அண்ணே வணக்கம்ணே !
ஏசு ஞானம் பெற்று சொந்த ஊருக்கு வந்தப்போ ஊர்காரவுக நம்ம கார்ப்பெண்டர் பையன்பா என்று தான் சொல்லியிருப்பார்கள். அதைப்போல நாம என்னதான் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ் கணக்கா அலப்பறை பண்ணாலும் சனம் நம்ம கிட்டே எதிர்ப்பார்க்கிறது சோதிட பதிவுகளை த்தேன். அதுக்காவத்தேன் எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ்லாம் விட்டுட்டு ஒ.மருவாதியா சோதிட தொடர்களை எழுதிக்கிட்டு வர்ரம்.
இந்த வரிசையில ஆரம்பமானதுதேன் தொழிலும் கில்மாவும். ஆனால் ட்ராக் மாறி இன்னபிற பதிவுகளை போட்டுக்கிட்டிருக்க காரணம் ..இவற்றை எக்ஸாஸ்ட் செய்தால் அன்றி மூளை பழைய ட்ராக்குக்கு திரும்பாது.
ஒன் கென் நாட் ரெய்ட் டூ ஹார்சஸ் - ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்ங்கற மாதிரில்லாம் வித்தை காட்ட நமக்கு தெரியாதுங்ணா. நம்முது கடகலக்னமாச்சா ( இது எத்தனையாவது தபா?) எதையும் மனப்பூர்வமா செய்யதான் விருப்பம். நம்ம வேலையில/கள்ள எதுனா மொக்கையா தெரிஞ்சா அது ஏதோ கட்டாயத்தின் பேரில் செய்தப்பட்டதுன்னு நீங்க ஈஸியா கெஸ் பண்ணலாம்.
"தம்பீ! வடை இன்னும் வரலை"ங்கறாப்ல " அண்ணே..இன்னம் விஷயத்துக்கே வரலை"ங்கறிங்க.புரியுது.வந்துட்டேன்.
பதிவர்கள்னா ஆகாசத்துலருந்து குதிச்சவுக இல்லை. ஒவ்வொரு மனிதனும் அவன் வாழும் அரசியல் ,பொருளாதார,சமூக அமைப்பின் எச்சங்களே. ஒவ்வொரு மனிதனும் அவனது பெற்றோரின் நகல்களே. முருகேசனாகிய அடியேன் பதிவெழுதுவதால் பதிவராகலாமே தவிர பதிவர்ங்கற முகமூடியோட செயல்படறது சாட்சாத் முருகேசன் தான்.
பதிவுங்கறது ஒரு வெளிப்பாடு. அந்த வெளிப்பாட்டுக்கு பின்னாடி இருக்கிறது நம்ம அரசியல்,பொருளாதார,சமூக அமைப்புகள் மற்றும் அவற்றின் தாக்கங்களே.
இந்த தெளிவு நமக்குள்ள இருக்கிறதால பெருசா எதையும் எதிர்ப்பார்க்கிறதில்லை.2012 பதிவர்கள் சந்திப்புக்கு பிறவு இது மாதிரி ஒரு டீட்டெய்ல்ட் பதிவை போட்டிருந்தா - இந்த 2013 சந்திப்பை கிழி கிழின்னு கிழிச்சிருப்பம்.
என்ன பண்ண? உலகத்துலயே வேலை வெட்டியில்லாம -திண்ணை தாத்தா மாதிரி ஒலக நன்மைக்கு குரல் கொடுத்துக்கிட்டிருந்த ஒரே பார்ட்டி நாமதேன். கடவுள் நமக்கும் ஒரு வேலைய கொடுத்து பிசியாக்கிட்டாரு.
இன்னைக்கு நாளைக்குன்னு தள்ளிப்போய் இன்னொரு ப.ச வே நடந்து முடிஞ்சுருச்சு. கு.ப ப.சவுக்கு பத்து பதினைஞ்சு நாள் மிந்தி "இப்படி நடந்தா பெட்டர்"னுட்டு ஒரு பதிவு போட்டிருந்தாலும்இப்பம் கொறை சொல்லி எழுத ஒரு தகுதி இருந்திருக்கும்.
ப.சந்திப்புக்கு வரவே அடிச்சு பிடிச்சு வரவேண்டியதாயிருச்சு. அதனால நோ நெகட்டிவ் பாய்ண்ட்ஸ். அடுத்த பதிவர் சந்திப்பு எப்பூடி நடந்தா நெல்லா இருக்கும்னு சொல்லிர்ரன்.
பதிவுங்கறது ஒரு வெளிப்பாடுதேன். இதுக்கு அடிப்படை சிந்தனை. பதிவர்கள் வெளிப்பாட்டில் தப்பு செய்றாய்ங்கன்னு சொல்லவே முடியாது. (ஏதோ சில ,எழுத்து இலக்கண பிழைகள் இருக்கே தவிர) தூள் பண்றாய்ங்க.அதுலயும் தலைப்பு வைக்கிறதுலயும் படிக்க வைக்கிறதுலயும் ஜூரிங்கப்பு.
பதிவர்கள் மொதல்ல வரலாறு குறித்த அறிமுகத்தையாவது /வரலாறு குறித்த வேறு பட்ட பார்வைகள்ள சிலவற்றையாவது உள்வாங்கனும். அப்பத்தேன் நிகழ்காலம் குறித்த ஒரு புரிதல் ஏற்படும்.
சோனியா -ராகுலை பி.எம் ஆக்கப்பார்க்கிறாய்ங்க. அதுக்காவ எத்தனை எத்தனை இழவெடுத்த வியூகங்கள்? இது என்ன சரித்திரத்துல மொத தடவையா நடக்குதா? இல்லை.
தமிழ் சினிமாக்கள்ள அடிக்கடி ரிப்பீட் ஆற சீனை "க்ளீஷே"ம்பாய்ங்க. அதைப்போல இதுவும் ஒரு க்ளீஷே தான். வரலாறு குறித்த அறிமுகம் இருந்தா பெட்டர். இதுக்கெல்லாம் ஷாக் ஆகாம மேற்கொண்டு தீர்வுகளையோ விளைவுகளையோ கிளிக்கலாம்.
அடுத்தது பொருளாதார அமைப்பு. நீங்க என்னதான் நான் சுதந்திரன் - நான் ஆகாயத்துலருந்து குதிச்சவன்னு அலட்டிக்கிட்டாலும் பொருளாதார அமைப்பு உங்களை மட்டுமில்லை -உங்க சிந்தனைகளையும் அடிமைப்படுத்தி வச்சிருக்கு.
காலை பல் தேய்க்கிற டூத் பேஸ்ட்லருந்து - ராத்திரி பேட்டரி வீக் ஆன பார்ட்டிகள் உபயோகிக்கிற வயாக்ரா தனமான மருந்து மாயங்கள் வரை எல்லாமே இறக்குமதி. இருந்த விளை நிலங்களை எல்லாம் அபகரிச்சோ -விவசாயிகள் முதுகெலும்பை நொறுக்கியோ விளையாம செய்துட்டு - உணவு தானியங்களை கூட இறக்குமதி பண்றோம்.
இதன் விளைவு ? டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொங்கிக்கிடக்குது. இவிக வெத்து பந்தாவுக்கு - தப்பு தப்பா விடற ராக்கெட்டுகளை விட விலைவாசி பர்ஃபெக்டா லாஞ்ச் ஆகி உச்சி வானில் வெயிட்டிங்.
சமூகம். ஒரு பதிவனோ எழுத்தாளனோ தான் வாழ்ந்துட்டிருக்கிற சமூகத்தை பத்தி ஒரு பார்வை வச்சிருக்கனும். இதன் எதிர்காலம் குறித்த கணிப்பு இருக்கனும்.
உலகின் பல்வேறு சமூகங்கள் பற்றிய அறிமுகம் இருக்கனும். ஒப்பீடு இருக்கனும்.மாற்றத்துக்கான உந்துதல் இருக்கனும். அப்பத்தேன் நாம போடற பதிவுகள் இருட்டை விரட்டலின்னாலும் ஒரு மின்னல் மாதிரி மின்னி மறையும்.
இதெல்லாத்தையும் விட மனவியல் தெரியனும். மனித மனம் கூட சமூக,பொருளாதார,அரசியல் அமைப்புகளின் விளைவுதான்.
எங்கெங்கயோ முக நூல்,டிவிட்ட போன்ற சமூக வலைதளங்களின் உதவியோட புரட்சியே நடக்குது. ஆனால் இங்கே? ஏன் நடக்கலை? எப்போ நடக்கும்? ஏன் நடக்காது?ங்கற தெளிவு இருக்கனும்.
இதையெல்லாம் ஒரு பதிவர் சந்திப்பு பதிவனுக்கு தந்தாகனும். சரித்திரத்தை கி.பி,கிமுன்னு பிரிக்கிறாப்ல பதிவர்களின் சரித்திரத்தை சந்திப்புக்கு முன் சந்திப்புக்கு பின் என்று பிரிக்கும் அத்தனை இரசாயன மாற்றம் ஒரு பதிவர் சந்திப்பில் நடக்கனும்.
இல்லின்னா? சந்திப்பில் வீணாகும் அந்த நேரத்துல செல்ஃப் ஷேவ் பண்ணிக்கலாம். நேரம் மிச்சம்,காசும் மிச்சம்.