில் உள்ள பெரிய நகரம்) ஆகியவிவரங்களை அனுப்புங்க.



தங்களுக்கான பலன் மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் ரிச் டெக்ஸ் ஃபார்மெட் ஃபைலாகவும், நீங்கள் சிறப்பாக குறிப்பிட்டு கோரினால் ஆடியோ ஃபைலாகவும் மெயில் மூலம் அனுப்பப்படும். ஆடியோ ஃபைல் எனில்

ஒரே தவணையில் 24 மணி நேரத்தில் அனுப்பப்படும். டெக்ஸ்ட் ஃபைல் எனில் மூன்று நாட்கள் தொடர்ந்து தவணைகளில் அனுப்பப்படும்.


பிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :

swamy7867@gmail.com

s_murugesan_67@yahoo.com


ஆலோசனை கட்டணம்:

தனியொருவருக்கு பொதுப்பலன் (100 கேபி வரை) + 10 கேள்விகளுக்கான ப‌திலுக்கு ரூ. 250 /-மட்டும்

ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்

கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:

Name: Sundaresan Murugan A/C No: 30333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A RTGS : YES

கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.

எம்.ஓ அனுப்புவோர்:

எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 17-210,Kummara st, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)

எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.


என்னை பார்க்க வராதீக
வெறுமனே பேச வந்தா பரவால்லிங்கண்ணா சோசியம் பார்த்துக்கிட்டு அப்படியே பேசிட்டு போகலாம்னு வந்துராதீக. ஏன்னா அதுக்கு பல காரணம் இருக்கு. நஷ்டம் உங்களுக்குத்தேன்.
நேரில் வந்து சந்திப்பதால் உங்களுக்கு நிறைய நஷ்டங்கள். போக்குவரத்து செலவு, களைப்பு, பிரயாண நேரம், என் எளிய தோற்றம், பின்னணி ஆகியன‌ என் பேச்சின் நம்பகத்தன்மையை குறைக்கலாம். மேலும் நேரில் எனும்போது வாயா வார்த்தையாதான் பலன் சொல்ல முடியும். அப்போ பெரிசா கமிட்மென்ட் வராது. த்ரூ மெயில் அனுப்ப வேண்டி வரும்போது அது ரிக்கார்ட் ஆயிருது. ஸோ ஒரு கமிட்மென்டும் வரும். உங்களுக்கு ஃப்ர்தர் ரெஃபரன்ஸுக்கும் உதவும்.

நேரில் சொல்லும் பலன் காற்றோடு போய் விடும். மேலும் அந்த நேரத்து என் மூட் கூட பலனின் தரத்தை குறைக்கலாம். த்ரூ மெயில் என்றால் எனக்கு எப்போ மூட் இருக்கிறதே அப்போது மட்டும் தட்டச்சினால் போதும். மூன்று தினங்களில் . வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீங்க ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க . நான் பலனை அனுப்பிர்ரன். அதுக்கப்புறமும் உங்களுக்கு நேரிடையா வந்து சந்திக்கனும்னு இருந்தா வாங்க. நோ ஃபீஸ்.

உறுதி மொழி:
தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சய‌மாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும்,
நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்

மெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:




1.பெயர்:

2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :

3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :

4.கட்டணம் செலுத்தியுள்ள முறை,விவரம்:

5.கட்டண விவரம்(தொகை) :

6.பலன் அனுப்பவேண்டிய முறை:

7.பலன் அனுப்ப வேண்டிய மொழி:

8.முக்கியமான 10 கேள்விகள்:

9.சிறப்பாக தாங்கள் கூறவிரும்புவது:





இப்ப‌டிக்கு,
சித்தூர்.எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்